Helen (மலையாளம் 2019) Survival of the fittest

6
Helen

த்ரில்லர் படங்கள் என்றால், கொலை, துரத்தல் என்று பெரும்பாலும் இருக்கும் ஆனால், Helen படம் அதிலிருந்து மாறுபட்டுக் குடும்பம், அன்பு கலந்த த்ரில்லராக உள்ளது.

ஒரு மாலில் உள்ள KFC போன்ற கடையில் பணி புரியும் Helen அங்குள்ள குளிர்பதன அறையில் இரவில் மாட்டிக்கொள்கிறார். அங்கே இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே கதை.

Helen

துவக்கத்தில் சாதாரணமாகச் செல்லும் படம், பின்னர் வேகமெடுக்கிறது.

ஹெலன் காதலனாக வரும் அஸார், ஹெலனுக்கு அண்ணனைப்போல இருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் வயது குறைந்த நபராக ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கலாம் ஆனால், நடிப்பில் எந்தக்குறையும் வைக்கவில்லை.

ஹெலனுக்கு  முகம் தான் பலம். எப்போதும் சிரித்த பாந்தமான முகம் என்று நடிகை போலவே தோன்றமளிக்கவில்லை. நம் குடும்பத்தில் ஒருவர் போலவே உள்ளார்.

அப்பா சிகரெட் புகைப்பதை அன்பாகக் கண்டிப்பதும், கோபிப்பதும் என்று பாசமுள்ள மகளாக ஹெலன் நடிப்புச் சிறப்பு, மகளின் அன்பில் உருகும் அப்பாவாக லால்.

உண்மைச் சம்பவம்

தவறு என்றாலும், சம்பந்தப்பட்ட நபரிடம் கோபித்துக்கொள்ளாமல் விசாரிப்பது, அக்கறையாக நடந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

அவசியமற்ற கோபங்கள் மிகப்பெரிய இழப்பைக் கொண்டுவரக்கூடிய அளவுக்குச் சூழ்நிலைகள் மாறுவது அதிர்ச்சியளிக்கிறது. இக்கதை உண்மைச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

மையக்கருத்து ‘Survival of the fittest‘ என்பதே. கடினமான சூழ்நிலையில் உயிர் பிழைக்க ஒருவர் எப்படியெல்லாம் முயற்சிக்கிறார், மனநிலை என்ன என்பதைக் கூறியிருக்கிறார்கள்.

எளிதாக ஊகிக்கக்கூடிய காட்சிகள் உள்ளன, அதே போல இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை? என்றும் கேள்விகள் எழுகின்றன.

இருப்பினும் இவற்றைத் தாண்டியும் நம்மை ரசிக்க வைப்பது, படத்தின் இயல்பான காட்சியமைப்பு தான்.

ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக உள்ளது அதோடு பின்னணி இசையும்.

ஊகிக்கக்கூடிய காட்சிகள் படத்துக்குப் பலவீனம் என்றாலும், பார்ப்பவர்களை நிச்சயம் ஏமாற்றாது. இறுதியில் படத்தின் தலைப்பு Helen வரும் இடம் பொருத்தமானது.

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

அமேசான் ப்ரைமில் உள்ளது.

Directed by Mathukutty Xavier
Produced by Vineeth Sreenivasan
Written by Alfred Kurian Joseph, Noble Babu Thomas, Mathukutty Xavier
Starring Anna Ben, Lal, Noble Babu Thomas, Aju Varghese
Music by Shaan Rahman
Cinematography Anend C. Chandran
Edited by Shameer Muhammed
Release date 15 November 2019
Running time 117 minutes
Country India
Language Malayalam

Read : Driving Licence (மலையாளம் 2019)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. கிரி, எப்படி இருக்கீங்க???? மலையாளப் படங்கள் பலது உலக தரம் கொண்ட படங்கள் இருக்கின்றன.. பெருபான்மை மலையாள படங்களில் நாயகன் கதைகள் மட்டுமே!!! தற்போது கொஞ்சம் மாற்றங்கள் ஏற்படுவது போல் தோன்றுகிறது.. நான் அதிகம் மலையாளப்படங்கள் பார்த்ததில்லை.. ஆனால் அலுவலகத்தில் நிறைய மலையாள நண்பர்கள் கூற பல படங்களில் கதைகள் கேட்டுளேன்..

  நேற்று கூட TAKE OFF படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.. யப்பா என்ன படம்.. பார்வதியும், போபனும் பாஹத் பாசில் போட்டி போட்டுகொண்டு நடித்துள்ளார்கள்.. குறிப்பாக டிகிரிட்க்கு சென்ற பின் பார்வதியின் நடிப்பு.. நடிப்பே இல்லை!!! எல்லாம் உண்மையான நிகழ்வுகள் போல இருந்தது..

  அவரின் வலிகளை, வேதனையை, பயத்தை, ஏக்கத்தை எல்லா உணர்ச்சிகளையும் கண்களாலே சொல்லி இருப்பார் . என்னோட மலையாள விருப்ப நடிகர் .. பாஹத் பாசில் சொல்லவே வேணாம்.. தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருப்பார்.. சூப்பர் டிலெக்ஸ் படத்தில் ஏன் நடித்தார் என தோன்றுகிறது???? நீங்க சொன்ன படத்தை பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு பின்பு கூறுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. ரொம்ப நல்லா இருக்கேன் யாசின் 🙂 நன்றி

  Take Off செம்ம படம். எப்படி எடுத்தார்கள் என்று எப்போதும் எனக்கு வியப்புண்டு.

  கடந்த வாரம் Trance பஹத் பசில் படம் பார்த்தேன். எப்படித்தான் தைரியமா எடுத்தார்களோ. இப்படம் பற்றி விரைவில் எழுதுகிறேன்.

 3. நேற்று தான் பார்த்தோம். பரிந்துரைக்கு நன்றி. உங்கள் விமர்சனம் மிகவும் அருமை.

  • நன்றி ஸ்ரீனிவாசன். இன்னும் சில படங்களின் விமர்சனங்கள் விரைவில் எழுதுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here