சரியான முடிவு எடுப்பது என்பது எளிதான காரியமல்ல. சிறு கவனக்குறைவும் மிகப்பெரிய இழப்பைக் கொண்டு வரும். Image Credit
யாஹூ நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் மிகப்பெரிய விலைக்குக் கேட்ட போது அதை அவர்கள் புறக்கணித்தனர், பின்னர் மிகக்குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு யாஹூ வந்தது. இதனால் யாஹூ க்கு மிகப்பெரிய நட்டம்.
கூகுள் நிறுவனத்தைத் துவக்கத்தில் மிகப்பெரிய விலைக்குக் கேட்ட போது கொடுக்க மறுத்தனர். பின்னர் கூகுள் எப்படி வளர்ந்து வெற்றிப் பெற்றது என்பது வரலாறு.
இரண்டிலுமே வேறு வேறு சூழ்நிலை ஆனால், நட்டம் இலாபம் மாறி உள்ளது.
YouTube & Android
YouTube நிறுவனத்தைக் கூகுள் வாங்கிய போது காணொளிகளுக்கு அவ்வளவு வரவேற்பில்லை ஆனால் தற்போது அதன் நிலைமை!
Android நிறுவனத்தைக் கூகுள் வாங்கிய போது மொபைலுக்கு அவ்வளவாக வரவேற்பில்லை ஆனால் தற்போது அதன் நிலைமை!
இன்ஸ்டாகிராம்
இது போல ஒரு வாய்ப்பு கூகுளுக்குக் கிடைத்தது அது தான் இன்ஸ்டாகிராம்.
எவ்வளவோ பில்லியனுக்குப் பல நிறுவனங்களைக் கையப்படுத்திய கூகுள், இன்ஸ்டாகிராம் $1 பில்லியன் கொடுத்து வாங்க விரும்பாததால், அதை ஃபேஸ்புக் தட்டி சென்றது.
இதே நிலை தான் WhatsApp ஆனால், அது $19 பில்லியன்.
கூகுளால் சமூகவலை தளங்களில் ஃபேஸ்புக் போல வெற்றி பெற முடியாத நிலையில் இன்ஸ்டாகிராம் வாய்ப்புக் கிடைத்த போது எப்படி முன்னோக்கி யோசிக்காமல் தவறவிட்டது என்று புரியாத புதிராக உள்ளது.
இன்ஸ்டாகிராமை கூகுள் வாங்கியிருந்தால், தற்போது ஃபேஸ்புக் கதிகலங்கி இருக்கும். ஏனென்றால், ஃபேஸ்புக் வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
1 பில்லியன் என்பது கூகுளுக்குப் பெரிய தொகை அல்ல!
YouTube Vs Instagram income
சமீபத்தில் கூகுள் முதல் முறையாக, கடந்த ஆண்டு (2019) YouTube வருமானம் $15 பில்லியன் என்று அறிவித்துப் பலரை வியப்பில் ஆழ்த்தியது.
தற்போது $1 பில்லியனுக்கு ஃபேஸ்புக்கால் வாங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் வருமானம் 2019 ஆண்டுக்கு $20 பில்லியன் என்று அறிவித்த பிறகு கிறுகிறுன்னு ஆகி விட்டது.
YouTube க்கு மிகப்பெரிய சந்தை, வருமானம் இருந்தாலும் அதைப் பராமரிக்க ஆகும் செலவும் அதிகம் ஆனால், இன்ஸ்டாகிராம் வருமானம் ஒப்பிட்டால் செலவும் குறைவு இலாபமும் அதிகம்.
காணொளிகளுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவுக்கு இன்ஸ்டாகிராம் தொழில்நுட்பத்துக்கும் பலத்த வரவேற்பு உள்ளது.
பலர் ஃபேஸ்புக்கில் இருந்து விலகி இன்ஸ்டாகிராம் நகர்ந்து வருகிறார்கள், குறிப்பாக இளைஞர்கள். படிப்பதை விடப் பார்க்கவும் பகிரவுமே விரும்புகிறார்கள்.
வயதானவர்கள் மற்றும் போராளிகள் பயன்படுத்தும் சமூகத்தளமாக ஃபேஸ்புக் மாறி வருகிறது. எதிர்காலம் இன்ஸ்டாகிராம் தான்.
கூகுள் ரசிகனாக ‘இன்ஸ்டாகிராமை கூகுள் கையகப்படுத்தாமல் தவறவிட்டு விட்டதே!‘ என்ற வருத்தம் கூகுளை விட எனக்கு அதிகமாக உள்ளது 🙂 🙂 .
திட்டமிட்டு, முன்னோக்கி சிந்தித்து இன்ஸ்டாகிராமை கையகப்படுத்தி வெற்றி கண்ட ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு (பொறாமை கலந்த) வாழ்த்துகள் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
இதனை அடிப்படையாக வைத்து தான் பள்ளியில் பேசும் போது பேசினேன். ஆனால் கொஞ்சம் மாற்றிவிட்டேன். ஆனால் இன்னமும் ஆச்சரியப்படுவது வாட்ஸ் அப் செயலியைப் பார்த்து தான். கிராமத்து படிக்காத மனிதர்கள் இதன் பின்னால் அலைவது இதனை உண்மை என்று நம்புவதும் இதன் பெரிய பலம்.
கிரி, நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் உண்மையில் பிரமிக்க வைக்கிறது.. கூகிள் போன்ற மிக பெரிய நிறுவனங்கள் நிச்சயம் சரியான முடிவுகளை தான் எடுப்பார்கள்.. ஆனால் இன்ஸ்ட்ராகிராம் விஷியத்தில் தவறவிட்டதன் பின்னணி தெரியவில்லை… சிறிய தொகையாக இருந்தாலும், அவசியம் இருக்காது என விட்டிருக்கலாம்..
அதுபோல கூகிள் பல நிறுவனங்களை கையகபடுத்தியிருந்தாலும், சில நிறுவனங்களில் மட்டுமே மிகையான இலாபம்… ஒரு பெட்டி கடை வைத்து 2 பேரை சம்பளத்துக்கு வைத்து நிர்வாகம் செய்வதே என்னை பொறுத்தவரை பெரிய சாதனை.. கூகிள் பற்றி நினைக்கும் போது தலை சுற்றுகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஜோதிஜி WhatsApp மூலமாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வருமானம் இல்லை ஆனால், இன்ஸ்டாகிராம் மூலமாக பில்லியன் கணக்கில் இலாபம்.
கூகுள் WhatsApp யைத்தவறவிட்டதில் எனக்கு வருத்தமில்லை ஆனால், இன்ஸ்டாகிராம் தவறவிட்டது பெரும் பிழை.
ஆனால், WhatsApp சென்றடைந்த தூரம் ரொம்ப அதிகம். தற்போது 2பில்லியன் மக்களை சென்றடைந்து உள்ளது. சாமானியர்களிடம் கூட எளிதாக சென்று விட்டது.
கேட்டால், WhatsApp ல வந்ததுன்னு சொல்றாங்க.. பல பொய்கள் இதன்மூலம் பரப்பப்படுகிறது.
@யாசின் ஆமாம், சிலது எதிர்பார்த்ததை விட கூடுதல் இலாபம் கொடுக்கும், சிலது எதிர்பார்த்த வெற்றியை தராது. அவர்களைப்பொறுத்தவரை மொத்தமாக இலாபமாக என்று தான் கணக்கிடுவார்கள்.