“Tik Tok” ஏற்படுத்தப் போகும் புயல்!

3
Tik Tok

ற்போது அனைவரின் விருப்பம் குறிப்பாகப் பெண்களுக்கு Tik Tok Dubsmash தான். பாடலாக ஆரம்பித்துத் தற்போது Dubsmash ஆக மாறி பலரை அடிமையாக்கி உள்ளது.

Tik Tok என்றாலே அது பெண்கள் ஆதிக்கம் தான். ஆண்கள் ஓரமாகத் தான் நிற்க வேண்டும். Image Credit

புகழ்ச்சி என்ற போதை

புகழ்ச்சிக்கு மயங்காதவர் எவரும் இல்லை, கட்டுப்பாடோடு இருப்பவர் என்று வேண்டும் என்றால் கூறலாம். அடுத்தவர் பாராட்டும் போது உச்சி குளிர்ந்து போவது எவருக்கும் இயல்பானது.

அதுவும் ஃபேஸ்புக் வந்த பிறகு அதில் கிடைக்கும் உடனடி பாராட்டு, வரவேற்ப்பான “Like” போதைக்கு அடிமையாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மற்றவர்களிடையே அதில் எல்லாம் ஆர்வமில்லை என்றாலும், உள்ளே இருக்கும் ஆர்வம், மகிழ்ச்சி ரகசியமானது.

பெண்களுக்குத் தன் அழகை மற்றவர்கள் புகழும் போது ஏற்படும் மகிழ்ச்சி ஆண்களுக்கு ஏற்படுவதை விட அதிகம்.

பெண்கள் என்றாலே, பசங்க பின் தொடர்வது இயல்பானது. அதிலும் அழகான பெண்கள் என்றால், அவர்களை உசுப்பேத்த பல வசனங்களைப் பேசுவார்கள்.

கண்டுகொள்ளவில்லை என்றாலும், அதைச் சம்பந்தப்பட்டவர்கள் ரசிப்பார்கள்.

குடி, புகைத்தல் மட்டுமே போதையல்ல! “புகழ்ச்சி” மிகப் பெரிய போதை.

நிலைமை தலைகீழ்

முன்பு சமூகத்தளங்களில் பாதுகாப்பு கருதி நிழற்படத்தைப் பகிரவே பெண்கள் யோசிப்பார்கள் ஆனால், இன்றோ நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது.

படுக்கை வரை சென்று Dubsmash செய்கிறார்கள், இதற்காகவே ஒப்பனைகளில், உடைகளில் கவனம் செலுத்துகிறார்கள், தனியாகச் செலவும் செய்கிறார்கள்.

Dubsmash எல்லை மீறி ஏடாகூடமாகச் சென்று அடுத்தக் கட்டத்தையும் எட்டியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கப்போவதெல்லாம் நினைத்தால் பீதியைக் கிளப்புகிறது.

திரும்பிய கவனம்

மற்றவர்கள் தங்கள் அழகை புகழும் போது கிடைக்கும் போதைக்காகத் தற்போது இவர்களின் முழுக் கவனமும் இதில் திரும்பியுள்ளது நல்லதுக்கல்ல.

படிப்பிலும், அலுவலகப் பணியிலும், குடும்பத்தினருடன் கவனம் செலுத்தாமல் இதிலேயே நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள்.

இதில் ஒரு சிலர் ஒருபடி மேலே சென்று தங்கள் குழந்தைகளையும் இதைப் போலச் செய்ய வைத்து அவர்களையும் கெடுத்து வருகிறார்கள்.

எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சனையில்லை ஆனால், தற்போது இவை எல்லை மீறிப் போய்க்கொண்டு இருக்கிறது. நீங்களும் இதை உணர்ந்து இருப்பீர்கள்.

Tik Tok பலரின் குடும்பத்தில் எதிர்காலத்தில் நிச்சயம் புயலைக் கிளப்பும்.

கொசுறு

அமெரிக்காவில் Tik Tok செயலியின் வளர்ச்சி மற்ற செயலிகளை விட அதிவேகத்தில் உள்ளது. இதை இந்தியா விரைவில் தோற்கடித்து விடும் என்று நம்பலாம்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. TIK TIK செயலி இதுவரை பயன்படுத்தியது இல்லை!!! எதிர்காலத்தில் பயன்படுத்த யோசனையையும் இல்லை!!! தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.. எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்…
    ======================================================
    “மற்றவர்கள் தங்கள் அழகை புகழும் போது கிடைக்கும் போதைக்காகத் தற்போது இவர்களின் முழுக் கவனமும் இதில் திரும்பியுள்ளது நல்லதுக்கல்ல.

    படிப்பிலும், அலுவலகப் பணியிலும், குடும்பத்தினருடன் கவனம் செலுத்தாமல் இதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

    இதில் ஒரு சிலர் ஒருபடி மேலே சென்று தங்கள் குழந்தைகளையும் இதைப் போல செய்ய வைத்து அவர்களையும் கெடுத்து வருகிறார்கள்.

    எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சனையில்லை ஆனால், தற்போது இவை எல்லை மீறிப் போய்க்கொண்டு இருக்கிறது. நீங்களும் இதை உணர்ந்து இருப்பீர்கள்.
    =======================================================
    என்னை பொறுத்தவரை இப்படி கிடைக்கும் புகழினால் என்ன பயன்???? 25 % நன்மை இருப்பின் 75 % தீமை இருக்க வாய்ப்புண்டு!!! ஏற்கனவே குடும்பங்களில் பல்வேறான பிரச்சனைகள் இருக்கின்றது… இதுபோல செயலிகள் பயன்படுத்துவதால் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது!!! என்னை பொறுத்தவரை இது வேண்டாத வேலை… பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. புகழ்ச்சிக்கு மயங்காதவர் எவர்?! 🙂 தவறில்லை ஆனால் அதுவே போதையாகி விட்டால் சிரமம். எனவே, கட்டுப்பாடோடு இருப்பது நல்லது.

  3. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
    நல்லா ஷேர் பண்ணுங்க நல்லதையே ஷேர் பண்ணுங்க.

    நன்றி
    அபிஷேக் (பிளாக்கர் | என்ஜினீயர் | வெப்மாஸ்டர்)

    .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!