Prison Break | Terrific Thriller Series

16
Prison Break

Prison Break பார்த்த பிறகு ஏன்டா இதைப் பார்க்க ஆரம்பித்தோம்! என்றாகி விட்டது. டென்ன்ன்ன்ன்சன் மேல டென்ன்ன்ன்ன்ன்சன். யப்பா! இப்படிப் பதட்டமாகப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிறது. உண்மையிலேயே மிரட்டி விட்டார்கள் மிரட்டி.

முதல் சீசன் மிரட்டி விட்டார்கள்.

கதையென்ன?

இதுவரை ரொம்பப் பதட்டமானது, Hostel மற்றும் I saw the devil படங்களுக்கு மட்டுமே! சில படங்களை எந்தச் சூழ்நிலையில் பார்க்கிறோம் என்பதும் உள்ளது.

இதுவே படத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை தருகிறது.

Prison Break கதை என்னவென்றால், அரசியல் சூழ்ச்சி காரணமாக ஒருவர் (Dominic Purcell) செய்யாத கொலைக்கு மரணத் தண்டனை (மின்சார நாற்காழியில் கொல்லப்படுதல்) விதிக்கப்படுகிறது.

கொலையே செய்யாமல் மரண தண்டனையை எதிர்நோக்கும் அண்ணனைத் தப்பிக்க வைக்கத் தம்பி (Wentworth Miller) குற்றம் செய்து  கைதியாக உள்ளே  நுழைகிறார்.

இதில் பல்வேறு காரணங்களால் இவர்கள் தப்பிக்க நினைக்கும் போது உடன் இணையும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கைதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல பிரச்சனைகளின் எண்ணிக்கையும்.

இது போல அதிகரித்துக் கொண்டே செல்வது பிரச்சனை மட்டுமல்ல. இதைப் பார்த்துகொண்டு இருக்கும் நமக்கு ஏற்படும் பதட்டமும் தான்.

மூச்சுத் திணறத் திணற நம்மை மிரட்டுகிறார்கள்.

யப்பா! இதுக்கு மேல வேண்டாம் தாங்காது என்கிற அளவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

22 எபிசோட்

முதல் சீசனில் 22 எபிசோட் இருக்கிறது. எதோ 4 / 5 எபிசோட் பதட்டமாக / த்ரில்லாக இருந்தால், சரின்னு பார்க்கலாம்.

இப்படி 22 எபிசோடும் தாறுமாறாகப் பதட்டப்பட வைத்தால் ஒரு மனுசன் எப்படித்தான் பார்க்கிறது. ரத்த அழுத்தம் இருக்கிறவர் இதைப் பார்த்தால் காலி.

துவக்கத்தில் 13 எபிசோட் மட்டுமே திட்டமிட்டு உள்ளார்கள் ஆனால், பலத்த வரவேற்பு காரணமாக 22 எபிசோடாக மாற்றியிருக்கிறார்கள்.

இவர்கள் தப்பிக்கும் சமயம் ஒரு முறை தடங்கலாகும் அந்த இடம் தான் நீட்டிக்கப்பட்ட இடமாக இருக்க வேண்டும்.

ஆனால், நீட்டிக்கப்பட்டது போல இல்லாமல் அசத்தலாகக் கொண்டு சென்று இருப்பார்கள். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது.

லாஜிக் பிரச்சனையே இல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் மிரட்டி இருக்கிறர்கள்.

அசத்தல் கதாப்பாத்திரங்கள்

நாயகனாக வருபவர் அலட்டிக்கொள்ளாமல் சிறப்பான நடிப்பு. இவர் தப்பிக்கச் செய்யும் முயற்சிகளும் அதற்காக முன்னேற்பாடாகத் திட்டமிட்டுச் செய்து இருக்கும் வேலைகளும் நம்மைத் தலை சுற்ற வைக்கும். Images Credit – Fox

சிறை வார்டனாகவும், கேப்டனாகவும் வருபவர்கள் பொருத்தமான தேர்வு.

கேப்டனாக வருபவர் மிரட்டி இருக்கிறார். இவரை எங்க பிடித்தார்களோ.. உண்மையான சிறை அதிகாரியே இவரிடம் தோற்றுப் போய் விடுவார்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிற்பி மாதிரி செதுக்கி இருக்கிறார்கள். அப்படியே அந்தக் கதாப்பாத்திரமாகவே அனைவரும் மாறியிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதினாலே ஒரு கட்டுரை அளவுக்கு வரும்.

சிறைக் கலவரங்கள் 

சிறைச்சாலையில் போதை மருந்துப் பரிமாற்றம், குழுக்களுக்குள் நடக்கும் சண்டை, ஓரினச்சேர்க்கை, சிறைக் கலவரம் என்று தத்ரூபமாக மிரட்டி இருக்கிறர்கள்.

சிறைக் கலவரத்தில் பெண் மருத்துவர் (Sarah Wayne Callies) மாட்டிக்கொள்வார். எனக்குக் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.

கைதிகள் கதவை உடைத்து இவரை நெருங்க ஆரம்பிக்க இப்பெண் தப்பிக்க என்ன செய்வது என்று திணறுவதைப் பார்க்கும் போது… யம்மாடி!

சிறைச்சாலையில் நடக்கும் பிரச்சனைகளைத் தமிழில் நமக்கு ஓரளவு அறிமுகப்படுத்தியது மகாநதி படம் தான். இப்படம் வந்த பிறகே பலருக்குச் சிறைச்சாலையில் நடப்பது தெரிய வந்தது. தத்ரூபமாகக் காட்டியிருப்பார்கள்.

நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்து இருப்பதால் அடுத்தது என்ன நடக்கும் என்று சில காட்சிகளில் ஊகிக்க முடிகிறது ஆனால், இதையெல்லாவற்றையும் தாண்டி நம்மை மிரட்டி இருக்கிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது.

சிறை வாழ்க்கை என்பது கொடுமையான ஒன்று குறிப்பாகப் புதிதாகச் செல்பவர்களுக்கு. புதிதாகச் செல்பவர்கள் அங்கே உள்ள மூத்த கைதிகளுக்கு மனைவி போல இருக்க வேண்டியது வரும்.

ஓரினச்சேர்க்கைக்குக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். கொடுமையான உலகம்.

பதட்டத்தின் உச்சம்

ஒவ்வொரு முறையும் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால், அதை விடப் பெரிய பிரச்சனையாக வரும். பிரச்சனை சரியாகி கொஞ்சம் அப்பாடா என்று மூச்சு விட்டால் பின்னர் அதை விடப் பெரிய பிரச்சனை வரும்.

அவர்களுக்குப் பதட்டம் இருக்கிறதோ இல்லையோ நான் காட்சிக்குக் காட்சி படாதபாடுபட்டு கிறுகிறுத்து விட்டேன்.

15 எபிசோட் முடிந்த பிறகு ஐயோ இன்னும் 7 எபிசோட் தாங்கணுமா! என்று பயமாகி விட்டது. அந்த அளவிற்கு புரட்டி எடுத்து விட்டார்கள்.

முதலில் தொலைக்காட்சியில் வெளியான சமயம் அடுத்த வாரம் வருவதற்குள் இதைப் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் நிலையை நினைத்துப் பார்த்தேன்.

ஒவ்வொரு எபிசோட் முடிவும் அடுத்தது என்ன ஆகும் என்று தலையைப் பிய்த்துக்க வைக்கும் 🙂 .

முதல் சீசன் மட்டுமே!

இரண்டாவது சீசன் இது போல வரவேற்பை பெற்று இருக்கிறது ஆனால், மற்ற இரண்டும் இந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பாகக் கொண்டு செல்வது என்பது சாதாரண விசயமில்லை. இவர்கள் கலக்கி இருக்கிறார்கள்.

ஒரு எபிசோட் 40 நிமிடங்கள் வருகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு திருப்தியாகப் படம் (சீரிஸ்) பார்த்து இருக்கிறேன். நீங்கள் த்ரில்லர் படங்களைப் பார்ப்பீர்கள் என்றால் இதைப் பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன்.

ரத்த அழுத்தம் உள்ளது என்றால் கவனம் தேவை 🙂 .

என் All time favorite படங்களில் I saw the devil படத்தை முந்தி Prison Break இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டது. முதல் இடம்? அது எப்பவுமே Hostel தான் 🙂 .

பிற்சேர்க்கை

மீதி பாகங்களையும் பார்த்து விட்டேன். இரண்டாம் & நான்காம் பாகங்கள் நன்றாக உள்ளது. மூன்றாம் பாகம், ஒரே மாதிரியான காட்சிகளாக வருவது சலிப்படைய வைக்கிறது. ஐந்தாவது பாகம் அவசியமே இல்லை.

இரண்டு பாகங்கள் பார்த்து விட்டால், அடுத்து என்ன நடக்கும் என்று யூகித்து விட முடியும்.

நான்காம் பாகத்தோடு அழகாக முடித்து விட வாய்ப்பு இருந்தும், தேவை இல்லாமல் நீடித்து இருக்கிறார்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

  1. அன்பு கிரிக்கு, இதை படிக்கும் போதே எனக்கு பார்க்கணும் போல இருக்கு, BP தாறுமாறாக எகுறுகிறது. இன்றே தரவிறக்கம் செய்து பார்த்து விடுகிறேன்.

    அன்புள்ள கிரி அவர்களுக்கு,

    முதலில் மன்னிக்கவும், என்னைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருமுறை பின்னூட்டம் இட்டிருக்கிறேன். வருந்துகிறேன்.

    பிறந்தது – மதுரை, வளர்ந்தது & படித்தது – மதுரை & சென்னை.
    தற்போது வசிப்பது தலைநகர் அருகில் பரிதாபாத், ஹரியானா மாநிலம்.

    கடந்த ஒரு வாரமாக உங்கள் வலைப்பூக்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன், வியந்து கொண்டிருக்கிறேன்.

    ஒரே வார்த்தையில் HATS OFF TO YOU, GIRI …

    நன்றி.
    கணேஷ்

  2. பிரஸ்ட் மட்டும் ரொம்ப த்ரில்லா இருக்கும். செகண்ட் ஓகே வா இருக்கும். மூன்றாவது முடியலையே அப்படிங்கற ரேஞ்சுல இருக்கும். first மட்டும் நான் suspense தாங்காம ரெண்டே நாளில் பார்த்து முடித்தேன். அப்படியே lost serial பாருங்க. அதுவும் நல்ல இருக்கும்.

  3. sorry. first மட்டும் ரொம்ப த்ரில்லா இருக்கும். செகண்ட் ஓகே வா இருக்கும். மூன்றாவது முடியலையே அப்படிங்கற ரேஞ்சுல இருக்கும். first மட்டும் நான் suspense தாங்காம ரெண்டே நாளில் பார்த்து முடித்தேன். அப்படியே lost serial பாருங்க. அதுவும் நல்ல இருக்கும்.

  4. prison break நெறைய பேரு சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்
    நீங்களே இப்படி சொன்ன பார்த்துட வேண்டியது தான்

    பகிர்வுக்கு நன்றி தல
    – அருண் கோவிந்தன்

  5. ஆங்கில அறிவோட குறைவின் காரணமாக பொதுவாக அதிக அளவில் ஆங்கில படங்களை பார்பதில்லை. ஏதாவது படங்கள் நண்பர்கள் குறிப்பிடும் போது மட்டும் பார்பதுண்டு. சிறைச்சாலை அம்சம் கொண்ட படத்தில் நான் அதிக தடவை பார்த்ததும், வியந்ததும் The Shawshank Redemption படம். தற்போதும் பார்க்க கூடிய ஆர்வம் உண்டு.

    சமயத்தில் என் நண்பன் சக்தியை RED (மோர்கன் ப்ரீமேன்) கதாபாத்திரதோடு ஒப்பிடுவதுண்டு. தமிழில் இதுபோல படங்கள் வருவதில்லை என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. வந்தாலும் வியாபார ரீதியில் வெற்றி பெறுவது கேள்விகுறியே????

    நீங்கள் குறிப்பிட்ட Prison Break நாடகம் பார்க்ககூடிய மனநிலையும், சூழ்நிலையும் தற்போது இல்லை. நினைவில் வைத்துகொண்டு 3/4 மாதத்திற்கு பின் பார்க்க முயற்சி செய்கிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.

  6. தமிழில் நமக்கு ஓரளவு அறிமுகப்படுத்தியது மகாநதி படம் தான்.

    நீங்க “ராஜாதி ராஜா” இல்லீனா “குரு சிஷ்யன் ” நு எழுதி இருந்தால்
    விசில் பரந்திருக்கும்.
    பாவம் நீங்க !!!!

    ரிலிசுக்கு முன் கபாலி கதை கண்டிப்பாக சொல்வீர்களா ?
    பாபநாசத்துக்கு சொன்னீர்களே அது மாதிரி.

    –ம.கிரி. சாமி

  7. நானும் பார்க்க ஆர்வம்தான் எந்த website youtube ல் பார்க்க முடியுமா இல்ல வேர ஏதவாது இணையதளமா நண்பா link pls

  8. @கணேஷ் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி 🙂 . இதை ஒரே நாளில் பார்த்து விட முடியாது.. 22 எபிசோட் இருக்கு.

    @அங்குசாமி Lost பரிந்துரைக்கு நன்றி. பார்க்க முயற்சிக்கிறேன். தற்போது 24 அடுத்தது பார்க்கலாம்னு நினைக்கிறேன்

    @அருண் கண்டிப்பா பாருங்க..

    @யாசின் நான் மட்டும் என்ன British born ஆ 🙂 எல்லாம் சப்டைட்டில் உதவி தான். இல்லைனா எனக்கு மட்டும் எங்க புரியப் போகுது. சப்டைட்டில் இருந்தே பல வசனங்கள் புரியலை.

    @மட சாமி அது தான் நீங்க சொல்லிட்டீங்களே.. அதுவே போதும்.

    “ரிலிசுக்கு முன் கபாலி கதை கண்டிப்பாக சொல்வீர்களா ? பாபநாசத்துக்கு சொன்னீர்களே அது மாதிரி”

    கண்டிப்பா சொல்றேன்.. ஆனால், கபாலி எந்தப் படத்தின் ரீமேக்கும் இல்லையே.. எனக்கு எந்தப் படத்தோட ரீமேக்குனு கண்டுபிடித்துச் சொல்லுங்க.. படத்தைப் பார்த்துட்டு கண்டிப்பா எழுதறேன்.

    தூங்காவனம் Sleepless night படத்தோட அதிகாரப்பூர்வ ரீமேக் (நீங்க சொன்ன பாபனாசம் மாதிரி) அதனால அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

    @கார்த்தி Torrent ல முயற்சி செய்து பாருங்க.

  9. பரிந்துரைக்கு நன்றி கிரி. Prison Break பார்க்க ஆரம்பித்து விட்டேன். முதல் சீசனில் தான் இருக்கிறேன். விறுவிறுப்பாக இருக்கிறது 🙂

  10. சார்.
    சின்ன வயதில் பார்த்த படம். பேர் தெரியலை. ஒரு வீட்டில் 5.6 பேர் தங்குவாங்க. புலி வந்து சிம்னி வழியாக ஒவ்வொரு வராக சாப்பிட்டு விடும்.
    என்ன படம் சார் ??????

  11. நன்றி கிரி, இந்த சிரியலை உடனே பார்க்க ஆரம்பிக்கின்றேன் .
    இதேபோல் game of thrones ஆங்கில சீரியலை பாருங்கள் கிரி ,அருமையான சீரியல் ஒவ்வொரு பாகமும் பல திருப்பங்களையும் அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத படி இருக்கும், பிரம்மாண்டமாகப் படமாக்கியிருப்பார்கள் ,இதில் வரும் டிரேகன், பனி மனிதர்கள் அனைத்தையும் அருமையாக உருவகப்படுத்தியிருப்பார்கள் ஆபாச காட்சிகள் சற்று அதிகம், ஐந்து பாகங்கள் உள்ளது ஒவ்வொன்றும் 10 எபிசோடுகள், கண்டிப்பாகப் பாருங்கள் கிரி.

  12. @ஸ்ரீநிவாசன் நீங்க ஒருவர் தான் படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றீங்க? மிக்க நன்றி 🙂

    @அம்பி இணையத்தில் தேடினாலே கிடைக்கும்.

    @வசந்த் எனக்கு நினைவில்லை. நண்பர்களிடம் கேட்டு சொல்கிறேன்.

    @கார்த்தி ஏற்கனவே பார்த்து இருக்கிறேன். முழுமையாக இன்னும் பார்க்கவில்லை. இவையெல்லாம் முடித்து பிறகு பார்க்கிறேன்.

    @சிவா நலமா? 🙂

  13. கிரி, முதல் சீசன் முடித்துவிட்டேன். யப்பா சாமி, முடியல… சிறைக்கலவரமாக இருக்கட்டும். அந்த அறையின் தரையை உடைத்து தப்ப திட்டமிடுவதாகட்டும்… செம செம செம த்ரில்.

    அதுவும் 21வது எபிசோடில் எனக்கு ரத்த அழுத்தம், நெஞ்சுவலி எல்லாம் வந்துவிட்டது.

    சொன்னா நம்பமாட்டீங்க, திரில் தாங்காம ஃபார்வர்ட் பண்ணவும் மனசு வராம ரெண்டு காதையும் இறுக்க மூடிட்டு அந்த எபிசோடின் கடைசி சில நிமிடங்களைப் பாத்தேன்.

    கதாநாயகன், அவரது சகோதரன் தாண்டி சிறை அதிகாரி பெல்லிக்ஸ், வார்டன், டாக்டர் சாரா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

    தலையை ஒரு மாதிரி சாய்த்து அந்த டாக்டர் சாரா பார்க்கும்போது யாரோ ஒரு தமிழ்க்கதாநாயகியை நினைவுபடுத்துகிறார். யாரென்று இவரைப் பார்த்த நாளிலிருந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க…

    இந்த தொடரைப் பார்க்க தூண்டியதற்கு நன்றி. இன்னிக்கு ரெண்டாவது சீசன் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

  14. THANK FOR YOUR SUGGESTION.AFTER READING YOUR REVIEW, I BECOME SO INTERESTED TO WATCH IT.

    I JUST FINISHED WATCHING ALL 82 EPISODES,IT TOOK ME A WEEK TO DO IT. BUT IT WAS WELL WORTH IT.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!