Fauda | Israeli TV Action Series | உளவுத்துறை Vs தீவிரவாதிகள்

4
Fauda series tamil review

ஸ்ரேல் உளவுப்பிரிவு அமைப்பு எவ்வாறு தீவிரவாதிகளை, அவர்களது திட்டங்களை அழிக்கின்றனர் என்பதே Fauda கதை. இஸ்ரேல் பாலஸ்தீனம் என்பது இந்தியா பாகிஸ்தான் போல நெடுங்காலச் சண்டை. Image Credit

இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை உலகம் அறிந்தது. இஸ்ரேல் பார்வையில், அவர்கள் எண்ணத்தில் இந்தச் சீரீஸ் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இவர்கள் கூறுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பது தெரியாது. இருப்பினும் ஓரளவு Balance செய்துள்ளதாகவே கருதுகிறேன்.

தீவிரவாதிகளை அழிப்பது பற்றி ஏராளமான திரைப்படங்களைப் பார்த்து இருந்தாலும், இது போல நெருக்கமான கதையாகப் பார்த்தது இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வுப்பூர்வமாகப் பார்த்து இருப்பார்கள்.

Fauda

முதல் எபிசோட் ஒன்றுமே புரியவில்லை. யார் உளவுத்துறை, யார் தீவிரவாதி என்றே தெரியவில்லை. எல்லோருமே ஒரே மாதிரி உள்ளார்கள்.

பார்ப்பதை நிறுத்திவிடலாம் எனும் அளவுக்குக் கடுப்பாகி, சரி இன்னும் ஒரு எபிசோட் பார்ப்போம் என்று தொடர்ந்த பிறகே புரிய ஆரம்பித்தது.

பார்க்காமல் விட்டு இருந்தால், ஒரு அற்புதமான சீரீஸை தவறவிட்டு இருப்பேன்.

மூன்றுமே தரமான சீசன்கள். பார்க்கும் போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது போலவே இருந்தது. அவர்களுடைய கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் போன்றவை ஓரளவு பிடிபட்டது.

என்னென்ன மொழிகள் (Hebrew / Arabic) பேசுகிறார்கள், ஒவ்வொரு நாட்டினரின் மற்றவர்கள் மீதான வெறுப்பு, Shahid என்றால் என்ன? எவ்வாறு தாக்குதல் நடைபெறுகிறது? என்று பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

Doron, Walid & Bashar

இஸ்ரேல் உளவுத்துறை அமைப்பில் இருக்கும் Doron பட்டையைக் கிளப்பியுள்ளார். குழுவில் அனைவருமே சிறப்பு என்றாலும், இவர் ஆக்ரோஷமாக நடித்துள்ளார்.

தீவிரவாதிகள் அமைப்பில் சாதாரண இளைஞனாக வரும் Walid பின்னர் மிரட்டல் தலைவனாக மாறுவதை மிக இயல்பாகச் சித்தரித்துள்ளனர். Transformation தாறுமாறாக உள்ளது.

இதே போல Bashar என்ற கதாப்பாத்திரமும்.

இவர்கள் அல்லாமல் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல கதாப்பாத்திரங்கள் உள்ளன.

மூன்றாவது சீசன் மிகப்பதட்டமாக இருந்தது. Prison Break முதல் சீசன் போல, பயத்தில் சீசன் சீக்கிரம் முடிந்து விட்டால் தேவலாம் என்று இருந்தது 🙂 .

குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

உளவுத்துறையில் இருப்பவர்கள் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனை, தீவிரவாதிகள் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவற்றைப் பார்க்கும் போது பொதுமக்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது புரிகிறது.

தீவிவாதிகளுக்குள் நடக்கும் அதிகார மோதல் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

தற்கொலை படை தாக்குதலுக்கு நேர்முகம், உளவு பார்ப்பவர்கள், தலைமை, தீவிரவாதிகள் செயல்படும் முறை, அவர்களுக்குள் உள்ள கட்டுப்பாடுகள், அவர்களுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு.. யம்மாடி! தலை கிறுகிறுக்கிறது.

யார் சரி? யார் தவறு?

உளவுத்துறை, தீவிரவாதிகள் சண்டையில் யார் மீது தவறு என்றே கூற முடியாத அளவுக்குத் திரைக்கதை உள்ளது. பழிக்குப்பழி என்பதே இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.

Bashar கதாப்பாத்திரம் மிகச்சாதாரணப் பொதுமக்களில் ஒருவன் ஆனால், உளவுத்துறை நடவடிக்கையால் தீவிரவாதியாக மாறும் சூழல். இறுதியில் மனிதத்தன்மையை இழக்கும் அளவுக்குச் செல்கிறான்.

உளவுத்துறையால் தீவிரவாதிகள் குடும்பம் பாதிக்கப்படுகிறது, அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதலால் சம்பந்தமே இல்லாத பொதுமக்கள் பலியாகின்றனர்.

எனவே, ஒவ்வொருவர் சூழ்நிலையே எதையும் தீர்மானிக்கிறது என்பதைக் கூறுகிறது. அவரவர்க்கு அவரவர் நியாயம், காரணங்கள்.

திரைக்கதை ஒளிப்பதிவு

திரைக்கதை அட்டகாசமாக உள்ளது. நிச்சயம் கடுமையாக உழைத்துள்ளார்கள், Home Work செய்துள்ளார்கள். கதை செல்லும் விதம் தரமாக உள்ளது.

இதுவரை பார்த்ததிலேயே இது தான் உளவுத்துறை, தீவிரவாதிகள் கதையைச் சொன்ன மிகச்சிறந்த படமாக / சீரீஸாகக் கருதுகிறேன்.

பாலஸ்தீனம், இஸ்ரேலில் சுற்றிக்கொண்டு இருந்த உணர்வை ஒளிப்பதிவு தந்தது. அங்கே நிலவுவதை அப்படியே கண் முன் கொண்டு வந்துள்ளார்கள்.

ஒவ்வொரு ஒளிப்பதிவு கோணமும் நாம் அங்கே அமர்ந்து, நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு இருப்பது போலவே உள்ளது.

பரிந்துரை

உடலுறவு காட்சிகள் உள்ளது. எனவே, குழந்தைகளுடன் பார்க்க ஏற்றதல்ல.

மேற்கூறியதை தவிர்த்து அனைவருக்கும் Fauda பார்க்கப் பரிந்துரைக்கிறேன். குறிப்பாகத் தெரிந்துகொள்ள ஏராளமான செய்திகள் உள்ளது.

பரிந்துரைத்தது நண்பர் கௌரிஷங்கர். NETFLIX ல் உள்ளது

Read : Line of Duty | British TV Crime series | தெறி விசாரணை

Genre Action, Serial drama, Psychological thriller, Political thriller, Espionage thriller
Created by Lior Raz, Avi Issacharoff
Starring Lior Raz, Hisham Sulliman, Shadi Ma’ari, Laëtitia Eïdo
Composer(s) Gilad Benamram
Country of origin Israel
Original language(s) Hebrew, Arabic
No. of seasons 3
No. of episodes 36
Running time 45 minutes
Production company(s) Yes – Satellite Television
Original release February 15, 2015 –present

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. படிக்கும் போதே ஒரு விதமான உணர்வு ஏற்படுகிறது .. சீரிஸ் பார்க்க முயற்சி செய்கிறேன் ..பகிர்வுக்கு நன்றி கிரி ..

  2. @ஸ்ரீனிவாசன் முழுக்க பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். செமையா இருக்கும்.

    @யாசின் பாருங்க.. செம பரபரப்பா இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!