I am Kalam (2011 இந்தி) | A feel good movie

4
I am kalam

ரு ஏழை சிறுவன் அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்துப் படித்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான். இறுதியில் என்ன ஆகிறது என்பதே I am Kalam.

I am Kalam

படிக்க வைக்க வசதி இல்லாமல் ராஜஸ்தான் அரண்மனை அருகே உள்ள தேநீர் கடையில் Harsh Mayar யை அவன் அம்மா பணிக்குச் சேர்கிறார். Image Credit

ராஜாவின் மகனான Hussan Saad, குடும்பக் கவுரவம் காரணமாகவும், பணக்கார வீட்டு பையன் என்பதாலும் மற்றவர்களுடன் இணைய முடியாமல் இருக்கிறான்.

விளையாட யாருமே இல்லாமல், தனிமையில் இருக்கும் Hussan Saad க்கு Harsh Mayar நட்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இருவரும் பழகத் துவங்குவது ராஜா குடும்பத்துக்குத் தெரிய வந்து சிக்கலாகிறது. இறுதியில் இணைந்தார்களா என்பதை அழகாகக் கூறுகிறது.

எளிமையான கதை

அனைத்து எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டுதான் படத்தையே பார்க்க முடியும். அவ்வளவு எளிமையான கதை, காட்சியமைப்புகள்.

த்ரில்லர், அழுகை, ஆர்ப்பாட்டம், ஆடம்பரம், பதட்டம், சண்டை, எதிர்மறை படங்களாகப் பார்த்துச் சலித்தவர்களுக்குத் தென்றலை போலத் தழுவும் படமிது.

அனைத்து சலிப்பான, வெறுப்பான, எண்ணங்களையும் தள்ளி வைத்துப் பார்க்க வைக்கும் A feel good movie.

எளிமையான கதையை அதைவிட எளிமையான காட்சியமைப்புகளில், நல்ல செய்தியோடு கொடுப்பது மகிழ்ச்சி.

ஒரு நல்ல செய்தியைக் கஷ்டப்பட்டு, அழுது கொண்டே மக்களிடையே கொண்டு செல்லலாம் அல்லது இதுபோல நேர்மறையாகவும் கொண்டு செல்லலாம்.

Harsh Mayar & Hussan Saad இரு பசங்களும் மிகச்சிறந்த நடிப்பு.

புத்திசாலி பையனாக, எதையும் உடனே கிரகித்துக் கொள்ளும் சிறுவனாக Harsh Mayar.

சில இடங்களில் கொஞ்சம் மிகை நடிப்பாக இருந்தாலும், பின்னாளில் சிறந்த நடிகராக வர அனைத்து அம்சங்களும் உள்ளது.

பணக்கார பையனாகவும் அவன் ஏக்கத்தை வெளிப்படுத்துவதிலும், நட்பாக யாராவது கிடைக்க மாட்டார்களாக என்று எதிர்பார்ப்பில் இருப்பதும் என்று Hussan Saad சிறந்த நடிப்பு.

ராஜஸ்தான்

எளிமையான வாழ்க்கை, பரபரப்பில்லா சூழ்நிலை என்று படம் முழுக்கக் கவர்கிறது.

ராஜஸ்தானில் உள்ள ராஜா (ரஜபுத்திரர்கள்) குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், கவுரவம், அதிகாரம், கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் திணிக்காமல் போகிற போக்கில் கூறி விடுகிறார்கள்.

அரண்மனை அருகே தேநீர் கடை வைத்துள்ள Gulshan Grover அளவான நடிப்பு. ஒரு தேனீர் கடை & Dhaba முதலாளியை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்.

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல், சராசரி நபராக வந்து செல்கிறார்.

இடையில் வெளிநாட்டினர், சுற்றுலா என்று கொஞ்சம் ராஜஸ்தானை சுற்றி காட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவு அட்டகாசம். ராஜஸ்தான் சென்று சில நாட்களாவது தங்க வேண்டும் என்ற விருப்பத்தை I am Kalam தோற்றுவித்தது.

விக்ரம் படத்தில் வரும் எலி கோவில் இதில் வருகிறது.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். குழந்தைகளை அவசியம் பார்க்க வைக்க அறிவுறுத்துகிறேன்.

நிச்சயம் மிக ஆர்வமாகப் பார்ப்பார்கள். படிப்பதன் அவசியத்தை இப்படம் மூலம் உணர்வார்கள்.

Amazon Prime ல் காணலாம். தமிழில் உள்ளது.

Directed by Nila Madhab Panda
Screenplay by Sanjay Chauhan
Story by Sanjay Chauhan
Produced by Santanu Mishra, Jitendra Mishra (Associate)
Starring Harsh Mayar, Gulshan Grover, Dharmveer Jakhar, Pitobash Tripathy
Cinematography Mohana Krishna
Edited by Prashant Nayak
Music by Abhishek Ray, Madhuparna, Papon, Susmit Bose, Shivji Dholi,
Release date 12 May 2010 (Cannes) 5 August 2011 (Indian)
Running time 87 minutes
Country India
Language Hindi

தொடர்புடைய திரை விமர்சனம்

Boy Missing (2016 Spanish) | பையனைக் கடத்தியது யார்?

கொசுறு

இப்படத்தின் விமர்சனம் எழுத நினைத்தது 2011 ஆனால், 2021 ல் எழுதியுள்ளேன் 🙂 .

இப்படம் பார்த்த நாள் முதல் ராஜஸ்தான் செல்ல வேண்டும் என்பது என் வாழ்க்கை விருப்பமாக மாறி விட்டது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. கிரி, சிறுவர்களை குறித்த படம் என்றாலே எனக்கு அலாதி விருப்பம்.. பள்ளி நாட்களில் முதன்முதலில் தியேட்டரில் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த சிறுவர்கள் குறித்த கதையம்சம் கொண்ட முதல் படத்தின் நினைவுகள் நெஞ்சுக்குள் அப்படியே பசுமையாக இருக்கிறது.. அழகி படத்தின் சிறுவர்கள் பாகம் நெஞ்சை பிழிந்து விட்டது.. தற்போதும் படத்தை பார்க்கும் தைரியம் இல்லை.. முழு படமும் பார்த்தால் கலங்கி விடுவேன்.. இங்கு வந்த பின்பு நான் பார்த்து வியந்த, என்றுமே வியக்கும் படம் taare zameen par. பசங்க 1 & 2 படமும் மிகவும் பிடிக்கும்.. பசங்க 2 இல் வருகின்ற நைனா பாத்திரதை உரித்து வைத்தது போல் என் மகளின் சுட்டி தனங்கள் இருக்கின்றது.. என் பையன் ரொம்ப அமைதி.. ஆனால் மகள் துடுக்குத்தனம் கொண்டவள்..

  ராஜஸ்தான் : சுற்றி பார்க்க வேண்டும் என உங்களுக்கு இருக்கின்ற விருப்பம் போல 10 வகுப்பு படிக்கும் போது காதல் கோட்டை படத்தின் பாடல்கள் பார்த்த உடனே இந்த இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை அன்றே வந்து விட்டது.. உடன் பணி புரியும் வட நாட்டினரிடம் அடிக்கடி இந்த இடங்களை பற்றி கேட்டு கொண்டே இருப்பேன்.. குறிப்பாக பழைய கோட்டைகள் மீது எனக்கு அலாதி விருப்பம்.. சில சமயங்களில் YOUTUBE யிலும் காணொளிகளை பார்ப்பேன்..

  குலு மணாலி, சிம்லா இன்னும் பல உங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக மனதில் துள்ளி குதித்து கொண்டு இருக்கிறது.. ராஜ்புத்துக்களின் வெஃஜ் உணவு மிகவும் அருமையாக இருக்கும்.. இனிப்புகளும் மிகவும் பிரமாதம்… நீங்கள் ராஜஸ்தான் செல்லும் போது சுவைத்து பார்க்கவும்.. முதன்முதலில் கோவையில் சக்தியுடன் சேர்ந்து சாப்பிட்ட “தாபா” உணவின் ருசி இன்னும் நாவில் ஒட்டி கொண்டுள்ளது.. நிறைய இடத்தை சுற்றி பார்க்க வேண்டி திட்டங்கள் வைத்து இருக்கிறேன்.. ஆனால் காலம் தான் கை கொடுக்க வேண்டும்..

 2. @யாசின்

  “சுற்றி பார்க்க வேண்டும் என உங்களுக்கு இருக்கின்ற விருப்பம் போல 10 வகுப்பு படிக்கும் போது காதல் கோட்டை படத்தின் பாடல்கள் பார்த்த உடனே இந்த இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை அன்றே வந்து விட்டது”

  சரியா சொன்னீங்க.. இப்படம் பார்த்த போதும் எனக்கு இவ்வாறு தோன்றியது. ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருக்கும்.

  தங்கர்பச்சான் என்று நினைக்கிறேன்.

  விகடன் விமர்சனத்தில் ஒளிப்பதிவு சுமார் என்று எழுதி விட்டார்கள். அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு அடுத்த இதழில் மன்னிப்பு கேட்டு இருந்தார்கள் 🙂 .

  “குலு மணாலி, சிம்லா இன்னும் பல உங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக மனதில் துள்ளி குதித்து கொண்டு இருக்கிறது..”

  இந்த இடங்கள் பார்க்கலாம், பார்த்தே ஆக வேண்டிய என் பட்டியலில் இல்லை.

  “ராஜ்புத்துக்களின் வெஃஜ் உணவு மிகவும் அருமையாக இருக்கும்.. இனிப்புகளும் மிகவும் பிரமாதம்… நீங்கள் ராஜஸ்தான் செல்லும் போது சுவைத்து பார்க்கவும்”

  எனக்கு இனிப்பே பிடிக்காது யாசின் ஆனாலும் இது போன்ற தனித்துவமாக உள்ள இடங்களில் எப்படி உள்ளது என்று பார்ப்பதற்காக சாப்பிட்டு பார்ப்பேன்.

  ராஜஸ்தான் எப்போது போவேனோ தெரியவில்லை.

  “நிறைய இடத்தை சுற்றி பார்க்க வேண்டி திட்டங்கள் வைத்து இருக்கிறேன்.. ஆனால் காலம் தான் கை கொடுக்க வேண்டும்.”

  அதற்கு முதலில் நீங்கள் இந்தியாக்கு வர வேண்டும், அப்புறம் திட்டமிட வேண்டும்.. இது கொஞ்சம் பெரிய வேலை என்பதால், தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன் 🙂 .

  • ஆமாம் கிரி, காதல் கோட்டை படத்திற்க்கு ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சன் தான்.. மிக சிறந்த ஒளிப்பதிவாளர் & இயக்குனர்.. அழகி படம் ஒரு பொக்கிஷம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here