பலரும் ஏதாவது ஒரு சமயத்தில் PDF பாஸ்வேர்ட் நீக்குவது எப்படி என்று முயன்று இருப்போம். அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம். Image Credit
PDF பாஸ்வேர்ட்
குறிப்பிட்ட கோப்பை (File) பாதுகாக்க அதற்குப் பாஸ்வேர்ட் வைப்பது வழக்கம். பெரும்பாலும் PDF கோப்புக்கு இது வழக்கமானது.
காரணம், நிதி தொடர்பான பரிவர்த்தனைகளின் விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதால், இது தொடர்பான கோப்புகளுக்குப் பாஸ்வேர்ட் இருக்கும்.
எடுத்துக்காட்டுக்கு, Bank / Credit Card statement, NPS / Share / Mutual fund statement, Salary slip உட்படப் பலவற்றைப் பெறும் போது அதில் பாஸ்வேர்ட் இருக்கும்.
இக்கோப்புகளைத் திறக்கும் போது பாஸ்வேர்ட் கேட்கும், கொடுத்துத் தேவைப்படும்போது பார்க்கலாம். மற்றவர்களுக்கு இக்கோப்புகள் கிடைத்தாலும் பாஸ்வேர்ட் தெரியாமல் பயன்படுத்த முடியாதது இவற்றின் சிறப்பு.
எப்படிப் பாஸ்வேர்ட் நீக்குவது?
கோப்பின் பாஸ்வேர்ட் தெரியவில்லை என்றால், அதற்கு இக்கட்டுரை உதவாது. அதற்குப் பணம் செலுத்தி இதற்கான மென்பொருளை வாங்க வேண்டும்.
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஆனால், பாதுகாப்பானது அல்ல.
ஆனால், மற்ற தேவைகளுக்கு இக்கோப்புகளை மற்றவரிடம் பகிர வேண்டும் என்றால், பாஸ்வேர்ட் நீக்கிக் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால், பாஸ்வேர்ட் என்னவென்பதை கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும். வழக்கமாக அனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்டாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு காரணமாகக் கொடுக்க முடியாது.
இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது?
அந்தக் கோப்பை ப்ரின்ட் செய்து அதை PDF ஆக மாற்றித் தேவைப்படுபவருக்கு அனுப்புவது. இது கடினமான வேலை, அதோடு தேவையற்றுக் காகிதங்கள் வீணாகும்.
எடுத்துக்காட்டுக்கு, கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அந்நிறுவனம் Bank Statement, Salary slip கேட்பார்கள்.
பாஸ்வேர்டுடன் கோப்பை கொடுத்தால், பாதுகாப்பு இல்லை. ப்ரின்ட் செய்து PDF ஆக மாற்றி அனுப்பலாம் ஆனால், நேரம் அதிகம், வேலை பளு, காகிதம் வீண்.
எளிதாக நீக்குவது எப்படி?
மேற்கூறிய முறையில் செய்யாமல் எளிதாக இப்பிரச்சனையைச் சமாளிக்கலாம்.
மற்றவருக்குக் கொடுக்க வேண்டிய கோப்பை பாஸ்வேர்ட் கொடுத்துத் திறந்த பிறகு, ப்ரின்ட் க்ளிக் செய்தால், Print to PDF என்று வரும்.
அதை க்ளிக் செய்தால், எங்கே சேமிப்பது என்று கேட்கும். அதை நமக்குத் தேவையான இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.
தற்போது சேமிக்கப்பட்ட கோப்பை திறந்தால், பாஸ்வேர்ட் கேட்காது. இதைத் தேவைப்படுபவருக்குப் பாஸ்வேர்ட் கூறாமலே அனுப்பலாம்.
பிரின்ட் செய்து PDF ஆக மாற்றினால் கோப்பின் தரம் சுமாராக இருக்கும் ஆனால், இம்முறையில் அனுப்பினால் Professional (Original) ஆக இருக்கும்.
மிக எளிதான வழிமுறையும் கூட.
தொடர்புடைய கட்டுரைகள்
அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்ற வேண்டுமா?
ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. நான் என்றுமே வியக்கும் பலவற்றில் PDF format க்கு எப்போதும் தனி இடம் உண்டு.. நான் முதன்முதலில் கணினியை இயக்க ஆரம்பித்தது 2001/2002 காலகட்டம் தான்..அப்போது Adobe pagemaker, photodraw photoshop, coraldraw இதெல்லாம் எல்லா DTP சென்ட்ரலில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.. இந்த நினைவுகளை தற்போது அசை போட்டாலும் உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது.. பல வருடங்கள் கடந்தாலும் இன்னும் PDF நடைமுறையில் இருப்பது மிகவும் சிறப்பு.. PDF போட்டியாக வேறு ஏதும் FORMAT இருக்கிறதா? என்று தெரியவில்லை.. இருந்தால் என்ன என்று கூறுங்கள் கிரி தெரிந்து கொள்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி.
@யாசின்
இல்லை யாசின். PDF தான் இன்றும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வடிவமைப்பு பயன்படுத்த எளிதாக, பாதுகாப்பு நிறைந்ததாக இருப்பது அனைவரையும் தொடர்ந்து பயன்படுத்த வைத்துள்ளது.
அதோடு இலவசமாக இருப்பதாலும் இதை அனைவரும் பயன்படுத்தக் காரணமாக உள்ளது.
கூடுதல் சேவைக்கு மட்டுமே கட்டணம் செலுத்தி மென்பொருள் வாங்க வேண்டும் ஆனால், படிப்பதற்கு எதுவும் தேவையில்லை.
எனவே, எங்கும் PDF நீக்கமற நிறைந்துள்ளது.