கூகுளின் Titan Security Key

0
கூகுளின் Titan Security Key

கூகுள் கணக்கு அனைவருக்கும் மிக முக்கியமானது.

குறிப்பாக இதை முதன்மை கணக்காகவும், Android க்கும் பயன்படுத்துபவர்களுக்கு. பல இணையக் கணக்குகளின் மின்னஞ்சல் முகவரியாக இக்கணக்கே இருக்கும்.

எனவே, இப்படிப்பட்ட கணக்கு சிலருக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், சிலருக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

2 Factor Authentication / Two step verification

இக்கணக்கை பாதுகாக்க கூகுள் 2FA என்ற (2 Factor Authentication) இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதியை ஏற்கனவே, நம் மொபைல் எண்ணை இணைப்பதன் மூலம் பாதுகாக்கிறது. Image Credit

ஆனாலும் இதையும் உடைக்கப் பல தொழில்நுட்பங்கள் வந்து விட்டது. எனவே, இது பாதுகாப்பு தான் ஆனால், 100% பாதுகாப்பு என்று கூறி விட முடியாது.

இதை விடப் பாதுகாப்பாக இருக்க “Security Key” வசதியை முன்பு கொண்டு வந்தது. இதற்கான சாதனத்தை மற்ற நிறுவனங்களே வழங்கி வந்தன.

கூகுளின் Titan Security Key

தற்போது கூகுளே இச்சாதனைத்தை தயாரித்து அனைவருக்கும் விற்பனையில் கொடுக்கப்போகிறது.

இப்பாதுகாப்பு வசதி குறித்து ஏற்கனவே எழுதி இருக்கிறேன். விரிவாகத் தெரிந்துகொள்ள, காணொளியில் காண பின்வரும் கட்டுரையைப் படிக்கவும்.

Read கூகுள் அறிமுகப்படுத்திய அதி பாதுகாப்பு வசதி

கூகுள் இச்சேவையைத் தன் 34,000 பணியாளர்களுக்குக் கொடுத்து சோதித்து உள்ளது. இதுவரை எவரும் Hack செய்யவில்லை, செய்ய முடியவில்லை.

எனவே, தற்போது பொதுமக்களுக்கும் கொடுக்கத் தீர்மானித்துள்ளது.

என் கூகுள் கணக்கில் ரகசியம் என்று எதுவுமில்லை ஆனால், சான்றிதழ்கள், நிழற்படங்கள் என்று உள்ளது அதோடு, மற்ற சேவைகளுக்காக இக்கணக்கு எனக்கு முக்கியத்துவமானதாக உள்ளது.

எனவே, பின்னர் “Titan Security Key” வாங்கும் முடிவில் உள்ளேன். கட்டணம் அதிகமாகவுள்ளது, அதனால் இதை வாங்கும் அளவுக்குப் பணம் உபரியாக இருந்தால் வாங்கலாம் என்றுள்ளேன்.

கூகுள் Premium Account கொடுக்கப் போவதாகச் செய்திகள் வந்தன, அதாவது கூடுதல் பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளுடன் ஆனால், நடக்கவில்லை.

கொசுறு

கூகுளின் Titan Security Key சாதனம் வாங்கும் யோசனை உங்களுக்கு உள்ளதா?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!