ஹாலிவுட்டில் தான், ஒரு படம் வெளியாகி அதனுடைய இரண்டாம் பாகத்தில் அந்தக் கதையின் துவக்கம் வரும், ஸ்பைடர் மேன் போல. Image Credit
பில்லா II
ஒரு சிலரே துவக்கத்திலேயே பல பாகமாக எடுக்கத் திட்டமிடுவார்கள்.
சிலர் படம் வெற்றி பெற்றதும் அதனுடைய மற்ற பாகங்களை எடுக்க முயல்வார்கள். இதில் பில்லா II இரண்டாவது வகை.
தமிழுக்கு இது புதியது கூட அதாவது, வந்த கதையின் துவக்கத்திற்கு [prequel] போவது.
படத்தின் உருவாக்கம் சிறப்பாக இருந்தும் திரைக்கதை சொதப்பியதால் ஏமாற்றமாகி விட்டது. இந்தப்படத்தின் எந்தப் பகுதியிலும் அஜித்தை குறை கூற முடியாது.
அவர் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து இருக்கிறார், இயக்குனர் சக்ரி தான் சொதப்பி விட்டார்.
கதை சுருக்கமாக “ஒரு டான் எப்படி உருவாகினான்” என்று காட்டுகிறார்கள், காட்டியதை கொஞ்சம் நம்புற மாதிரி காட்டி இருந்தால் கலக்கலாக இருந்து இருக்கும்.
கொலைகள்
அநேகமாகப் பலரை கடுப்படித்து இருப்பது அஜித் செய்யும் கொலைகளாகத் தான் இருக்கும். ஒரு வரைமுறையே இல்லாமல், பார்த்தவர்களை எல்லாம் சுட்டுக்கொண்டே இருக்கிறார்.
சக்ரிக்கு இது ரொம்ப ஓவராகத் தோன்றாதது ஆச்சர்யமே!
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் காட்சிகளை அமைத்து, எப்படி இத்தனை பேரைக் குறுகிய காலத்தில் சுட்டு தப்பிக்க முடியும் என்று தெரியவில்லை.
ஊரில் காவல் துறையே இல்லையோ! என்று சந்தேகம் வரும் அளவிற்கு சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பேருக்குக்கூட யாரும் இது பற்றி விசாரிக்கவில்லை, அது பற்றியே சக்ரி கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை.
படம் முழுக்க ரஜினி போல அஜித்தே ஆக்கிரமித்து இருக்கிறார். திரைக்கதை சொதப்பினாலும் அதையும் மீறி நம்மைக் கவர்வது அஜித்தின் அலட்டல் இல்லாத நடிப்பு தான். உண்மையாகவே ரொம்ப நன்றாக நடித்து இருக்கிறார்.
நரம்பு புடைக்கப் பன்ச் வசனம் எல்லாம் பேசி நம்மைப் பஞ்சராக்கவில்லை.
“என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும்…” வசனம் கூட அந்தக் காட்சிக்குப் பொருத்தமானதாகத் தான் இருந்தது. முகம் உப்பி இருக்கிறது, கவனித்தால் நலம்.
பார்வதி ஓமனக்குட்டன்
பார்வதி ஓமனக்குட்டன் தேவையே இல்லை. கதாநாயகி வேண்டும் என்பதற்காக வைத்தார்கள் போல.
நயன்தாரா மாதிரி கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்தாலாவது பரவாயில்லை 🙂 உகாண்டா ல இருந்து தப்பி வந்தது போல இருக்கிறார்.
டம்மியாக வந்து போகிறார் மற்றும் இரண்டு சண்டைக்கு உதவியாக இருக்கிறார் அவ்வளவே.
அது ஏன் ஸ்ரீமன், அனைத்துப் படங்களிலும் காமெடி பீஸ் மாதிரியே ஆகி விடுகிறார் என்று தெரியவில்லை. இதிலும் அப்படியே!
அஜித், வில்லன்கள் கிட்ட மாட்டும் போது எல்லோரும் கத்தியே பயன்படுத்துகிறார்கள். ஒருவேளை துப்பாக்கி பயன்படுத்தினால் படம் முடிந்து விடும் என்று நினைத்தாரோ என்னவோ! 🙂 .
கடைசியில் அஜித் வில்லன் இடத்தில் சென்று சுடுவதெல்லாம்… என்னமோ போங்க.
வில்லன்
இரண்டு வில்லன்கள், ஒரு நேஷனல் வில்லன் ஒரு இன்டர்நேஷனல் வில்லன்.
நேஷனல் வில்லன் நல்லா ஜாலியா பொண்ணுக கிட்ட மசாஜ் பண்ணிட்டு இருக்காரு 🙂 , மற்றபடி டம்மி. இன்டர்நேஷனல் வில்லன் கொஞ்சம் பரவாயில்லை.
கடைசி ஹெலிஹாப்டர் சண்டை எல்லாம் தேவையில்லாத ரிஸ்க் அஜித்திற்கு. இது போலக் காட்சிகளைத் தவிர்க்கலாம்.
அஜித் எப்போது ஹெலிகாப்டரில் ஏறினார் என்று தெரியவில்லை, ரயிலுக்கு எப்படி குண்டு வைத்தார் என்றும் தெரியவில்லை.
கடைசியில் சக்ரி நம்ம காதில் பூ வைத்து விட்டார்.
பில்லா II வசனங்கள், பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, மேக்கிங் ஆகியவை நன்றாக இருந்தது. குறிப்பாகப் பின்னணி இசையும், பாடல்களும் அசத்தல்.
படத்தின் அளவுக்கதிகமான கொலைகள், ரத்தம் ஆகியவை படத்தின் மதிப்பைக் குறைத்து விட்டது.
கொலைகள் கொஞ்சமாவது நம்பும்படி இருக்க வேண்டும்.
டான் என்பதற்காக, குருவி சுடுற மாதிரிப் படம் முழுக்க சுட்டுக்கொண்டு இருப்பது, படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகிறது.
அஜித் ஒரு முறை கூறி இருந்தார், நான் புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புக்கொடுக்க நினைக்கிறேன் ஆனால், அவர்கள் சொதப்பி விடுகிறார்கள்.
இதனால் இனிமேல் புதுமுக இயக்குனர்கள் என்றாலே யோசிக்க வேண்டியது இருக்கிறது என்று. சக்ரியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து இருக்கிறார்.
கமல் கட்டுப்பாட்டில் இருந்ததால் “உன்னைப் போல் ஒருவன்” சிறப்பாக வந்ததோ என்று தோன்றுகிறது.
தல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Directed by Chakri Toleti
Produced by Sunir Kheterpal, Suresh Balaje, George Pius
Screenplay by Chakri Toleti, Sarath Mandava, Jaffer Mohammed,Ee. Raa. Murugan (dialogue)
Story by Chakri Toleti, Eric Felberg
Starring Ajith Kumar, Parvathy Omanakuttan, Bruna Abdullah,Vidyut Jamwal,Sudhanshu Pandey
Music by Yuvan Shankar Raja
Cinematography R. D. Rajasekhar
Editing by Suresh Urs
Studio Wide Angle Creations IN Entertainment
Distributed by Aascar Films (India), GK Media (USA)
Release date(s) 13 July 2012[1]
Running time 129 minutes
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ஒரு வீடியோ ரிவியுவில் சொன்னது ஞாபகம் வருது. அஜித்தை சக்ரி ஒரு ப்ராடக்டாகவே பார்த்திருக்கிறார். வெங்கட் பிரபு போல “தல” என்ற ரேஞ்சில் ரசித்து நடிக்கவைத்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். 🙂 🙂
கொசுறு 2 அருமை 🙂 🙂
என்னது பில்லா 2 படம் ரிலீஸ் ஆயிடுச்சா சொல்லவே இல்ல…!
எனக்கென்னமோ சீக்கிரம் டான் ஆவது எப்படி அப்படின்னு ஒரு ட்ரைலர் பார்த்த மாதிரி நியாபகம். (ச்சே என்னங்க கிரி இப்படி ஆயிடுச்சி).
சலங்கை ஒலியில படம் எடுக்க தெரியாதவன் இப்போமட்டும் ஒழுங்கா எடுத்துடுவானாக்கும். அஜீத் எந்த கேரக்டருக்கும் வளைந்து கொடுப்பவர் (உதானரனத்துக்கு: பட ஆரம்பத்தில் ஒரு 2-3 நிமிஷம் தல கைலி காஸ்டியும்ல வருவார் இதே ரஜினியா இருந்தா காஸ்ட்யூம் வேற).
ரேஸ் ன்னு ஒரு சைப் அலிகான் ஹிந்தி படம். பார்க்க நேர்ந்தால் பாருங்க. தல அதுக்கு பொருத்தமான ஹீரோ. சங்கர் காம்பினேஷனில் ஒரு படம் பண்ணினால் நல்லா இருக்கும்.
முருகதாசும் சமீபகாலமா ஓவர் பில்டப் கொடுக்கரதனால துப்பாக்கி ஸ்பெஷல் சாதா (புரோட்டாவாக) வரும்ன்னு நினைக்கிறேன்.
அந்த பயர் மேட்டர் – நேத்தே பாத்துட்டேன் சிரிப்பு தாங்கல.
விஸ்வரூபம் – கதை என்னன்னு இப்பவே கெஸ் பண்ணிட்டேன்.
பகிர்வுக்கு நன்றி கிரி.. நான் அஜித்தின் ரசிகன் கிடையாது & படமும் பார்க்கவில்லை. அதனால் பில்லாவை பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது.. ஆனால் ராஜ்குமார் கூறியது போல் ரேஸ் படம் அஜித்துக்கு மிகவும் பொருத்தமான கேரெக்டர் உள்ள படம்.. கிரி நீங்கள் படம் பார்க்கவில்லை எனில் பார்க்கவும். உங்களுக்கு பிடிக்கும் என நெனைக்கிறேன்… இரண்டாம் ஹீரோ ஆர்யா என நினைக்கிறன்.. அதுவும் பொருத்தமான தேர்வு தான்….
நேர்மையான விமர்சனம் தல
“தலை” யவே கொடுத்து படம் பண்ணுப்பான்னா….! பய புள்ள சக்ரி இப்படி தறுதலையா பண்ணிருக்கு 🙁
இன்னொரு முறை கதை கிதைன்னு சொல்லிக்கிட்டு “தல” வீட்டு பக்கம் சக்ரி போனா, “தல” சக்ரி தலையிலேயே நாலு தட்டு தட்டி, போடா இப்படி தனியா வராம போய் வீட்டுல பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிகிட்டு வான்னு சொல்ல போறாரு :-).
கிரி… நோ கமெண்ட்ஸ்
“ஒரு டான் எப்படி உருவாகினான்” என்று காட்டுகிறார்கள், காட்டியதை கொஞ்சம் நம்புற மாதிரி காட்டி இருந்தால் கலக்கலாக இருந்து இருக்கும்.” 100 % நிஜம் …
மத்தபடி படம் ஓகே தானே ???
வேறவழி இல்ல .. தேதிக்க வேண்டியது தான்
அட… படத்தை விடுங்க… எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி… (தல… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…!)
வணக்கம் கிரி
விமர்சனம் அருமை.ஆனால் நான் படம் பார்க்கவில்லை ஏனென்றால் டிக்கெட் கிடைக்கவில்லை.ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து எவன் படம் பார்ப்பான்.அதனால் ஒரு வாரம் களித்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
பில்லா படம் எனக்கு ஒரு டைம் பாக்குற மாதிரி இருந்துச்சு
-அருண்
//தல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.// இதையே எல்லா படத்துக்கும் எல்லாரும் சொன்னா எப்படி? எப்ப தான் luckஓட next time வரும். 🙂
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ஹாலிவுட் ரசிகன் உண்மை தான். இதை விஷ்ணுவர்த்தன் சரியாக செய்து இருந்தார்.
@ராஜ்குமார் சக்ரி என்ன நினைத்து படம் எடுத்தாருன்னே தெரியல.. படம் பார்க்கிறவன் எல்லாம் கேனப்பய என்றா. இவர் ஆராய்ச்சிக்கு!! அஜித் மாட்டிக்கிட்டாரு. ரேஸ் பார்க்கிறேன்.
@யாசின் உங்களுக்காவது பார்க்கிறேன் 🙂
@சிங்கக்குட்டி பிரேம் கூட போனீங்களா.. 🙂
@சதீஷ் எங்க படம் ஓகே.. தலய தான் காலி பண்ணிட்டாரே சக்ரி. அந்த கண்சைன்மென்ட் கடத்துற சீனுக்கு கொடுத்த பில்டப் பார்த்து.. எதோ டெக்னிகலா பண்ணப்போறாருன்னு பார்த்தால், கேப்டன் எதோ பெட்டியை கடத்திட்டு வர மாதிரி வராரு. வெறுத்து போயிட்டேன். இது மாதிரி பல காட்சிகள். சிங்கம் படத்துல பார்த்தீங்கன்னா ஹரி புத்திசாலித்தனமா காட்சிகள் வைத்து இருப்பாரு.. அது மாதிரி எதிர்பார்த்தேன். சரி விடுங்க. தல அடுத்த விஷ்ணுவர்த்தன் படத்துல கலக்குவார் என்று நம்புவோம் 🙂
@இளவசரன் 1000 2000 என்னங்க சொல்றீங்க… எங்க இந்த டிக்கெட்
@அருண் ஈ படம் இந்த வாரம் போறேன்.. ஆனால் எழுத மாட்டேன். படம் வந்து ரொம்ப நாள் ஆகி விட்டது.. இனி எழுதினால் நன்றாக இருக்காது.
@குறும்பன் ஏங்க! மங்காத்தா மெகா ஹிட் தானே!
அஜித் காக படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்
Padam hit aana karanam Ajith… Archive flop na mattum reason director aa? Mokka Padam for mokka tharu thalai rasikarkalukkaka varushathula rendu Padam ipdi nadikka sorry sorry nadakka sollunka boss…..!
நீங்க என்ன வேணா நினைச்சுக்குங்க கிரி. அஜித்தின் இந்த அளவு Status எல்லாம் எனக்கு ஆச்சர்யமே. ஒரு ஒப்பீடாகவே கூட எடுத்துக் கொள்ளுங்கள், கமல் எத்தனை விதமான பாத்திரங்கள் நடித்திருக்கிறார், ரஜினி எத்தனை விதமான கதைகள் நடித்து இருக்கிறார். ஆனால் விஜயும், அஜித்தும் புதுசாக எதையும் செய்யாமல், அரைத்த மாவையே திரும்ப திரும்ப திரும்ப அரைத்து பெரிய இடத்திற்கு போய் விட்டது பெரிய ஆச்சர்யம். அந்த அளவுக்கா தமிழ் ரசிகர்கள் மண்டை காய்ந்து போய் இருகிறார்கள்? இன்னும் எத்தனை படத்தில் தான் அஜித், இருட்டில் கூலிங் கிளாஸ் அணிந்து, கருப்பு கோட்டுடன் நடந்து கொண்டே இருப்பார்? அவருக்கே அலுக்கவில்லை? அந்த அளவுக்கு வேறு ஸ்டைல் எதுவும் செய்ய தெரியாத ஒருவரை எப்படி பெரிய நடிகராக பார்கிறார்கள் என்பது ஆச்சர்யமே.
அஜித்தோ, விஜயோ, ஒரு சப்பாணி, பரட்டை, முள்ளும் மலரும் காளி, ஜானி, அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் / இந்திரன் (தில்லுமுல்லு), சிப்பிக்குள் முத்து மனவளர்ச்சியற்ற பாத்திரம், சவால் பிக் பாக்கெட் ராஜா (சென்னை தமிழ்), வேலு நாயக்கர், என்று வேறு பரிமாணங்கள் முயற்சித்து இருக்கிறார்களா? கமலும், ரஜினியும் இதை தங்கள் ஆரம்ப காலத்திலேயே அதாவது தங்களது 30 வயதுக்குள்ளேயே செய்து விட்டார்கள்.
வெற்றிப்படங்கள் மட்டுமே சிறந்த கலைஞர்கள் ஆக்கிவிடாது.
சரியான கருத்து !
அடடா… அலெக்ஸ் பாண்டியனை விட்டுட்டேன். என்னா Powerful Performance அது? சும்மா பாடி லாங்குவேஜ்லேயே மிரட்டுவார் ரஜினி. மங்காத்தா போலீஸ் அஜித்தையும், போக்கிரி போலீஸ் விஜயையும் நினைச்சு பார்கிறேன். ஹூம்…..
கமலுடைய ‘எனக்குள் ஒருவன்’ நேபாளி பாத்திரம்….. அந்த கராத்தே போட்டியில் பார்க்கணுமே அவருடைய நடிப்பை. விஜயோ, அஜித்தோ இந்த மாதிரி கதாபாத்திரங்களை எல்லாம் செய்ய நினைச்சுக் கூட பார்க்க முடியாது. இத்தனைக்கும் நான் ஒப்பிடுவது எல்லாம் கமல் ரஜினியின் 25 வருடத்திற்கு முந்தைய படங்களை. இன்னும் இவர்களை வைத்து ஒரு பல்ராம் நாயுடு, அன்பே சிவம் எல்லாம் செய்ய நினைத்தால்…. ஊஹும்….
வெறும் ஸ்டைலும், பன்ச் டயலாக்கும் மட்டும் தான் நடிப்புன்னு இப்ப இருக்குறவங்க மாத்திவிட்டது தமிழ் திரை உலகின் துரதிர்ஷ்ட்டம்.
அஜித் சிறப்பாக நடித்த படம் என்றால் என்னை பொறுத்தவரை வாலி மட்டுமே.
அண்ணா உங்கள் பதிவுகளை கடந்த பல மாதங்களாக படித்து வருகிறேன். ஒரு பதிவுலகில் வித்தியாசமாகவே மிளிர்கிரீர்கள்.. என்னுடைய விருப்ப பட்டியலில் நீங்கள் கண்டிப்பாக முதல் 10 இற்குள் இருக்கிறீர்கள். இதுவரை கமென்ட் பண்ண வாய்ப்பு கிடைக்கவில்லை (காரணம் – கடந்த 2 மாதம் வரை எப்படி பண்ணுவது என்று தெரியாது). பதிவுகளை படிப்பது மட்டுமே என் வேலை. உங்க (நம்ம) ரஜினியை பற்றிய ஆர்டிகல்ஸ் எல்லாமே சூப்பராக இருக்கும்..
வாழ்த்துக்கள் அண்ணா..
@அன்பு அஜித் நல்லா நடிக்கலைனா, நல்லா நடிக்கலைன்னு சொல்லபோறேன்.. இந்தப்படம் சொதப்பியதற்கு இயக்குனரே காரணம். மங்காத்தா வெற்றிக்கு இருவரும் காரணம். இருவரின் பங்களிப்புமே சரியாக இருந்தது. நீங்க விஜய் ரசிகரா? 🙂 சும்மா டவுட்டு
@பாமரன் வாங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளைக்காணோம்! 🙂
கமல் ரஜினி இருந்த காலம் வேறு. ரஜினியே ஒரு கட்டத்தில் மசாலாவிற்கு முழுதும் மாறி விட்டார். கமல் முழுதாக மாறவில்லை என்றாலும் அவரும் ஏறக்குறைய மாறி விட்டார். அவ்வபோது அன்பேசிவம் போன்ற படங்கள் வெளியிட்டு வருகிறார். இருவரும் 150 படம் நடித்து விட்டார்கள். இவர்கள் 50 படம் தானே நடித்து இருக்கிறார்கள். அதோடு மக்கள் ரசனை மாறி விட்டது. இவர்களைக் கூறி தவறில்லை. மக்கள் ஏற்றுக்கொள்வதால் தானே நடிக்கிறார்கள், இல்லை என்றால் ஏன் இது போல நடிக்கப் போகிறார்கள்.
சரி அஜித் எனக்கு தெரிந்து பில்லா படத்தில் மட்டும் தான் இது போல கூலிங் கிளாஸ் போட்டு நடித்து (சரி நடந்து) இருக்கிறார். வேறு எத்தனை படங்களில் இது போல நடித்து இருக்கிறார். எல்லோரும் இதையே ஏன் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த ஒரு படம் பலரை பாதித்து விட்டது என்று நினைக்கிறேன் அதனால் தான் தொடர்ந்து இதையே கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 50 படத்தில் இரண்டு படம் இது போல நடித்தது ஒரு குற்றமா!
நீங்க சொல்வது போல நடிக்கலாம், அஜித் சிட்டிசன் ல முயற்சித்து இருந்தார் ஆனால் அவருக்கு செட் ஆகலை. ஏய்! நான் தனி ஆளு இல்ல என்று சொல்வது தமாசாக இருக்கிறது. வரலாறு படத்தில் தன்னை நிரூபித்து இருந்தார். இவர் நடிப்பு சரி இல்லை என்றாலும் கொஞ்சமாவது முயற்சிக்கிறார். சிப்பிக்குள் முத்து பற்றி சொன்னீங்க.. அதுல கொஞ்சமா “கண்ணுக்குள் நிலவு” ல விஜய் நடித்ததை பார்த்து பலர் கீழ்பாக்கம் போய் படுத்துக்கொள்ளும் நிலைமை ஆகி விட்டது. சூர்யா இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்கிறார்.
இவர்கள் கூட ஓகே கார்த்தி ஐந்து படம் நடித்து இவர்களை பிடித்து விட்டாரே! என்ன சொல்வது. காலம் மாறி விட்டது பாமரன், மக்கள் ரசனை மாறி விட்டது. நம்ம வருத்தப்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லை. மக்கள் ரசனை மாறினாலே நீங்கள் எதிர்பார்க்கும் படங்கள் வரும். அதுவரை இவையே தொடரும்.
@ஹாரிபாட்டர் மிக்க நன்றி 🙂 இப்ப கமெண்ட் பண்ணுவது எப்படின்னு தெரிந்துகிட்டீங்கல்ல! இனி பண்ணுங்க 😉
கிரி
மக்கள் ரசனை மாறிவிட்டது அதற்கேற்றார் போலதான் தான் இன்றைய நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது கோழியில் இருந்து முட்டையா, முட்டையில் இருந்து கோழியா போன்றதொரு விவாதம்.
MKT பாகவதர், P.U சின்னப்பா, காலத்து படங்கள் வேறு. MGR ம், சிவாஜியும், அதை தங்கள் தனிப்பட்ட பாணியில், வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றார்கள். கமலும், ரஜினியும் தங்கள் காலத்தில், நல்ல படைப்பாளிகளின் துணையோடு, அதை வேறு பரிமாணத்திற்கு கொண்டு சென்று அதன் எல்லைகளை விரிவுபடுத்தினார்கள். தங்களுக்கென புதிய பாணியையும் வகுத்தார்கள். ஆனால் இன்றைய முன்னணி வரிசை நடிகர்கள் அதை போல் ஒரு impactful மாற்றத்தை கொண்டு வர முடிந்ததா என்பது தான் என் கேள்வி. தொழில் நுட்பத்திலும், making லும் தான் மாற்றங்கள் வந்து இருக்கிறதே தவிர இன்றைய நடிகர்கள் தங்கள் initiative, performance, uniqueness, மூலம் வேறு பரிமாணங்கள், அடுத்த கட்டம் என முயற்சித்து இருக்கிறார்களா? சூர்யா, விக்ரம் போன்றோர் சிறந்த நடிகர்கள் தான், ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.
இயக்குனர்களில் கூட மணிரத்னத்தோடு நின்று போய்விட்டது. (வெற்றிமாறன் போன்றோர் சிறிது நம்பிக்கை தருகிறார்கள்). எப்படி ரஹ்மான் தனது தனித்துவத்தால், இளையராஜாவின் எல்லையை தாண்டி, உலக அளவுக்கு சென்றாரோ, அப்படி ஏன் இன்றைய நடிகர்கள் தங்கள் வீச்சை, எல்லையை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்த முடியவில்லை (நான் வர்த்தக எல்லைகளை, வெற்றிகளை பொருட்கொள்ளவில்லை)? MGR ம், சிவாஜியும் தொடாத வேற்று மொழி, இந்தி மொழி படங்கள், அதன் மூலமான இந்திய அளவிலான அங்கீகாரம் ஆகியவற்றை, கமலும், ரஜினியும் தங்கள் இள வயதிலேயே அடைந்தனர். ஆனால் இன்றைய நடிகர்கள் தங்கள் எல்லையை குறுக்கிக் கொண்டுள்ளனர். தொழில்நுட்பம் மற்றும் இன்றைய வர்தகமுறை வசதிகளினால் தான் இவர்கள் உலகம் முழுதும் அறியப்படுகிரார்களே தவிர இவர்களுடைய தனித் திறமை, தனித்துவம், மற்றும் புதியன முயற்சித்தலில் முனைப்பு இதில் ஏதுமில்லை.
இது என்னுடைய ஆதங்கமே தவிர யார் மீதும் தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இல்லை.
அப்புறம் சமீபத்தில் அகிரா குரோசவாவின் Seven Samurai படம் பார்த்தேன் கிரி. 1954 ல் வந்த படம் இது, Digitalised resotred version ல் பார்த்தேன். மூன்றரை மணி நேரப் படம் தான்.ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அகிரா நம்மை படத்தின் பாத்திரங்களோடு கட்டிப் போட்டுவிடுகிறார். அந்த காலத்திலேயே என்ன ஒரு திரைக்கதை, காட்சி அமைப்பு. பிரமிக்க வைக்கிறார். இயல்பான கதையிலேயே விறுவிறுப்பாக படம் செய்யலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லை என்றால் தவறாமல் பாருங்கள்.
பாமரன் தற்போதைய காலம் மிகுந்த போட்டு மிகுந்த காலமாகி விட்டது. எனவே வித்யாசமாக நடித்து ரிஸ்க் எடுக்க விரும்பாமல் எல்லோரும் மாஸ் படங்களில் நடிக்கவே விரும்புகிறார்கள். இதுவே காரணம்.
நீங்கள் கூறியபடி தற்போதைய நடிகர்கள் தங்கள் எல்லையை குறுக்கிக் கொண்டுள்ளார்கள். ஏன் என்று தெரியவில்லை.. மற்றவர்கள் இவர்களை அனுமதிக்க வில்லையா.. அல்லது வேறு இடம் சென்றால் இங்கே காலி ஆகிவிடுவோம் என்ற பயமா? புரியவில்லை.
இயக்குனர்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது பல வித்யாசமான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதே என் கருத்து.
seven Samurai பார்த்தேன், நான் பார்த்தது பிரிண்ட் சரி இல்லை. புதிய பிரிண்டில் சப்டைட்டில் இல்லை எனவே இதில் பார்த்தேன். திரும்ப ஒருமுறை நல்ல பிரிண்டில் பார்க்க வேண்டும் பார்த்து விட்டுக் கூறுகிறேன். இதில் பெரும்பான்மையான இடங்கள் ஸ்டக் ஆகிறது.