திமுகவின் ஓராண்டு சாதனைகளும் சோதனைகளும்

4
திமுகவின் சாதனைகளும் சோதனைகளும்

ராண்டு திமுக ஆட்சியின் சாதனை சோதனைகளைப் பார்ப்போம். Image Credit

திமுக ஆட்சி

10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்குப் பிறகு ஊடகங்கள், போராளிகள் துணையுடனும் மக்களும் மாற்றத்தை விரும்பியதால் திமுக ஆட்சியில் அமர்ந்தது.

அமர்ந்தவுடன் பெண்களுக்கு நகரப்பேருந்தில் இலவசப்பயணம், கொரோனா நிவாரண நிதியாக ₹4000 அறிவித்தது.

இதற்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. ஊடங்களும் திமுக அரசு முதல் பந்தே சிக்ஸர் என்று வர்ணித்தன.

ஒட்டுமொத்தமாகச் சாதனைகளைவிடச் சோதனைகளும் வேதனைகளுமே நிறைந்துள்ளது.

எனக்குத் திமுக பிடிக்காது இருப்பினும் இங்கே கூறப்பட்டுள்ளவைகளில் மிகைப்படுத்தியது எதுவுமில்லை.

சாதனைகள்

  • கொரோனா நிதியாக ₹4000 கொடுத்தது.
  • ஆட்சி மாறினால் வழக்கமாக அதிகாரிகளும் மாறுவார்கள் ஆனால், அனைத்திலும் மாற்றினாலும் முக்கியமான, கொரோனா நிகழ்வுகளைச் சரியாகக் கையாண்ட ராதாகிருஷ்ணன் அவர்களை மாற்றவில்லை.
  • சென்னை மாநகராட்சி ஆணையராகக் ககன்தீப் சிங் பேடியை நியமித்தது மிகச்சிறந்த செயல். இவரின் உழைப்பை உண்மையாக உணர முடிகிறது.
  • கட்சித்தலைவர்களையும் அரசியலையும் சமாளித்துத் தன் மரியாதையையும் குறைத்துக்கொள்ளாமல் சிறப்பாகப் பணி புரிகிறார்.
  • சிங்காரச்சென்னை திட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெயரளவில் மட்டுமே இல்லாமல், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • பாலங்கள் என்றால் திமுகவின் சாதனைகள் நினைவுக்கு வருவதை மறுக்க முடியாது. சென்னையில் கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் வேளச்சேரி, மேடவாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, GST மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
  • மிக முக்கியப் போக்குவரத்து நெரிசல் இடங்கள் புறக்கணிப்பட்டு விட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலை சென்னை எதிர்கொண்டு வருகிறது.
  • மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவேறினால் மிகப்பயனுள்ளதாக இருக்கும்.
  • தொழில்துறைக்கு, ஐடி துறைக்குப் பல்வேறு முதலீடுகள், நிறுவனங்கள் வந்துகொண்டுள்ளன. இதில் சிலவற்றில் அதிமுகவின் பங்கும் உள்ளது.
  • ஓசூர் மிக முக்கியமான நகராகத் தமிழ்நாட்டில் மாறி வருகிறது. கோவைக்குப் பிறகு பல தொழில் நிறுவனங்கள் வருவது வளர்ச்சியைக்காட்டுகிறது.
  • போராளிகள் முற்றிலுமாக ஒழிந்து விட்டார்கள். அனைவரும் எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை, நிம்மதியாக உள்ளது.

இவையல்லாமல், பல புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன ஆனால், அவை பயன்பாட்டுக்கு வந்த பிறகே கூற முடியும்.

சோதனைகள்

  • அறிவித்த முக்கிய வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் விலை பாதி குறைக்கப்பட்டது, டீசலுக்கு குறைக்கவில்லை.
  • Gas ₹100 குறைக்கவில்லை. குடும்பத்தலைவிகளுக்குக் கொடுப்பதாகக் கூறிய ₹1000 தரவில்லை, கேட்டால் ‘தேதி சொன்னோமா‘ என்கிறார் நிதியமைச்சர்.
  • மின்தடை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ரவுடியிசம், மாமூல், கட்டப்பஞ்சாயத்து ஒரு வருடத்திலேயே படு மோசமான நிலைக்குச் சென்று கொண்டுள்ளது.
  • அம்மா உணவகம் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் படிப்படியாக அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
  • இந்துக்களுக்கு எதிரான தொடர் புறக்கணிப்புகள், அவமானங்கள். காறித்துப்பினாலும் வாக்களிக்கும் சொரணையற்ற இந்துக்களுக்கு இது தேவையே.
  • விளம்பரத்துக்காக டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஜிம் செல்வது என்று முதல்வர் ஸ்டாலின் ஸ்டண்ட்களும் அதற்கு ஊடகங்கள் பின்பாட்டும் சகிக்க முடியவில்லை.
  • கஜானாவில் பணமில்லை ஆனால், கலைஞர் சமாதிக்கு 39 கோடி, பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் 3 கோடியில் கலைஞருக்குச் சிலை என்கிறார்கள்.
  • எதிர்பார்த்தது போல சன் பிக்சர்ஸ், உதயநிதி கட்டுப்பாட்டில் திரைத்துறை உள்ளது ஆனால், எப்போதும் திமுக சாதகமாகப் பேசும் திரைத்துறையினருக்கே பாதிப்பு என்பதால், பொதுமக்களுக்கு இழப்பில்லை.
  • ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தியது போல விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
  • கட்டுமானப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
  • மத்திய அரசின் திட்டங்களை இவர்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டுள்ளார்கள்.
  • கொரோனா காலம் முடியும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது என்று தேர்தல் அறிக்கையில் கூறி தற்போது உயர்த்தியுள்ளார்கள் அதுவும் 150% வரை.
  • இதுவரை ஐந்து லாக்கப் மரணங்கள். கடந்த ஆட்சியில் கொந்தளித்த போராளிகள், திரைத்துறையினர் அனைவரும் எதுவுமே நடக்காதது போல உள்ளனர்.
  • இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் என்பது மாதக்கட்டணமாகப் மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
  • தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது போக்குவரத்துத்துறையில் சிலவற்றைத் தனியாருக்கு விடப்போகிறது.

தமிழக ஊடகங்கள் தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு.

இவர்களாலே திமுக கொஞ்ச நஞ்சம் பெயருடன் உலவிக்கொண்டுள்ளது இல்லையென்றால் மேலும் கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கும்.

திமுக பழைய ஓய்வூதிய முறை உட்படச் செயல்படுத்த முடியாத பல பொய் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்துத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார்கள்.

இவற்றை நிறைவேற்ற முடியாது, நிறைவேற்றினால் தமிழகம் பிச்சை எடுக்கும் நிலைக்குச் செல்லும்.

விடியல் விடியல்னு கூறி எல்லோரையும் இருட்டுல வைத்து இருப்பது தான் திராவிட மாடல் போல.

மேற்கூறியவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த செய்திகளே, மிகைப்படுத்தியோ கற்பனையாகவோ எதையும் கூறவில்லை.

தவறான விமர்சனம் என்று கருதினால் சரியான தரவுகளைக் கொடுத்து விமர்சனத்தை முன் வைக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

போராளிகள் என்பவர்கள் யார்?

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, நான் ஊரில் இல்லாததால் கடந்த ஒரு வருடம் சாதனையா?? சோதனையா?? என மதீப்பீடு செய்ய தெரியவில்லை.. ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் கடன் சுமை கூடி கொண்டே போகிறது தவிர, குறைந்த பாடில்லை.. ஒரு மாதத்திற்க்கு வட்டி மட்டும் பல கோடிகள் நமது அரசு செலுத்துவதாக எங்கோ படித்த நினைவு!!! கடந்த 50 வருடங்களில் கடன் சுமை ஏறியதற்கு இரண்டு ஆட்சிகள் தான் காரணம்!!!

    தேர்தல் சமயத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கின்றனர்.. வெற்றி பெற்ற பின் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி காலத்தை கடத்துகின்றனர்.. கொடுத்த வாக்குறுதியில் 20/30% சதம் முழுமையாக கூட பூர்த்தி செய்வதில்லை.. பொருளாதார அடி / நடு மட்டத்தில் இருப்பவர்களின் நிலை மிகவும் பாவம்.. யாரோ செய்கிற, தவறினால் யாரோ பாதிப்படைகின்றார்.. எந்த ஆட்சி வந்தாலும் ஏதேனும் நமக்கு நல்லது நடக்காதா??? ஏக்கத்திலே இவர்களின் நாட்கள் ஓடி கொண்டிருக்கிறது..

    ஊரில் இருந்த போது மாடியில் வீடு கட்டவேண்டி மின் இணைப்புக்காக விண்ணப்பித்த போது தான் புரிந்தது.. நாம் இன்னும் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று!!! பொறுப்பு என்றால்??? என்ன விலை?? என்று கேட்கின்றனர்.. விண்ணப்பத்தை அலுவலக ஊழியர் சொன்ன இடத்தில், நான் தட்டச்சு செய்யாமல், என் நண்பனின் DTP சென்டரில் தட்டச்சு செய்ததால் ஒரு வாரம் இழுத்தடித்த பின் தான் இணைப்பு கிடைத்தது..

    இதற்கு இடையில் பல முறை சென்று வெட்டியாக திரும்பி வேறு வந்தேன்.. உண்மையில் எனக்கு கோபமே வரவில்லை.. இவர்களை நினைத்தால் சிரிப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.. அரசு வேலை கிடைக்க எத்தனை பேர்கள் போராடுகின்றனர்.. ஆனால் வேலை கிடைத்த பின் பணியில் எவ்வளவு அலட்சியம்.. சுதந்திரத்தை பற்றி படித்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது… “இரவில் வாங்கி விட்டோம் சுதந்திரத்தை”!!! ஆனால் இன்னும் விடியவே (விடிவே) இல்லை!!!!

  2. @யாசின்

    “தேர்தல் சமயத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கின்றனர்.. வெற்றி பெற்ற பின் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி காலத்தை கடத்துகின்றனர்”

    நீதிமன்றம் இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

    இது போன்ற வாக்குறுதிகளை கொடுத்தற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். ஆட்சிக்கு வருவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பின்னர் அரசின் வருவாயை தேவையற்ற ஒரு விஷயத்துக்காக செலவு செய்வது பின்னர் கடனில் தத்தளிப்பது.

    இது தான் நடந்து வருகிறது. நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட முடியவில்லை என்றால், தேர்தல் ஆணையமாவது இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    “விண்ணப்பத்தை அலுவலக ஊழியர் சொன்ன இடத்தில், நான் தட்டச்சு செய்யாமல், என் நண்பனின் DTP சென்டரில் தட்டச்சு செய்ததால் ஒரு வாரம் இழுத்தடித்த பின் தான் இணைப்பு கிடைத்தது.”

    என்ன நடந்தாலும், தாமதமானாலும் இவர்களுக்கு பணிந்து மட்டும் செல்லக்கூடாது.

    “அரசு வேலை கிடைக்க எத்தனை பேர்கள் போராடுகின்றனர்.. ஆனால் வேலை கிடைத்த பின் பணியில் எவ்வளவு அலட்சியம்.”

    இது தான் தற்போதைய நிலைமை. எங்கே சென்றாலும் அதிகாரம், லஞ்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here