நான் இந்த முறை சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தேன். Image Credit
பயணத்திற்காக விமான நிலையம் சென்ற போது வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.
குருவி
நான் வரிசையில் சென்று நின்ற போது அருகே வந்த ஒருவர் என் அனுமதி இல்லாமலேயே என் பெட்டிகளை ட்ராலியில் வைக்க உதவினார்.
நான் அவர் ஏர் இந்தியா ஊழியரோ என்று நினைத்து விட்டேன்.
பிறகு அவர் உங்க பெட்டிகளின் எடை குறைவாக உள்ளது. எனவே, என்னுடைய பெட்டிகளில் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள் நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என்றார்.
எனக்கு துளி கூட விருப்பம் இல்லை என்றாலும் அவர் வயதானவராக இருந்ததாலும் ரொம்ப கெஞ்சி கேட்டுக் கொண்டதால் சரி என்று ஒத்துக்கொண்டேன்.
அதே போல் அவரும் எல்லாம் முடிந்த பின் வந்து பணம் தந்தார் ஆனால், வாங்க மறுத்து விட்டேன்.
பிறகு அவர் வரும் நபர் அனைவரிடத்தும் ஒரு பெட்டியைக் கொடுத்து இதே போல் கேட்டுக் கொண்டு இருந்தார்.
பின்பு தான் தெரிந்தது அவர் ஒரு வியாபாரி என்பதும் இவ்வாறு குறைந்த செலவில் அல்லது ஒசி யில் கொண்டு செல்பவர் என்றும்.
பிறகு என் நண்பர்கள் கூறினார்கள் இதை போல் பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றும், இவர்களுக்கு “குருவி” என்ற பெயரும் உண்டு இனிமேல் இதை போல் செய்யாதே என்று அறிவுறுத்தினார்கள்.
போதை பொருட்கள்
அவர்கள் அதில் போதை பொருட்கள் வைத்துக் கடத்தி வந்தால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று பயமுறுத்தினார்கள்.
அவர்கள் கூறியது ஏற்று கொள்ள கூடியதாக இருந்ததால் நானும் அதை ஆமோதித்தேன்.
சென்னை விமான நிலையம் வந்த போது அதே நேரத்தில் இன்னும் இரண்டு விமானங்கள் வந்ததால் இமிக்ரேசன் செய்யும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தாமதமாகவே என் பெட்டிகளை எடுக்க சென்றேன்.
அங்கு இருந்த ஊழியர்கள் என் பெட்டிகள் மற்றும் சிலரின் பெட்டிகளுடன் காத்து இருந்தார்கள்.
என் பெட்டியைப் பார்த்ததும் நிம்மதி அடைந்து எடுக்கும் பொழுது, அவர்கள் “சார் பார்த்து எதாவது கவனிங்க உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கிறோம்”னு சொன்னாங்க.
நான்.. அது தானே உங்க வேலை நான் எதுக்கு உங்களுக்கு காசு தரனும் என்று கேட்டேன், பிறகு அருகே இருந்த இன்னொரு ஊழியர் சரி சார்! நீங்க போங்க என்றார்.
நானும் ஏற்கனவே சிசிங்கப்பூரில் ஒருத்தரிடம் பெட்டி வாங்கி இருந்ததால் எதுக்கு வம்பு என்று உடனே கிளம்பி விட்டேன்.
திருட்டு
வீட்டிருக்கு வந்த பிறகு தான் பார்த்தேன், நம்பர் லாக் சிஸ்டம் உடைக்கப்பட்டு உள்ளே நான் வாங்கி இருந்த மூன்று புது கடிகாரங்கள் திருடப்பட்டு இருந்தது (இதற்கு நான் தனியாக இன்னொரு பூட்டு போடவில்லை).
எனக்கு இது முதல் அனுபவம், பலரும் சொல்லிக் கேள்வி பட்டு இருக்கிறேன்.
அப்பொழுதெல்லாம் கவனிக்காமல் விட்டது இப்பொழுது நமக்கே ஏற்படும் பொழுது தான் அதன் வலி தெரிகிறது. அதன் மதிப்பு 6000 Rs என்பதால் மனது ஓரளவு சமாதானம் அடைந்து விட்டது.
கீழே விலை உயர்ந்த கேமரா இருந்ததை நல்லவேளை அவர்கள் கவனிக்கவில்லை, அந்த வகையில் மகிழ்ச்சி.
சரி நமக்கு ஒரு படிப்பினை என்று எடுத்துகொண்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
இதை போல விலை உயர்ந்த பொருட்களை இனி கை பெட்டியுடனே வைத்து கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.
இதை போலப் பலருக்கும் கண்டிப்பாக அனுபவம் இருக்கும், என்னைப் போல உஷாராக இல்லாமல் இருப்பவர்கள் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
பெட்டியை மட்டும் யார்கிட்டே இருந்தும் வாங்காதீங்க.
அதுலே ஆபத்து சொல்லமுடியாதது.
அனுபவப்பாடம். மறக்கமாட்டீங்க வாழ்நாள் முழுவதும்.
நீங்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்து உங்கள் பொருட்களை
மீட்க முடியாதா?
மேலே நெகிழி (பிளாசுடிக்) சுற்றி எடுத்து வந்தால், பிரித்தாலும் உடனே தெரியும்.
விமான நிலையத்திலேயே அந்த சேவை உண்டு (கட்டனத்திற்குத் தான்)
உங்க அறிவுரைக்கு நன்றிங்க துளசிகோபால். என்ன பண்ணுறது எல்லாமே பட்டா தான் அதனோட முக்கியத்துவம் புரியுது
ஓவியா நீங்க சொல்றது சரி. கொஞ்சம் நடை முறைல யோசித்து பாருங்க நம்ம ஊர்ல 6000 ரூபாய்க்காக நான் சென்றால் அவங்க என்னை 10000 ரூபாய்க்காக அலையை விட்டுடுவாங்க. என்னுடைய விடுமுறை நாளில் இதற்காக நான் நேரம் ஒதுக்கி பண்ணி கொண்டு இருக்க முடியாது இருக்கும் கொஞ்ச நாளில். என்னை போல் பலரின் இந்த நிலையால் தான் இதை போல திருட்டுக்கள் தைரியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
அவர்களை நம்மால் நமக்கு இருக்கும் நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. “TBCD” சொன்னது போல பின்பற்றுவது இதை தடுக்க உதவும்.
பொருட்களின் மதிப்பு அதிகம் என்றால் நாம் அவர்களை விடாமல் தொடர்ந்தால் குறைந்தது குறைந்தபட்ச இழப்பீடு தொகையாவது பெற்று ஆறுதல் அடையலாம்.
ஏற்கனவே போட்டுட்டேன். :))