கூகுள் நமக்குப் பணம் தருகிறது என்பது தெரியுமா?!

5
Google Opinion Rewards கூகுள் நமக்குப் பணம் தருகிறது

கூகுள் தான் எடுக்கும் கணக்கெடுப்புக்கு நமக்குப் பணம் தருகிறது ஆனால், அதை நாம் Google Play Store தவிர்த்து வேறு எங்கும் செலவு செய்ய முடியாது.

Google Play Store ல் நமக்கு விருப்பப்பட்ட Apps, Movies போன்ற அவர்கள் அனுமதிக்கும் சேவைகளை, கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் இந்தத் தொகையைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம். Image Credit

இதில் நாம் பதில் அளித்தால், கூகுள் தோராயமாக ₹2 / ₹10 முதல் நமக்குத் தருகிறது.

கூகுள் ஏன் நமக்குப் பணம் தர வேண்டும்?

ஆதாயம் இல்லாமல் எவரும் எவருக்கும் எதையும் இலவசமாகத் தர மாட்டார்கள். கூகுளும் விதிவிலக்கல்ல.

கூகுள் இதற்கென்று ஆட்களை நியமித்துக் கணக்கெடுத்து ஆய்வு நடத்தி செய்வதற்கு ஆகும் செலவு மிக அதிகம் ஆனால், அதே தன்னுடைய பயனாளர்கள் மூலமாக ஆய்வுகளை நடத்தினால் செலவு குறைவு.

இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, தன்னுடைய நிறுவனத்தின் தேவைகளை, மாற்றங்களைச் செயல்படுத்தி மேம்படுத்த நினைக்கிறது.

பணம் கிடைக்கிறது என்றால், யாருமே இதில் கலந்து தங்கள் கருத்தைக் கூற விரும்புவார்கள். எனவே, குறைவான முதலீட்டில் தான் நினைப்பதை சாதிக்க நினைக்கிறது.

இதனால் நமக்குப் பயனுள்ளதா?

கூகுள் கணக்கெடுப்பில் கலந்து கொள்வதால், நமக்கு ஒன்றும் இழப்பு இல்லை. இதைச் செய்ய நமக்கு 2 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. அதோடு அடிக்கடி நம்மைத் தொல்லைப்படுத்தாது.

விருப்பப்பட்டால் இதில் கலந்து கொள்ளலாம், இல்லையென்றால் புறக்கணிக்கலாம். கட்டாயம் எதுவும் கிடையாது. எனவே, இதனால் பயன் மட்டுமே! இழப்பு ஏற்படாது.

இதைப்பயன்படுத்த நீங்கள் “Google Opinion Rewards” செயலியை நிறுவி இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் மட்டும் இருந்த இந்தச் சேவை தற்போது சிங்கப்பூர், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. நண்பர் கிரியின் பல்வேறு பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன் நான் மிகவும் அழகாக எளிமையாக Google Opinion Reawrd குறித்து எழுதி உள்ளீர்கள் தொடர்ந்து நிறைய எழுதுங்கள் கிரி.

    என்னை விட மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள்.

    /2017/05/google-opinion-rewards.html

    என்னுடைய பதிவு இது

    நன்றி

  2. பல பதிவுகளில் கூகுள் விளம்பரம் பக்கவாட்டில் தோன்றும். அது தேவையில்லை என்று அதை நிறுத்த முற்பட்டால் அந்தப் பக்கத்திற்கு அழைத்துச் செல்வதில் பிடிவாதமாக கோடிங் உருவாக்கியிருக்கிறார்கள். திருடர்கள் என்று சாதாரண திருட்டுத்தனத்தைச் சொல்கின்றோம். ஆனால் சமூக தளங்களில் மற்றும் பல நபர்கள் உருவாக்கியருப்பதைப் பார்த்தே பல தளங்களை தவிர்க்க வேண்டியதாக உள்ளது.

  3. @நன்றி வடிவேலன் 🙂

    @நான் Level 4 ல் உள்ளேன். எனக்கும் இது போல வருகிறது.. ஆனால், நான் இங்கே செல்வதில்லை என்பதால், எனக்கு பயனில்லை.

    @ஜோதிஜி விளம்பரம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு எளிமையான வசதி Ad Blocker . இதை நிறுவுங்கள் நிம்மதியடையுங்கள் 🙂

  4. கிரி, இதுவரை அறியாத செய்தி இது. பகிர்ந்தமைக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!