Battleship (2012) | இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!

2
Battleship

ஹாலிவுட் எடுத்த 1001 வது ஏலியன் படம் Battleship.

Battleship

பூமி போலக் கிட்டத்தட்ட உள்ள G Planet என்ற கிரகத்தைக் கண்டுபிடித்து அதனுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க ஜப்பான் கூட்டு கப்பல் படை பயிற்சி எடுக்கும் போது, கடலில் மிகப்பெரிய விமானம் போன்ற ஒன்றை காண்கிறார்கள்.

அங்கே சென்று பார்வையிடும் போது அது திடீரென்று தாக்கத் துவங்க குழம்பி விடுகிறார்கள்.

பின்னர் ஏலியன் என்று தெரிய வந்த பிறகு, எப்படி அதை அழித்து உலகை காக்கிறார்கள்! என்பதே கதை.

ஹாலிவுட் படத்தில் அமெரிக்காவை தாக்காத எந்த உயிரினமும் இல்லை.

ஏலியன், காட்ஸில்லா, கிங் காங், எரிகல், சுனாமி, எரிமலை, பூகம்பம் என்று ஒன்று விடாமல் அனைத்தும் தாக்கும்.

அதுவும் பெரும்பாலும் நியூயார்க்கில் தான் நடைபெறும். ஏலியன் இறங்கினாலும் நேரா நியூயார்க் தான் வரும் 🙂 .

நம்புற மாதிரியாங்க இருக்கு!

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு! என்று கேட்டால்..

அப்புறம் உங்களுக்கு இந்த மாதிரி “படம் காட்ட மாட்டோம்” என்பார்கள். அதனால் ‘சரி சரி நம்பிட்டோம்‘ன்னு சொல்ல வேண்டியதாக உள்ளது 😀 .

இவங்க கொளுத்திப் போடுவதைக் கூட நம்பலாம் ஆனால், பயங்கரமான ஏலியனே வந்து பக்கத்தில் நின்றாலும்,

அப்புறம் ஏலியன் மச்சி.. எப்படி இருக்கே? ஒரு காஃபி குடிச்சுட்டு பேசலாமா?!‘ என்கிற ரேஞ்சுக்கு இருப்பாங்க… கூலா இருக்காங்களாம்.

இவங்க நினைத்தால், மிகப்பெரிய ஒன்றையும் ஒன்றும் இல்லாமல் ஆக்குவார்கள், ஒன்றுமில்லாததை மிகப்பெரியதாகக் காட்டுவார்கள்.

ஏறக்கட்டி வைத்த பழைய கப்பலை வைத்து இறுதியில் படம் காட்டுவார்கள் பாருங்க.. அடேங்கப்பா 🙂 . காதுல பூக்கூடையே வைத்து விடுவார்கள்.

ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்

ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் அட்டகாசமாக உள்ளது. 2012 லேயே இவ்வளவு தத்ரூபமாகக் கொண்டு வந்தது பெரிய விஷயம்.

பேரழிவை ஏற்படுத்தும் உருளை போல உள்ள சாதனத்தின் வடிவமைப்பு அபாரமான கற்பனை. இவங்க இதுல தான் மக்களை ஈர்த்து விடுகிறார்கள்.

ஏலியன்கள் வடிவமைப்பு, அதனுடைய பாதுகாப்புச் சாதனங்கள், ஆயுதங்கள், இந்த உருளை ஆகியவை தாறுமாறாக உள்ளது.

ஏனோ இப்படம் சரியாகப் போகவில்லை. இது போன்ற (Science fiction) படங்களில் எனக்கு ஆர்வமில்லை ஆனாலும், இப்படம் பிடித்தது.

குழந்தைகளுக்கு Battleship படத்தைக் காட்டுங்கள், மிகவும் ரசிப்பார்கள். NETFLIX, Amazon Prime இரண்டிலும் உள்ளது.

Directed by Peter Berg
Produced by Peter Berg, Brian Goldner, Scott Stuber, Sarah Aubrey, Duncan Henderson, Bennett Schneir
Written by Jon Hoeber, Erich Hoeber
Based on Battleship
Starring Taylor Kitsch, Alexander Skarsgård, Rihanna, Liam Neeson
Music by Steve Jablonsky
Cinematography Tobias A. Schliessler
Edited by Colby Parker Jr., Billy Rich, Paul Rubell
Distributed by Universal Pictures
Release date April 3, 2012 (Tokyo), May 18, 2012 (United States)
Running time 131 minutes
Country United States
Language English

மேலும் சில விமர்சனங்கள்

6 Underground (2019) மிரட்டல் சண்டை

Polar (2019) எங்கிட்ட மோதாதே!

A Quiet Place [2018] சத்தம் போடாதே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, எனக்கு பொதுவாக அதீத கற்பனைகள் கொண்ட படங்களின் மீதும், கிராபிக்ஸ் படங்கள் மீது விருப்பம் ஏற்படுவதில்லை.. யதார்த்தமான சினிமாக்கள் எந்த மொழியில் இருந்தாலும் அதை ரசிப்பேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. எனக்கும் அவ்வகை படங்களில் ஆர்வமில்லை யாசின். ஒரு சில படங்கள் விதி விலக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here