2.0 திரைப்படத்தை 3D யில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
உண்மையில் எனக்கு 3D யில் பார்க்கப் பிடிக்காது. ஏன் என்று தெரியவில்லை? ஒருவேளை நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையோ என்னவோ!
சமீபத்தில் கூடப் பசங்க கேட்டாங்க என்று “Planet Of The Apes” படத்துக்குச் சென்று, திருப்தியாக இல்லை. எதிர்பார்த்த அளவுக்கு 3D காட்சிகள் இல்லை, வெகு சில காட்சிகளே 3D யில் இருந்தன.
இதுக்கு எதுக்குயா 3D? 2D படமாகவே எடுத்து இருக்கலாமே! என்று தோன்றியது.
சுருக்கமாக, “மை டியர் குட்டிச்சாத்தான்” படம் கொடுத்த அற்புத உணர்வை அதன் பிறகு எந்தப் படத்திலும் பெறவில்லை அல்லது அது மாதிரியான படங்களுக்கு நான் செல்லவில்லை.
தற்போது 2.0 3D
இப்படத்தை 3D யில் பார்க்க நினைக்க முக்கியக் காரணங்கள் உள்ளது.
மொக்கை திரையரங்கில் பார்த்து, நல்ல படங்கள் கூடப் பிடிக்காமல் போனது.
ஆனால், இவ்வளவு செலவு செய்து, பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பலரின் உழைப்பில் உருவாகியுள்ள படத்தை 2D யில் பார்த்து மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தைத் தொலைக்க விரும்பவில்லை.
இயக்குநர் ஷங்கரும், தலைவரும் தொடர்ச்சியாக “இப்படத்தை 3D யில் பாருங்கள் அப்போது தான் மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும்” என்று கூறி வருகிறார்கள்.
இதனாலே இந்த முறை FDFS பற்றியெல்லாம் யோசிக்காமல், நல்ல திரையரங்கம் கிடைத்தால் மட்டுமே செல்வது என்ற முடிவில் உள்ளேன்.
29 மாலை சத்யம் திரையரங்கில் முன்பதிவு செய்துள்ளேன்.
காலையில் நல்ல திரையரங்கம் கிடைத்தால் செல்வேன், இல்லையென்றால் மாலை தான். நண்பர் தருகிறேன் என்று கூறியிருக்கிறார், பார்ப்போம்.
திரைப்பட முன்பதிவு 3D க்கு தான் அதிகளவில் நடைபெறுகிறது 2D யை ஒப்பிடும் போது.
2D யை விட 3D க்கு தான் DEMAND அதிகம் இருப்பதால், அதன் தேவையை நிறைவு செய்யத் திணறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஏராளமான திரையரங்குகள் திடீரென்று 2.0 க்காக மறுசீரமைக்கப்பட்டதே இந்நிலைக்குக் காரணம்.
“வருகிறவன் எல்லாம் லெக் பீஸ் கேட்டா என்ன பண்ணுறது, கோழிக்கு இருப்பதே இரண்டு கால்” நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது.
கோபி
எங்கள் கோபியில் புதுப்பிக்கப்பட்ட இந்திரா திரையரங்கத்தில் மூன்று Screen களும் 3D யாக மாற்றப்பட்டுள்ளன. துவக்கத்தில் ஒரு Screen மட்டும் என்று கூறினார்கள்.
கடந்த வாரத்தில் இன்னொரு திரையரங்கமான ஜெயமாருதியும் 3D யாக மாற்றம் செய்து விட்டார்கள். இதை நாங்க யாருமே எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏராளமான திரையரங்குகள் தமிழ்நாட்டில் 3D, 4K, Atmos, 4D தொழில்நுட்பத்துக்கு மாறி இருக்கிறார்கள். மிகப்பெரிய சாதனை.
Read : இந்திரா Zeon Cinemas | கோபி
திரையரங்குப் பரிந்துரைகள்

சென்னையில் என்னுடைய திரையரங்குப் பரிந்துரைகள் பின்வருவன, மற்றவர்களும் உங்கள் பரிந்துரையைக் கொடுக்கலாம்.
சத்யம் – 4D ஒலி உள்ளது. அதாவது, இதில் கால்களுக்கு அடியே ஒலி கேட்கும். நாமே அந்த இடத்தில் இருப்பது போல உணர்வைத் தரும்.
GK சினிமாஸ் – போரூர் “4D”
Palazzo – IMAX. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
PVR XL – அண்ணாநகர் இதில் 4K தரத்தில் பெரிய திரையில் காணலாம்.
இவற்றில் சத்யம், IMAX & PVR XL திரையரங்குகளில் நான் பார்க்கப்போகிறேன்.
கொசுறு 1
ஒரு படத்தைச் சாதாரணமாகப் பார்ப்பதற்கும் அதில் உள்ள சிறப்புகளைத் தெரிந்த பிறகு பார்ப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
2.0 திரைப்படத்தின் தொழில்நுட்பங்களை, ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து “2.0 – ஏன் கொண்டாடணும்?” என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரையைப் படித்து விட்டு 2.0 படத்தைப் பார்க்கும் படி உங்களைப் பரிந்துரைக்கிறேன்.
கொசுறு 2
தலைவர் படங்களில் வில்லனுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். லிங்கா, கபாலி போன்ற வெகு சில படங்களே விதிவிலக்கு.
தற்போதைய நடிகர்கள் வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நாம் டம்மியாகி விடுவோம் என்று அதிகம் வாய்ப்பு கொடுப்பதில்லை.
ஆனால், வில்லன் அசத்தலாக இருந்தால் தான், நாயகனுக்கு மதிப்பு கூடும். இதை தலைவர் போல பலர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
2.0 படத்திலும் தலைவரை விட அக்க்ஷைக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. இதைத் தலைவரும் பேட்டியில் கூறி இருந்தார்.
தன் திறமை மீது நம்பிக்கையுள்ளவரே அடுத்தவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருந்தாலும் பயப்படமாட்டார். இருவரின் நடிப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சபாஷ் சரியான போட்டி! 🙂 .
செறிவுசலை வாய்டின்ப் போர் ௨.௦ . சுரேலி தி மொவயே கோயன் டு பெ எ ப்ளாக்பூஸ்டர்
கிரி, நிச்சயம் படத்தின் வெளிட்யீடை எதிர்பார்த்து காத்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.. படத்தின் பட்ஜெட் 400 / 450 கோடிகள் என இயக்குனர் சங்கரே நேர்காணலில் கூறி உள்ளார் (விளம்பர செலவுகள் தவிர்த்து).. திரைத்துறையில் 2 . 0 ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!! ஆனால் வசூலில் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை..
கொசுறு 2 : ஹீரோக்களின் உயரம், உயர, உயர வில்லன்களின் பலம் குறைக்கபடுவதாக எண்ணுகிறேன்.. தற்போது வரும் நிறைய படங்களின் பாத்திரங்களின் தேர்வும் ஹீரோக்கள் செய்வதால் இயக்குனர்கள் சுதந்திரமாக செயல்படமுடியாத நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்..
சமீபத்தில் பார்த்த இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் கதாபாத்திரம் ரொம்பவும் என்னை கவர்ந்து.. நிச்சயம் நிறைய பேர் இந்த பாத்திரத்தை ரசித்து இருப்பார்கள்.. ரொம்பவும் யதார்த்தமாக, பொறுமையாக, அமைதியாக நடித்து இருப்பார்.. சமீபத்தில் பார்த்த படங்களில் என்னை கவர்ந்தவர் இவரே!!! பகிர்வுக்கு நன்றி கிரி..
உ
மொத்தம் 10500 திரை அரங்கத்தில் ரிலீஸ்
சராசரியாக
ஒருதிரை அரங்கம் =200 இருக்கைகள்
ஒரு இருக்கை=ரூ 200/
ஒரு காட்சிக்கு மொத்த வசூல்=ரூ.42 கோடி
மொத்த செலவு= ரூ.550 கோடி
ஆக 13 காட்சிகளில் மொத்த செலவு வசூல்
.. ஓ!!!
——–
ஒரு நாளைக்கு 150 லிருந்து 200 கோடி ரூபாய்….ஆக முதல் மூன்று நான்கு நாட்களில் போட்ட முதலுடன் தயாரிப்பாளருக்கு வந்து விடும் ….பின்னர் ஒரு வாரம் ஓடினாலும் அனைவருக்கும் கொழுத்த லாபம்…..இதை இன்னும் சுலபமாக….தென்னிந்தியாவில் 5 கோடி, வட மாநிலங்கள் மற்றும் அகில உலக ரசிகர்கள் 5 கோடி என வைத்துக் கொண்டாலும், without repeat audience ..பத்து கோடி பேர் மூலம் வசூலாகும் பணம் மினிமம் ரூபாய் 2000 கோடி
———
மற்ற மொழி உரிமை விற்கப்பட்டு 400 கோடி வந்தாயிற்றாம்!
———
+satellite rights
@யாசின் இமைக்க நொடிகள் வில்லன் தான் gangs of wasseypur படத்தின் இயக்குனர். கொஞ்ச நாள் முன்னாடி நான் எழுதியது. செமையாக நடித்து இருந்தார்.
@ஸ்ரீனிவாசன் நன்றி 🙂