செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் சஞ்சீவை கொலை செய்ய முயற்சிக்கும் கும்பலைக் காவல்துறை கைது செய்கிறது. யார் கொலை செய்யச் சொன்னது? கொலைக்கான காரணம் என்ன? என்பதே Paatal Lok கதை. Image Credit
Paatal Lok
நாடகத்தன்மை எதுவும் இல்லாமல், முகத்தில் அறைவது போலப் பார்த்த பட்டியலில் Paatal Lok கண்டிப்பாக இருக்கும்.
அனைத்து கதாப்பாத்திரங்களும், இடங்களும் மிக இயல்பாக உள்ளன. குறிப்பிட்ட ஒருவரை பற்றிக் கூறுவது கூடக் கடினமானது.
காவல் நிலையம், கிராமம், நகரம், சுற்றுப்புறம், அலுவலகங்கள் என்று அனைத்துமே உண்மையான இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது அல்லது கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அரங்க அமைப்பு.
ஒவ்வொருவர் நடிப்பையும் விளக்கும் அளவுக்கு ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லையெனும் அளவுக்குள்ளது.
Gangs of wasseypur திரைப்படத்தைப் போல Raw வாக எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா?
ஒரு பிரபல செய்தி ஆசிரியரைக் கொலை செய்யவில்லை, கொலை செய்ய முயற்சி மட்டுமே நடந்தது அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா? என்பது ஏற்றுக்கொள்ளும்படியில்லை.
அதிலும் CBI விசாரணை அளவுக்குச் செல்கிறது. CBI செல்லும் பாதையும் கேள்விகளை எழுப்புகிறது.
கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் பேசப்படுகிறது. நேபாளி பெண்ணை ஒரு காட்சியில் திட்டும் போது எப்படி இது போல வசனம் வைத்தார்கள் என்று நினைத்தேன். இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சஞ்சீவை வேலையை விட்டு அனுப்ப நினைக்கும் முதலாளிக்கே செக் வைக்கும் சஞ்சீவ் என்று தற்போதைய ஊடக நிகழ்வுகளைப் பளிச்சென்று காட்டியுள்ளார்கள்.
ஊடக உலகத்தில் நடைபெறும் அரசியல் சுவாரசியம் ஆனால், கேவலமானதும் கூட.
மிரட்டல் காட்சிகள்
ஆதிக்கச் சாதியினர், தலித் பிரச்சனை நடைமுறை எதார்த்ததுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காட்சிகள் செவுள்ள அறைவது போல உள்ளது.
முஸ்லிம்கள் தின வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வசவுகள், சங்கடங்களைப் போகிற போக்கில் சுருக்குனு காட்சிப்படுத்தியுள்ளார்கள். சிலர் காட்சிகளைத் தங்களோடு தொடர்புபடுத்திப்பார்க்க முடியும்.
மனதில் பதியும் அளவுக்குச் சிறப்பான வசனங்கள்.
பல திரைப்படங்கள், சீரிஸ் போல இதிலும் இந்துக்களைச் சில காட்சிகளில் மோசமாகக் காட்டியுள்ளார்கள், சில திணிக்கப்பட்ட காட்சிகள்.
அசத்தலான திரைக்கதை நடிப்பு ஒளிப்பதிவு
காவல்துறை & விசாரணை அதிகாரியாக நடித்துள்ள Hathiram Chaudhary (Jaideep Ahlawat) நடிப்பில் பின்னிப் பெடலெடுத்துள்ளார்.
அவ்வளவு இயல்பான எதார்த்தமான நடிப்பு. இவர் பற்றிக் கூற தனிக்கட்டுரை தான் எழுத வேண்டும்.
முக்கியமான ஒரு விஷயத்தைக் கதையின் சுவாரசியத்தில் கவனிக்கவில்லை. இறுதியில் தான் ‘அட! இதை எப்படி யோசிக்காமல் போனோம்!‘ என்று தோன்றியது.
மிகப்பெரிய பலம் என்று கூறினால், இயல்பான நடிப்பு, திரைக்கதையைத் தான் கூற வேண்டும் ஆனால், இவற்றுக்கெல்லாம் பெயரை வாங்கிக்கொடுத்த ஒளிப்பதிவு மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது.
நம் இடத்தை விட்டு அந்தச் கதைக்குள்ளே புகுந்து விடுவோம்.
அங்கே சுற்றிக்கொண்டு, அவர்களுடனே பயணப்பட்டுக்கொண்டு இருப்பது போல ஒரு சூழ்நிலையை ஒளிப்பதிவு தருகிறது. அப்படியொரு இயல்புத்தன்மை!
காட்சிகளைத் தொந்தரவு பண்ணாத அளவுக்குப் பின்னணி இசையின் சிறப்பு.
ஆனால், இன்னும் மிரட்டலான பின்னணி இசையைக் கொடுக்க வாய்ப்பிருந்தும் ஏனோ செய்யவில்லை. செய்து இருந்தால், தாறுமாறாக இருந்து இருக்கும்.
தெளிவான முடிச்சு அவிழ்ப்பு
இறுதியில் அனைத்து சிக்கல்களையும், கேள்விகளையும், குழப்பங்களையும் தெளிவாக்கும் போது செமையாக உள்ளது.
‘இன்னும் ஒரு எபிசோட் தான் உள்ளது, எப்படி அனைத்தையும் முடிப்பார்கள்?!‘ என்று யோசித்தால், எந்த அவசரமும் இல்லாமல், நச்சுனு முடித்து விட்டார்கள்.
இந்தியாவில் சிலவற்றை மாற்றவே முடியாது என்பது தான் இக்கதையின் அடிப்படை.
Ee Adutha Kaalathu என்ற மலையாள த்ரில்லர் படத்தின் இறுதியில் முடிச்சுகளை எளிதாக அவிழ்ப்பார்கள். அப்படத்துக்கு பிறகு மன நிறைவை அளித்தது Paatal Lok.
இரு படங்களின் மனநிலையும் வேறு ஆனால், திரைக்கதை மிகச் சிறப்பானது.
அனைவருக்கும் ஏற்றதல்ல
Rape, Child Abuse, Disturbing Scenes, Sex, Strong Words, Violence என்று கடுமையான காட்சிகள் உள்ளன. எனவே, அனைவருக்கும் ஏற்ற சீரிஸ் அல்ல.
மேற்கூறியவை / காட்சிகளில் காட்டப்படுவை அனைத்துமே இந்தியாவில் நடந்து கொண்டு இருப்பவை. படமாக்கப்பட்ட இடங்களில் முன்பே ஆய்வு செய்துள்ளார்கள்.
மனதிடம் உள்ளவர்கள், Raw படங்களைப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கானது, மற்றவர்கள் புறக்கணித்து விடவும். Paatal Lok என்றால் நரகம் என்று ஒரு பொருள்.
Paatal Lok பார்த்த பிறகு ஓரிரு நாட்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தயாரிப்பாளர் அனுஷ்கா ஷர்மா. Amazon Prime ல் உள்ளது.
பரிந்துரைத்தது நண்பன் பாபு
Genre Crime Thriller
Created by Sudip Sharma
Based on The Story of My Assassins by Tarun Tejpal
Written by Sudip Sharma, Sagar Haveli, Hardik Mehta, Gunjit Chopra
Directed by Avinash Arun, Prosit Roy
Starring Jaideep Ahlawat, Gul Panag, Neeraj Kabi, Swastika Mukherjee
Composer(s) Naren Chandavarkar, Benedict Taylor
Country of origin India
Original language(s) Hindi
No. of seasons 1
No. of episodes 9
Producer(s) Anushka Sharma, Karnesh Sharma
Cinematography Avinash Arun, Saurabh Goswami
Editor(s) Sanyukta Kaza
Running time 43-53 Minutes
Original network Amazon Video
Original release 15 May 2020
கொசுறு
சீரீஸ் பார்த்ததும் நானும், பாபுவும் நீண்ட நேரம் திரைக்கதை, அதில் கூற வரும் / கூறியுள்ள செய்திகள், காட்சியமைப்புகள் மற்றும் பலவற்றை விவாதித்தோம்.
விவாதித்த பிறகு இருவருமே பல புதிய செய்திகளை, காரணங்களை, காட்சிகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இருவருக்குமே பட ரசனையில் கிட்டத்தட்ட ஒற்றுமை உள்ளதால், விவாதித்தது நன்றாக இருந்தது.
விவாதித்த பிறகு தான் பல காரணங்கள் தெரிய வருகிறது. அவை தெரிய வரும் போது திரைக்கதையின் மீதான மதிப்பும் பல மடங்கு அதிகரிக்கிறது.
நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படம் / சீரீஸில் Paatal Lok ஒன்று.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
mass review ji… neraya sollanum, but already namma pesiyaachu… namma chat history yave oru blog ah podaalaamnu ninaikiren…
Thanks a lot for watching the recommendation ji. Same happy feeling when you recommended ‘meyathaa maan’.
Miracle in cell no 7 netflix
இந்த தொடரை பார்க்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தேன். உங்கள் விமர்சனம் படித்த பின்பு பார்க்கலாம் என நினைக்கிறேன். நன்றி.
@பாபு ஜி செம்ம சீரிஸ் .. இன்னொரு முறை பார்க்க போகிறேன்.
@கணேஷ் Sure .
@கருப்பசாமி பாருங்க.. பார்க்கும் முன்பு மேற்கூறியவற்றையும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் 🙂 .
கிரி, பதிவை படிக்கும் போதே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தானாகவே ஏற்படுகிறது .. அலுவலக நண்பன் ஊருக்கு போயி , (விமான பிரச்சனையால்) மீண்டும் பணிக்கு திரும்ப முடியாமல் போனதால் அலுவலகத்தில் தொடர்ச்சியான வேலை .. பின்பு தினமும் நடைப்பயிற்சி, சமையல் , கிரிக்கெட் என தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் திரிவதால் கடந்த சில நாட்களாக எந்த படமும் பார்க்கவில்லை .. நினைவில் வைத்து கொண்டு பின்பு தான் பார்க்க வேண்டும் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
யாசின் வேலை அதிகம் இருக்கும் வரை தற்போது நல்லது 🙂 .
சமையல் வேறையா கலக்குங்க 🙂
உங்கள் Watchlist ல் ப்ரைம் ல சேர்த்துக்குங்க.