மக்கள் ஐடி பயன் என்ன?

2
மக்கள் ஐடி

க்கள் ஐடி என்ற பெயரில் ஆதார் போல எண்களை வழங்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Image Credit

மக்கள் ஐடி

தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு இரு துறைகளுக்கு இடையே ஒப்பிட்டுப் பார்க்க ஏற்படுத்துவதே மக்கள் ஐடி என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக அரசு கொடுக்கும் விளக்கம்

  • அடையாள அட்டை போன்று எதுவும் வழங்கப்படாது. அடையாள எண் மட்டுமே வழங்கப்படும்.
  • இரு துறைகளுக்கு இடையேயான தேவை மற்றும் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • கைரேகை, கருவிழி போன்ற பயோமெட்ரிக் பதிவு செய்யப்படாது.
  • அதேவேளையில் தமிழக அரசின் பல்வேறு நலத்துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வரும் பயனாளிகளைக் கண்டறிந்து அது தொடர்பான விவரங்கள் மக்கள் ஐடியுடன் இணைக்கப்படும்.
  • தரவுகளை இரு துறைகளுக்கு இடையே ஒப்பிட்டுப்பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.
  • தரவுத்தொகுப்புகள் முழுமையாகப் பொருந்தக்கூடிய வகையில் ஒரு தரவை ஏற்படுத்தும் முதன்மையான பதிவு மக்கள் ஐடி மூலம் உருவாக்கப்படும்.
  • மக்கள் ஐடி சேவையைத் தனிநபர் கணினி மூலம் லாக்-இன் செய்து பெற முடியாது.

தகவல் நன்றி தினத்தந்தி

முட்டாள்த்தனமான செயல்

வீம்புக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் மக்கள் ஐடி என்பது மேற்கூறியவற்றைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம்.

மேற்கூறிய ஒரே ஒரு தகவலாவது உருப்படியானது என்று கூற முடியுமா?!

மேற்கூறிய அனைத்தையும் ஆதார் எண்ணை வைத்தே செய்ய முடியும் என்பது, பாமரனுக்கும் தெரியும். இருப்பினும் வெட்டிச் சுயகௌரத்துக்காகத் (ஈகோ) தமிழக அரசு இதைச் செய்கிறது.

அடிப்படை அறிவு உள்ள எவரும் மேற்கூறிய செயல்களை ஆதாரால் செய்ய முடியாது என்று கூற முடியுமா? அப்படியிருக்கையில் இன்னொரு ஐடி எதற்கு?

ஏற்கனவே உள்ள எண்கள், அடையாள அட்டைகளை ஒன்றாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கூடுதலாக இன்னொரு ஐடி எதற்கு?

மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதில் திமுக அரசை மிஞ்ச இன்னொருவர் வர முடியாது.

பலருக்குத்தெரியாதது, தற்போது ஆதாரை அனைத்துக்கும் முன்னெடுக்கும் பாஜக, எதிர்க்கட்சியாக இருந்த போது காங் அரசு கொண்டு வந்த ஆதாரை எதிர்த்தது.

ஆனால், ஆளுங்கட்சியாக வந்தவுடன் இத்திட்டத்தை முடக்காமல் அல்லது இதற்குப் போட்டியாக வேறு ஒன்றை ஆரம்பிக்காமல் ஆதாரை மேம்படுத்தியது.

திமுக அரசு ஒவ்வொரு முறையும், மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் வேறு பெயரில் கொண்டு வருகிறது.

மக்களின் வரிப்பணம் வீண் ஏன்?

மக்கள் ஐடி கொடுப்பது என்றால், உடனே எடுத்துக்கொடுத்து விட முடியாது.

இத்திட்டத்துக்கு என்று ஒரு அமைப்பு / துறை உருவாக்கப்பட வேண்டும்.

தனி வழங்கிகள் (Server) உருவாக்கப்பட வேண்டும்.

பராமரிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் அல்லது இ-சேவை மையத்தில் உள்ளவர்களுக்குக் கூடுதல் பணியைக் கொடுக்க வேண்டும்.

ஆதார் போலப் பயோமெட்ரிக் முறையில் உருவாக்கப்படாததால், போலியான எண்கள் உருவாக்கப்பட 100% வாய்ப்புள்ளது.

எனவே, ஒரே நபர் பல எண்கள் வைத்துக்கொள்ள முடியும்.

போலிகளைத்தடுக்க இவர்கள் ஆதாரை தான் நாட வேண்டும் அப்படியென்றால், மக்கள் ஐடியின் பயன் என்ன?

மக்கள் ஐடியை jus like that உருவாக்கிக் கொடுத்து விட முடியாது. இதற்கான களப்பணி அதிகம். எனவே, இதைச் செய்ய வரிப்பணம் வீணடிக்கப்படும்.

சுயகௌரவத்துக்காக மேற்கூறிய வழியில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைப் பார்க்கையில் மன உளைச்சலே ஏற்படுகிறது.

ஆதாரையே ஏன் மேம்படுத்தக் கூடாது?

வடமாநிலத் தொழிலாளர்களை அடையாளம் காண மக்கள் ஐடி பயன்படுத்தப் போவதாகக் கூறப்படுகிறது. இதை ஆதாரை வைத்தே செய்யலாமே!

ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தும் லஞ்சம் கொடுத்துப் பங்களாதேஷ் போன்ற நாட்டினர் ஆதார் அட்டையை வாங்கும் போது மக்கள் ஐடியை வாங்குவது கடினமா?

இதற்கு ஏற்கனவே புழக்கத்தில் உள்ள, இந்தியா முழுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரையே இத்திட்டத்துக்கு மேம்படுத்திக் கொடுக்கலாமே!

எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் 10 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ஆதார் இணைப்பால் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன.

இதை விட ஒரு சிறப்பான செயலை மக்கள் ஐடி செய்து விடுமா?!

குடும்ப அட்டையையே பல வகையாக பிரிக்கப்பட்டு அரசின் சேவைகள் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்படுகிறதே!

ஆதார் எளிமை

முன்பு ஆதாரை திட்டிய மக்கள் தான் ஆதாரால் கிடைக்கும் பயனைப் புகழ்ந்துகொண்டுள்ளார்கள். தற்போது எங்கே சென்றாலும் ஆதார் இருந்தால் போதும் என்ற நிலையாகி விட்டது.

அரசு அலுவலகங்களுக்கு எந்த அடையாள அட்டையை எடுத்துச்செல்வது என்று குழம்பி இருந்த முந்தைய நிலை மாறி ஆதார் இருந்தால் போதும் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

அரசு சேவைகளுக்கு இணையத்திலேயே இணைப்பு கொடுக்கும் முறையைக் கொண்டு வருவதால், ஆதார் அட்டையைக் கூட எடுத்துச்செல்ல வேண்டியதில்லை என்ற நிலையாகி வருகிறது.

அதாவது பயோமெட்ரிக் முறையின் மூலம் அடையாளம் உறுதி செய்யப்படுவதால், ஒரிஜினல், ஜெராக்ஸ் அவசியம் கூடக் குறைந்து வருகிறது.

ஆதாரை விடச் சிறந்த அடையாள எண்ணை இனி எந்த அரசாலும் உருவாக்க முடியாது.

எதிர்காலத்தில் அனைத்து அடையாள அட்டைகளையும் (ஓட்டுநர் உரிமம், PAN, EPF, NPS, RATION, Voter ID) ஆதாரில் இணைத்து ஒரே ஐடியாக்க வேண்டும்.

சுருக்கமாக, ஆதார் இருந்தால் வேறு எதுவும் தேவையில்லை என்ற எளிமையான நிலைக்கு அரசு முன்னெடுக்க வேண்டும்.

நடைமுறை சிக்கல்களைக் குறைத்து வழிமுறைகளை மக்களுக்கு எளிமையாக்க வேண்டிய தமிழக அரசு, நடைமுறைகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

ஆதார் கட்டாயம் என்பது சரியா?!

ஆதார் கை ரேகையைப் பாதுகாப்பது எப்படி?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கிரி.. அரசின் சில நடவடிக்கைகள் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.. முன்பு மக்கள் ஐடி குறித்து எனக்கு போதிய விவரம் தெரியவில்லை.. ஆனால் உங்கள் பதிவை படித்த பின் மக்கள் ஐடி தேவையா? என்ற ஐயம் எழுந்துள்ளது.. நீங்கள் கூறியது போல இதில் பெரும் நிதி தேவை மற்றும் களப்பணி தேவை.. தற்போதைய தமிழக அரசின் சூழலில் இந்த பணிக்காக பெரிய தொகையை ஒதுக்க வேண்டி வரும்.. கடந்த 20 வருடங்களில் தமிழ்நாட்டின் நிதி நிலை பார்க்கும் போது கண்ணை கட்டுகிறது.. வரும் காலங்களில் யோசிக்க முடியவில்லை..

  2. @யாசின்

    “தற்போதைய தமிழக அரசின் சூழலில் இந்த பணிக்காக பெரிய தொகையை ஒதுக்க வேண்டி வரும்.”

    கண்டிப்பாக. ஏற்கனவே, தமிழக அரசு கடன் தொகை அதிகரித்து வருகிறது ஆனால், இது போன்ற வெட்டிச் செலவுகளால் மேலும் கடனை அதிகப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!