ஒன்றியம் தமிழகம் என்பது சரியா? தவறா?

8
ஒன்றியம் தமிழகம்

ன்றியம் தமிழகம் என்று கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஏற்கனவே கருத்துப் பகுதியில் கூறி இருந்தாலும், இதனுடன் மேலும் சில தகவல்களுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இக்கட்டுரை சற்று பெரியது என்பதால், நேரம் இருக்கும் போது பொறுமையாகப் படிக்கவும். Image Credit

ஒன்றியம்

ஒன்றியம் என்று அமித்ஷாக்கு ஸ்டாலின் பதில் கொடுத்ததில் ஆரம்பித்த சர்ச்சையைத் தமிழக நிதியமைச்சர் PTR தியாகராஜன் GST கூட்டத்தில் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றார்.

இதன் பிறகு திமுக வினரும் அவர்களது கொள்கைகளை ஆதரிப்பவர்களும் இதை ஆதரித்துப் பேசத்துவங்கினர்.

இதை எதிர்த்து மற்றவர்கள் ஒரு பக்கம் தவறு என்று கூறி வருகின்றனர்.

ஒன்றியம் எனக்கூறுவது தவறா?

Union என்ற வார்த்தையை ஒன்றியம் என்று தமிழாக்கம் செய்வதை, அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருப்பதால் தவறு என்று கூற முடியாது.

ஆனால், எந்தச் சூழ்நிலையில், எந்த இடத்தில், என்ன நோக்கத்தில் இதைப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் பிரச்சனையுள்ளது.

இவ்வளவு காலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றியம் என்று தோன்றாமல் தற்போது முதல்வர் ஆன பிறகு தான் ஒன்றியம் என்று தோன்றியுள்ளது.

தற்போதும் தோன்றி இருக்காது ஆனால், மத்தியில் மோடி என்பதே காரணம்.

மோடியை எதிர்ப்பதற்காக அல்லது வெறுப்பேற்றுவதற்காகக் கூறப்படும் வார்த்தை ஒன்றியம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இது தேவையற்ற குழப்பத்தை, பிரிவினை எண்ணத்தை, விவாதத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

இதே காங் ஆட்சியில் இருந்தால், இப்பிரச்சனையை ஸ்டாலின் கொண்டு வந்து இருக்க மாட்டார். இது தான் நிதர்சனம்.

தேவையற்ற சர்ச்சைகள்

கலைஞர் தமிழ்ப்புத்தாண்டு என்று தை 1 யைக் கூற, தற்போது வரை தமிழ்ப்புத்தாண்டு அன்று சண்டையாக உள்ளது.

மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாள் சண்டையோடு வருடாவருடம் முடிகிறது.

அப்பா தமிழ்ப்புத்தாண்டுக்கு ஆரம்பித்து வைத்தால், மகன் ஒன்றியத்துக்கு ஆரம்பித்து வைத்து விட்டார்.

தற்போது தமிழ்நாட்டிலேயே இரு பிரிவாக மாறி அடித்துக்கொண்டுள்ளார்கள். இதனால் சாதித்தது என்ன?!

ஏன் இப்படி அனைத்துக்கும் சண்டை போட்டுக்கொண்டுள்ளோம்?! ஏன் நம்மால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை?

தமிழர்கள் என்றாலே சண்டை, ஒற்றுமையில்லை என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதுல தமிழன்டா ன்னு பெருமை வேற!

ஒன்றியம்

யூனியன் என்ற ஒன்றிய வார்த்தை, யூனியன் பிரதேசம், ஊராட்சி ஒன்றியம் என்று பல்வேறு இடங்களில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு, நடுவண் அரசு என்ற வார்த்தையே தெளிவான பொருளைப் பாமர மக்கள் உட்பட அனைவருக்கும் கொடுக்கிறது.

வீம்புக்காக ஒன்றியம் என்று குறிப்பிடலாமே தவிர இவ்வாறு அழைப்பவர்களுக்கே தெரியும் அதில் உள்ள அசவுகரியம்.

PTR தியாகராஜன்

மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. மத்திய அரசுக்கென்று வாக்கு வங்கி இல்லை. மாநிலங்களை ஒன்றிணைப்பதால் ஒன்றிய அரசு

என்று தியாகராஜன் கூறுகிறார்.

மாநிலங்களை ஒன்றிணைக்கும் வேலையை மட்டுமே மத்திய அரசு செய்யவில்லை, அதையும் தாண்டி மிகப்பெரிய பொறுப்புகளைக் கையாண்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வாக்காளர் என்று தான் அரசிலமைப்பு சட்டம் கூறுகிறதே தவிர, மாநிலங்களுக்கான வாக்காளர் அல்ல. தமிழ்நாட்டு வாக்காளர் எனக் கூற முடியாது.

மாநிலங்களுக்கு தேவையென்றால், மத்திய அரசை அணுகித் தான் தீர்க்க முடியுமே தவிர, அனைவரும் ஒன்று என மாநிலங்களாகவே தீர்த்துக்கொள்ள முடியாது.

எடுத்துக்காட்டு

கொரோனா முதல் அலையில் மத்திய அரசே அனைத்துப் பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டு செய்தது, எந்தக்குழப்பமும் இல்லை.

ஆனால், மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசே அனைத்தையும் செய்கிறது என்று பாஜக ஆளாத மாநிலங்கள் குறை கூறியதால், இரண்டாம் அலையில் மாநிலங்களுக்கே பொறுப்பை மத்திய அரசு வழங்கி விட்டது.

ஆனால், என்ன நடந்தது?

ஊரடங்கு போடுவதில் குழப்பம். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக ஊரடங்கு போட்டதால், மக்கள் பரவல் இருந்து கொண்டே இருந்தது.

அதனால், தொற்று மிக மோசமாகப் பரவியது.

தடுப்பூசி வழங்குவதில் மாநிலங்களுக்கு இலவசமாக 50%, கட்டணத்துடன் 25%, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்று பிரித்துக்கொடுத்தது.

ஆனால், அதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகள், தமிழ்நாடு உலகளவில் டெண்டர் விட்டும் எந்த நிறுவனமும் முன் வரவில்லை.

மத்திய அரசு குறைந்த விலைக்குக் கொடுத்த தடுப்பூசியை பஞ்சாப் அரசு அதிக விலைக்குத் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றது சர்ச்சையானது.

எங்களுக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை என்று டெல்லி முதல்வர் கெஜரிவால் புகார் கூறினார், கொடுத்த பிறகு பிரச்சனையானதும் மத்திய அரசு எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்.

தற்போது மத்திய அரசே தடுப்பூசிக்கான முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்ட பிறகு எந்தக் குழப்பமும் இல்லை.

எனவே, இந்த ஒரு சம்பவமே கூறும் மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அதிகாரம் மிக்கது, சுயாட்சி இருந்தாலும் வழிநடத்த மத்திய அரசின் ஆளுமை தேவை என்பதை.

இது பாஜக அரசாக இருந்தாலும், காங் அரசாக இருந்தாலும் ஒன்று தான்.

யாருக்கு அதிகாரம்?

அமெரிக்காவில் காலனி நாடுகள் இணைந்து அமெரிக்கா உருவாகியது. அங்கே மாநிலங்களுக்கே அதிக அதிகாரம்.

அவர்கள் நினைத்தால், விலகிக்கொள்ளலாம். தங்களுக்கேற்ப சட்டங்களைத் தனியாக மாற்றியமைக்கலாம்.

இந்தியாவில் இருப்பது காலனிகள் அல்ல, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கே அதிக அதிகாரத்தை வழங்கியுள்ளது.

மாநில அரசு நினைத்தால் விலக முடியாது. இந்தியா முழுமைக்கும் ஒரு சட்டம் என்றால், அதை மாநிலங்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

இந்தியா என்ற நாட்டை ஆட்சி செய்வதற்குத் தகுந்தவாறு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிந்திருந்த மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இந்தியா உருவாகவில்லை.

எனவே, சுயாட்சி என்ற பெயரில் மாநிலத்தை உயர்த்த நாட்டைச் சிறுமைப்படுத்த வேண்டாம்.

தனிப்பட்ட மாநிலத்துக்கென்று எந்த அதிகாரமும் இல்லை, இன்னொரு வகையில் கூறுவதென்றால், மாநிலங்கள் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டவை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசு நினைத்தால்..

  • ஒரு மாநிலத்தை யூனியன் ஆக்க முடியும்.
  • யூனியனை மாநில அந்தஸ்துக்கு உயர்த்த முடியும்.
  • யூனியன் பிரதேசங்களை இணைத்து மாநிலமாக்க முடியும்.
  • மாநிலத்தைப் பிரிக்க முடியும்.

இந்திய அரசை ஒன்றிய அரசு என்றால், தமிழ்நாடு என்ற மாநிலத்தை, மாவட்டத்தை, ஊராட்சியை எப்படி அழைப்பீர்கள்?

இவர்களுக்குப் பெயர் பிரச்சனையில்லை, மோடியை எதிர்ப்பதாக நினைத்து, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

Dravidan stock

Dravidan stock என்று கூறுகிறார் ஸ்டாலின். என்ன பெரிய Dravidan stock?!

கன்னடத்துக்காரன் நமக்குத் தண்ணீர் தர மாட்டேங்குறான், குறுக்கே அணை கட்டுவேன் என்கிறான். திராவிடன் தானே! நம்மால் என்ன செய்ய முடிந்தது?

இங்கேயும் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தான் உதவிக்கு வந்தாக வேண்டும். ஆந்திரா தண்ணீர் தரவில்லையென்றால், சென்னை நாறி விடும்.

தற்போது (ஜூன் 2021) கூடக் கிருஷ்ணா நதிநீரை இன்னும் சென்னைக்குத் தரவில்லை என்று கெஞ்சிக்கொண்டு உள்ளார்கள்.

தமிழ்நாட்டினர் மட்டும் தான் திராவிடன் என்று கூறிக்கொண்டுள்ளார்கள், மற்ற மாநிலங்கள் திராவிடம் என்பதைப் பொருட்டாகவே மதிக்கவில்லை.

தமிழ்நாடு, சுயாட்சி என்று பெருமை கொள்ளலாம் ஆனால், நடைமுறை எதார்த்தம் அவ்வாறு இல்லை.

தற்போதும் கோதாவரி காவிரி இணைப்புக்கு மத்திய அரசு தான் முயற்சி எடுத்து, மற்ற மாநிலங்களைச் சம்மதிக்க வைத்துத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழன் என்று கூறுவதில் அர்த்தமுள்ளது, திராவிடன் என்று பெருமை பீத்துவதில் என்ன அர்த்தமுள்ளது?!

புவியியல் அமைப்பு

சுயாட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குள் எதையும் செய்ய முடியும் ஆனால், மாநிலத்தைத் தாண்டினால் மத்திய அரசின் உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

ஒவ்வொரு மாநிலமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. மாநிலங்கள் மத்திய அரசைச் சார்ந்துள்ளன.

எடுத்துக்காட்டுக்கு நம்மிடம் ஜீவநதி இல்லை, மற்ற மாநிலங்கள் உதவி இல்லாமல் தண்ணீர் சார்ந்து இயங்க முடியாது.

இதை மற்ற மாநிலத்திடம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்களா? சட்டங்கள் இருந்தே பல பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டுள்ளது.

காவேரி குறுக்கே அணை கட்டுகிறேன் என்று கர்நாடகா கூறிக்கொண்டுள்ளது, உச்சநீதிமன்றம், மத்திய அரசு இல்லையென்றால் என்றோ நடந்து இருக்கும்.

தமிழ்நாடு இல்லையென்றாலும் மத்திய அரசு மற்ற மாநிலங்களுடன் தொடர்ந்து இயங்க முடியும் ஆனால், மத்திய அரசு இல்லையென்றால் மாநில அரசால் இயங்க முடியாது.

காரணம், மற்ற மாநிலங்களைப் புவியியல் அமைப்பு ரீதியாக அதன் தேவைக்குச் சார்ந்துள்ளது. தேவைக்கு உதவ மத்திய அரசு தேவை.

தமிழ்நாடு அதிக வரி கொடுக்கிறது

தமிழ்நாடு அதிக வரி கொடுக்கிறது எனவே, தமிழ்நாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும், கோவா போன்ற சிறிய மாநிலத்துக்கு என்ன தகுதி உள்ளது?

என்று PTR தியாகராஜன் பேசுகிறார்.

இவரே மாநில சுயாட்சி, மரியாதை பற்றியும் பேசுகிறார் பின்னர் கோவாவை சிறிய மாநிலம் என்கிறார். எப்படிச் சரியாகும்?!

மாநிலம் சிறியது பெரியது என்பது கணக்கல்ல, அதுவும் ஒரு மாநிலம்.

மற்ற மாநிலங்களுக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை தான் சிறிய மாநிலத்துக்கும் உள்ளது.

அதிக வரி கட்டுவதால் தமிழ்நாடு உயர்ந்ததாகி விடுகிறதா? அதிக வரி கட்டுவதால், Request செய்யலாம் ஆனால், Demand செய்ய முடியாது.

எங்கள் மாநிலத்தில் தான் அதிக மக்கள் தொகையுள்ளது எனவே, எங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேறொரு பிரச்சனையில் மத்திய பிரதேசமும், உத்தரபிரதேசமும் ஆரம்பித்தால், தியாகராஜன் ஏற்றுக்கொள்வாரா?

மாநிலங்களுக்குள் பிரிவினை

இவர் தேவையற்று மாநிலங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிறார். தான் புத்திசாலி என்று காட்ட சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.

இவர் விவரங்கள் தெரிந்தவராக இருக்கலாம் (அதிலேயே சந்தேகமுள்ளது) ஆனால், அணுகுமுறை (attitude) மோசமாக உள்ளது.

செயலில் காட்டுபவர்கள் அதிகம் பேச மாட்டார்கள் என்பது மூத்தோர் சொல்.

மாநிலங்களுக்குள் நட்பு பாராட்டினால் மட்டுமே நமக்கான பிரச்சனை காலத்தில் ஆதரவை பெற முடியும் இல்லையேல் பகைமையுணர்வே மிஞ்சும்.

நமக்கான உரிமைகளைத் தாராளமாகக் கேட்கலாம் ஆனால், கேட்பதற்கென்று அணுகுமுறை உள்ளது.

தனிப்பட்ட முறையில் இவர் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் ஆனால், ஒரு மாநிலத்தின் சார்பாக பேசும் போது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

குடும்ப பாரம்பரியம் என்ற பெருமை பீத்தல்களையும், புத்திசாலி என்று நினைத்துப் பேசுவதையும் இவர் கட்சியினர் வேண்டும் என்றால் ரசிக்கலாம், மற்றவர்கள் அல்ல.

இனிமேலாவது பேச்சைக்குறைத்து செயலில் காட்டுவாரென நம்புவோம்.

மாவட்ட புறக்கணிப்பு ஏன்?

மாநில சுயாட்சி பேசும் இவர்கள் தான் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று தமிழ்நாட்டில் கோவையைப் புறக்கணித்தவர்கள்.

சர்ச்சை எழுந்த பிறகே கவனம் கொடுத்தார்கள்.

தங்கள் மாநிலத்தில் ஒரு மாவட்டத்துக்கே சரியான உரிமையை வழங்காத போது மாநில சுயாட்சி பற்றிப் பேசுவது சரியா?

தொடர்ந்து சென்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதேன்? தற்போது வரை சென்னைக்கே அதிகளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுயாட்சி பேசுபவர்கள் மாவட்டங்களுக்குச் சரி விகிதத்தில் கொடுத்து இருக்க வேண்டாமா? ஏன் கொடுக்கவில்லை?

தற்போது மத்திய அரசு நிலையில், தமிழக அரசும், மாநிலங்கள் நிலையில் தமிழக மாவட்டங்களும் உள்ளன.

சூழ்நிலை வேறு என்றாலும் பிரச்சனை ஒன்று தான்.

தமிழக அரசை ஏன் கேட்கிறீர்கள்? மத்திய அரசைக் கேளுங்கள்‘ என்கிறார் இவர்கள் கட்சி நபர். அப்படியென்றால், யார் கூறுவது சரி?

மத்திய அரசு தவறாக நடந்தால், ஒருதலைப்பட்சமாக நடந்தால், சட்ட ரீதியாகப் போராடி உரிமையைப் பெறலாமே தவிர, சர்ச்சைகளை உருவாக்கியல்ல.

தமிழ்நாட்டை அதிகம் நேசிக்கிறேன் ஆனால், இந்தியத் தமிழன். எனக்கு நாடும் முக்கியம், மாநிலத்தின் மரியாதையும் முக்கியம்.

இறுதியாக, ஒன்றியம் என்று கூறுவது தவறான சொல் அல்ல ஆனால், எந்த நோக்கத்தில் அவை பயன்படுத்தப்படுகிறது என்பதே இங்கே கேள்வி.

மத்திய அரசு அல்லது நடுவண் அரசு என்பதே சரி.

ஒன்றியம் மட்டுமே பயன்படுத்துவேன் என்பது தான் தவறு. தேவைப்படும் நேரத்தில் ஒன்றியம் என்ற வார்த்தையைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

தென் மாவட்டங்கள் கொங்கு நாடு

ஒன்றிய பிரச்சனை ஆரம்பித்த பிறகு தனி மாநில பிரச்சனை துவங்கியுள்ளது.

தற்போது சிலர் தென் மாவட்டங்களைத் தமிழக அரசு புறக்கணிக்கிறது எனவே, தமிழ்நாட்டிலிருந்து தென் மாவட்டங்களைப் பிரித்துப் புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.

தமிழக அரசு கொங்கு பகுதியைப் புறக்கணிக்கிறது எனவே, கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்கள் கொங்கு பகுதியைச் சார்ந்தவர்கள்.

தென் மாவட்டங்களை எந்த ஒரு அரசாக இருந்தாலும் புறக்கணிக்கிறது என்பது உண்மையே, அதில் மாற்றுக்கருத்தில்லை.

இதை அம்மாவட்டங்கள் சட்ட ரீதியாகவோ, அரசுக்கு நெருக்கடி கொடுத்தோ இதற்கான தீர்வைப் பெற வேண்டுமே தவிரத் தனி மாநிலம் என்பது சரியல்ல.

ஒற்றுமையே பலம்

தமிழ்நாட்டை விளையாட்டுக்குக்கூட எவரும் பிரிக்க நினைக்காதீர்கள். ஒருங்கிணைந்த மாநிலமாக இருப்பதே நமக்குப் பெருமை, பலம்.

அதிமுக திமுக இரு அரசுகளும் தொடர்ந்து சென்னையிலேயே அனைத்து கட்டமைப்புகளையும், அலுவலகங்களையும் அமைக்காமல், மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

சென்னையில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரே இடத்தில் வீக்கமாக இருப்பது சரியல்ல.

மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்தால் மக்கள் ஏன் சென்னை வரப்போகிறார்கள்?!

மாநில சுயாட்சி பேசும் அரசு முதலில் மாவட்டங்களுக்கான முக்கியத்துவத்தை, மரியாதையை, வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும்.

முதலில் நம் மாநிலத்தைப் பார்ப்போம் பின்னர் ஒன்றியத்தைப் பார்ப்போம்.

தமிழ்நாடா தமிழகமா?

ஒன்றியம் பிரச்சனை பிரிவினைவாத சர்ச்சையை ஏற்படுத்தியதால், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று பத்திரிகையாளர் மாலன், தமிழகம் என்பது தான் சரி என்று கூறியுள்ளார்.

இரண்டுமே ஒரே பொருளைத்தான் தருகிறது. இரண்டு வார்த்தைகளுக்கும் அரசியல் சட்ட அங்கீகரிப்புகள், வரலாறுகள், சங்க இலக்கியப் பாடல்கள் உள்ளன.

வரி, வார்த்தை எளிமைக்காக இரண்டுமே அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

மாலன் கூறினார் என்பதற்காக இனி தமிழ்நாடு என்று தான் பயன்படுத்துவேன் என்று ஒரு சாராரும், தமிழகம் என்று தான் பயன்படுத்துவேன் என்று ஒரு சாராரும் கூறி வருகிறார்கள்.

இதெல்லாம் வீம்புக்கு செய்வதே அன்றி வேறொன்றும் இல்லை. ஒன்றியம், தமிழ்நாடு, தமிழகம் அனைத்தையும் இடத்துக்கேற்றபடி பயன்படுத்தலாம்.

அதெல்லாம் முடியாது நான் ஒன்றியம், தமிழ்நாடு, தமிழகம் என்று மட்டும் தான் கூறுவேன் என்றால், தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால்…

நன்றி! வணக்கம்.

கொசுறு

சாமி படத்தில் விவேக், ‘நீங்க பட்டைய போடுவீளோ நாமத்தைப் போடுவீளோ ஆனால்….‘ ன்னு கூறுவது மேற்கூறியதுக்குச் சரியாகப் பொருந்தும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. மன்னிக்கவும்,
    நீங்கள் முழு பி. ஜெ. பீ ஆதரவாளராக மாறி விட்டதாகவே நினைக்கிறேன்.

    புதிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனித்து விமர்சிக்கும் நீங்கள், முந்தைய அரசை இதே போல விமர்சித்து அதிகம் பார்த்தது இல்லை.

    நம்மில் ஒருவராக, ஒரு மிடில் கிளாஸ் மாதவன் போல தான் உங்களை பார்த்து வந்தேன்.

    ஒரு சார்புடைய கருத்துக்கள் வரும் போது, உங்களையும் எங்களையும் அது அந்நியபடுத்துகிறது.

  2. கிரி, நம் மாநிலத்தில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் பல உள்ளது.. கொரோனாவின் தாண்டவத்தில் நாம் மீண்டு மேல் எழவே பல ஆண்டுகள் ஆகும் போல் தெரிகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளே திணறி கொண்டிருக்கும் போது நம் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.. நிறைய பேரின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் போகி விட்டது.. இந்த சூழ்நிலையில் மக்கள் எத்தனை நாட்கள் இருப்பதை வைத்து கொண்டும், கடனை வாங்கியும் வாழ்க்கையை ஓட்ட முடியும்..

    இழந்தவைகளை திரும்ப மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு முக்கிய பங்குள்ளது.. மற்ற பஞ்சாயத்துகளை (அவசியமில்லாத) கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு முக்கிய பிரச்சனைகளில் மட்டும் அரசு தலையிட்டால் போதுமானதாக இருக்கும்.. எல்லாவற்றிலும் தலையிட்டால் நேரம் விரையமாகலாம்.

    (இதெல்லாம் வீம்புக்கு செய்வதே அன்றி வேறொன்றும் இல்லை. ஒன்றியம், தமிழ்நாடு, தமிழகம் அனைத்தையும் இடத்துக்கேற்றபடி பயன்படுத்தலாம்.

    அதெல்லாம் முடியாது நான் ஒன்றியம், தமிழ்நாடு, தமிழகம் என்று மட்டும் தான் கூறுவேன் என்றால், தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால்…) உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

    • என்னுடைய கருத்தை நீங்கள் வெளியிடவில்லை.

      நன்றி.

  3. Your views are one sided. You should know chennai is not a single district like coimbatore. Its spreads over 4 districts. For your info its widened to 8 districts.

    Other view of Union. Dont compare translations into ideology like ADMK did in past. The history cleary says all roads of DMK rule leads to TN inclusive growth. And In TN MLA’s can negotiate with government and implement whatever scheme they want.
    On managing pandemic show me a proof a single MLA from ADMK who worked hard and smart to care their people..
    Again im reiterating your mind and ideologies still enjoys Singapore authoritarian regime and try to impose the same in TN which is wrong.
    I hope you know well how Singapore literally sealed the immigrant labourers during pandemic.

  4. @அருண் பிரசாத்

    “மன்னிக்கவும், நீங்கள் முழு பி. ஜெ. பீ ஆதரவாளராக மாறி விட்டதாகவே நினைக்கிறேன்.

    வலது சாரி கருத்துகளில் ஆர்வமுடையவன், இடது சாரி சிந்தனைகளுக்கு எதிரானவன். சில நேரங்களில் இடது சாரி சிந்தனைகளிலும் இந்தி திணிப்பு உட்பட சிலவற்றை ஆதரிப்பேன்.

    இது தான் என் நிலை. பாஜக வலது சாரி கட்சி என்பதால், உங்களுக்குத் தோன்றுவதில் வியப்பில்லை.

    “புதிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனித்து விமர்சிக்கும் நீங்கள், முந்தைய அரசை இதே போல விமர்சித்து அதிகம் பார்த்தது இல்லை.”

    இக்கட்டுரையில் அவர்கள் கூறியுள்ளதுக்கு பதில் அளித்துள்ளேன்.

    அதோடு திமுக கொள்கைகள், சிந்தனைகள் பலவற்றுக்கு எதிர்க்கருத்து கொண்டுள்ளவன் என்பதால், திமுக விமர்சனம் அதிகமாகவே இருக்கும். சந்தேகம் வேண்டாம்.

    “நம்மில் ஒருவராக, ஒரு மிடில் கிளாஸ் மாதவன் போல தான் உங்களை பார்த்து வந்தேன்.”

    இனி பார்க்க மாட்டீங்களா? 😀 😀

    “ஒரு சார்புடைய கருத்துக்கள் வரும் போது, உங்களையும் எங்களையும் அது அந்நியபடுத்துகிறது.”

    இதில் ஒரு சார்புக் கருத்துகள் என்று எதை கூறுகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு கூறவும். அதற்கு விளக்கம் கூறுகிறேன், தவறு என்றால் ஏற்றுக்கொள்கிறேன்.

    அனைவரையும் அனைத்து காலங்களிலும் திருப்தி செய்வது இயலாத ஒன்று அருண்.

    இருப்பதில் குற்றம் குறைகளை ஏற்றுக்கொண்டு தொடர்வதே சிறந்தது 🙂 .

    “என்னுடைய கருத்தை நீங்கள் வெளியிடவில்லை.”

    மன்னிக்க அருண். இத்தளத்தில் துவக்கம் முதலே கருத்து மட்டுறுத்தல் (Moderation) கிடையாது. சில நேரங்களில் ஸ்பாம் க்கு சென்று விடும், தாமதமாகப் பார்த்து வெளியிடுவேன்.

    உங்களுடைய இரண்டாவது கருத்து உடனே வெளியானதிலேயே புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

    ஒருவேளை அருண் ரொம்ப ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு கருத்திட்டதால், என் தளம் கோபித்துக்கொண்டு ஸ்பாம் க்கு அனுப்பி விட்டது போல 😀 . சும்மா தமாஸ் 🙂 .

    அருண் என்னை விமர்சிக்க முழு உரிமையுண்டு 🙂 . காரணம் ஏராளமாக பாராட்டியுள்ளீர்கள்.

  5. @யாசின்

    “கிரி, நம் மாநிலத்தில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் பல உள்ளது.. கொரோனாவின் தாண்டவத்தில் நாம் மீண்டு மேல் எழவே பல ஆண்டுகள் ஆகும் போல் தெரிகிறது.”

    மிகச்சரியான கருத்து. நம்முடைய உழைப்பை செலவிட ஏராளமான தேவைகள் இருக்கும் போது அவசியமற்ற சர்ச்சைகளில் விரயமாக்குவது சரியல்ல.

  6. @Prabakaran

    “Your views are one sided.”

    Yeah! It might be like everyone, including you.

    “You should know chennai is not a single district like coimbatore. Its spreads over 4 districts. For your info its widened to 8 districts.”

    Yeah, completely agree and No one can deny it.

    Jus for your info while other districts got 3L doses, Chennai got 20L doses which is 6 times higher. You may check TN Govt official site.

    As well, many people have gone from Chennai to their native during the pandemic period.

    This is the reason I mentioned in the article that TN Govt (ADMK or DMK) does not expand Chennai alone.

    They have to expand and bring new opportunities, industries, Govt offices to other districts as well so that people will stay in their hometown itself and no need to come to Chennai and increase the existing crowd.

    “Other view of Union. Dont compare translations into ideology like ADMK did in past. The history cleary says all roads of DMK rule leads to TN inclusive growth. And In TN MLA’s can negotiate with government and implement whatever scheme they want.”

    The article is about my opinion of the UNION name controversy and not about comparing DMK and ADMK performance.

    As well here I’m not supporting ADMK. I can appreciate everyone if they are doing good for TN which is including DMK.

    “On managing pandemic show me a proof a single MLA from ADMK who worked hard and smart to care their people.”

    C. Vijaya Bhaskar who was health minister in ADMK period.

    Even DMK Govt requested C Vijaya Bhaskar to join their healthcare committee to discuss ongoing Covid issues.

    “Again im reiterating your mind and ideologies still enjoys Singapore authoritarian regime and try to impose the same in TN which is wrong. I hope you know well how Singapore literally sealed the immigrant labourers during pandemic”

    Sorry, I’m not sure what you are talking about! Can you elaborate, Pls?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here