வானம் (2011) | கடவுள் இருக்காருடா!

15
வானம்

தமிழில் அதிசயமாக தொடர்ந்து இரண்டு நல்ல படம் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் ஒன்று கோ இரண்டாவது வானம். இரண்டுமே நன்றாகப் போவதில் கூடுதல் சந்தோசம்.

தெலுங்குப்படத்தின் ரீமேக் படமான இதை தெலுங்குப்படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் தான் இதையும் இயக்கி இருக்கிறார். Image Credit

வானம்

தவறு செய்தவர்கள் மனம் திருந்தி நல்ல வழிக்கு வருவதே வானம் படத்தின் கதையாகும்.

இதில் சிறப்பு என்னவென்றால் ஐந்து கதைகளைக் கூறி அதை இறுதியில் இணைப்பதே ஆகும். ஐந்து கதைகளைக் கொண்டு இருந்தாலும் படம் பார்ப்பதில் எந்தக் குழப்பமும் இல்லாதது இதன் பலம்.

பரத்

இசைப்பிரியர். கிடார் மீது அளவுகடந்த ஆர்வம் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு இருப்பவர். நல்ல மனதுடையவர் தான் ஆனால் சுயனலமானவர்.

சிம்பு

கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பதில் பணி புரிபவர்.

பெண்களிடம் நகையைப் பறித்து மற்றும் யாரிடமாவது இருந்து கொள்ளை அடித்தாவது காதலியைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம் கொண்டவர்.

ஆனால், அனைவரிடமும் நட்பாக இருப்பவர்.

பிராகாஷ் ராஜ்

இஸ்லாமியரான இவரின் குடும்பம் இந்து வெறியர்களால் பாதிக்கப்படுகிறது. இறுதியில் எதிர்பார்த்தது போல நிலை மாறுகிறது.

அனுஷ்கா

ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் அங்குள்ளவர்கள் தொல்லை காரணமாக சென்னை வருகிறார் இங்கேயும் அவருக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.

சரண்யா

அசலைக்கட்டியும் வட்டி கட்டும் கொடுமையில் இருப்பவர்.

கடன் கொடுத்தவர் வட்டியைக் கொடுத்த பிறகு அவருடைய பையனைக் கூட்டிச்செல்லுமாறு அவருடைய மகனை உப்பள வேலைக்குக் கொண்டு சென்று விடுகிறார்.

பணத்தை கட்ட தனது கிட்னியை விற்க வேண்டிய நிலை. இதற்காக சென்னைக்கு தனது மாமனாருடன் செல்கிறார்.

இதில் பிரகாஷ் ராஜ் பரத் தவிர மூவருக்கும் பணம் தான் முக்கியப்பிரச்சனையாக வருகிறது.

பரத்

படத்துவக்கமே பரத் தான். அலட்டல் இல்லாத நடிப்பு.

படத்தில் பரத்தின் நடிப்பே ரொம்பப் பிடித்து இருந்தது. இவர் எம்மகன் படத்தின் மளிகைக்கடை பையன் கதாப்பாத்திரத்திற்கும் அருமையாக பொருந்துகிறார்.

அதே சமயம் இதைப்போல அல்ட்ரா மாடர்ன் கதாப்பாத்திரத்திற்க்கும் மிகச் சரியாக பொருந்துகிறார்.

தன் சுயநலத்தை உணர்ந்து பின் அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய மாற்றத்தை வெளிப்படுத்தி இருப்பது அழகு.

திருத்தணி படத்தைப்போல பன்ச் வசனம் பேசி நம்மை பஞ்சராக்குவதை சின்ன தளபதி குறைத்து இதைப்போல நடித்தால் நல்ல நிலைக்கு வரலாம்.

சிம்பு

விண்ணைத்தாண்டி வருவாயா படம் போல அடக்கி வாசித்து இருக்கிறார் சில காட்சிகள் தவிர்த்து.

சேரிப் பையனாக வரும் இவர் தன்னை சேரிப் பையன் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பதால் மட்டுமே அவர் சேரிப் பையன் என்று அறிய முடிகிறது இல்லை என்றால் தெரியாது.

இவருக்கு சரியாகப் பொருந்தி வரவில்லை.

இவருடைய நண்பராக சந்தானம். அவ்வப்போது கலகலப்பாக்குகிறார். சிம்பு இதைப்போலப் படங்களில் நடித்தால் நிச்சயம் நல்ல பெயரை எடுக்கலாம்.

குப்பை படத்தில் நடித்து அலப்பறை செய்யாமல் இதைப் போல நடித்ததற்காகவே இவரைப் பாராட்ட வேண்டும்.

பிரகாஷ் ராஜ்

சிம்பு பரத் என்று ஜாலியாகப் போய்க்கொண்டு இருக்கும் படத்தை இந்து அமைப்புகளால் இவருக்கு பிரச்சனை வரும் போது ஒரு நிமிடத்தில் கலகலப்பு சென்று படம் சட்டென்று சீரியஸ் ஆகி விட்டது.

இவரது மனைவியாக சோனியா அகர்வால் ம்ம்ம் காலம் தான் ஹீரோயின் விசயத்தில் எவ்வளவு விரைவாக மாறுகிறது.

பிரகாஷ்ராஜ் சில நேரங்களில் ஓவர் நடிப்பு செய்கிறாரோ என்று எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

அனுஷ்கா

பாலியல் தொழிலாளியாக வருகிறார்.

சிங்கம் படத்தின் இதயம் பாட்டிலேயே அவரைப்பார்த்து கலங்கிப் போய் இருந்தேன், இதில் பாலியல் தொழிலாளியாக வேறு வருகிறார்.

விவகாரமாக சேலை அணிந்து படம் பார்க்கும் என்னைப்போன்றவர்களை கிறுகிறுக்க வைக்கிறார் 🙂 .

புடவை எந்த நேரத்திலும் கழண்டு விழலாம் என்று படம் முழுவதும் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது.

சரண்யா

வழக்கமான அழுகாச்சி கதாபாத்திரம். அழுகாச்சி என்றாலே சரண்யா என்று தமிழ் திரையுலகம் முடிவு செய்து விட்டதைப்போல இருக்கிறது.

சரண்யா இனி இதைப்போல ஒரே மாதிரியான கதாப்பாத்திர தேர்வைத் தவிர்ப்பது நலம். இவருடைய மாமனாராக நடித்து இருக்கும் ஒரு பெரியவரின் நடிப்பு அட்டகாசம்.

நிஜமாகவே எங்க ஊரில் ஒரு தாத்தா பேசுவது போல இருந்தது.

எந்த வித போலித்தனமும் அலட்டலும் இல்லாத நிஜமான நடிப்பு. பரத்தும் இவருமே என்னை மிகக் கவர்ந்தார்கள்.

வழக்கமான படமில்லை

இதைப் போலப் படங்கள் பொதுவாக நல்ல பெயரை மட்டுமே பெறும் படம் ஓடாது ஆனால், அது வானம் விசயத்தில் மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கமர்சியலோடு நல்ல விசயத்தையும் கூற முயற்சி செய்து இருக்கிறார்கள்.

யுவனின் இசையில் பாடல்கள் ஏற்க்கனவே ஹிட் ஆகி விட்டன குறிப்பாக கேபிள் ராஜா மற்றும் எவன்டி உன்னைப்பெத்தான்.

இந்து முஸ்லிம் பிரச்சனையைப் பற்றிக் காட்டுவது என்றால் நடுநிலை என்ற பெயரில் வரும் தவிர்க்க முடியாத வழக்கமான விசயங்களும் இதில் உண்டு.

அமைதியாக முடித்து அழகாக காட்ட வேண்டிய நேரத்தில் காட்சிக்குப் பொருத்தம் இல்லாமல் சிம்புக்கு வாழ்க கோஷம் எல்லாம் போட்டுக் கடுப்பேத்துகிறார்கள்.

வழக்கமாக படத்தின் இறுதியில் ஹீரோக்கள் செய்யும் எந்தச் சமரசமும் இதில் செய்து கொள்ளாமல் கதைக்காக நடித்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இதைப் போலப் பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கத் துவங்கி இருப்பதும் ஆரோக்கியமான விசயமாக தோன்றுகிறது.

நிச்சயம் படத்தைப் பார்க்கலாம். சிங்கப்பூர் ல் படத்திற்கு ரேட்டிங் NC 16.

Directed by Krish
Produced by VTV Ganesh, R. Ganesh
Written by S. Gnanagiri(dialogues)
Screenplay by Krish
Story by Krish
Starring : Silambarasan, Bharath, Anushka Shetty, Prakash Raj, Saranya
Music by Yuvan Shankar Raja
Cinematography Nirav Shah,Gnanasekaran
Editing by Anthony Gonsalves
Studio : VTV Productions, Magic Box Pictures
Distributed by Cloud Nine Movies
Release date(s) April 29, 2011

கொசுறு 1

சிம்பு கோ படத்தை மறுத்தது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

கோ படம் வெற்றி பெற்றதே அவருக்கு பெரிய பிரச்சனை ஆகி விட்டது அனைவரும் குசலம் விசாரித்துக் கொண்டு இருந்ததால். வானம் படம் பாருங்க அப்புறம் சொல்லுங்க என்று பொங்கி இருந்தார்.

கோ படம் அளவிற்கு பெரிய அளவில் கமர்சியல் வெற்றி இல்லை என்றாலும் நிச்சயம் வெற்றிப்படம் தான் அதோடு அனைவரும் பாராட்டிய படம். எனவே சிம்பு நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இந்தப்படத்தில் “கடவுள் இருக்காருடா!” என்ற வசனம் சில இடங்களில் வரும். இப்படம் வெற்றி என்று தெரிந்த பிறகு சிம்பு தனது facebook தளத்தில் “கடவுளுக்கு கிடைத்த வெற்றி இது… கடவுள் இருக்காருடா!” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது 🙂 .

உண்மையில் சிம்பு சிறந்த நடிகர் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை ஆனால் வாய் மற்றும் திமிரான நடிப்பால் தன்னைக் கெடுத்துக்கொள்கிறார்.

கொசுறு 2

இந்து முஸ்லிம் பிரச்சனை பற்றிய படம் என்றாலே இருபுறமும் இருந்து எதிர்ப்பு வராமல் இருந்தால் தான் வியப்பு.

அப்படி எல்லாம் உங்களை ஆச்சர்யப்படுத்த மாட்டோம் கவலைப்படாதீங்க! 🙂 .

என்று இரு தரப்பினரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

அதிலும் BJP சிம்பு கட்அவுட்டிற்கு செருப்பு மாலை அணிவித்ததால் கொந்தளித்த!! சிம்பு ரசிகர்கள் அவர்களுக்கு எதிராக திரண்டு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

T.ராஜேந்தர் டேய்! வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி பிச்சிடுவேன் பிச்சி! என்று இதற்கு பொங்கி விட்டார்.

சினிமா அரசியல் இரண்டையும் கலக்காதீர்கள்.

இந்தப்பிரச்சனையை பெரிது படுத்தினால் சிம்பு ரசிகர்கள் இதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்!! என்று டெர்ரராக குமுறி இருக்கிறார்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. நல்ல விளக்கமான விமர்சனம். விரைவில் தொலைகாட்சியில் – இந்த சூப்பர் மெகா ஹிட் படம் போட்டுடுவாங்க…. அப்போ பார்த்துக்க வேண்டியது தான் போல. :-))))

  2. விமசர்ன பகிர்வுக்கும் மற்றும் தகவல்கள் பகிர்வுக்கும் நன்றிண்ணே… 🙂

  3. பரத் பழனி படத்தில் பேசிய பஞ்ச் வசனங்களைப் பற்றி ஒரு புத்தகத்தில் வந்த கமெண்ட் இது… பரத் பஞ்ச் டயலாக் பேசுவதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் இன்னும் குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழியவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது என்று.. ஏற்கனவே ஒரு முன்னணி (அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள் ) தளபதி நடிகர் இந்த வெட்டி விளம்பரத்தில் தான் தனக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச நடிப்பைக் கூட வெளிக்காட்ட முடியாமல் தமிழக மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்…சினிமா ஒரு பொழுது போக்கு ஊடகம் என்பதை எல்லாம் தாண்டி இன்று கட்சி ஆரம்பிக்க ஒரு அடிப்படைத்தகுதியாக மாறி விட்டது.. நாலு படம் நடித்து விட்டாலே தங்கத் தலைவர் , சாணித் தலைவர்(சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்) என்று கொண்டாடும் நம் மக்கள் இருக்கும் வரையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான்.. தளபதிகள் வாழ்க!

  4. மற்றபடி கேள்விப்பட்ட வரை படம் நன்று என்று தகவல்..
    இப்பொழுது கிரி சாரின் விமர்சனமும் உடன் சேர்ந்தது விட்டது… இந்த வாரம் பார்த்துட வேண்டியது தான்….!

  5. படத்தில் எந்த இடத்திலையும் RSS பத்தி சொல்லவே இல்ல. அது ஒரு இந்து மததினர் மட்டுமே ! எந்த இயக்கத்தையும் சொல்லவே இல்ல ! …
    .. இது RSS பத்தி தவறான கருத்தை திணிப்பதே !

    கணேஷ் ..சிங்கப்பூர்

  6. //இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு சின்ன உதாரணம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனம் ஒரு முறை மோடியை விவகாரமாக கேள்வி கேட்டு தண்ணியக்குடி தண்ணியக்குடி என்று நிஜமாகவே செய்து விட்டார்.//

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உள்ளார் இல்லையா?
    கரண் தாப்பர் ப.சிதம்பரத்திடம் எடுத்த (இடப்பங்கீடு தொடர்பான) பேட்டியைப் பாருங்கள். ப.சி அசராமல் அடித்தாடியபோது தாப்பர் தண்ணி குடிக்க வேண்டியதாயிற்று.

  7. நானும் பார்த்துட்டேன் நல்லா இருக்கு கிரி

    – அருண்

  8. ஹாய்… ஹாய்…

    சிங்கபூர் ல அன்னைக்கு நைட்டே ரிசல்ட்ட சொல்லிடான்களா …
    என்ன ஒரு வேகம் ..

    இதை பத்தின ஒரு பதிவை நீங்க கண்டிப்பாக எழுத
    வேண்டும்மென அனைத்திந்திய ஆர்வகோளாறு சங்கத்தின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  9. NC 16? அட பாவிகளா… இப்பிடித்தான் “கோ” படத்துக்கும் NC16 குடுத்து என்னை படம் பாக்க விடாம பண்ணாங்க. இப்ப இதையுமா? (என் பையனையும் மனைவியையும் கூட்டிட்டு போகாம இப்பல்லாம் நான் எந்த படத்துக்கும் போறதில்ல). பரவாயில்ல உடுங்க. அடுத்த வருஷம் டிவிடி-ல பாத்துக்க வேண்டியதுதான். 🙂

  10. சித்ரா சிங்கக்குட்டி மாணவன் காயத்ரிநாகா கணேஷ் ரீடர் அருண் ஆனந்த் முத்துக்குமார் வருகைக்கு நன்றி

    @சித்ரா ரைட்டு

    @சிங்கக்குட்டி 😉

    @காயத்ரிநாகா ஹி ஹி ஹி 🙂

    @கணேஷ் நீங்கள் கூறுவது சரி தான். இயக்கத்தைப் பற்றி அதில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் யார் அதில் வருகிறார்கள் என்பது படம் பார்க்கும் நமக்குத்தெரியும்.

    இந்து அமைப்புகள் என்று குறிப்பிட்டு இருக்கலாம், மாற்றி விட்டேன்.

    @ரீடர் ஹா ஹா அப்படியா! லிங்க் இருந்தா கொடுங்க பார்ப்போம் 🙂

    @அருண் உடனடியா எல்லாப்படமும் பார்த்து விடுறீங்க போல 😉 நடத்துங்க நடத்துங்க

    @ஆனந்த் 🙂

    @முத்துக்குமார் நீங்க நல்லவர்னு தெரியும் இவ்வளோ நல்லவர்னு தெரியாது 😉

  11. சிம்பு பரத் என்று ஜாலியாகப் போய்க்கொண்டு இருக்கும் படத்தை RSS வெறியர்களால் இவருக்கு பிரச்சனை வரும் போது ஒரு நிமிடத்தில் கலகலப்பு சென்று படம் சட்டென்று சீரியஸ் ஆகி விட்டது.

    ———————————————————————————————————————–
    நானும் rss இயக்கத்தை சேர்ந்தவன்தான்.

    இருந்தாலும் உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது.

    ராஜேஷ்.v

  12. வாங்க ராஜேஷ் ரொம்ப நாளா ஆளைக்காணோம். பிசியா!

    ———————————————————————————————
    உங்கள் விசாரிப்புக்கு ரொம்ப நன்றி கிரி. i felt very happy that you are still remembering me. it touched my heart. thanks for that.

    rajesh.v

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here