கோ (2011) | இளைஞர்கள் அரசியல்

14
கோ

கோ அயன் அளவிற்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளது.

கோ

அரசியல் கட்சிகளைப் போல சில இளைஞர்கள் இணைந்து தேர்தலில் நிற்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு வழக்கம்போல இல்லை.

இதனால் மக்களைக் கவரும்படி பல செயல்களைச் செய்கிறார்கள் இதன் பிறகு நடக்கும் பல்வேறு சம்பவங்களால் மக்கள் ஆதரவு இவர்களுக்குக் கூடுகிறது.

இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு எரிச்சலை வரவைக்கிறது.

இறுதியில் இவர்கள் வெற்றி பெற்றார்களா! இல்லையா என்பதே கதை.

தின அஞ்சல்

ஜீவா “தின அஞ்சல்” நிருபர் & புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார்.

இந்தக்கதாப்பாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக இருந்து பின் மாட்டேன் என்று கூறி விட்டார். சிம்புவை விட ஜீவா பொருத்தமாக இருக்கிறார்.

துவக்கத்திலேயே தான் ஒரு துடிப்பான நிருபர் என்பதை நிரூபித்து விடுகிறார்.

அலட்டிக்கொள்ளாமல் சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கதாப்பாத்திரம், அதற்கு இவருடைய உடல் மொழியும் வசன உச்சரிப்பும் நன்றாகப் பொருந்துகிறது.

அஜ்மல் இளைஞர்கள் அணி தலைவராக வருகிறார், நல்ல தேர்வு. யாருமே இல்லாத இடத்தில் எருமைகள் மட்டுமே இவர்கள் பேச்சைக் கேட்கக் கூடி நிற்பது நகைச்சுவை.

ஜீவாவுடன் பணி புரியும் நிருபராகக் கார்த்திகா (ராதா மகள்). அசரவைக்கும் உயரம் மெல்லிய தேகம். புடவை மற்றும் சுடிதாரில் கலக்கலாக இருக்கிறார்.

நடிப்பு தான் வர மாட்டேங்குது. தமிழில் முதல் படம் என்பதால் இனி வரும் படங்களில் கொஞ்சம் நடிப்பை கூட்டுவார் என்று நம்பலாம்.

இளைஞர்கள் தேர்தலில் நிற்பதை படம் எடுக்கிறார்கள் என்று கூறினால்,  படம் எங்கே ஓடப்போகுது என்று தான் நினைப்பார்கள்.

ஆனால், அதை எப்படி கொடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று தெரிந்து சரியாகக் கொடுத்து இருக்கிறார் ஆனந்த்.

இளைஞர்கள் அரசியல் 

மாணவர்கள், இளைஞர்கள் தேர்தலில் நின்றால் நாம் என்னவெல்லாம் நினைப்பமோ அவை அனைத்தையுமே கிண்டலாக அவர்களே கூறி விடுவதால் நம்மால் எதுவும் கிண்டலடிக்கக் கூட முடியவில்லை.

ஒரு ஒளிப்பதிவாளருக்குள் இவ்வளவு திறமையான திரைக்கதை அமைக்கக்கூடிய இயக்குநர் இருப்பது உண்மையிலேயே வியப்பளிக்கிறது.

புகைப்படக் கலையை ரசிப்பவர்களுக்கு முதல் பாதி அருமையான விருந்து.

தமிழ்ப் படங்களில் நிருபர்களைப் பஞ்சத்தில் அடிபட்டவர்களாகவே பார்த்துப் பழகி இதில் இவ்வளவு வசதியாகப் பார்ப்பது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.

தற்போது நிலைமை மாறி இருக்கலாம்.

அரசியல் கட்சிகளை அவ்வளவு சீக்கிரம் பகைத்து எழுத முடியாது. ஒன்று எதிர் கட்சி ஆதரவாக இருக்கணும் அல்லது ஆளுங்ககட்சி ஆதரவாக இருக்கணும்.

அப்படி இருந்தால் தான் தமிழகத்தில் குப்பை கொட்ட முடியும்.

ஜீவா செய்யும் சில செயல்கள் படத்தில் பார்க்கும் போது சுவாரசியமாக இருந்தாலும் நிஜத்தில் இவ்வளவு எளிதில்லை என்பதே நடைமுறை உண்மை.

இறுதியில் ரொம்ப நல்ல முடிவு, ஜீவா செய்தது 100% சரி.

நக்சல்

பிரகாஷ்ராஜ் முதல்வராகவும், எதிர்க்கட்சி தலைவராகக் கோட்டா சீனிவாசராவும் நடித்து உள்ளார்கள். இருவருமே குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளார்கள்.

இளைஞர்கள் அணிக்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு பிரகாஷ்ராஜ் டென்ஷன் ஆகுவது அவரது வழக்கமான கலக்கல் நடிப்பு.

“வெண்பனியே” பாடலை எங்கே வைப்பது என்று தெரியாமல் சம்பந்தமே இல்லாத இடத்தில் வைத்தது எரிச்சலாக இருந்தது. பாடல்கள் அனைத்தும் சிறப்பு.

நக்சல் பிரச்சனை முக்கியப்பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நக்சல்களைப் பற்றிப் படம் வந்து உள்ளதா?!

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Directed by K. V. Anand
Produced by Elred Kumar, Jayaraman
Screenplay by K. V. Anand, Subha
Story by K. V. Anand, Subha
Starring Jiiva, Ajmal, Karthika
Music by Harris Jayaraj
Cinematography Richard M. Nathan
Edited by Anthony
Release date 22 April 2011
Running time 165 minutes
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. விரிவான விமர்சனம்.

    //நாமும் இதைப்போல வித்யாசமான படங்களை ஏன் எடுக்க முயற்சிக்கக்கூடாது! என்று நம்மை எண்ண வைத்து விட்டார்கள். எனக்கு புகைப்படம் எடுக்க ஆர்வம் இருந்தாலும் பொறுமை இல்லை இதைப் பார்த்தவுடன் ஆர்வம் அதிகம் ஆகியது உண்மை.//

    ஆர்வத்தை தக்க வையுங்கள். வாய்ப்பு கிடைக்கையில் செயல் படுத்துங்கள்:)!

    கொசுறு…
    //பெரிய சோகங்களை மறக்க சின்ன சின்ன மகிழ்ச்சிகள்.// ஆம், நெகிழ்வும் கூட.

  2. நல்லது கிரி, அப்ப ஒரு முறை பார்க்கலாம் இல்லையா :-).

    கதையை சொல்லிவிட கூடாது என்று மேலோட்டமாக நீங்கள் போக நினைப்பது புரிந்தாலும், ரொம்பவும் பொதுவாகவே பதிவு நீள்வதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது 🙁 தவறாக நினைக்க வேண்டாம்.

    பகிர்வுக்கு நன்றி :-).

  3. நன்றி கிரி….

    நேத்து தான் “கோ” பார்த்தேன்,,,, படம் நல்லா இருக்கு… சில இடங்களில் கொஞ்சம் உறுத்தல் ஆனால் அதுவும் இல்லாமல் எடுக்குறது ரொம்ப கஷ்டம்தானே….

    கண்டிப்பா பார்க்கலாம்…. குடுக்குற துட்டுக்கு மோசம் இல்ல….

  4. இந்த வாரம் பார்க்கனும்…

    விமர்சன பகிர்வுக்கு நன்றிண்ணே 🙂

  5. நிறை:
    1. க்ரைம் நாவலுக்குரிய இரண்டாம் பாதி திரைக்கதை.
    2. போட்டோக்களை வைத்து நகர்த்தியிருக்கும் முதல் பாதி திரைக்கதை.
    3. ஜீவா, பியா, கோட்டா, பின்பாதி அஜ்மல்
    4. ஹாரிஸின் பின்னனி இசை.

    குறை:
    1. கதையின் ஒவ்வொரு முக்கியமான திருப்பத்திலும் இடைச்செருகலாக வரும் பாடல்கள் திரைக்கதை ஓட்டத்தை வெகுவாக பாதிக்கிறது.
    2. இந்த கதைக்கு ஏற்ற பாடல்கள் இல்லை (தனியாக டி.வியில் பார்க்கும்போது கேட்கும்போது நன்றாக இருக்கும் சந்தேகமில்லை), இந்த கதைக்கு பாடல்கள் வேறுமாதிரி, சற்று வேகமாக இருக்க வேண்டும். ஹாரிஸ் தனக்கு பிடித்த ஸ்டீரியோ டைப் பாடல்களை விட்டு விட்டு கதைக்காக எப்போது இசையமைப்பாரோ?????? யுவன் இஸ் ரைட் சாய்ஸ்.
    3.முன்பாதி அஜ்மல் (நடிக்க ரொம்ப சிரமப்படுகிறார்), கார்த்திகா (சப்ப பிகருங்கோ), இந்த கேரக்டருக்கு நயன்தாரா சரியான தேர்வாக இருக்கும்.
    4. சில லாஜிக் சொதப்பல் (தேர்தல் நடைபெரும் காலம் பல மாதங்கள் போல தோன்றுகிறது, பிற கட்சியினர் பிரச்சாரம், பணவிநியோகம் எல்லாம் தொடங்கிய நீண்ட நேரத்திற்கு பின்னர் சிறகுகள் வேட்பாளர்களை தேர்வு செய்வது…..)

    சில ஒப்பீடுகள்:

    பிணங்களின் மீது அரசியல் செய்யும் அந்த கேரக்டர், ஈழத்தமிழர்களின் வாழ்வில் தங்கள் பிழைப்பைத்தேடிய / தேடும், சீமான், நெடுமா, திருமா, ராம்தாஸ்,வைகோவை ஏனோ நினைவு படுத்துகிறது.
    நக்சல் இயக்கம் புலிகள் இயக்கத்தை நினைவு படுத்துகிறது.

    பி.கு:
    படத்தை வேறுயாரும் வாங்கி தேர்தலுக்கு முன்பே வெளியிடாமல் செய்த சாதுர்யம் . அடேய்யப்பா.

  6. விமர்சனத்திற்கு நன்றி கிரி எப்படியும் எந்த வாரம் பார்த்து விடுவேன்

  7. படம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு கிரி
    நிச்சயம் இன்னும் ஒரு டைம் பாக்கணும்
    – அருண்

  8. Ko சரியான வார்த்தை. ஏனென்றால் கோ என்றால் அரசன் என்று பொருள்படும்.

  9. படம் சூப்பர் …. நீண்ட நாட்கள்/மாதம் பிறகு ஒரு நல்ல தமிழ் படம் தியடர்ரில் பார்த்தேன்.. உங்கள் விமர்சனம் நன்றாக இருந்து.

  10. //“வெண்பனியே” பாடலை எங்கே வைப்பது என்று தெரியாமல் சம்பந்தமே இல்லாத ஒரு மொக்கை இடத்தில் வைத்து விட்டார். எரிச்சல் தான் வந்தது.//

    Correct Giri…….

  11. ராமலக்ஷ்மி, சிங்கக்குட்டி, RK நண்பன், மாணவன், காத்தவராயன், சரவணன், பிரபு, சலீம், ராஜ் மற்றும் தமிழ் வருகைக்கு நன்றி

    @ராமலக்ஷ்மி

    இந்தப்படம் பாக்கும் போது உங்களைத்தான் நினைத்தேன் 🙂 கண்டிப்பாக பாருங்க.

    @சிங்கக்குட்டி

    சுட்டியமைக்கு நன்றி. மாற்றிக்கொள்கிறேன்.

    @காத்தவராயன்

    நீங்க கூறிய கடைசில மேட்டர் தான் டாப்பு 🙂 எப்படி எல்லாம் யோசிக்கறாங்க.

    @பிரபு

    படத்துக்கு போ(GO)ங்க என்ற அர்த்தத்தில் கூறியது அந்த Go 🙂 லிங்க் பாருங்க Ko review என்று தான் இருக்கும்.

    @ராஜ்

    “கோ க்கு கோ ன்னு சொல்றீங்க”

    அப்ப சரியாத்தானே கூறி இருக்கிறேன் ஹா ஹா ஹா

    இதுக்கு பேர் தான் தெளிவா குழப்புறதா 🙂 Ko Go என்றால் ஓகே அது என்ன கோ கோ இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தமிழ் பற்று ஆகாது 😉

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!