க்ரோம் உலவியின் பயனுள்ள நீட்சிகள்

18
க்ரோம் உலவியின் பயனுள்ள நீட்சிகள்

ணைய உலவி போட்டியில் கூகிள் க்ரோம் நாளுக்கு நாள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

க்ரோம் உலவியின் பயனுள்ள நீட்சிகள்

உலவியை பயன்படுத்துபவர்கள் பலர் அதன் நீட்சிகளை (Extension) பயன்படுத்திக்கொண்டு இருப்பீர்கள் சிலர் அதன் பயன்பாடு பற்றித் தெரியாமல் இருப்பீர்கள்.

க்ரோம் உலவியில் உள்ள சில முக்கியமான நீட்சிகளைப் பற்றித் தற்போது கூறுகிறேன். Image Credit

க்ரோம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் தயக்கமின்றி பின்வருவனவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீட்சிகள்

WOT

இது கட்டாயம் அனைவரும் வைத்திருக்க வேண்டிய நீட்சி ஆகும்.

இதன் வேலை என்னவென்றால் க்ரோம் உலவியில் வரும் பெரும்பாலான இணைய தொடுப்புகளை (Link) இது பாதுகாப்பானதா இல்லையா என்பதை நமக்கு பச்சை மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் அறிவிக்கும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் கூகிள் தேடுதலில் எதையாவது தேடுகிறீர்கள் என்றால் அதில் விடையாக வரும் அனைத்து தொடுப்புகளுக்கு அருகிலும் இதைப்போல வண்ணத்தில் எச்சரிக்கை இருக்கும்.

பச்சை என்றால் நாம் அதை க்ளிக் செய்யலாம் சிவப்பு என்றால் விட்டு விடலாம். இதில் மட்டுமல்ல நமக்கு வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளுக்கு கூட இதைப்போல நமக்கு காட்டும்.

ஹேக் செய்பவர்கள் அல்லது வைரஸ் உள்ள சுட்டிகளை அளிப்பவர்களை இதன் மூலம் கண்டறிய முடியும்.

இது 100% சரியானது என்று நான் கூறவில்லை ஆனால் கண்டிப்பாக நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

IE Tab

கூகிள் க்ரோமில் உள்ள ஒரு பிரச்சனை சில இணையதளங்களை சரியாக நமக்கு தராது அதனால் ஒரு சில வங்கி தளங்கள் உட்பட பல தளங்களை இதில் சரியாக பயன்படுத்த முடியாது.

இந்தப்பிரச்சனையை தீர்ப்பதற்காக உள்ள நீட்சி தான் இது. இதை நீங்கள் நிறுவிக்கொண்டால் சரியாக வேலை செய்யாத தளங்களுக்கு இதைப்பயன்படுத்திக்கொள்ளலாம் இதற்காக நீங்கள் IE க்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

Google Mail Checker

கூகிள் மின்னஞ்சலை பெரும்பாலனவர்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இந்த நீட்சியை நிறுவினால் உங்களுக்கு கூகிளில் புதிய மின்னஞ்சல் வந்தால் அதன் எண்ணிக்கையை இது நமக்கு காண்பிக்கும். இதைப்போல யாஹூ மின்னஞ்சலுக்கும் உண்டு.

AdBlock

இணையம் என்றாலே உடன் வரும் தொல்லை விளம்பரங்கள். இது அடிக்கடி பாப் அப்களை நமக்கு காண்பித்து எரிச்சலை கிளப்புவதுடன் ஒரு சில விளம்பரங்கள் வைரஸ் ஐயும் நமக்கு கொண்டு வந்து தந்து விட்டுச்சென்று விடும்.

இதை நிறுவினால் எந்த வித பாப் அப்களும் வராது அதே போல மின்னும் படி விளம்பரம் வைத்து நம் கண்ணை கெடுக்கும் விளம்பரங்களையும் இது தடுக்கும். எனவே இது மிக மிக அவசியமான நீட்சி ஆகும்.

Google Dictionary (by Google)

இதன் பயன் என்னவென்று நான் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை நீங்களே புரிந்து இருப்பீர்கள். நாம் என்ன தான் ஆங்கிலத்தில் புலமை!! பெற்று இருப்பதாக கருதினாலும் ஒரு சில வார்த்தைகளில் நமக்கு எப்போதும் சந்தேகம் வரும்.

எனவே, இதை நிறுவுவதன் மூலம் நம் வேலைகளை எளிதாக்கலாம். நீங்கள் எந்த ஆங்கில வார்த்தையில் சந்தேகப்படுகிறீர்களோ அதில் இரண்டு முறை க்ளிக் செய்தால் அதற்கான அர்த்தத்தை இது தந்து விடும்.

கொசுறு

க்ரோம் ஏற்கனவே தனது Sync செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்து உள்ளது.

இதன் மூலம் நமது bookmarks, theme, preferences மற்றும் autofill போன்றவற்றை நமது மற்ற கணினிகளுடன் (அலுவலகம் மற்றும் வீடு) Sync செய்து கொள்ள முடியும்.

தற்போது நீட்சிகளையும் இதைப் போல நாம் Sync செய்து கொள்ள முடியும். ஒவ்வொருமுறையும் வேறு இடத்தில் பயன்படுத்தும் போது நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

 1. கிரி ,

  உபயோகமான தகவல்கள். நன்றி.கிரி .மேலும் , EPIC BROWSER நல்லா இருக்கு கிரி ..

 2. தல சூப்பர்!

  இப்படி எல்லாத்தையும் ஒரே இடுகையில போட்டுட்டு.. எங்களுக்கு எழுத ஒண்ணுமில்லாம பண்ணிட்டிங்களே.. அவ்வ்வ்வ் !…

 3. பயனுள்ள அருமையான பகிர்வு கிரி.

  இப்போதுதான் நான் க்ரோம் பயன் படுத்த ஆரமித்தேன், பல தளங்கள் சரியாக வேலை செய்யவில்லயே என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்!, சரியான நேரத்தில் கிடைத்த பயனுள்ள தகவல்கள்.

  நன்றி!.

 4. எல்லாமே பயனுள்ள அருமையான நீட்சிகள் ..

  பகிர்வுக்கு நன்றி சார்…

 5. தகவலுக்கு நன்றி கிரி

  நாம் எதோ வீட்டுல பிரச்சனை அலுவலகத்தில் பிரச்சனை என்று யோசித்துக்கொண்டு இருந்தால் கூட நம்மிடம் வந்து “May I help you sir!” என்று கேட்பார்கள். அடப்பாவிகளா! யோவ் உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா என்று கேட்கத்தோன்றும் அந்தளவுக்கு உதவி செய்வார்கள்.

  பரவால்லியே

 6. சூர்யா கண்ணன் அவர்களின் கேள்வி நியாயமானது தான்.

  இதில் ஒன்றிரண்டு ஏற்கனவே நான் உபயோகித்து வருகின்றேன். வீடு போனதை இப்பொழுது இன்ஸ்டால் பண்ணி விட்டேன்.

  முன்னாடி ஃபயர்ஃபாக்ஸ் தான் கதி என்று இருந்தேன். குரோம் மொதல்ல கொஞ்சம் கடுப்பா இருந்தது. ( என்னுடைய ) சிஸ்டம்ல அடிக்கடி கிராஸ் ஆனதால பயன்படுத்தாம வச்சிருந்தேன். அப்புறம் ஓஸ் ரீஇன்ஸ்டால் பண்ணாதுக்கு அப்புறம் குரோம் தவிர வேற எதுவும் யூஸ் பன்றது இல்லை.

  கூகிள் பத்தி நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை.

 7. வழமையான பின்னூட்டம்தான்

  உபயோகமான தகவல்கள், வாழ்த்துக்கள். 🙂

 8. பயனுள்ள தகவல்கள் குறிப்பா கூகிள் க்ரோம் நீட்சிகளை பற்றி

  சிங்கபோரியான்ஸ் கடமை உணர்வு நகைச்சுவை உடன் கூறினாலும் அவர்களின் சேவை பாங்கு பாராட்ட பட வேண்டியதே

 9. கூகிள்ல இத்தனை வசதி இருக்கா? இதுல ஒன்னு கூட எனக்கு தெரியாது. கூகுளுக்கே கூகுள் நீங்கதான் போல. 🙂 கலக்கல் தகவல்களுக்கு நன்றி கிரி.

  –>இதற்காகவே ஏகப்பட்ட பசங்க பொண்ணுகளை இங்கே அமர்த்தி இருக்கிறார்கள்
  அப்படியா? அப்ப இன்னிக்கு நான் ஊருக்கு போறப்ப ஏர்போர்ட்ல நல்ல டைம் பாஸ்தான். 🙂

 10. bandhu, சங்கர், சூர்யா கண்ணன், சிங்கக்குட்டி, தாமஸ் ரூபன், தமிழுலகம், சரவணன், தனுசு ராசி, சுரேஷ் சார், ஜீவதர்ஷன், சதா மற்றும் முத்துக்குமார் வருகைக்கு நன்றி

  @சூர்யாகண்ணன் நீட்சி என்ற ஒன்றையே உங்களிடம் இருந்து தான் நான் தெரிந்து கொண்டேன். அப்புறம் நீங்கெல்லாம் வாரம் ஐந்து பதிவு போடுற ஆளு நானெல்லாம் மாதமே அவ்வளவு தான் எழுதறேன் 🙂 அதனால எல்லாவற்றையும் எழுதுகிறேன்.

  @தனுசுராசி எனக்கும் முதலில் க்ரோம் தகராறு செய்தது..தற்போது அதற்கு ரசிகன் ஆகி விட்டேன்.

  @சதா சிங்கப்பூரில் அவர்கள் கொடுக்கும் சேவையை விட சிறப்பாக இனி யாரும் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  @முத்து நல்லபடியா போய்ட்டு வாங்க. இன்று தான் YOG முடிகிறது (இந்நேரம் முடிந்து இருக்கும்).

 11. மிக நல்ல தொழிற்நுட்ப தகவல்களோடு உள்ளது உங்கள் பிளாக்! வாழ்த்துக்களும் மிக்க நன்றிகளும்!

 12. தகவல்களுக்கு ரொம்ப நன்றிங்க கிரி 🙂 🙂 மிகவும் பயனுள்ளவை 🙂

 13. தகவலுக்கு நன்றி கிரி . நீட்சிகள் பலவற்றை நிருவியுள்ளேன்.

 14. @ Kreshna தலைவரே! நானும் சரியாத்தானே கூறி இருக்கிறேன். 10*34=340 🙂 நான் கூறி இருந்தது In to (*) Exchange Rate (34). சிங்கப்பூர் வந்து மூன்று நாள்லயே யாரும் இதைக்கூறி விடுவார்கள்.நான் மூன்று வருடமாக இருக்கிறேன் 🙂

  அப்புறம் உங்க பின்னூட்டம் (Comment) ஸ்பாம் க்கு போய் விட்டது. தற்போது தான் அனுமதித்தேன்.

  @லோகன் நன்றி 🙂 கலக்குங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here