கூகுள் வழிகாட்டி (Map) புதுப்பொலிவுடன்

2
கூகுள் வழிகாட்டி

விர்க்க முடியாத சேவையாகி விட்ட ‘கூகுள் வழிகாட்டி’ சேவைக்கு வயது 15 🙂 .

தற்போது எங்குச் செல்ல வேண்டும் என்றாலும், கூகுள் வழிகாட்டி இல்லாமல் யோசிப்பதே இல்லை. அனைவர் வாகனங்களிலும் தவறாமல் இடம்பெறும் சேவை.

இடம் தெரியுமா?

வா.. கூகுள் இருக்கு.. பார்த்துக்கலாம்..

இது தான் உரையாடலாக இருக்கிறது. Image Credit

அந்தளவுக்கு நம்முடைய பயணத்தில் இரண்டற கலந்துவிட்டது. இச்சேவை குறித்துச் சிலர் அவ்வப்போது கிண்டலடித்தாலும், அவர்களும் கூகுள்வழிகாட்டி இல்லாமல் எங்கும் செல்லமாட்டார்கள். இது தான் நிதர்சனம்.

கூகுள் வழிகாட்டி

தற்போது லோகோவில் சிறு மாற்றம் செய்துள்ளது. இடைப்பட்ட காலங்களில் எப்படி லோகோ மாறி வந்துள்ளது என்பதை ஒரு காணொளியாகக் கொடுத்துள்ளது.

சிறு அளவில் மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது அவை உங்கள் பார்வைக்கு.

என் பயணங்களில் எப்போது துணை நிற்கும், உதவும் கூகுள் வழிகாட்டி மேலும் மேலும் வளர்ந்து அனைவருக்கும் உதவ வாழ்த்துகிறேன் 🙂 .

கொசுறு

கடந்த வாரம் ஒருத்தர் 90 மொபைல்களை ஒரு வண்டியில் வைத்துக் கூகுள் வழிகாட்டியுடன் சென்றதால், கூகுள் அங்குப் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகக் கருதி சிகப்பு நிறமாகக் காட்டியது.

இதை அனைத்து ஊடங்கங்களும் ‘இவர் ஹேக் செய்து விட்டார், அட்டகாசம் அற்புதம்‘ என்று வியந்து பாராட்டி எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

இதில் என்ன திறமையுள்ளது? நண்பர்கள் நாங்களே இதுபற்றிப் பேசியுள்ளோம் மற்றும் எங்களைப்போலப் பலரும் விளையாட்டாக நினைத்துப் பேசி இருப்பார்கள்.

இந்தாளு புத்திசாலி மாதிரி பண்ணிட்டாராம்! இது யாருக்கும் தெரியாத வித்தை பாருங்க..!

இந்தக் கோமாளித்தனத்தையும் கூகுள் எதிர்காலத்தில் சரிசெய்து விடும்.

தொடர்புடைய கட்டுரை

இறப்புக்குப் பின் கூகுள் கணக்கு என்ன ஆகும்?!

2 COMMENTS

  1. நான் கூகிள் மேப்பை அதிகம் இதுவரை பயன்படுத்தியது கிடையாது.. கடந்த மாதம் ஊருக்கு சென்ற போது என்னுடைய உற்ற தோழன் கூகிள் மேப் தான்.. நிறைய புதிய இடங்களுக்கு சென்று வந்தேன்… எல்லா இடத்திலும் எனக்கு உதவியது கூகிள் மேப் தான்.. எந்த விதமாக பிரச்சனையையும் எதிர் கொள்ளவில்லை..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. யாசின் எங்க தலைவன் கூகுள் மேப் பயன்படுத்தி விட்டீர்கள் ஒரு வழியா 🙂 . கூகுள் மேப் ஒரு மிகச்சிறந்த சேவை. எங்கு சென்றாலும் வழித்துணை இது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here