Virus (மலையாளம் – 2019)

2
Virus Movie

2018 ம் ஆண்டு Nipah வைரஸ் காரணமாகக் கேரளா அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து  Virus படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மலையாளப்படத்துக்கே உரிய இயல்பான காட்சிகளுடன் படம் நெடுக உள்ளது. எப்படித்தான் இது போல எடுக்கறாங்களோ!

Virus

முதன் முதலில் ஒருவர் வைரஸ் பாதிக்கப்பட்டு வர, என்ன எது என்று புரிவதற்குள் இறந்து விடுகிறார்.

தொடர்ந்து இது போல சிலர் அனுமதிக்கப்பட, மருத்துவத்துறை எச்சரிக்கையாகி சோதிக்கும் போது தான் இது Nipah வைரஸ் என்று அறிகிறார்கள்.

இதற்கு மருந்தில்லை. வைரஸ் எப்படி வந்தது? இதன் தொடக்கம் என்ன? எப்படி பரவியது? யார் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்?

என்ற விசாரணை தொடங்கி அவர்களைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள்.

நடித்துள்ளவர்களுக்கு உண்மையாகவே வைரஸ் வந்து விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இயற்கையாக நடித்துள்ளார்கள் 🙂 . எங்குமே நடிப்பு என்றே தோன்றவில்லை.

தமிழ் முகங்கள் ரேவதி, ரகுமான் போன்றோர் இருக்கின்றனர். ரேவதிக்கு A4 காகிதத்தில் ஒரு பக்கத்துக்குத் தான் வசனங்கள் இருக்கும், அதிலும் பாதி இறுதிக்காட்சியில் தான் 🙂 .

என்ன தான் இயல்பாக எடுக்கிறார்கள் என்றாலும், வைரஸ் விசாரணை எல்லாம் பார்த்தால், பரபரப்பே இல்லாமல், எதோ சாவகாசமாக விசாரித்துட்டு இருப்பது போல உள்ளது.

இந்த வேகத்தில் விசாரித்தால், என்ன ஆவது?!

காட்சியமைப்புகள்

வைரஸ் பரவல் காரணமாக எல்லோரும் முடங்கிக் கிடக்க, சாலைகள் அறிவிக்கப்படாத பந்த் போலக் காணப்படுகிறது. இக்காட்சி எல்லாம் எப்படி எடுத்து இருப்பார்கள்?!

பாதுகாப்பு சாதனங்கள், உடையுடனும் அனைவரும் இருப்பது, கையாள்வது என்று அப்படியே வெளிநாட்டு படம் போலவே உள்ளது.

இது போல நேரங்களில் முகக் கவசம் எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

படம் முழுக்க மருத்துவம், சிகிச்சை, நோயாளிகள் என்று நகர்வதால், சிலருக்கு சலிப்பாக வாய்ப்புள்ளது.

மருத்துவத்துறையில் இருப்பவர்கள் இப்படம் பார்த்தால், தங்கள் சேவையுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடியும்.

என்ன ஒரு வியப்பு என்றால், தற்போது (2020) கொனாரோ வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட முதல் நபரும் கேரளாவைச் சார்ந்தவர் தான்.

கேரளாவுக்கும் வைரஸுக்கும் எதோ தொடர்பு போல 🙂 .

முந்தைய அனுபவங்களை இதில் திறம்பட செயல்படுத்த வாய்ப்பு.

இப்படத்தின் இயக்குநர் ஆஷிக் அபு, ‘22 Female Kottayam‘ என்ற வெற்றிப்படத்தை எடுத்தவர். ரொம்பப் பிடித்த படங்களுள் ஒன்று.

வசூல் ரீதியாக Virus வெற்றிப்படமே! அமேசானில் உள்ளது.

Directed by Aashiq Abu
Produced by Aashiq Abu, Rima Kallingal
Written by Muhsin Parari, Sharfu Suhas
Starring Kunchacko Boban, Parvathy Thiruvothu, Asif Ali, Tovino Thomas, Rahman, Soubin Shahir, Indrajith Sukumaran, Revathi, Rima Kallingal, Madonna Sebastian, Sreenath Bhasi
Music by Sushin Shyam
Cinematography Rajeev Ravi
Additional Cinematography: Shyju Khalid
Edited by Saiju Sreedharan
Release date 7 June 2019
Running time 152 minutes
Country India
Language Malayalam

தொடர்புடைய கட்டுரை

Helen (மலையாளம் 2019) Survival of the fittest

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. மலையாள படங்கள் உண்மையில் பிரமிக்க வைக்கிறது.. ஆனால் நான் அதிகம் பார்ப்பதில்லை.. என்னுடன் நிறைய மலையாள நண்பர்கள் பணிபுரிகின்றனர் ஆனால் அவர்கள் எல்லாரும் அதிகம் விரும்புவது தமிழ் படங்களை தான்.. குறிப்பாக விஜய், அஜித்துக்கு அதிக மவுசு உண்டு..

    Fahat Fazil என்னுடைய விருப்ப நடிகராக மாறி விட்டார்.. ஆரம்பத்தில் எனக்கு இவரை பிடிக்காது.. ஆனால் அவரது படங்களை பார்க்க ஆரம்பித்த பின் மிகவும் பிடித்து விட்டது… நீங்கள் குறிப்பிட்ட படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்..

    ஒரு மாத விடுமுறையில் எந்த படத்தையும் பார்க்கவில்லை… விடுமுறையை கழித்து வந்த பின் அலுவலகத்தில் ஒரு மாத விடுமுறைக்கு, தண்டனையாக இரண்டு மாத வேலை பெண்டிங் இருக்கு.. மற்ற எந்த விஷியங்களிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. ஊரிலிருந்து வரும் போது நிறைய புத்தகங்கள் கொண்டு வந்தேன்.. இதுவரை ஒரு பக்கம் படிக்கவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் Fahat Fazil அற்புதமான நடிகர். 22 Female Kottaiyam படத்தில் மிகச்சிறப்பாக நடித்து இருப்பார். இது போல ஏராளமான படங்களைக் குறிப்பிடலாம்.

    மலையாள படங்கள் உலகப்படங்கள் தரத்தில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here