Blue Tick வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே OTP!

0
Blue Tick

லன் மஸ்க் வந்த பிறகு ட்விட்டரில் பெரியளவில் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் பிரபலமாக உள்ளது அனைவருக்கும் Blue Tick. Image Credit

Blue Tick

முன்பு Blue Tick என்பது கௌரவமான ஒன்றாகக் கருதப்பட்டது காரணம், பிரபலங்கள் மட்டுமே பெற முடியும்படியான விதிமுறைகள் இருந்தது.

இதனாலே ப்ளூ டிக் இருந்தாலே சிலர் கொம்புடன் சுற்றிக்கொண்டு, தங்களை என்னமோ பெரிய ஆள் என்று கற்பனை செய்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால், எலன் வந்த பிறகு ட்விட்டருக்கு வருமானம் சேர்க்கும் நோக்குடன், பணம் கொடுத்தால் எவருக்கும் அடையாளத்தை உறுதி செய்து ப்ளூ டிக் கொடுத்து விடுவோம் என்று அறிவித்து விட்டார்.

இதனால் கொம்புடன் சுற்றிக்கொண்டு இருந்த சிலர் ‘அதெப்படி! நாங்களும் மற்றவர்களும் ஒன்றா?!‘ என்று எலனிடம் சண்டைக்கே சென்று விட்டார்கள்.

நாங்கள் SPECIAL என்று கூற, அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் கிடையாது என்று முகத்திலடித்தாற்போல எலன் கூறி இணையத்தை ரணகளமாக்கி விட்டார்.

எலன் கூறியதற்கு மற்றவர்களிடமிருந்து பலத்த வரவேற்பு.

சிறப்புச் சலுகைகள்

பணம் கொடுத்துப் பெற்றால் கூடுதல் காணொளி நேரம், திருத்தம் செய்ய அனுமதி உட்படப் பல்வேறு கூடுதல் சேவைகளையும் வழங்கினார்.

இதோடு அவ்வப்போது புதுப் புது அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தார்.

இதில் தற்போது Blue Tick வாங்காதவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்படி, Two Step Verification வைத்து OTP பெறுபவர்களுக்கு இவ்வசதி இல்லையெனக் கூறி விட்டார்.

அதாவது, Blue Tick வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே OTP வசதி கிடைக்கும்.

ஐயையோ! அப்புறம் என்னங்க செய்வது?

இரட்டை அடுக்கு பாதுகாப்புக்கு என்ன செய்வது? என்ற இயல்பான கேள்விக்கு, OTP மட்டுமே இல்லை ஆனால், Authenticator App, Backup Code பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறி விட்டார்.

Authenticator App எப்படிப் பயன்படுத்துவது என்று புரியாதவர்களுக்கு Authenticator App அவசியம் ஏன்? கட்டுரையைப் படிக்கலாம்.

முடிந்த வரை எளிமையாக விளக்கியுள்ளேன்.

Backup Code ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்த முறை நுழைய புதிதாக ஒரு Backup Code உருவாக்க வேண்டும், காரணம் OTP போல Backup Code ம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

எனவே, Authenticator App பயன்படுத்தி ஒருவேளை அதில் பிரச்சனையென்றால் மட்டும் Backup Code பயன்படுத்துவது வசதியானது.

Settings –> Security –> Two-factor authentication சென்று செயல்படுத்திக்கொள்ளலாம்.

இதெல்லாம் ரொம்பக் கடினமா இருக்கே!

இம்முறை பலருக்கும் எளிதானது அல்ல காரணம், குறைந்த பட்ச தொழில்நுட்ப அறிவு இல்லையென்றால் முதலுக்கே மோசம் என்பதாக மாறி, கணக்கையே பயன்படுத்த முடியாதபடியாகி விடும்.

சிறு தவறு கூட, ட்விட்டர் கணக்கை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு சென்று முடக்கி விடும்.

எனவே, இதெல்லாம் ஆவறதுக்கில்ல என்று நினைப்பவர்கள், பாஸ்வோர்டை கடினமாக வைத்துக்கொண்டு அதை வேறு எங்காவது சேமித்துக்கொள்ளுங்கள்.

இது தான் ஒரே வழி. வேறு எதையும் செய்ய முடியாது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!