Iratta (2023 மலையாளம்) | இறுதி அதிர்ச்சி

0
Iratta

ரட்டையர்களாகப் பிறந்து காலச் சூழலில் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்ததில் ஏற்படும் சம்பவங்களே Iratta. Image Credit

Iratta

ப்ரோமோத், வினோத் இருவரும் இரட்டை சகோதரர்கள்.

சிறு வயதில் தந்தையின் மோசமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு அம்மாவிடம் ப்ரோமொத்தும், அப்பாவிடம் வினோத்தும் பிரிகிறார்கள்.

வளர்ந்து இருவருமே காவலர்களாகின்றனர். ப்ரோமோத் அதிகாரியாக உள்ள நிலையில் அவர் கீழ் பணி புரிபவராக வினோத் உள்ளார்.

ஒரு நாள் காவல்நிலையத்தில் விழா நடக்க இருக்கையில் வினோத் மூன்று முறை சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அந்த நேரத்தில் மூன்று காவலர்கள் இருப்பர்.

யார் கொலை செய்தது? என்பதைக் கண்டுபிடிப்பதே Iratta படத்தின் கதை.

Joju George

மலையாளத்தில் இயல்பாக நடிக்கும் நடிகர்களுள் ஒருவர் Joju George. இவருடைய Joseph படம் இவருடைய இயல்பான நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

சகோதரன் இறப்பு ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால், இதன் பின்னணியில் இவரே இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

காரணம், சகோதரர்கள் என்றாலும் இருவருக்கும் ஒத்து வராது.

வினோத் தனது அப்பாவின் செயல்களாலோ அதைப் பார்த்ததாலோ இயல்பாகவே முரட்டுத்தனம் உடையவராகவும், பெண்களிடம் சபலம் உள்ளவராகவும் வருகிறார்.

ப்ரோமோத்தின் குடிப்பழக்கத்தால் அவரது மனைவி, குழந்தையை எடுத்துக்கொண்டு மும்பை சென்று விடுகிறார். அதன் பிறகு எந்தத்தொடர்பும் இல்லை.

மனைவியுடன் திரும்ப இணைய நினைக்கும் நேரத்தில் இப்பிரச்சனை.

குடிப்பழக்கம்

மலையாள படங்களில் குடிப்பழக்கம் இயல்பாகக் காட்டப்படுகிறது. சில நேரங்களில் இவற்றைப் பார்க்கும் போது நாமே டாஸ்மாக்கில் இருப்பது போலவே உள்ளது.

இதையேன் படங்களில் அனைவரும் இவ்வளவு வெளிப்படையாகவும், இயல்பான செயலாகவும் காட்டுகிறார்கள் அல்லது திணிக்கிறார்கள் என்று புரியவில்லை.

குடிக்காதவன் கூடத் தொடர்ந்து பார்க்கும் போது குடிக்கலாம் என்று நினைத்து விடுவான் என்பது போல, தற்போதைய மலையாளப்படங்கள் உள்ளது.

நல்ல படங்களைத் தரும் மலையாள திரையுலகம் குடியைக் குறைத்தால் நல்லது.

அஞ்சலி

இப்படத்தை எடுக்க ஓரிரு கோடிகளே செலவு ஆகி இருக்கும்.

குறைந்த செலவில் அற்புதமாக எடுத்து விடுகிறார்கள். படம் நெடுக பரபரப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.

சிறு கதாபாத்திரத்தில் வரும் அஞ்சலி அவசியமே இல்லையென்றாலும், வினோத் கதாப்பாத்திரத்தை உணர வைக்கவே வருவதாக நினைக்க வேண்டியுள்ளது.

வேறொருவர் இருந்தாலும், எந்த வித்தியாசமும் இருக்காது. அஞ்சலி தெரிந்த முகம், அதோடு பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதே காரணமாக இருக்கலாம்.

விசாரணை

காவலர்களின் கதாப்பாத்திரங்கள், அவர்களின் தனிக்குணங்கள், விசாரணையில் அவர்களுடைய பரிதவிப்புகள் இயல்பாக காட்டப்பட்டுள்ளன.

அவ்வளவு நேரம் அனைவரும் கண்டுபிடிக்க முடியாத நிகழ்வை ப்ரோமோத் இறுதியில் எளிதாக கண்டுபிடிப்பது நெருடலாக உள்ளது.

இதற்கா இவ்வளவு அலப்பறை செய்தார்கள் என்பது போல உள்ளது.

இவர் கண்டுபிடிக்கும் முறையில் மற்றவர்களும் சென்று இருந்தால் கண்டு பிடித்து இருக்கலாம் ஆனால், இவர் மூலமாகச் சென்றால் தான் இறுதியில் கதை சரியாக வரும் என்பதால் இப்படி அமைத்துள்ளார்கள்.

இறுதியில் யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியை இயக்குநர் கொடுத்து விடுகிறார். படம் பார்க்கும் அனைவருமே இப்படியொரு முடிவை எதிர்பார்க்க மாட்டார்கள்.

சஸ்பென்ஸ் படம் என்பதால், காட்சிகளைக் விரிவாகக் கூற முடியவில்லை. கூறினால், பார்க்கும் போது சுவாரசியமாக இருக்காது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை சிறப்பு. சஸ்பென்ஸ் படமென்பதால், பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது.

யார் பார்க்கலாம்?

த்ரில்லர் / சஸ்பென்ஸ் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் பார்க்கலாம். துவக்கத்திலிருந்து இறுதி வரை சலிப்பு இல்லாமல் செல்லும்.

இறுதி அதிர்ச்சியை ஜீரணித்து அதிலிருந்து மீள கொஞ்ச நேரமெடுக்கும்.

பரிந்துரைத்தது விஸ்வநாத், ராம். NETFLIX ல் காணலாம்.

Directed by Rohit M. G. Krishnan
Written by Rohit M. G. Krishnan
Produced by Prassanth Kumar Chandran, Joju George, Martin Prakkat, Sijo Vadakkan
Starring Joju George, Anjali, Arya Salim, Srikant Murali
Cinematography Vijay
Edited by Manu Antony
Music by Jakes Bejoy
Release date 3 February 2023
Country India
Language Malayalam

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here