Below Zero (2021 Spanish) | கடுங்குளிர்

2
Below Zero

று சிறைக் கைதிகளை வேறொரு சிறைக்கு மாற்றும் பணியில் அதிகாரி மார்ட்டின் நியமிக்கப்படுகிறார். ஆறு கைதிகளை வாகனத்தில் கொண்டு செல்லும் போது தாக்குதல் நடைபெறுகிறது. என்ன ஆனது என்பதே Below Zero.

Below Zero

குடும்பம், நேர்மை என்று சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழும் மார்டினுக்குச் சிறைக் கைதிகளை மாற்றும் பொறுப்புப் புதியது. Image Credit

சிறைக் கைதிகள் என்றால் முரட்டுத்தனமாக இருப்பார்கள், இதிலும் அதே போல. ஒவ்வொருவரும் என்ன மாதிரியான பிரச்சனைகளைச் செய்யபோகிறார்களோ என்ற திகில் இருந்து கொண்டே உள்ளது.

வழிநெடுக உறைபனி, ஆள் அரவமில்லா பகுதியில் செல்லும் வாகனம் பாதுகாப்பு நிறைந்தது. உள்ளே இருக்கும் அதிகாரி திறந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.

ஒவ்வொரு கைதிக்கும் ஒவ்வொரு அறையாக ஒதுக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும்.

கடத்தப்படும் வாகனத்தில் இருப்பவர்கள் தப்பிக்க முயல, பாதுகாப்பு அதிகாரி மார்ட்டின் இவர்களிடம் சிக்கிக் கொள்வார்.

ஒரே ஒரு கைதியை மட்டும் வெளியே விடக்கூறி வாகனத்தைக் கடத்துபவர் நிபந்தனை விதிப்பார். இதனாலே பல பிரச்சனைகள், சிக்கல்கள் ஏற்படும்.

கடுங்குளிர்

படம் முழுக்கக் கிட்டத்தட்ட ஒரே இரவில் முடிந்து விடுகிறது. இரவு என்பதாலும், பின்னணி இசையாலும் படம் முழுக்கப் பய உணர்வைத் தருகிறது.

உறைய வைக்கும் குளிர் என்பது படிக்கும் போது தெரிவதில்லை ஆனால், பார்க்கும் போது திகிலாக உள்ளது.

இந்தியா போன்ற வெப்ப நாட்டில் இருந்து கொண்டு இக்குளிரைப்  பார்த்தால், யம்மாடி என்றுள்ளது.

யார் என்ன செய்யப்போகிறார்கள்? அடுத்தது என்ன நடக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், சில காட்சிகளை ஊகிக்கவும் முடிகிறது.

படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக உள்ளது. இரவில் வெள்ளைப் பனியுடன் இடமே பயமுறுத்துவதாக உள்ளது. அதோடு வாகனமும் மிரட்டலாக உள்ளது.

த்ரில்லர் படம் என்பதால், காட்சிகளை அதிகம் கூற முடியவில்லை. செம படம் என்று கூற முடியாது ஆனால், மோசமில்லை.

துவக்கத்தில் கைதிகளைப் பரிசோதனை செய்யும் போது சில நொடிகள் நிர்வாண காட்சிகள் உள்ளது. எனவே, கவனம்.

பார்த்தே ஆக வேண்டிய படமல்ல, நேரமிருந்தால் பார்க்கக்கூடிய படம் Below Zero.

NETFLIX ல் உள்ளது.

Spanish Bajocero
Directed by Lluís Quílez
Produced by Josep Amorós, Pedro Uriol
Written by Fernando Navarro, Lluís Quílez
Starring Javier Gutiérrez, Karra Elejalde
Music by Zacarías M. de la, Riva
Edited by Antonio Frutos
Release date 29 January 2021
Running time 106 minutes
Country Spain
Language Spanish

தொடர்புடைய கட்டுரை

Prison Break [2005 – 06] – Terrific Thriller Series

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, படத்தோட கதை களம் எனக்கு விருப்பமானது..சில நாட்களுக்கு பின்பு தான் பார்க்க வேண்டும். ஆனால் நான் இன்று வரை திரும்ப, திரும்ப வியந்து பார்க்கும் ஆங்கில திரைப்படம் the shawshank redemption படம். என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த படம் பிடித்தது போல் வேறு எந்த படமும் பிடிக்கவில்லை.. நான் பரிந்துரைத்த சில நண்பர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை.. ஆனால் என்னுடைய ஆல் டைம் பெஸ்ட் படம் இதுதான்.. பகிர்வுக்கு நன்றி.

  2. The shawshank redemption படம் பற்றி ஏற்கனவே கூறியுள்ளீர்கள்.

    இப்படம் பற்றி கொசுறு செய்தி.. இப்படம் வெளிவந்த போது பெறிய வெற்றி பெறவில்லை. பின்னர் விமர்சனம், அது குறித்த விவாதங்களுக்குப் பிறகு கவனம் பெற்று அனைவராலும் ரசிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here