எப்போதும் இல்லாத அளவுக்குத் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதையால் தமிழகம் அழிந்து வருகிறது. Image Credit
டாஸ்மாக்
கலைஞர் அவரது ஆட்சியில் ஆரம்பித்து வைத்த குடிப்பழக்கம், அவரது மகன் ஸ்டாலின் ஆட்சியில் உச்சத்துக்குச் சென்று கொண்டு இருக்கிறது.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் உருவாக்கப்பட்டது.
சில்லறை விற்பனை சிண்டிகேட் அமைத்துக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்கப்பட்டதால், அரசுக்கு ஏற்படும் இழப்பால் தனியாரிடமிருந்து பின்னர் ‘ஜெ’ அரசுக்கட்டுப்பாட்டில் வந்தது.
இதன் பிறகு கலைஞர், ஜெ, எடப்பாடி ஆட்சிக்காலத்தில் விமர்சனங்கள் இருந்தாலும், பெரியளவில் கட்டுப்பாட்டை இழக்கவில்லை.
ஆனால், 2021 ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு குடியின் மூலம் வரும் வருமானம் அரசுக்கு முக்கியமான பங்காக மாறும் அளவுக்குக் குடியைப் பிரபலப்படுத்தியது.
இதன் பின்னணியில் திமுகவினரின் மதுபான நிறுவனங்கள் இருந்ததும், அரசியல்வாதிகள் கமிசன் அடிக்க அற்புதமான வழியாகவும் இருந்தது.
போதையால் அழியும் தமிழ்நாடு
குடியின் உச்சம் என்று தற்போது சொல்ல முடியாது காரணம், இதை விட மோசமான சூழ்நிலைகளைத் தமிழகம் எதிர்நோக்கப்போகிறது என்பது கசப்பான உண்மை.
முன்பு குடியால் எங்காவது ஓரிரு சம்பவங்கள் நடைபெறுவதைச் செய்திகளில் காண முடிந்தது ஆனால், தற்போது செய்தித்தாளைப் பார்த்தாலே நடக்கும் சம்பவங்கள் குடியுடன், கஞ்சாவுடன் தொடர்புடையதாக உள்ளது.
போதையில் இரண்டு பேரை, மூன்று பேரை வெட்டிக்கொன்றார் என்ற செய்திகள் மிகச்சாதாரணமாகி விட்டது.
இதைவிடக்கொடுமையாகக் கஞ்சா பெருகி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எளிதில் கலந்து வருகிறது. தற்போது எளிதாக மாணவர்கள் பெறுகிறார்கள்.
செய்திகளில் இயல்பானது
இதைத் தெரிந்து கொள்ளச் செய்திகளைப்படித்தாலே போதுமானது.
செய்திகளை மறைக்கும் திமுக ஆதரவு ஊடகங்களிலும் வருகிறது என்றால், அதன் எண்ணிக்கை, பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியலாம்.
இதைப் பற்றி ஒவ்வொரு சராசரி பொதுஜனத்துக்கும் தெரியும் ஆனால், கடந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை.
சிலரைக் கைது செய்ததாகச் செய்திகளில் கண் துடைப்புக்கு வரும் ஆனால், திரும்ப அதே பகுதியில் அதே கஞ்சா தொடரும். இது தான் தமிழகம்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த திறனே குடியால் வீழ்ந்து வருகிறது.
திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பலர் குடிக்கப் பணம் தேவை என்பதற்காக மட்டுமே பணிக்குச் செல்கிறார்கள். மிகைப்படுத்தப்பட்டதாக உங்களுக்குத் தோன்றலாம் ஆனால், உண்மை.
திமுகவின் டாஸ்மாக் செயல்பாட்டுக்கு முட்டுக்கொடுத்து வருபவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்படும் போதே இதன் ஆபத்தை உணர முடியும்.
அழியும் தலைமுறை
இருப்பதிலேயே ஸ்டாலின் அரசு செய்யும் மோசமான, மன்னிக்கவே முடியாத செயல் என்னவென்றால், இளைய தலைமுறையையே போதைக்கு அடிமையாக்கி வருவது.
அரசுக்கு வருமானத்தைக் கூட்ட ஆயிரம் வழிகள் இருக்க, அனைவரின் வாழ்க்கையையும் சீரழித்துக் கிடைக்கும் வரும் பணம் தேவையா?!
கஞ்சா போதையால் மாணவர்கள் அடித்துக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நடந்த கோவை ராகிங் பிரச்சனையிலும் கஞ்சா தொடர்பு இருந்ததாக செய்திகளில் வந்தது.
குடி என்றால் வாசனையை வைத்தோ, உடல்மொழியை வைத்தோ கண்டறியலாம் ஆனால், கஞ்சா போதையை செயல்களை வைத்தே அறிய முடியும்.
நம்ம பசங்க இதில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பயத்தைக் கொடுக்கிறது.
காரணம், என்ன தான் சரியாக இருந்தாலும் இளம் வயதில், அந்த வயதுக்குண்டான குறுகுறுப்பில் மற்றவர்களைப் பார்த்துக் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
ஒரு முறை தவிர்க்கலாம், இரு முறை தவிர்க்கலாம். தொடர்ந்து கண்களில் பட்டுக்கொண்டே இருக்கும் போது முயன்றால் என்ன என்று தோன்றுவது இயல்பு.
சூழ்நிலைகள்
ஒருவர் கெட்டுப்போவதற்கான முக்கியக்காரணமே சூழ்நிலைகள் தான்.
அதை அரசு மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொடுக்கும் போது, மாணவர்கள் வழி தவற மிகப்பெரிய வாய்ப்பாக அமைகிறது. அடிக்கடி செய்திகளில் பார்க்கும் போது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை என்ன சமாதானம் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போதையில் ஆசிரியர்களையே அடிக்கிறார்கள்.
வயிறு எரிஞ்சு சொல்கிறேன்.. த்தா! பொறுப்பில் உள்ள எவனெல்லாம் போதை பழக்கத்தைத் தடுக்காமல், பணத்துக்காகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்களோ எல்லோரும் நாசமாதான்டா போவீங்க!
தமிழகத்தை நாசமாக்கும் திமுக
ஆண்டு வருமானம் 36,000 கோடியிலிருந்து, 45,000 கோடியாக்கி தற்போது 50,000 கோடிக்கு இலக்கு வைத்துள்ளார்கள்.
பண்டிகை நாட்களில் புதிய பீர்கள் அறிமுகம். அதற்குத் தமிழக ஊடகங்கள் இலவச விளம்பரம்.
பாக்கெட் சாராயம் போல, டெட்ரா பேக் என்ற பெயரில் மது.
கள்ளக்காதலுக்குத் திருமணம் கடந்த உறவு என்று பெயர் வைத்துப் புரட்சி செய்தது போல. குடிகாரர்கள் அல்ல, மது பிரியர்கள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்கள்.
பாருங்க.. எப்படிப்பட்ட கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கிறது.
மது விலக்கு உறுதி என்ற ஸ்டாலின், இளம் விதவைகள் உருவாகிறார்கள் என்று அதிமுக ஆட்சிக்காலத்தில் கூறிய கனிமொழி தற்போது அமைதி.
‘எங்கள் கட்சிக்காரர்கள் தான் மது ஆலைகளை வைத்துள்ளார்கள். எனவே, நாங்கள் எளிதாக மது விலக்கு கொண்டு வந்து விடுவோம்‘
என்று மக்களிடையே கனிமொழி கூறினார். ஆனால், நடப்பது என்ன?
மது விலக்கு சாத்தியமா?
சாத்தியம் இல்லை.
குடிப்பது தவறான பழக்கம் என்றாலும் அதைத் தடை செய்ய முடியாது ஆனால், கடுமையாகக் குறைக்க முடியும்.
மது விலக்கு செய்ய முடியாது ஆனால், இப்படி தெருக்கு ஒரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்து இருப்பதைப் பெரியளவில் நிச்சயம் குறைக்கலாம்.
எங்கு பார்த்தாலும் கடைகள் கண்ணில் படும் போது ஆர்வம் இல்லாதவனுக்குக் கூட ஆர்வம் வந்து குடிக்கச் செல்கிறான்.
அதிகளவிலான கடைகள் குடியை ஊக்கப்படுத்துகிறது.
உடல்நிலை & மனது
கொரோனா காலத்தில் மது பிரியர் ஒருவர்,
‘6 மாதங்கள் குடிக்காமலிருந்தேன் (டாஸ்மாக் மூடப்பட்டதால்). அப்போது உடல்நிலை, மனது நன்றாக இருந்தது‘ என்று கூறினார்.
எனவே, ஒரே நாளில் எல்லோரையும் மாற்றி விட முடியாது ஆனால், கட்டுப்படுத்துவதன் மூலம் நிச்சயம் நல்ல மாற்றத்தை அரசால் கொண்டு வர முடியும்.
எல்லோருமே கடுமையாக போதைக்கு அடிமையாகி உள்ளார்கள். இவர்களை மாற்றுவது எளிதல்ல.
ஸாம்பிகளை போலக் குடிகாரர்கள் மாறி, ஆங்காங்கே குடித்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள், சாலையில் விழுந்து கிடக்கிறார்கள்.
இவற்றை தடுக்க வேண்டிய அரசு, பணம் வந்தால் போதும் பொதுமக்கள் நாசமா போனால் கவலையில்லை என்று புது புது மது வகைகளை அறிமுகப்படுத்துகிறது.
தமிழகத்தின் எதிர்காலம்
போதைக்கலாச்சாரம் என்பது லஞ்சம் ஊழல் போல அல்ல. காரணம், லஞ்சம், ஊழலால் பாதிப்பு என்றால், அடுத்து வரும் அரசு கூடச் சரி செய்ய முடியும்.
ஆனால், போதைப்பழக்கம் பல தலைமுறைகளைப் பாதிக்கும், அழிக்கும்.
தமிழகத்தில் குடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய ஆபத்தைக்கொண்டு வரப்போகிறது.
குடும்பங்களில் ஏராளமான பிரச்சனைகளைக் குடி ஏற்படுத்துகிறது. அதோடு சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்க மிக முக்கியக்காரணியாகி விட்டது.
குடித்து விட்டுப் பொது இடத்தில் ரகளை செய்வது, கொலை செய்வது, பாலியல் துன்புறுத்தல் செய்வது என்று நாளுக்குநாள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பாதுகாப்பற்ற மாநிலமாகி வருகிறது
ஆனால், இவற்றைச் சரி செய்யச் சிறு நடவடிக்கையைக் கூட அரசு எடுக்கவில்லை.
பஞ்சாப் எப்படி போதை பொருட்களால் சீரழிந்து இளைய தலைமுறை பாதிக்கப்பட்டதோ அந்த நிலைக்குத் தமிழகம் சென்று கொண்டுள்ளது.
தலைமுறையே அழிந்து வருகிறது
பணிக்குச் செல்வதில் ஆர்வம் காட்டாமல், குடிக்கு அடிமையாகி வருகிறார்கள். மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.
இவற்றை எதையும் உணராமல், திமுக அரசு பணம் வந்தால் போதும் என்று குடியை ஊக்குவித்து, தமிழகத்தைச் சீரழித்து வருகிறது. இன்னொரு பக்கம் கஞ்சா பரவல்.
இவ்வாறு கட்டுப்பாடின்றி தொடர்ந்தால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் இதன் பின்விளைவுகள் மிக மோசமான பாதிப்பைச் சமூகத்தில் உறுதியாக ஏற்படுத்தும்.
குடிக்கான சிகிச்சைகள், போதையிலிருந்து மீட்க அமைப்புகள், குடும்பம் சிதைவது ஆகியவையே எதிர்கால தமிழகம். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நான் நேசிக்கும் தமிழகம் சீரழிந்து வருவதைக் கண் முன்னே பார்ப்பது நரக வேதனையாக, மன உளைச்சலாக உள்ளது.
எதிர்காலத்தலைமுறை நிச்சயம் திமுகவைக் காறித்துப்பும்.
தொடர்புடைய கட்டுரை
டாஸ்மாக் | குடியால் சீரழிந்து வரும் தமிழகம்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டாஸ்மாஸ்க் ஆண்டு விற்பனை 28,000 கோடிகள் என செய்திகளில் படித்ததாக நினைவில் இருக்கிறது. தற்போது 45,000 கோடிகள் இலக்கு என்பதை பார்க்கும் போது நம் சமுதாயம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் மதுவும், போதை வஸ்துக்களும் எல்லா இடங்களிலும் புற்று நோய் போல பரவி வருகிறது.
குறிப்பாக இளைய சமுதாயம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவை எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.. சில ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலும் ஆண்கள் மட்டும் குடிப்பார்கள்.. இட ஒதுக்கீட்டை சம அளவில் பெண்கள் கேட்பது போல் , தற்போது இந்த விஷியத்தில் போட்டி போட்டு வருகின்றார்..
ஏற்கனவே நமது இளைய சமூகம் நிறைய விஷியங்களில் மற்ற மாநிலத்தை ஒப்பிடுகையில் பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. இது போல மது, போதைக்கு இன்னும் அடிமையாகும் பட்சத்தில் அடுத்த 5 / 10 ஆண்டுகள் மிகவும் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் .
@யாசின்
“தற்போது 45,000 கோடிகள் இலக்கு என்பதை பார்க்கும்”
இதை அடைந்து விட்டாச்சு.. இலக்கு 50,000 கோடிகள்.
“குறிப்பிட்ட சில ஆண்டுகளில் மதுவும், போதை வஸ்துக்களும் எல்லா இடங்களிலும் புற்று நோய் போல பரவி வருகிறது.”
இது ஒரு சாதாரணமான பழக்கம் போல மாற்றி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதை பார்ப்பது வழக்கமான காட்சியாகி விட்டது.
“குறிப்பாக இளைய சமுதாயம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது.”
மிகவும் கவலையளிக்கிறது.
“மது, போதைக்கு இன்னும் அடிமையாகும் பட்சத்தில் அடுத்த 5 / 10 ஆண்டுகள் மிகவும் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் .”
இதில் சந்தேகமில்லை. தற்போது குடித்து உடலைக் கெடுத்து வருபவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டுகளில் மருத்துவ பிரச்சனையால் அவதிப்பட்டு சாவார்கள்.
குடும்பங்கள் சிதையும்.