Black Sheep [U/A] A Tamil Web Series [YouTube]

0
Black Sheep

Black Sheep Web Series” வந்து இரு வருடங்களாகி விட்டது ஆனால், என் கண்ணில் தற்போது தான் பட்டது. எனவே.. பொறுத்தருளும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙂 .

Black Sheep

பொறியியல் படிக்கும் மாணவன் ஷ்யாம், அவனுடைய பெண் தோழி பிரதியுஷா, நண்பன் நிகில், அம்மா அப்பா இவ்வளோ தான் முதன்மை கதாப்பாத்திரங்கள்.

பொறியியல் படிக்கப் பிடிக்காமல் Standup Comedy செய்கிறேன் என்று கிளம்பும் ஷ்யாம். இறுதியில் என்ன ஆகிறான் என்பதை 8 Episodes ல் சுவாரசியமாகக் கூறியுள்ளார்கள்.

முதல் Episode லியே கொஞ்சம் ஏடா கூடமாக ஆரம்பிக்க.. “சரி.. பார்வையாளர்களை ஈர்க்கும் தந்திரம் போல” என்று கடுப்பாகி பின்னர் கதை சுவாரசியத்தில் மூழ்கி விட்டேன்.

ஒரே மூச்சில் அனைத்து Episode களையும் பார்த்து விட்டேன், ஒரு Episode அதிகபட்சம் 25 நிமிடங்கள் மட்டுமே! எனவே, விரைவில் முடிந்தது போல இருந்தது.

ஏன் பார்வைகள் குறைவாக உள்ளது?!

இரு வருடங்களுக்கு முன்பே எப்படி இதை எடுத்தாங்க?! பார்வைகள் குறைவா இருக்கக் காரணம் இந்த series குறித்துப் பலருக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

தற்போது ஜியோ வந்த பிறகு பலரும் YouTube அதிகம் பார்க்குறாங்க, இரண்டு வருடங்கள் முன்பு பல “DATA” கணக்கு போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்ததால், பலரின் கவனத்துக்குப் போகவில்லை என்றே கருதுகிறேன்.

இப்பெல்லாம் மொக்கை காணொளி எல்லாம் மில்லியன் பார்வைகள் பெறுகிறது. இந்த series பார்வைகள் குறைவாக இருந்ததுக்குக் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

வசனங்கள் அதிகம் ஆங்கிலத்தில் உள்ளது காரணமாக இருக்குமோ?!

இரண்டு வருடங்கள் முன்பே இது போல “Web Series” எடுத்தது வியப்பாக உள்ளது! இது மாதிரி எத்தனை series இருக்கோ! யாமறியேன் 🙂 .

90% English Dialogues

தமிழ் Webseries என்றாலும், 90% ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள் (Subtitle உண்டு) ஆனால், புரிந்து கொள்ளக் கடினமாக இல்லை, கடுப்பாகவும் இல்லை. உண்மையாகவே!

மேலே U/A போட்டதுக்குக் காரணம், சில காட்சிகளும் வசனங்களும்.

இக்கால நகர இளசுகளை அப்படியே இதில் கொண்டு வந்துள்ளார்கள். அவர்கள் வசனங்கள், நட்பு, கலாய்த்தல் என்று செம்ம ரகளை.

ஷ்யாம், பிரதியுஷா & நிகில்

ஷ்யாம் செம்மையாக நடித்து இருக்கிறார் உடன் பிரதியுஷா நிகில். மூவரும் கலக்கி இருக்கிறார்கள். எனக்கு இவர்கள் மூவரையும் ரொம்பப் பிடித்து விட்டது.

கில்லி படத்தில் விஜய் அம்மாவாக வருபவர் ஷ்யாம் அம்மா. கல்லூரி முதல்வரிடம் “ஆவடி, அம்பத்தூர்” சொல்வது, மொபைல் நோண்டுவது… ரசிக்க வைத்து உள்ளார்.

பின்னணி இசையும், பாடலும் ரொம்ப நன்றாக இருந்தது. ஒளிப்பதிவு செம்ம.. இயற்கை வெளிச்சத்திலேயே பல காட்சிகள் எடுத்ததாகக் கேள்விப்பட்டேன். எப்படிங்க.. அசத்தல் 🙂 .

இதில் இயல்பான வசனங்கள் என்னை ரொம்பக் கவர்ந்தது. கலாய்ப்பது குறிப்பாக ஷ்யாமை பிரதியுஷா & நிகில் செம்ம 🙂 . மிக ரசித்தேன்.

ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், வயதானது காரணமாக இருக்கலாம் 😀 . இளசுகளுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

YouTube ல் பார்க்க –> Black Sheep Playlist

கொசுறு 1

இக்கதை ஷ்யாமோட உண்மைக் கதை என்று இறுதியில் கூறுகிறார்கள்.

கொசுறு 2

இதை நான் எப்படிப் பார்த்தேன் என்று கூறினால், உங்களுக்குக் கொஞ்சம் “அட!” என்று இருக்கும் 🙂 .

இயக்குநர் வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும். அதிலும் தனுஷ் வெற்றிமாறன் என்றால் மிகுந்த விருப்பம்.

எனவே “வட சென்னை” பற்றி YouTube ல் தேடிய போது, சீனு மோகன் (தளபதி படத்தில், கடன் கொடுத்து அதனால் ஏற்பட்ட பிரச்சனையை ரஜினியிடம் கூறுவாரே) பேட்டி பார்த்தேன்.

இந்த Webseries பற்றிக் கூறி, அனைவரையும் பாராட்டி, ஒளிப்பதிவை ரொம்பப் புகழ்ந்து இருந்தார். இவரும் ஒரு காட்சியில் ATM காவலாளியாக நடித்து இருக்கிறார்.

சரி! அப்படி என்ன இருக்குனு?” பார்த்தேன். சீனு மோகன் சார் பரிந்துரைக்கு நன்றி 🙂 .

கொசுறு 3

உங்களுக்கு இந்த series பிடித்து இருந்தால், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

கொசுறு 4

ஷ்யாம் அப்பாவாக வருபவர் இன்று இல்லையென்றாலும் பின்னர் பலரால் கவனிக்கப்படும் series ஆக இருக்கும் என்று (Behind the scenes) கூறி இருந்தார். நானும் இதை வழிமொழிகிறேன்.

கொசுறு 5

ஏற்கனவே தொலைக்காட்சி (நிகழ்ச்சிகள்) பார்ப்பதில்லை.

இந்த Web Series ஆரம்பித்து வைத்து இருப்பதால், இனி YouTube ல் நிரந்தரமாகக் கடையைப் போட்டு விட வேண்டியது தான் 😀 .

Read : Bodyguard | British TV Crime series | Season 1

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here