சுவாரசியம், எளிமையான எழுத்து நடை, வர்ணனைக்குப் பிரபலமானவர் சேட்டன் பகத். இவருடைய 2 states படித்து இருக்கிறேன், ரொம்பச் சுவாரசியமாக இருக்கும். தற்போது Revolution 2020 – Love. Corruption. Ambition .
ஒரு கல்லூரியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் பேசச் செல்லும் (Motivational Speech) சேட்டன் பகத், முடிந்து அக்கல்லூரியின் உரிமையாளர் கோபால் மிஸ்ராவின் (26) அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு வருகிறார்.
அங்குச் சில பல “ரவுண்டுகள்” முடிந்த பிறகு தன்னுடைய கதை கூற ஆரம்பிக்கிறார் கோபால். அது தான் Revolution 2020.
மூன்று நண்பர்கள்
மூன்று நண்பர்கள், இரண்டு ஆண் ஒரு பெண். முக்கோணக் காதல் கதை. ஒருவன் (கோபால்) பணம் தான் முக்கியம் என்று நினைக்கிறான், மற்றொருவன் (ராகவ்) இந்தியாவை மாற்ற விரும்புகிறான்.
இவர்களுக்கிடையே ஆர்த்தி. என்ன ஆகிறது?
சேட்டன் பகத்திற்குச் சூழ்நிலைகளை வர்ணிப்பது, காதலை, காதலர்களிடையே நிலவும் சம்பவங்களை விவரிப்பது என்றால் பட்டையக் கிளப்புவார்.
இது காதல் கதை அல்ல என்றாலும் காதல் காட்சிகளும் பேச்சுகளும் இன்றைய காதலர்களின் குறுந்தகவல் பரிமாற்றங்கள் பற்றிய சுவாரசியமான காட்சிகளும் வரும்.
கோபாலுக்கு அம்மா இல்லை, தந்தை மிகவும் ஏழ்மையில் இருப்பவர். படிப்பில் சுமார் ஆனால், மோசமல்ல. ராகவ் நல்ல படிப்பாளி பணக்காரப் பையனும் கூட. ஆர்த்தியும் பணக்கார பெண், விமானப் பணிப் பெண் ஆக வேண்டும் என்ற விருப்பம்.
அவரது அப்பா உயர் அரசுப் பதவியில் இருப்பவர்.
கோபால் ஆர்த்தியை விரும்பினாலும், ஆர்த்தி ராகவ்விடம் தான் பிரியமாக இருப்பாள் அதோடு அவனைக் காதலிக்கவும் தொடங்குவாள்.
வாரணாசி
கதை வாரணாசியில் நடப்பதாக வருகிறது.
AIEEE, JEE படிப்பது, அதற்குப் பெற்றோர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், நடக்கும் கொள்ளைகள், மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மன உளைச்சல்கள் போன்றவை சிறப்பாக விவரிக்கப்பட்டு இருக்கின்றன.
பெற்றோரின் கட்டாயத்துக்காகப் படிக்க முடியாத படிப்பைப் படித்து, முடியாமல் தோல்வி அடைந்து அதன் பிறகு திரும்பப் பெற்றோர்களின் திட்டுகளைப் பெற்று என்று இன்றைய தலைமுறை படும் நெருக்கடிகளை உறுத்தாமல் கூறி இருக்கிறார்.
தற்போது மத்திய அரசு கங்கையைச் சுத்தம் செய்ய நிதி ஒதுக்கி இருப்பதைப் பற்றிச் செய்திகளில் படித்து இருப்பீர்கள்.
இந்தத் திட்டத்தில் நடக்கும் ஊழல், இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பது பற்றி விளக்கமாக வருகிறது.
வாரணாசி மக்கள் இந்தப் புத்தகம் படித்தால், நிச்சயம் மத்திய அரசின் திட்டம் பற்றிய நடவடிக்கைகளில் கொஞ்சமாவது இதில் நடைபெற வாய்ப்புள்ள ஊழல்களை யோசிக்க வாய்ப்புண்டு.
இந்நாவலுக்காகச் சேட்டன் பகத் அரசியல்வாதிகளிடம் இருந்து எதுவும் எதிர்ப்பைப் பெற்றாரா! என்று தெரியவில்லை ஆனால், 2011 ம் ஆண்டுப் புத்தகம் வெளியாகி இருக்கிறது.
இப்புத்தகத்திற்காகப் பல இடங்களுக்குச் சென்று, தகவல்களைத் திரட்டி, நிறையப் பேரை பேட்டி எடுத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால், இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வாரணாசி நபர் கூறுவது போலவே விவரிக்கப்பட்டுள்ளது.
வாரணாசி மக்கள் இதைப் படித்தால் உள்ளூர் என்ற அளவில் ஒப்பிட்டுப் பார்த்துக் கூடுதலாக ரசிக்க முடியும்.
கோபால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், பணத்திற்காகச் சிரமப்படுவதும், தன் ஏழ்மைத் தந்தையின் ஆசைக்காகப் படிப்பதும் என்று பலரின் கதையைக் கண்முன்னே கொண்டு வருகிறார்.
கல்லூரியில் சேர கட்டணம் கட்டக் கூடப் பணம் இருக்காது.
Love Vs Passion
ராகவ் எப்போதும் நேர்மை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருப்பவன். ஆர்த்தியை காதலித்தாலும் அவனுக்குப் பத்திரிகைத் துறை மீது அதிக ஈடுபாடு.
எனவே அவனைப் பொருத்தவரை அவனுடைய Passion முதலில் பின் தான் ஆர்த்தி.
ராகவ் தன்னுடைய Passion க்கு ஒதுக்கிய நேரத்தில் ஆர்த்திக்கு நேரம் ஒதுக்க மறுப்பதால், வெறுமையாகும் ஆர்த்தி தன்னைப் பள்ளி வயது முதல் புரிந்து கொண்ட கோபாலுடன் மறுபடியும் இணக்கமாவாள்.
என்ன வேலை இருந்தாலும், நம் துணைக்கு (ஆணோ பெண்ணோ) நேரம் ஒதுக்கவில்லை என்றால் அவர்கள் வெறுமையாக உணர்வார்கள் அதோடு, எங்கு அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதை நோக்கி நகர்வார்கள் என்பதை எதார்த்தமாகக் கொண்டு சென்று இருக்கிறார்.
எங்குமே இடறாமல் அதோடு நம்மை இணைப்பது நன்றாக இருக்கும்.
கதையின் சம்பவங்களை நம்மால் எளிதில் ஊகித்து விட முடிகிறது. இறுதியில் என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியவில்லை ஆனால், அதுவும் கொஞ்ச நேரத்தில் புரிந்து விடுகிறது.
எனவே பெரிய திருப்பம் எதுவும் இல்லாமல் இருப்பது கதைக்குத் தொய்வு.
அதோடு கருப்பு வெள்ளைப் படங்களிலேயே பார்த்துச் சலித்துப் போன முடிவாக இருக்கிறது. இந்தச் சப்பை முடிவை ஏன் தேர்வு செய்தார் என்று புரியவில்லை. ரொம்பச் சுமார்.
நாட்டைத் திருத்துகிறேன் என்று கிளம்பினாலும் நிதர்சனம் உதைக்கும் போது தடுமாறுவதையும் கூறி இருக்கிறார்.
ஒரு வகையில் மாற்றம் கொண்டு வர நினைப்பவர்களின் எண்ணத்தை உற்சாகம் இழக்கச் செய்யும் வகையில் இருந்தாலும், வேறு வகையில் நம்பிக்கையைக் கொண்டு வந்து ஆறுதல் தருகிறார்.
இதில் அரசியல்வாதியாக வரும் சுக்லா, அறிமுகம் இல்லாத கோபாலிடம் நம்பிக்கையாக இருப்பதும், பணத்தை முதலீடு செய்வதும் நம்பவே முடியவில்லை.
தன்னுடைய மகன் என்கிற அளவிற்குக் கூறுகிறார் ஆனால், இதெல்லாம் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.
அரசியல்வாதிகளின் ஊழல்கள், அவர்கள் சிறையில் அனுபவிக்கும் வசதிகளை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் சேட்டன் பகத்.
கோபால் ஆர்த்தி குறுந்தகவல் பரிமாற்றங்கள், பெண்கள் மற்றும் ஆர்த்தி குறித்துக் கோபால் நினைக்கும் எண்ணங்கள் போன்றவை சுவாரசியம் 🙂 . ரொம்ப ரசித்தேன்.
ஆங்கிலத்தில் இருப்பது அனைத்துமே கோபால் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது.
SMS 1
Hey, thanx. Really sweeeeet of u!! 🙂 came her SMS
I read the message fifty times. I finally composed a reply. U r welcome.
She replied after ten minutes Why r u being so nice to me?
I had no answer. I used a women’s trick. When in doubt, send a smiley
I sent three 🙂 🙂 🙂
She messaged : Meet up after work? 7 PM CCD?
Sure, I replied promptly
SMS 2
‘I LOVE YOU’ I typed and kept my thump on the send button.
But I deleted the text. I replaced it with a softer ‘I MISS YOU’, but I erased that as well.
Chat 1
GopalKotaFactory: Hi!
FlyingAarti: Hey!! Guess what!
If girls got to set grammer rules in this world there would be only exclamation marks
Chat 2
FlyingAarti : Did eat dinner?
GopalKotaFactory: Not yet. will do so when i get home
FlyingAarti : Cool!
when girs are hiding somthing, they start speaking like boys and expressions like “cool”
இந்நாவல் அட்டகாசம் என்றெல்லாம் கூற முடியவில்லை. கோபால் சிரமங்கள், கோபால் ஆர்த்தி காதல்கள், குறுந்தகவல் பரிமாற்றங்கள், சில சுவாரசியமான காட்சிகள், பேச்சுகள் ஆகியவற்றிக்காகப் படிக்கலாம்.
எனக்குப் புத்தகம் கொடுத்து உதவிய நண்பர் சூர்யாக்கு நன்றி.
அமேசானில் Revolution 2020 – Love. Corruption. Ambition வாங்க –> Link
அடுத்த நாவல் “சங்கதாரா“. ஆதித்த கரிகாலன் இறப்பின் மர்மம் பற்றிய நாவல். பொன்னியின் செல்வனையே ஒரு வாரத்தில் படித்த எனக்கு ஒரு புத்தகம் படிப்பதெல்லாம் ஜுஜுபி மாதிரி இருக்கு 🙂 .
அலாவுதீன் பூதம் மாதிரி ஆகி வருகிறேன். எவ்வளோ வேலை கொடுத்தாலும் பூதம் செய்து விடுவது போல, எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் படித்து விடுகிறேன்.
கொஞ்சம் மெதுவாத் தான் படிக்கணும் போல, சீக்கிரம் தீர்ந்து விடுகிறது.
இனி என்னுடைய தளத்தில் அவ்வப்போது புத்தக விமர்சனங்களை எதிர்பார்க்கலாம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, காதலின் அனுபவம் என்பது தனித்தன்மை வாய்ந்த ஒன்று.. அதை கடந்து போகாதவர்கள் வெகு சிலரே.. முழுமை அடையாத காதலில் தான் சுவாரசியம் அதிகமோ என்னவோ, இன்றுவரை நெஞ்சில் ஒரு ஓரத்தில் பிழிந்து கொண்டு இருக்கிறது.. இதுவும் சுகமாக தான் இருக்கிறது!!!!
(இனி என்னுடைய தளத்தில் அவ்வப்போது புத்தக விமர்சனங்களை எதிர்பார்க்கலாம்)
கண்டிப்பாக வரவேற்கிறோம் கிரி…
(காதல் செய்யாதவர்கள் அற்புதமான உணர்வை அனுபவிக்காத துரதிர்ஷ்டசாலிகள்.
காதலின் போது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக இருக்கும். எனக்குக் காதல் கை கூடவில்லை என்றாலும், அது எப்படி இருக்கும்? என்ற அனுபவம் கிடைத்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி.)
Correct Bro….
I’m ready for your next post 🙂
வாரணாசி மக்கள் இதைப் படித்தால் உள்ளூர் என்ற அளவில் ஒப்பிட்டுப் பார்த்துக் கூடுதலாக ரசிக்க முடியும்.//
ஆங்கிலம் நாவல்களை படிக்கும் வாரணாசி மக்கள். ஆங்கில நாவல்களை படிப்பவர்கள் உறுதியாக இவரது நாவலை படித்து இருப்பார்கள்.
Hi Giri
One side love is more interesting and happiest feeling ever..நீங்க சொன்னதுல ஒன்னு “நான் நல்லவனா நடித்து வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன் என்று” இது எல்லோருக்கும் வர ஃபீலிங்ஸ் ஆனால், நல்லவனா நடிக்கலைனா அப்ப பண்ணுன தப்ப பற்றி இப்ப ஃபீல் பண்ணி இருப்பீங்க. எதுவுமே கிடைக்காத வரைக்கும் பெருசா தெரியும்.
இந்த மாதிரி நாவல் பற்றிய பதிவு அருமை. இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
பொன்னியின் செல்வன் நாவல எப்படி ஒரு வாரத்துல படிச்சீங்க நீங்க ஹியுமனா இல்ல சிட்டி ரோபோவா! ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.
ஒரு புத்தகம் எவ்ளோதான் தான் நல்லா இருந்தாலும் அது தாய்மொழியில் இருந்தால் மட்டுமே நான் படிப்பேன் .. ஏன்னா எனக்கும் ஆங்கிலம் அரைகுறை
உங்கள் விமர்சனம் அருமை, I will read it in this weekend.
தல,
இந்த revolution book release கு தான் சென்னை ல “நடிகர் சூர்யா” வந்ததா ஞாபகம்…நான் படிச்சது இல்லை கதைய படிச்சா பெரிய interest டும் இல்லை… பொன்னியின் செல்வன் முடிக்கவே எனக்கு இன்னும் சில மாசம் ஆகும், என்னோட மனைவி படிச்சுட்டா பொன்னியின் செல்வன் ஒரு மாசத்துல ..
பொன்னியின் செல்வன் book recommend பண்ணதுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லுறாங்க உங்களுக்கு…இப்ப உடையார் படிக்க ஆரம்பிச்சாச்சு இங்க 🙂
– அருண் கோவிந்தன்
அனைவரின் வருகைக்கும் நன்றி
@யாசின் & அருண் உங்களுக்கும் அனுபவம் இருக்கும் போல இருக்கே 🙂
@குறும்பன் உண்மை தான்.
@Kolangi இனி அடிக்கடி எழுதுவேன்.
@கார்த்தி இது எளிமையான ஆங்கிலம் தான்.
@அருண் உடையார் படிக்கணும். தற்போது கைவசம் நான்கு புத்தகங்கள் உள்ளது. இவற்றை முடித்து விட்டு படிக்கணும்.