தமிழில் அசத்தும் “Quora” தளம்

6
Quora Logo

கூகுளில் தேடினால், நமக்குக் கிடைக்காத தகவல்களே இல்லையென்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால், கூகுள் கொடுக்கும் தகவல்களில் முக்கிய இடம் பிடிக்கும் தளம் Quora.

Quora

இங்கு உறுப்பினராக உள்ளவர்கள், இணையப் பயனாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். நமக்குத் தேவையான பதில் கிடைப்பது மட்டுமன்றி, சுவாரசியமான விவாதங்களையும் காண முடியும்.

ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த தளம் தமிழிலும் வந்த பிறகு இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இத்தளத்தில் நம்முடைய சந்தேகத்தைக் கேள்விகளாகக் கேட்டால், இதில் உள்ளவர்கள் தங்களின் கருத்தை பதிவார்கள். பல சுவாரசியமான கேள்விகளும், அதை விடச் சுவாரசியமான பதில்களையும் காண முடியும்.

எடுத்துக்காட்டுக்கு, “ரயிலில் ஒரு ஈ பறக்கிறது என்றால், ரயில் வேகமாக நகரும் போது “ஈ” அதே இடத்தில் இருக்குமா? அல்லது ஈயை தாண்டி ரயில் சென்று விடுமா?” 🙂 .

இது போலப் பல்வேறு சுவாரசியமான கேள்விகளும், சர்ச்சையான கேள்விகளும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

நான் பின்வரும் கேள்வி கேட்டு இருந்தேன், இதுவரை எவரும் பதில் அளிக்கவில்லை.

“English” ஏன் ஆங்கிலம் என்று அழைக்கப்படுகிறது?

இதில் சிலர் மிக விரிவான தகவல்கள் கொடுப்பார்கள், வியப்பாக இருக்கும்.

உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற மட்டுமல்ல, இணையத்தில் பல இடங்களில் சுற்றி சலிப்படைந்து இருக்கும் சமயத்தில், Quora தளம் சென்றால், உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்காகவும், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.

பல கேள்விகளுக்கான பதில்கள் உங்களை அசரடிக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்த் தளம் செல்ல –> https://ta.quora.com/ Link

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. சூப்பர் அண்ணா..எனக்கு இந்த தளம் பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்தும் இதில் இப்படி ஒரு பொழுதுபோக்கு அம்சம் இருப்பதை இப்போது தன தெரிந்து கொண்டேன்….நான் இது வரை இந்த தளத்தை என் அலுவலக பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தேன்…வேளையில் ஏற்படும் பல சந்தேககஙளுக்கு எனக்கு இதில் தான் பதில் கிடைக்கும்..இது வரை இந்த தளத்தை தமிழில் நான் பயன்படுத்த வில்லை..இனி அலுவலக பயன்பாட்டுக்கு ஆங்கிலத்திலும், சொந்த பயன்பாட்டுக்கு தமிழிலும் பயன்படுத்துகிறேன்

    • Englishஐ சிங்கள மொழியில் இன்க்ரீஸி “engreesi என்று சொல்வார்கள். இது ஓரளவு ஒத்துப்போகிறது என்று நினைக்கிறன். ஆனால் ஆங்கிலம் ஒட்டவே இல்லையே?
      யாராவது பதில் சொன்னால் எங்களுக்கும் தெரிவியுங்கள்.

    • அண்ணே உங்களுடைய Quora id சொன்னால் கொஞ்சம் வசதியா இருக்கும்.

  2. Angles என்னும் சொல்லிலிருந்து உருவானதாம் ஆங்கிலம். விக்கிப்பீடியாவில் காண்க.

    பகிர்வுக்கு நன்றி.

  3. @கார்த்தி https://ta.quora.com/profile/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

    @ராஜஸ்ரீ கண்டிப்பாக சொல்கிறேன்.

    @விஜய் 🙂

    @பசி பரமசிவம் அப்போது “ஷ்” என்ற வார்த்தை தமிழில் இல்லாததால், இது போல மாற்றி இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.

    Angles சமாதானமாகும்படியில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here