பிள்ளைகள் விரும்பும் படிப்பைப் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும் அவர்களது எண்ணங்களைப் பிள்ளைகள் மீது புகுத்தக் கூடாது என்ற ஒரு வரி விஷயத்தை நண்பன் படமாக்கி உள்ளார்கள். Image Credit
தற்போதைய தலைமுறை நடிகர்களில் மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்தது இதுவே முதல் முறை.
நண்பன்
கதாப்பாத்திரத் தேர்வில் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் என்று சரியாகவே உள்ளது. அனைவரும் தங்களது பொறுப்பு உணர்ந்து நடித்து இருகிறார்கள்.
வழக்கமான சேட்டைகளை நிறுத்தி அடக்க ஒடுக்கமாக விஜய் நடித்து இருக்கிறார் அல்லது ஷங்கரால் நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்.
கல்லூரி மாணவர் கதாப்பாத்திரத்திற்கு இன்னும் விஜய் பொருந்தி வருவது வியப்பே!
அனைத்துப் படங்களிலும் தூங்கி எழுந்து வந்தது போலவே இருக்கிறார் முகத்தில் ஒரு புத்துணர்ச்சி இல்லை.
ஷங்கராவது இதில் சரி செய்து இருப்பார் என்று நினைத்தேன் இதிலும் ஏமாற்றமே. முருகதாஸ் இதைச் சரி செய்வார் என்று நம்புகிறேன்.
விஜய்க்கு இணையாக அனைவரையும் கவர்வது சைலன்சராக வரும் சத்யன். மிகச்சரியான தேர்வு இவர் தான். அட்டகாசமாகப் பொருந்தி உள்ளார்.
அதிலும் கடைசியில் உண்மை தெரிந்து சமாளிக்க “நண்பர்களுக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கூறுவது செம 🙂
ஜீவாக்கு கல்லூரி மாணவர் வேடம் எல்லாம் ஹல்வா சாப்பிடுற மாதிரி அதிலும் அவர் தண்ணியைப் போட்டுட்டு செய்யற அலப்பறை இவரது “சிவா மனசுல சக்தி” அளவிற்கு இல்லை என்றாலும் நன்றாகவே இருந்தது.
காலாயிக்கிற ஆளான இவரைச் சீரியஸ் கதாப்பாத்திரமாகப் பார்ப்பது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது இருப்பினும் கிடைத்த கேப்பில் சிரிப்பு வெடியைப் போட்டுக்கொண்டு இருந்தார்.
சத்யராஜ் & ஸ்ரீகாந்த்
சத்யராஜ் மற்றும் ஸ்ரீகாந்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல வாய்ப்பு.
இலியானாவை ஹன்சிகாகிட்ட அனுப்பி அவங்க என்ன சாப்பிடுறாங்க என்று கேட்டு அதன் படி நடந்துக்கக் கூறலாம் அநியாயத்துக்கு… ம்ம்ம் என்ன சொல்றது போங்க.
சரக்கைப் போட்டுட்டு விஜய கலாயிக்கும் இடம் கலக்கல்.
இறுதியில் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது விஜயிடம் அவருடைய பெயரைக் கூறி சண்டை போட்டுக்கொண்டு இருப்பது ரசிக்கும் படி இருக்கும்.
அதிக நேரம் தேர்வு எழுதி அதில் இருந்து தப்பிக்கும் இடம், ஜீவா அம்மா சப்பாத்தி சுடும் இடம், இலியான அக்கா குழந்தை பெறும் தருணம், கரண்ட் ஷாக் கொடுக்கும் இடம், சத்யன் மேடைப்பேச்சு என்று ரசிக்கப் பல காட்சிகள்.
விஜய் – SJ சூர்யா சஸ்பென்ஸ் நம்பக்கூடியதாக இல்லை.
அதே போல அனைவரும் திருமணம் ஆகி இருக்க, விஜய் பற்றிய நிலை என்னவென்றே தெரியாமல் இலியான திருமணம் ஆகாமல் அவ்வளவு வருடம் இருப்பது நம்புகிற மாதிரி இல்லை.
பேன்ட்டை அடிக்கடி அனைவரும் கழட்டி பின்புறத்தைக் காட்டுவது எரிச்சலையே தந்தது, நல்லவேளை பேன்ட்டோட நிறுத்தினார்கள்.
வெளிநாட்டுப்பாடல் இல்லாமல் அனைத்தும் இங்கேயே எடுக்கப்பட்டு இருப்பது ஷங்கர் படத்தில் மிக மிக வியப்பு.
பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி விட்டதால் படத்திலும் பார்க்க நன்றாக இருந்தது.
ஷங்கர் அவரோட படத்தையே மறு உருவாக்கம் செய்து கொண்டு இருந்தார், தற்போது இந்தி படத்தை ரீமேக் செய்து உள்ளார்.
3 இடியட்ஸ்
3 இடியட்ஸ் படத்தை எந்த வித சேதமும் இல்லாமல் கொடுத்ததற்கு நிச்சயம் அவரைப் பாராட்ட வேண்டும் 🙂 .
இதைப் பார்க்காமல் நண்பன் பார்க்கிறவர்களுக்கு நிச்சயம் பக்காவான படம், பார்த்தவர்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கும்.
“ஜெ” ஆட்சியில் கேளிக்கை வரிவிலக்கு பெற்ற முதல் படம்.
3 இடியட்ஸ் படம் திரைவிமர்சனத்தில் எழுதி இருந்த ஒரு கருத்தை இங்கே திரும்பக் கூற விரும்புகிறேன்
“குழந்தைகளின் விருப்பங்களுக்குத் தடையாகப் பெற்றோர்கள் இருக்கக் கூடாது, மாணவர்களை இயந்திரம்போல நடத்தக் கூடாது என்பது நல்ல விசயமாக இருந்தாலும், இது அனைத்து குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பொருந்துமா!?
இந்தியாவில் சிலர் பெற்றோரின் வழிகாட்டுதலாலே நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள், ஒரு சிலர் தன் விருப்பமாகச் செய்வதாக நினைத்து ஒன்றும் இல்லாமல் போய் இருக்கிறார்கள்.
ஏதாகினும் படம் கூறும் செய்தி ரொம்ப அருமை”
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நண்பன் இன்று இரவு பார்க்கலாமென்று இருக்கிறேன்; வேட்டை எனக்கு பிடித்திருக்கிறது; லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் தொடக்கி முடியும் வரை அலுப்படிக்கவில்லை; பொழுதுபோக்கிற்கு சிறந்த படம்!!!!!
பிடித்த துறையை தேர்ந்தெடுக்கும் கான்செப்டில் எனக்கு நிறைய கன்பியூஸ்; அதை ஒரு பதிவாக எழுதலாமென்று இருக்கிறேன் :p !!!!
// அனைத்துப் படங்களிலும் தூங்கி எழுந்து வந்தது போலவே இருக்கிறார் முகத்தில் ஒரு புத்துணர்ச்சி இல்லை// – இது நூற்றுக்கு நூறு உண்மை. பல தடவை விஜய் படங்களையோ அல்லது அவரது பேட்டிகளையோ பார்க்கும்போது நான் நினைத்ததுண்டு.
நண்பன் – A perfect remake
——————————————————-
near to the heading there should be ” (90 percent)”
size zero of ileana sucks. in some scenes amirkhan acting is better than vijays acting.
I saw nanban on 12-01-2012 and downloaded three idiots and saw the same on 16-01-2012. I like three idiots only. nanban is just 90 percent of 3 idiots. But, all is well with nanban and movie was very good time pass movie
rajesh.v
கிரி, ஒரு விஷயம் – 3 இடியட்ஸ் படத்திலேயே கேட்டு இருக்க வேண்டியது. இன்றைய பாட திட்டம், மற்றும் தேர்வு முறையை கேள்வி கேட்கும் இந்த படம், கடைசியில், அதை கேள்விக்குள்ளாக்கும் கதாநாயகன் தான் அதே திட்டத்தில் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைவது போல காட்டுகிறார்கள். அப்படியானால் அதில் பெரும் வெற்றி தான் சிறந்தது என்பது போல் அல்லவா படுகிறது? வாழ்க்கையில் வெற்றி பெற படிப்பில் மதிப்பெண் ஒன்றே தான் வழி என்பதை விட வேறு வழிகள் உள்ளது என்பதை இந்த படம் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன்.
நம்மிடையே எம் ஜி ஆர், காமராஜர், சிவாஜி, ரஜினி, கமல் என்று படிக்காமலே சாதித்தவர்கள் பட்டியல் நிறைய உள்ளது. ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர் இந்தி பதிப்பை அப்படியே எடுக்காமல், இந்த லைனில் சிந்தித்து கொஞ்சம் திரைகதையை மாற்றி எடுத்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
“இந்தப்படத்தில் கூறியுள்ளது போல குழந்தைகளின் விருப்பங்களுக்கு தடையாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது, மாணவர்களை இயந்திரம் போல நடத்தக்கூடாது என்பது நல்ல விசயமாக இருந்தாலும் இது அனைத்து குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பொருந்துமா! என்று தெரியவில்லை குறிப்பாக இந்தியாவில். ஒரு சிலர் பெற்றோரின் வழிகாட்டுதலாலே நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள், ஒரு சிலர் தன் விருப்பமாக செய்வதாக நினைத்து ஒன்றுமில்லாமல் போய் இருக்கிறார்கள். ஏதாகினும் படம் கூறும் செய்தி ரொம்ப அருமை”
———————————————————————————————————-
Giri,
Like srikanth’s intererest was in wild life photography (in film), my interest is also on something else which i wont reveal. I was not interested in BE or MBBS and took “……………” as my interest. Let us see what happens? IF i succeed i will share that with you.
Rajesh.v
கிரி
Downloaded it will see it today. I have seen 3Idiots and I have the DVD with me let us see
as to how it is in Tamil…
Kamesh
@ஜீவதர்ஷன் நான் வேட்டை இந்த வாரம் போறேன் 🙂 பிடித்த துறையை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருக்கலாம் ஆனால் தேர்ந்தெடுத்த பிறகு வரக்கூடாது
@ராஜன் சார் ஆமாம் சார் இயல்பா இருக்கேன் என்று நம்மை டென்ஷன் ஆக்கிட்டு இருக்காரு.
@ராஜேஷ் Size zero ல வந்து நம்மை தலை சுத்த வைக்கறாங்க அப்புறம் எனக்கு அமீர் நடிப்பு தான் பிடித்தது. இதுல இவர் ரொம்ப அமைதியா இருக்கிற மாதிரி காட்டுறாரு கொஞ்சம் செயற்கையா தான் இருந்தது.
@பாமரன் நீங்க சொல்வது ஒருவகையில் சரியான ஒன்று தான் ஆனால் இதுல விஜய் அவருக்கு பிடித்த பாடம் தான் படிக்கிறாரு அதனால் இயல்பாவே அவருக்கு எளிமையாக இருந்து இருக்கலாம். நீங்கள் சொல்வது படி வைத்தால் ரொம்ப ஓவராக இருக்கும் என்று நினைத்து இருக்கலாம்.. அதாவது சினிமாத்தனம் வந்து விடும் என்று நினைத்து இருக்கலாம். உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
அப்புறம் நான் இதை சரியா விளக்கவில்லை என்று நினைக்கிறேன்.. எனக்கே தெரியுது 🙂
படிக்காமலே சாதித்தவர்கள் இருக்கிறார்கள் அது அனைவருக்கும் பொருந்தாது என்று நினைக்கிறேன்.. அவர்கள் எல்லாம் எக்சப்சன்.
ஷங்கர் இதை மாற்றி எடுத்து இருக்க முடியும் ஆனால் எல்லோரும் என்ன கூறுவார்கள்? ஒரு நல்ல படத்தை கெடுத்து விட்டார் என்று தான் கூறுவார்கள். அவர் இந்தப்படத்தை பொறுத்த வரை என்ன செய்தாலும் தவறாகத் தான் புரிந்து கொள்ளப்படும்.
@ராஜேஷ் உங்க விருப்பம் வெற்றி பெற என்னுடைய இனிய வாழ்த்துகள் 🙂
@தனபாலன் நன்றி
@காமேஷ் தல நீங்க தளபதி படம் பார்க்க போறீங்க என்பதே எனக்கு பெரிய ஷாக் நியூஸ் 🙂 லைட்டா கிறு கிறுன்னு இருக்கு
கிரி,
i told nanban was 90 percent of 3 idiots. But, i didnt mention the reasons. The following are the
mistakes i find in nanban.
1. In 3 idiots, in engineering class scene, amirkhan tells that he formed the two words using the name of his two friends. For that madhavan laughs and other guy didnt enjoy this due to his fear nature. But, in nanban jeeva expression is opposite to the character he played.
2. In 3 idiots, virus pulls amirkhan to the class room to takes lesson. That time his pulling of amirkhan seems to be natural. But, in nanban sathyaraj pulling is very artificial.
3. In 3 idiots, in one scene other guy drive the scooty and amirkhan will be in the middle. But, in nanban whereever the three goes vijay is in front. Shankar has kept the star status of vijay in mind while making the scenes. I feel its not a good thing for a great director like him.
4. In 3 idiots, madhavans father tells amirkhan that if he comes next time he should come for lunch. For that amirkhan face expression is good. But, for the same scene vijays expression was just like that.
5. Shankar unnecessarily included one duet song in the second half. Eyes are irritated to see fleshless ileana.
6. The charm and bubliness in amirkhan misses in vijay. Shankar should have extracted more acting from vijay.
I saw three idiots only once and deleted it from my system. I felt only sathyan character and srikanth character were perfect (i think sathyan role better than hindi version)
RAJESH .V
கிரி நண்பன் பார்த்து விட்டேன் எனக்கு பிடித்திருக்கிறது விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன் வேட்டை இனி மேல் தான் செல்ல வேண்டும்
நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்
அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது.
கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்!
முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா!
கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா?
புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே!
தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம். இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது? முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!
காட்டு காட்டுன்னு காட்டுவியே, இதுல ஒரு தடவை கூட பஞ்ச் டயலாக்கை நீ காட்டவே இல்லியே. நீ ஏன் தலைவா, இப்படி ஒரு படத்தை ஒத்துகிட்ட?
சீனுக்கு சீன், கேமரா ஆங்கிள் கூட துளிக்கூட மாத்தாம எடுக்க ஷங்கர் எதுக்கு தலைவா? டெய்லி 200 ரூவா பேட்டா வாங்குற அசோசியேட்டு டைரக்டர் கூட இதை எடுக்கலாமே!? இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ எதுக்கு தலைவா ஒத்துக்கிட்ட?
வழக்கமா ரோலிங் ஷட்டரை பொளந்துக் கிட்டு வர நீ,சைலண்டா ஒரு கோல்ஃப் விளையாடுரவன் பையை முதுகிலே சொமந்து கிட்டு வர! அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.
தலைவா, அது மட்டும் இல்லாம, உன்னை ராகிங் பண்ணறதுக்காக, உன் ஜீன்ஸ்குள்ளேயே ஒருத்தன் தண்ணியை ஊத்துறான். ஏர்லே டைவ் அடிச்சு அவன் குரல் வளையைக் கடிச்சுத் துப்பாம, ரூமுக்குள்ள போய், கரண்டு ஷாக் குடுக்குற! உன் கண் பார்வையிலேயே ஆயிரம் மெகா வாட் ரெடி பண்ணி க்ரிட்ல குடுக்கலாம். அதை விட்டுட்டு நீ என்னடான்னா குண்டு பல்பைப் புடுங்கி எதிரிக்கு ஷாக் குடுக்குறே. எதிரிக்கு மட்டுமா, எங்க எல்லாத்துக்கும் தான்! அந்த சீனிலேயும் தியேட்டரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்குது. ஆனா உன் உண்மை ரசிகன் வயிரு எரியுது. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
ஹிந்தியில சூப்பர் ஹிட்டுன்னு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் எடுத்தவங்க எல்லாம் பேசிக்கிறாங்க. அமிர்கான் அதுல இன்னும் சூப்பரா நடிச்சுருப்பாருன்னும் பேசிக்கிறாங்க. அதெல்லாம் 30 ரூவா டிக்கட் எடுத்து வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல பாக்குற எனக்குத் தெரியாது தலைவா.
நீ ’நடிக்கற’துனால எவ்வளவு பிரச்னை பாத்தியா? பேரே தெரியாத இன்னொருத்தனைப் பாத்து உன்னை கம்பேர் பண்றாங்க. என்னைக்காச்சும் பேரரசு இப்படி ஒரு கெட்ட பேரை உனக்கு உண்டு பண்ணிருப்பாரா. யோசி தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
விண்வெளியில பென்சிலிலா எழுதலாமே, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பேனா கண்டுபுடிக்கணும்னு நீ கேட்கும் போது, தியேட்டரே கைதட்டுது. ஆனா பக்கத்து சீட்டுக்காரனுங்க, ’இந்தப் படத்தை டப்பிங் பண்ணி உட்டுருக்கலாமே.. எதுக்கு இம்புட்டு செலவு பண்ணி ரீமேக் பண்ணிருக்கானுங்க’ன்னு கேட்குறாங்க. விவ(கா)ரமான பயலுங்க போல! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
ஸ்க்ரின்ல வந்து போற எல்லா பயமக்களுக்கும் நல்லது பண்றியே.உன்னையே நம்பி இருக்குற, என்னைய மாதிரியான ‘சுறா’ ரசிகன் நிலைமையை நினைச்சுப் பாத்தியா? ஹிந்தியில கரினா கபூர் ஜீரொ சைஸ்ல இருந்தாங்கங்குறனால, பத்து நாள் டயரியால அடிபட்ட மாதிரி இருக்குற இலியானவை புடிச்சு போட்டிருக்காங்க. ஹன்சிகா மாதிரி பல்கியான ஃபிகரோட உன்னைப் பாத்துபுட்டு, இந்த மாதிரி பாக்க வயித்தெறிச்சலா இருக்கு தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
அம்பது பேரு உன்னைச் சுத்தி நின்னாலும் கரண்டு கம்பத்தைப் புடுங்கி அம்பது செகண்டுலே எல்லாரையும் சாய்ச்சுப் புடுவியே தலைவா, இதுல வரவன் போறவன்கிட்ட எல்லாம் அறை வாங்குறியே தலைவா. இந்த கண்ராவிய பார்க்கவா நான் காசு குடுத்து உன்னைப் பார்க்க வந்தேன். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
நீ ஸ்பெல்லிங்க மாத்தி சத்யன் அதை ஸ்டேஜ்ஜிலே படிச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குறாங்க. அந்த மொக்கையைப் பாக்க சகிக்காம சீட்டுக்கு கீழே படுத்துகிட்டு நான் அழுதேன் தலைவா. நான் என்னவோ வயிரு குலுங்கி சிரிக்கிறதா எல்லா பயலும் நினைச்சுக்கிட்டு குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க தலைவா. உன் உயிர் ரசிகனுக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
இண்டர்வெல் ப்ளாக்ல , பஞ்சவன் பாரி வேந்தன் (உன் பேருதான் தலைவா) ஃபோட்டோ பக்கத்துல சூர்யா போட்டோவைப் பாத்து பதறிப் போய் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நீ காணம போய்ட்டியோன்னு திகைச்சுப் போய் நிக்குறாங்க. அதைப் பாத்துபுட்டு இண்டர்வெல்லுக்கு அப்புறம் நீ வரமாட்டியோன்னு நினைச்சு உன் ரசிகர்கள் பாதிப் பேரு தியேட்டரை விட்டு வெளியே போய்ட்டாங்க தலைவா. இந்த மாதிரி அப்பாவி ரசிகன் வாயில மண்ணை அள்ளிப் போட்டியே. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
பொதுவா கனவு சீன் ஃபாரின் பாட்டுலே எல்லாம் தனியா நீ மட்டும் போய் மலை பக்கம் ஆடிக்கிட்டு இருப்பியே தலைவா. இதுலே கும்பல் கும்பலா வந்து உன் ஆட்டத்த காலி பண்ணி புட்டாய்ங்களே தலைவா. உன் குத்தாட்டத்த பாத்து ரசிகனானவன் வாயிலேயே குத்தி பழிவாங்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
நீ ஸ்கிரின்ல வந்த உடனே கை தட்டின உன் உயிர் ரசிகன் நாலு பேர்ல நானும் ஒருத்தன். இது உன் படம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா, டிக்கட்டு காசுல மானங்கெட்ட மானிட்டர ஒரு குவார்ட்டர் குடிச்சுப்புட்டு, குப்புறப் படுத்து தூங்கிருப்பேனே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
க்ளைமாக்ஸ்ல நீ குறுந்தாடி வச்சுகிட்டு வரப்பவே நீ தான் அந்த கொசகசா பஸபுகழ் விஞ்ஞானின்னு தியேட்டரில டயர்டாயி தூங்குற குழந்தைப்புள்ள கூட சொல்லிப்புடும். (இந்த விஞ்ஞானி பேரை சரியா சொல்றவனுக்கு ஏதாவது பரிசு குடு தலைவா!) சரி..படம் ஃபுல்லா அரை வாங்கியிருக்கியேங்கிற கடுப்புல உட்காந்த உன் ரசிகனை , க்ளைமாக்ஸ்லயும் மிதி வாங்கி சின்னா பின்னமாக்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
நீ விஞ்ஞானியா நடிக்குற துணிச்சல் உனக்கு இருக்கலாம் தலைவா. ஆனா 30 ரூவா குடுத்து முன்னாடி சீட்ல உட்காந்து பாக்குற என்ன மாதிரி ரசிகர்களுக்கு அந்த தைரியம் எல்லாம் இல்லை தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
எல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை! நான் வீட்டுக்கு வந்து பேண்ட் கழட்டும் போது படம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. இது உண்மையிலேயே டைரக்டருக்கு வெற்றிதான் தலைவா. ஆனா உன் படத்துக்குப் போயிட்டு வந்தா மந்திரிச்சு உட்டா மாதிரி படம் முழுக்க வரும் உன் மூஞ்சி தானே தலைவா நாலு நாளைக்கு நியாபகத்து வந்து பயமுறுத்திட்டே இருக்கணும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
குருவி படத்த பாத்து சட்டைய கிழிச்சுட்டு ஓடின பயமக்கள் எல்லா கைதட்டி படத்த ரசிக்குதுங்க. குருவி படத்தையும் ஹிட்டாக்கின என்ன மாதிரி ரசிகர்கள் மூட் அவுட்டு ஆய்டுவாங்கன்னு புரிஞ்சிக்க தவறிட்டியே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
இதே ரேஞ்சிலே இன்னொரு படம் நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘தல’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘ஆல் ஈஸ் வெல்’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!
Katta thura…very nice..
Mr. kattadura
:O
Hi Giri,
Happy new year..
I was expecting different review from you for nanban..
Some time back , in ur blog i have read the blog saying remake is not a good take and it will defn not be healthy to tamil cinema.
So now after seeing this movie, what is ur call on this …
If you say , remake of nanban is good and healthy..
why not Deiva thirumagal and other movies.. [I am not talking about those who copied and claiming as its their own thoughts.]
And You have commented on including hair style have copied in that movie.. ..Hope u very well know how much close copy of 3 idiots is Nanban..
What is wrong in , when the director inspired the concept of movie and wanted to retake the same in tamil[just like nanban] believing Not 100% ppl would have watched the original version and make them enjoy and experience the same.
Different ppl can have diff opinions But single person can’t have diff opinion on single thought.
So i want you to clarify me , which one of your view is correct .. Either remaking good movie is good or remake should never happen to save tamil cinema..
As i have seen your healthy discussion with readers , Hope and wish you will take it in a good sense and reply to me…
Thanks.
@ராஜேஷ் விஜய் நடிப்பில் அமீரை மிஞ்ச முடியலை. சத்யன் டாப்!
@சரவணன் ஓகே 🙂
@கட்டதுர இது கட்டுரை.காம் ல வந்தது தானே! எனக்கு இது விஜய் ரசிகர் எழுதியது போல தெரியல.. நிச்சயம் தல ரசிகரா இருக்கணும் இல்ல விஜய பிடிக்காதாவரா இருக்கணும் 🙂
@சுரேஷ் கார்த்திக்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
நீங்க தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்! இந்தப்பதிவை கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்னுடைய பதிவை நீண்ட நாட்களுக்கு முன்னர் படித்ததால் உங்களுக்கு நான் கூறியது என்ன என்று குழப்பம் ஆகி விட்டது என்று நினைக்கிறேன். எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் தற்போது இல்லை. எப்போதுமே அப்போது ஒன்று கூறி தற்போது வேறு ஒன்றை நிச்சயம் மாற்றிக் கூற மாட்டேன்… என்னை நீங்கள் நம்பலாம் 🙂
நான் கூறியதில் பின்வரும் இருவரிகள் போதும் என்று நினைக்கிறேன் என்னுடைய நிலையை விளக்க.
“படங்களை உரிமைப் பெற்று ரீமேக் செய்கிறார்கள் என்றால் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை”
“திருட்டுப் படங்களை ஆதரிக்கும் நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது இதைப்போல எடுக்கும் இயக்குனர்களின் செயல்களை நியாயப்படுத்த முயலாதீர்கள்”
நண்பன் திருட்டுப்படம் கிடையாது. முறையாக பணம் கொடுத்து அனுமதி பெற்று அதை ரீமேக் செய்து இருக்கிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை.
நான் கூறியது ஆங்கில மற்றும் மற்ற மொழிப் படங்களை சுட்டுப் படம் எடுத்து அதை தன் படம் போல தான் மூளையை கசக்கி உருவாக்கியது போல பில்டப் கொடுக்கும் திருட்டு இயக்குனர்களை மட்டும் திட்டி இருந்தேன். ஷங்கர் பேட்டியில் இந்தப்படம் வெற்றி பெற்றால் அதன் முழுப்பெருமையும் 3 இடியட்ஸ் இயக்கிய இயக்குனரையே சாரும் என்று கூறி இருந்ததை நினைவு படுத்துகிறேன்.
அனுமதி பெற்று ரீமேக் செய்யும் படங்களை நான் என்றுமே எதிர்த்ததில்லை. ரஜினியின் பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டதே… நானே ரஜினி ரசிகன் அப்புறம் எப்படி கூறுவேன் 🙂
உங்களுக்கு தெளிவாக கூறி இருக்கிறேன் என்று நம்புகிறேன் 🙂 உங்களோட கிரெடிட் க்கு ரொம்ப நன்றி.
தல படம் எனக்கு அவ்வளவு பிடிகல
3 idoits பாத்துட்டு அடுத்த நாள் பாத்தேன் அது தான் பிரெச்சனை
வேட்டை படம் பரவா இல்லை இந்த படத்துக்கு
– அருண்
எனக்கு முதல் இருபது நிமிடங்கள் வெறுப்பையே தந்தது , ஏனெனில் 3idiots நினைவில் இருந்தது ….. அதற்கு பின் என்னை அறியாமல் “நண்பன்” படத்தை மட்டுமே பார்த்தேன் , 3idiots நினைவில் வரவே இல்லை .
விமல்.
Giri,
I Just watched only 15mts of the movie… 3 Idiots remake illa ithu.. kandippa remake illa. appadiye
Xerox copy..
Shankar padathula … nadikkanumnu vijay’ku aasai.. aanaa athukooda remake padam thaan..
Oru thrupthi enakku.
Kamesh
@அருண் 🙂
@விமல் ரைட்டு 🙂
@காமேஷ் ஹி ஹி ஹி