வேட்டை (2012) – A complete entertainer

11
வேட்டை

ல கதாநாயர்கள் இணைந்து தற்போது நடிக்க ஆரம்பித்து இருப்பது ஆரோக்கியமான சூழலாக உள்ளது. Image Credit

சமீபமாக பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இருப்பது சந்தேகமில்லாமல் ஆர்யா தான். ஒருவேளை ஆர்யா தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறாரோ என்னவோ! 🙂 .

வேட்டை

மாதவன் ஆர்யா அண்ணன் தம்பி இதில் மாதவன் பயந்தவர், ஆர்யா தைரியமானவர்.

காவல்துறையில் இருக்கும் தந்தை இறந்ததால் மாதவனுக்கு காவல் துறையில் வேலை கிடைக்கிறது.

அதை ஆர்யாவை வைத்து எப்படி சமாளிக்கிறார் கடைசியில் என்ன ஆகிறது என்பதே வேட்டை.

மாதவன்

வேட்டை படத்தைப் பற்றிக் கூறியவர்கள் அனைவருமே ஆர்யாவை தான் பெரும்பாலும் புகழ்ந்து இருந்தார்கள் என்னைப் பொறுத்தவரை மாதவனுக்குத் தான் நடிக்க வாய்ப்பு.

பயந்தாங்கொள்ளியான மாதவன் முதன் முறையாக காவல் துறை உடை அணிந்து வெளியில் வர அவரைப்பார்த்து தெருவில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தவர்கள் பயந்து நான் இல்லை நீ இல்லை என்று அவரிடம் பயப்படும் போது அதைப் பார்த்து மாதவன் கொடுக்கும் முகபாவனைகள் அருமை 🙂 .

இது மட்டுமல்ல படம் முழுவதும் தூள் கிளப்புகிறார்.

ஆர்யா

ஆர்யா வழக்கமான கதாநாயகன் வேடம் புதிதாக ஏதுமில்லை.

ஆர்யாக்கு நடனம் சண்டை இரண்டுமே சுமார் தான் இருப்பினும் அதை எல்லாம் நம்மை ஒதுக்கிவைத்துப் பார்க்கும் படி நம்மை துறு துறு நடிப்பால் கவர்கிறார்.

அவருக்கு நகைச்சுவையும் நன்கு வருகிறது. இவர்கள் இவருடைய அண்ணன் தம்பி பாசத்தை பார்க்கும் போது அடடா! நமக்கு இப்படி ஒரு அண்ணனோ தம்பியோ இல்லையே என்று ஏங்க வைத்து விட்டார்கள்.

இவர்களுக்கு ஜோடியாக இவர்களைப் போலவே அக்கா தங்கச்சியாக சமீரா மற்றும் அமலா பால்.

வாரணம் ஆயிரம் படத்தில் அட்டகாசமான ஃபிகராக வரும் சமீரா இதில் ஆம்பிளை மாதிரி இருக்கிறார். வெறுத்தே போயிட்டேன்.

உடம்பை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகமாக உடற்பயிற்சி செய்து பெண்களுக்கே உண்டான நளினம், உடல் இல்லாமல் முரட்டுத் தனமாக இருக்கிறார்.

அதுவும் பாவாடை தாவணியில் சகிக்க முடியலை.

அதிலும் “தைய தக்கா” பாடலில் வயலில் தைய தக்கா என்று குதிக்கும் போது ஐயையோ… எப்படி இருந்த சமீரா இப்படி ஆனதை நினைத்துக் குமுறிக் குமுறி அழனும் போல இருக்கே!

அமலா பால் ஓகே. ஆர்யா அமலா பால் ஜோடி படம் முழுவதும் உதட்டோடு முத்தம், நெருக்கம் என்று இளசுகளை சூடேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தம்பி ராமையா

மாதவனுக்கு கீழ் அதிகாரியாக வரும் தம்பி ராமையா அபூர்வ சகோதரர்கள் படத்தில் “சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்று கூறுவது போல ஸ்டைலில் இதில் கூறுவது செம ரகளை.

மாதவன் தனியாக சண்டைக்குச் செல்வதாகக் கூற “சார் சோலோவா!” என்று கூறுவதற்கு திரையரங்கில் சிரிப்பலை.

மாதவனுக்கு பதிலாக ஆர்யா சண்டை போடுவது எல்லாம் காதில் பூ சுற்றும் சமாச்சாரம் என்றால் ஒரு ரயிலில் சரக்கை மாற்றுவது பூக்கூடை சமாச்சாரம் 🙂 .

இவற்றை எல்லாம் மறக்கடிக்க இயக்குனர் லிங்குசாமியின் வேகமான திரைக்கதை பெரிதும் உதவியிருக்கிறது.

படம் போவதே தெரியவில்லை துவக்கத்திலிருந்து இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது.

படம் நெடுக காமெடி. இதில் வில்லன்களும் காமெடியாகிப் போனது தான் சோகம்.

வில்லன்கள் நம்மைப் பயமுறுத்துவதற்குப் பதிலாக நமக்கெல்லாம் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

மாதவன் ஆர்யா படம் முழுவதும் வருகிறார்கள் இதனால் யார் முதல் என்று பிரச்சனையே இதில் இல்லை. இருவருக்கும் சமமான அளவிலே காட்சிகள்.

ஸ்மார்ட்டாக இருந்த மாதவன் தற்போது அரிசி மூட்டை மாதிரி ஆனது தான் வருத்தமாக இருக்கிறது.

யுவன்

பாடல்கள் நன்றாக உள்ளது இருப்பினும் பழைய (பையா) யுவன் இல்லை.

படம் முழுவதும் லிங்குசாமியின் பழைய படங்களின் காட்சிகள் நினைவிற்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

லாஜிக் எல்லாம் ஏறக்கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் பக்காவான பொழுது போக்கு படம்.

படம் போவதே தெரியவில்லை.. சும்மா சுர்ருன்னு பறக்குது அதோட படம் முழுவதும் அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள் 🙂 .

வேட்டைப் படம் பொங்கல் போட்டியில் மக்களின் மனதை வேட்டை ஆடி இருப்பது உண்மை தான்.

கொசுறு 1

லிங்குசாமியிடம் சமீரா அமலா பால் இதில் யார் அழகு என்று கேட்ட போது அதற்கு “மேக்கப் போடாமல் சமீரா மேக்கப் போட்டு அமலா பால்” என்று கூறி இருந்தார்.

கொசுறு 2

பொதுவாக இதைப்போல விழாக்காலங்களில் வெளியாகும் படங்களில் ஏதாவது ஒன்று தான் தேறும்.

இதில் இரண்டு படங்கள் வெற்றி அதில் வேட்டையும் ஒன்று. சிங்கப்பூரில் நான் சனி இரவு 9 45 மணி காட்சிக்குச் சென்றேன் படம் ஹவுஸ் ஃபுல்.

இது போல ஹவுஸ் ஃபுல் ஆவது படம் வெற்றியானலே இரண்டாவது வாரத்தில் இங்கே சாத்தியம்.

கொசுறு 3

ஆர்யா ஒரு பேட்டியில் “முதலில் அமலா பால் என்னைப் பார்த்துச் சைட் அடிப்பார் என்று நினைத்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று கூறி இருந்தார் 🙂 .

அமலா பால் வழக்கமான நம்ம பொண்ணுக போலக் கமுக்கமா சைட் அடித்து இருப்பார் அது இவருக்கு வழக்கமான பையன் போலத் தெரியல போல 😉 .

Boys are boys Girls are girls 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. கிரி சார்,

    வணக்கம், விமர்சனம் நன்றாக உள்ளது . ஒரு சிறு திருத்தம் பத்தி 8 இல் “ஆர்யா ” “சூர்யா” ஆகி விட்டார் :).

    நன்றி,

    விமல்.

  2. விமல் சுட்டியமைக்கு நன்றி 🙂 மாற்றி விட்டேன் (சார் எல்லாம் வேண்டாம்)

  3. எனக்கும் படம் பிடித்திருந்தது; ட்ரெயிலரை பார்க்கும்போதே கதை இதுதான் என்று தெரிந்துவிடுகிறது; அவர்களும் இது ஒரு கமர்சியல் மசாலா என்றுதான் ப்ரொமோட் பண்ணுகிறார்கள்; ஆனால் இங்கே சிலர் இதை ஒரு art movie ஆக எண்ணி விமர்சனம் என்கின்ற பெயரில் படத்தை கேவலப்படுத்துகிறார்கள்!!!!

    அது அவரவர் இஸ்டம் என்றாலும் 1000 பேர் வாசிக்கும் ஒரு தளத்தால் 10,000 – 100,000 வாசகர்களை கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது!!!!

    அத்துடன் பலர் (அதுவும் பிரபலங்கள்) விமர்சனங்களில் தமது சொந்த வெறுப்புக்களை காட்டுவது மிகுந்த கவலை அளிக்கும் விடயமே 🙁

  4. படம் சூப்பர் படம்… சில பேருக்கு சாதாரண மக்களின் ரசனை புரியாமல் உலக லெவல் க்கு இந்த படத்தை விமர்சனம் பண்ணி தங்களோட கெத்த கட்ட பாக்குறாங்க….

  5. Giri,

    How come you find time to see all the movies… ennavo ponga.. enjoy pannunga.

    Avan avan, dowload panna padam pakka mudiyama ukkanthundu irukkan.

    kamesh

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஜீவதர்ஷன் 🙂

    @காமேஷ் என்னை சாப்பாடு சாப்பிடாம இருக்க சொன்னாக்கூட இருந்துடுவேன் ஆனா படம் பார்க்காம இருக்க சொன்னா முடியாது ஹி ஹி ஹி இங்க சென்னை அளவிற்கு நண்பர்கள் இல்லை அதனால் பொழுதுபோக்கு இது ஒன்று தான்.

    நீங்க இங்க சிங்கப்பூர் வாங்க.. 🙂

  7. வாரணம் ஆயிரம் படத்தில் அட்டகாசமான ஃபிகராக வரும் சமீரா இதில் ஆம்பிளை மாதிரி இருக்கிறார். வெறுத்தே போயிட்டேன். உடம்பை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகமாக உடற்பயிற்சி செய்து பெண்களுக்கே உண்டான நளினம், உடல் இல்லாமல் முரட்டுத் தனமாக இருக்கிறார். அதுவும் பாவாடை தாவணியில் சகிக்க முடியலை அதிலும் “தைய தக்கா” பாடலில் வயலில் தைய தக்கா என்று குதிக்கும் போது ஐயையோ… எப்படி இருந்த சமீரா இப்படி ஆனதை நினைத்து குமுறிக் குமுறி அழனும் போல இருக்கே

    Ithukke ippadinna eppadi… enga oorula.. allarume (intentionally written) appadi thaan.. purushampurugam mathiri iruppango.. Sameera 100% mel

    Kamesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here