Mithunam (தெலுங்கு 2012) | அன்புக்கு இல்லை எல்லை

5
Mithunam movie

லரின் வரவேற்பைப் பெற்ற ஸ்ரீ ரமணா எழுதிய Mithunam நாவலைப் படமாக எடுத்துள்ளார்கள். மிதுனம் என்றால் ‘ஜோடி’ (couple) என்று தமிழில் அர்த்தம்.

Mithunam

மனைவி லட்சுமியுடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் SPB நடத்தும் அன்பான வாழ்க்கையைக் கூறும் படமே மிதுனம். Image Credit

இப்படத்தின் சிறப்பு என்னவென்றால், படம் முழுக்க இவர்கள் இருவர் மட்டுமே! வியப்பாக உள்ளது. எப்படி இது போல ஒரு படம் எடுக்கத் துணிந்தார்கள்!

SPB, லட்சுமி தம்பதியினர் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பார்கள். அவர்கள் அழைத்தும் SPB செல்ல மறுத்து விடுவார், காரணம் அங்கே சென்றால், இவர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று 🙂 .

பேர பிள்ளைகளுக்குத் தானே வேலை செய்கிறோம் என்ன தவறு? என்பது வழக்கமான அம்மாவாக லட்சுமியின் எண்ணம்.

இருவருமே மிக ஒற்றுமையாக இருப்பார்கள். சண்டையிட்டாலும் உடனே சேர்ந்து கொள்வது என்று அன்பான வாழ்க்கை முறை.

SPB, லட்சுமி இருவருமே ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் கவிதையாக உள்ளது. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது 🙂 .

இருவரும் பொருத்தமான தேர்வு. சிறப்பான நடிப்பு.

சுவையான சாப்பாடு

SPB சாப்பாட்டு பிரியர். அதோடு சமைத்து தரும் லட்சுமியும் அட்டாகாசமான சுவையில் சமைத்தால்.. கேட்கவும் வேண்டுமா!

SPB க்கு முதன் முதலில் சாப்பாடு பரிமாறும் காட்சியைப் பார்த்தாலே, நாமும் சாப்பிடலாம் என்று என்ன வைக்கும் படியான உணவு வகைகள்.

ஆந்திரா வழக்கத்தில் உணவுவகைகளைப் பார்த்தாலே எச்சில் ஊறுகிறது.

SPB சாப்பிட்டு விட்டு, ஒவ்வொருமுறையும் லட்சுமியை மனதார பாராட்டுவார். அதோடு படம் முழுக்க எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்.

படம் முடியும் போது இன்னும் எடை கூடியிருப்பார் என்று நினைக்கிறேன் 🙂 .

அழகான வீடு

படத்தில் முக்கியமான கவனிக்கக்கத் தகுந்த ஒரு விஷயம் SPB, லட்சுமி வீடு.

இயற்கை சூழ்ந்த எளிமையான வீடு. மாடு, கன்று, பராமரிக்கப்படும் காய்கறிகள் என்று அற்புதமான சூழ்நிலை.

லட்சுமி SPB இருவரும் மாட்டிடம் அன்பாகப் பேசுவது நடந்து கொள்வது அழகான காட்சிகள்.

இது மாதிரி ஒரு வீட்டில் வசித்தால் எப்படி இருக்கும்! என்று எண்ண வைக்கும்படியான எளிமையான ஆனால், அழகான வீடு.

ஒளிப்பதிவும் இசையும் படத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் உள்ளது.

படம் முழுக்க இருவர் மட்டுமே என்பது படத்தின் குறை ஆனால், இதை மையமாக வைத்துத் தான் கதையே அமைத்துள்ளார்கள்.

இருவர் மட்டுமே இருக்கிறார்களே இறுதியில் என்ன ஆகும்? என்ற எண்ணம் வந்துகொண்டே செல்கிறது.

இறுதியில் லட்சுமியின் எண்ணங்கள் ஒவ்வொரு அன்பான மனைவியும் நினைக்கும் எண்ணமே.

இப்படம் பார்க்கும் போது என் அம்மா அப்பாவின் நினைவு வந்து சென்றது.

யார் பார்க்கலாம்?

Mithunam அனைவருக்கும் ஏற்றதல்ல. பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் இல்லை, இரண்டே கதாப்பாத்திரங்கள், பெரிய திருப்பங்கள் இல்லை.

முக்கியமாக வயதான இரு கதாப்பாத்திரங்கள்.

எனவே, இவையெல்லாம் ஏற்புடையதாக இருந்தால், உங்களுக்கு ஒரு அன்பான ஜோடியின் அழகான வாழ்க்கை முறையைக் காண மிகச்சிறந்த வாய்ப்பு.

படத்தைப் பார்க்கும் போது மற்றவரின் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் முழுமையாக ரசிக்க முடியும்.

பெரியவர்களின் காதலை, அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளைக் காண விருப்பமுள்ளவர்களுக்கு இப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

வயதானவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். இதைப் பார்த்தால், வயதாகியும் ஒவ்வொருவரும் செய்து கொண்டுள்ள தவறு புரியும் 🙂 .

பரிந்துரைத்தது R. காசிவிஸ்வநாதன். MX Player, YouTube & SunNxt ல் காணலாம். Amazon Prime ல் உள்ளது ஆனால், இந்தியாக்கு இல்லை.

Directed by Tanikella Bharani
Produced by Anand Muyida Rao
Written by Sri Ramana
Screenplay by Tanikella Bharani, Jonna Vithula, Anand Muvida Rao
Starring S. P. Balasubrahmanyam, Lakshmi
Music by Swaraveenapani
Cinematography Rajendra Prasad Tanikella
Edited by S. B. Uddhav
Release date 21 December 2012
Country India
Language Telugu

தொடர்புடைய கட்டுரை

என்ன விட்டு எங்கடி நீ போன | Magic Man SPB

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. ஒரு நடிகராக SPB சாரை எனக்கு மிகவும் பிடிக்கும்.. சில படங்களில் யதார்த்தனமான பாத்திரங்களை (திருடா திருடா , காதலன், காதல் தேசம்..etc) அவர் அழகாக செய்து இருக்கிறார்.. பாடகராக புகழ் அளவிற்கு நடிகராக அவர் கொண்டாடப்படவில்லை.. காரணம் நடிப்பது அவர் தொழில் இல்லை .. முதல்மரியாதை சிவாஜியின் பாத்திரத்தை முதலில் ஏற்று நடிக்க இருந்தவர் இவர் தான்.. நேரமின்மையால் முடியாமல் போயிற்று.

    லட்சுமி மிகவும் இயல்பான நடிகை.. சம்சாரம் அது மின்சாரம் படம்.. எப்பா.. என்ன படம் … என்ன நடிப்பு.. எல்லோரும் போட்டி போட்டு கொண்டு நடித்து இருப்பார்கள்.. இவரின் நடிப்பு தனியாக தெரியும்.. சிறப்பான நடிப்பு.. தற்போது சூழ்நிலை எனக்கு மிகவும் பரபரப்பாகவும், வேகமாகவும் சென்று கொண்டு இருப்பதால் .. அமைதியான, ரம்மியமான சூழலில் இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. மிக்க நன்றி,கிரி. மிகவும் ரசித்ததால் பரிந்துரைத்தேன். அது போல் இங்கு மலையாளத்தில் மிகவும் நல்ல படங்கள் உள்ளன. இயற்கை அழகுடன் ரசிக்கத் தக்கவகையில் பல நல்ல படங்கள் உள்ளன. அவைகளின் விபரம் தருகிறேன். பார்த்து ரசியுங்கள். உங்களின் பட விமர்சனங்கள் பார்த்து தேடிப் பிடித்து பார்ப்பேன். மிக்க நன்றி.

  3. Please ATHIRAN, THE GREAT INDIAN KITCHEN AND VANGHU இந்த படங்களையும் பார்த்து கருத்து தெரிவியுங்கள். சாய் பல்லவியுடன் பகஹத் பாசிலின் அருமையான நடிப்பிற்கு அதிரன், கேரளா நாயரின் பெண்களின் நிலைமைக்கு தெ கிரேட் இந்தியன் கிட்சன், முஸ்லீம் மத கட்டுப்பாடுகளுக்கு வாங்கு. பார்த்தால் தான் தெரியும் இப்படியும் படம் எப்படி எடுக்கிறார்கள் என்று.

  4. @யாசின் காதலன் படத்தில் இவரின் நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.

    லட்சுமி அணைத்து படங்களிலும் பட்டையைக்கிளப்புவார். ஓ! பேபி படத்தில் செமையா நடித்து இருப்பார்.

    @காசிவிஸ்வநாதன் ஓகே சார் 🙂 . Athiran ஏற்கனவே பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது. Vaanku அமேசான் Hotstar ல் இல்லை. வேறு வழியில் முயற்சிக்கிறேன்.

    @சிவா உண்மையே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here