Middle Class Melodies (2020 தெலுங்கு) | பாம்பே சட்னி

4
Middle Class Melodies

ப்பாவுடன் கிராமத்தில் சிறு உணவகம் நடத்தி வரும் ராகவனுக்கு, நகரத்தில் ஒரு உணவகம் துவங்க வேண்டும் என்பது விருப்பம். ராகவன் விருப்பம் நிறைவேறியதா? என்ன நடந்தது? என்பதே Middle Class Melodies.

Middle Class Melodies

மிகச்சாதாரண, ஆர்ப்பாட்டமில்லாத அழகான படம். Image Credit

ராகவன் குடும்பம், அவரது மாமா குடும்பம், நண்பன் என்று அனைவருமே அன்றாட வாழ்வில் தினமும் பார்க்கும் இயல்பான கதாப்பாத்திரங்கள்.

எனவே, சம்பவங்கள், கதாப்பாத்திரத்துடன் எளிதாக ஒன்ற முடிகிறது.

ராகவனைத் திட்டும் கோபக்கார அப்பா, ஆதரவாக இருக்கும் அம்மா என்று பஞ்சாயத்துக்குப் பஞ்சம் இல்லை.

குறிப்பாக ராகவன் அப்பாவும் மாமாவுக்குமான காட்சிகள் அனைத்துமே அட்டகாசம்.

காதலியாக வரும் சந்தியா கிட்டத்தட்ட ‘நஸ்ரியா’ சகோதரி போல உள்ளார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத நடிப்பு.

ராகவனுக்கு அவசர செய்தி கொடுக்க வேண்டி, சந்தியா மொபைல் ரீசார்ஜ் செய்யும் காட்சி கலகலப்பு 🙂 .

அனைத்து கதாப்பாத்திரங்களின் நடிப்புமே படத்தை ரசிக்கக் காரணம். ஒவ்வொருவரும் யாரோ ஒருவரை நினைவுபடுத்துகிறார்கள்.

நகைச்சுவை திணிக்கப்பட்டதாக இல்லாமல், கதையோடு வருகிறது.

பாம்பே சட்னி

ராகவன் நடுத்தரக் குடும்பத்து பையன் கதாப்பாத்திரத்துக்கு அம்சமாகப் பொருந்துகிறார். ராகவனுக்கு உதவும் நண்பனாகக் கோபால்.

ஜோசியத்தை நம்பி காதல் செய்யும் கோபாலின் காதல் சுவாரசியம், முடிவும்.

பாம்பே சட்னி தனக்குச் சுவையாகச் சமைக்கும் திறமையுள்ளதாக நினைக்கும் ராகவன், இதை மட்டும் நம்பி எப்படி உணவகம் துவங்க நினைக்கிறார்?

அதோடு பாம்பே சட்னி குறித்த திருப்பம், ராகவனுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் அதிர்ச்சி அளித்து விக்ரமன் படம் போல உணர்வைத் தருகிறது.

படத்தின் மையக்கருத்தே இது தான், திரைக்கதையில் சற்று மாற்றி இருக்கலாம்.

உணவகம் துவங்க எண்ணம் உள்ளவர்கள் தங்களோடு ராகவனை, குடும்பத்தை, பிரச்சனைகளை  இணைத்துப் பார்க்க முடியும்.

சம்பவங்களை எளிதாக ஊகிக்க முடிகிறது, இது தான் நடக்கும் என்பது முன்பே தெரிவது பலவீனம் என்றாலும், த்ரில்லர் படமில்லை என்பதால், ஏற்றுக்கொள்ளலாம்.

அனைத்து பாடல்களும் நன்றாக உள்ளது, மான்டேஜ் காட்சியமைப்பு ரசிக்க வைக்கிறது, அதோடு ஒளிப்பதிவு மிகச்சிறப்பு.

ஒளிப்பதிவு செயற்கையாக இல்லாமல், இயல்பான காட்சிகளாக உள்ளது.

தெலுங்கு படம் என்றாலும், தமிழ் படம் பார்க்கும் உணர்வையே தந்தது. தென் மாநில மக்கள் அனைவரும் தங்கள் மாநிலக் கதையாகவே கருதலாம்.

Amazon Prime ல் தமிழ் மொழியிலும் உள்ளது. பரிந்துரைத்தது நண்பன் பாபு.

அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Read : Evaru (2019 – தெலுங்கு) கொலை நடந்தது எப்படி?

Directed by Vinod Anantoju
Produced by Venigalla Anand Prasad
Screenplay by Janardhan Pasumarthi, Vinod Anantoju
Story by Janardhan Pasumarthi (Also dialogue)
Starring Anand Devarakonda, Varsha Bollamma
Music by Score:RH Vikram, Songs:Sweekar Agasthi
Cinematography Sunny Kurapati
Edited by Ravi Teja Girijala
Distributed by Amazon Prime Video
Release date 20 November 2020
Running time 135 minutes
Country India
Language Telugu

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. யாசின் இந்தப்படம் தவறாமல் பாருங்கள். உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் 🙂 . உணவகம் துவங்க நினைக்கும் உங்களுக்குப் பல சம்பவங்களை இப்படம் நினைவு படுத்தும்.

    படம் பார்க்கும் போது உங்கள் நினைவே வந்தது 🙂 .

    • கண்டிப்பா பார்த்துடுவோம்.

      யாசின் வருவதற்கு முன்னாடியே கமெண்ட் போட்டுட்டீங்க கில்லாடி 🙂 🙂 🙂

  2. நன்றி கிரி, படத்தை கண்டிப்பாக பார்க்க முயற்சிக்கிறேன்.. யதார்த்தமான கதைகள் எல்லாம் எனக்கு பிடிக்கும். நிறைய விளம்பரம் இல்லாமல் வெளியாகும் பல படங்களை கண்டு வியந்து இருக்கிறேன்.. சில படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு கூட பார்த்து இருக்கிறேன். இயக்குனர் நினைத்தை படமாக்கினாலே யதார்த்தமான படங்கள் நிச்சயம் 50% சதம் வெற்றியை கொடுக்கும். நினைத்தது ஒன்று எடுப்பது ஒன்று என தடம் மாறினால் சறுக்கல் ஏற்படலாம். திரைத்துறையின் பல செய்திகள், நேர்காணல்கள், அனுபவங்கள் இவைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன்.. மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.. சமீபத்தில் நீங்கள் பரிந்துரைத்த Kappela படம் ரொம்ப பிடித்து இருந்தது. அறிமுக இயக்குனரின் படம் அவ்வளவு நேர்த்தியாக இருந்து.. நன்றி கிரி.

  3. @விஜய் 🙂

    @யாசின் நீங்க இந்த படம் கண்டிப்பா பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!