மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்த ஏன் தயக்கம்?

4
மின்னணு பரிவர்த்தனை

ணையம் பல வசதிகளை / எளிமையை மக்களுக்குக் கொடுத்தாலும் பல காரணங்களால் மக்கள் மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்த தயங்குகிறார்கள்.

இணையம் , தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாதவர்கள் யோசிப்பதில் நியாயம் உள்ளது. Image Credit 

அனைத்தும் தெரிந்தும் மின்னணு பரிவர்த்தனையைப் புறக்கணிக்கும் அல்லது ஆர்வமில்லாதவர்களை நினைத்துக் குழப்பமாக இருக்கிறது.

எளிமையாக இருந்தும் எதனால் பயன்படுத்த யோசிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

Paytm / கடனட்டை (Credit Card)

உதாரணத்துக்கு Paytm பெரும்பாலான இடங்களில் வந்து விட்டது ஆனாலும், பெரும்பாலானோர் பயன்படுத்த விரும்புவதில்லை.

எங்கள் அலுவலகம் அருகே ஒரு சிறு உணவகம் உள்ளது. இங்கே வருபவர்கள் 99% IT துறையினர் தான் ஆனால், என்னோட சேர்த்து அதிகப் பட்சம் 3 பேர் Paytm பயன்படுத்தினாலே அதிகம்!

பெரும்பாலோனோர் கடனட்டை பயன்படுத்துகிறார்கள். கடனட்டை பயன்படுத்திச் செலவு செய்தால், உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.

இதன் மூலம் உங்கள் பணத்தை மாத இறுதியில் கடனட்டைக்குச் செலுத்துவதால், குறைந்தது 20 – 25 நாட்களாவது அந்தப்பணம் உங்கள் வங்கியில் இருக்கும்.

இதன் மூலம் உங்களுடைய வங்கி கணக்கின் மதிப்பு உயரும், காலாண்டு வட்டி சில நூறு ரூபாய்கள் கிடைக்கும்.

Readகடனட்டை [Credit Card] என்றாலே பிரச்சனைகள் மட்டும் தானா!

சில்லறை பிரச்சனை

நான் மின்னணு பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்த காரணமே சில்லறை பிரச்சனை தான்.

எங்கே போனாலும் “சார் சில்லறையா கொடுங்க!” என்பது தான், எரிச்சலாக இருக்கும். இந்தக் காரணத்துக்காகவே எங்கெல்லாம் Paytm / கடனட்டை உள்ளதோ அங்கெல்லாம் இவற்றை மட்டுமே பயன்படுத்துவேன்.

உள்ளூர் ரயிலில் பயணிக்கக் கூட நான் UTS செயலி தான் பயன்படுத்துகிறேன், பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்குவதில்லை.

Readஉள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?

மேலே கூறிய உணவகத்தில் “சில்லறை கொடுங்க சார்” என்று கேட்கும் போது அருகில் உள்ள நண்பர்களைக் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

எதற்கு இக்கவலை? கண் முன்னே வசதிகள் இருக்கும் போது பயன்படுத்துவது தானே!

கணக்கில் வராத பணம்

நீங்கள் பணமாகக் கொடுத்தால், அதைக் கணக்கில் வராத பணமாக மாற்ற முடியும் ஆனால், மின்னணு பரிவர்த்தனை செய்தால், கணக்கு காட்டியே ஆக வேண்டும்.

எனவே, நாமே மின்னணு பரிவர்த்தனையைப் பயன்படுத்தாமல் இவற்றுக்குத் துணை போகிறோம் ஆனால், பேசுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

நண்பர்கள்

என்னுடைய நண்பர்களே நான் Paytm மூலமாகச் செலுத்தினால், “அட என்னங்க கிரி! 30 ரூபாய்க்கு போய் இதா.. பணத்தைக் கொடுத்துட்டு வாங்க!” என்று தான் கூறுகிறார்கள்.

தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு என்னுடைய மனைவி, அக்கா மின்னணு பரிவர்த்தனை மட்டுமே செய்கிறார்கள். என்னுடைய அக்கா செய்யவே மாட்டேன் என்று இருந்து, தற்போது பரிவர்த்தனை முழுக்க BHIM, Google Tez தான்  🙂 .

நான் பணத்தைக் கொடுக்கும் போது கடனட்டை, Paytm போன்ற மின்னணு பரிவர்த்தனை வசதி இருந்தால், மின்னணு பரிவர்த்தனை மட்டுமே செய்வேன்.

பெங்களுருவில் Paytm, கடனட்டை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை சென்னையை விட அதிகம். இங்கே மின்னணு பரிவர்த்தனைக்கு நன்கு வரவேற்பு உள்ளது.

UPI

UPI பரிவர்த்தனை அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. மக்கள் தற்போது இதைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாதாமாதம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதே வேகத்தை மற்ற மின்னணு பரிவர்த்தனையிலும் அனைவரும் காட்டினால் நல்லது.

மின்னணு பரிவர்த்தனையில் பல லாபங்கள் உள்ளன. பயன்படுத்தத் தெரிந்தால் இவையெல்லாம் அற்புதமான சேவை.

இனியாவது மின்னணு பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

WhatsApp UPI யை செயல்படுத்துவது எப்படி?

கூகுள் “Tez” செயலி பயன்படுத்துவது எப்படி?

BHIM செயலி பயன்படுத்துவது எப்படி?

“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

கொசுறு

உங்களுக்கு மின்னணு பரிவர்த்தனை குறித்த சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள், நான் விளக்குகிறேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. ரொக்க அட்டை பயன்படுத்தும் போது கடைகளில் ஏன் பனிரெண்டு சதவிகிதம் தேவையற்று பிடித்துக் கொள்கின்றார்கள்

    கடன் அட்டை பயன்படுத்தும் ஏன் பதினெட்டு சதவிகிதம் சேர்த்து பிடித்துக் கொள்கின்றார்கள்.

    ஏன் எந்த வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொள்ள அவர்களின் மின் அஞ்சல் முகவரியை வெளிப்படையாக அவர்கள் தளத்தில் வைத்துக் கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

    பதில் சொல்லுங்க. வேறு சில கேள்விகள் உள்ளது.

  2. கிரி, 10 வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருந்தாலும் என்னுடைய 99 % சதம் ரொக்க நடவடிக்கை தான் … இதுவரை உள்நாட்டில் வெளிநாட்டில் எந்த கடனட்டையும் இல்லை… வாங்கவும் முயற்சிக்கவில்லை…உண்மைய செல்லணுனா இவைகள் தேவைல்லாத சிரமத்தை கொடுக்குமோ???? வீண் செலவாகுமோ??? என்ற அச்சம் என்றும் உண்டு…

    சில நேரங்களில் ரொக்க தள்ளுபடி… உணவங்களில் சலுகைகள்… என சிலவற்றை தவற விட்டாலும் இவைகளால் பெரிய பாதிப்பில்லை… இது போன்ற சலுகைகள் துரித உணவங்களில் சலுகைக்கு வேண்டி தேவையற்றவற்றை உண்ண வேண்டிய அவசியம் உண்டு… மொத்தத்தில் இவைகளை விட்டு தூரமாக இருக்க தான் எண்ணுகிறேன்…

    என்னுடைய அலுவலகத்தில் கடனட்டை இல்லாத ஒருவன் நான் மட்டும் தான்… சில நேரங்களில் DEBIT CARD பயன்படுவேன்…இவைகள் இல்லை என்பதால் இதுவரை பெரிய பாதிப்பில்லை… நண்பன் சக்தி இதுபோன்ற வசதிகளை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்.;.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. இதெல்லாம் ஓகே கிரி.. பீம் பேடிஎம் upi இதெல்லாம் வெறும் ஆப்ஸ் தானே.. பணம் நம் அக்கவுண்டிலிருந்து உடனே தானே கழிக்கப்படுகிறது… (இன்னும் நான் உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை)
    இவற்றில் ஒன்றை மட்டும் பிரச்சினையின்றி வைத்துக்கொள்வதேயானால்.. எது நல்லது ?

  4. @ஜோதிஜி கடைகளில் இது போல பிடிக்கும் காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது பயன்பாடு அதிகரித்து விட்டதால், எவரும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை.

    அதற்கு பதிலாக குறைந்த பட்சம் 100 க்கு மேல் இருந்தால், கடனட்டை / பற்று அட்டை பயன்படுத்த கூறுகிறார்கள்.

    அப்படியும் எவரும் கேட்டால், நாம் கடனட்டையை பயன்படுத்த கூடாது. நமக்கு நட்டம் என்றால், அந்தப் பக்கமே எட்டிப்பார்க்க கூடாது 🙂 நட்டம் ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி.

    அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர் சேவை மைய முகவரியை தங்களது தளத்தில் வைத்து இருப்பார்கள், இல்லாமல் போக வாய்ப்பில்லை.

    @யாசின் எதுவுமே நம்ம கட்டுப்பாட்டில் தான் உள்ளது. என்னுடைய கட்டுப்பாட்டை மீறி, மாத செலவை மீறி நான் செலவு செய்ய மாட்டேன். என்னைப் போல இருப்பவர்களுக்கு கடனட்டை ஒரு வரப்பிரசாதம்.

    இது விருப்பம் தான் என்பதால், உங்களுக்கு எது வசதியோ அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

    @ராஜ்குமார் Paytm ல் UPI வசதியும் உள்ளது.

    UPI என்பது நேரடியாக உங்களது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். இதன் மூலம் தேவையற்று Wallet ல் பணத்தை போட்டு வைக்க தேவையில்லை.

    Paytm ல் தற்போது இரு வசதிகளும் உள்ளது. அதாவது Wallet ல் இருந்தும் பணம் செலுத்தலாம், UPI மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

    நான் Wallet தான் பயன்படுத்துகிறேன்.

    ஏனென்றால், என்னுடைய கடனட்டையில் இருந்து பணத்தை wallet க்கு மாற்றி விடுவேன். உதாரணத்துக்கு 2000 ருபாய். இதன் மூலம் என்னுடைய வங்கிப்பணம் வங்கியிலேயே இருக்கும், மாதக்கடைசியில் வங்கியில் இருந்து கடனட்டைக்கு கட்டி விடுவேன்.

    இதன் மூலம் என்னுடைய வங்கிப்பணத்தை எடுக்காமலே என்னுடைய செலவுகளை செய்து விடுவேன். இதன் மூலம் 2000 ருபாய் மாதம் முழுக்க என்னுடைய வங்கிக்கணக்கிலேயே இருக்கும்.

    இது போல பணத்துக்கு காலாண்டு வட்டி கிடைக்கும்.

    எனவே, புத்திசாலித்தனமாக செயல்பட்டால், நமக்கு லாபம் மட்டுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here