தமிழில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தைப் போன்ற கதையில் Kuttavum Shikshayum. Image Credit
Kuttavum Shikshayum
2015 ம் ஆண்டு நடைபெற்ற நகைக்கடை கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க ராஜஸ்தான் செல்பவர்கள் என்ன ஆனார்கள் என்பதே Kuttavum Shikshayum.
ராஜஸ்தான்
CCTV கேமராவில் சிக்காததால், அனைவரையும் விசாரித்ததில் வட மாநிலங்களில் வந்தவர்களே இதைச் செய்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள்.
இவர்களைப்பிடிக்க Sajan Philip (ஆசிப் அலி) தலைமையில் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று செல்கிறார்கள்.
இன்னொரு அதிகாரி, நகைக்கடை கொள்ளைக்கெல்லாம் செல்ல வேண்டுமா?! என்று கேட்டு, இதைச் சுற்றுலா போலப் பயன்படுத்துவதாக விமர்சிக்கிறார்.
படம் பார்க்கும் போது இவர் கூறுவதை கேட்க எரிச்சலாக இருந்தாலும், ஒருவகையில் இவர் கூறுவது உண்மைபோலத்தான் உள்ளது.
காரணம், உயிருக்கே ஆபத்துள்ள இடமாக உள்ளது. ஒரு நகைக்கடை கொள்ளைக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா! என்று தோன்றுகிறது.
திரைக்கதை எழுதியவர்களில் ஒருவரான சிபி தாமஸ் தான் ஆசிப் அலி கதாப்பாத்திரத்தில் உண்மையாகவே ராஜஸ்தான் சென்றவர்.
தீரன் அதிகாரம் ஒன்று
இதில் வரும் காட்சிகளைப் பார்த்தால், தீரன் அதிகாரம் ஒன்று படக் காட்சிகள் நினைவுக்கு வராமல் இருக்காது.
அதிலும் குற்றவாளிகள் தங்கியுள்ள கிராமத்தைப்பார்த்தாலே திகிலாக உள்ளது.
அங்குள்ள காவல்நிலையம், அதில் பணிபுரியும் அதிகாரிகள் எல்லோருமே வித்யாசமாக இருக்கிறார்கள்.
இவர்களின் வழக்கங்கள், வழிமுறைகள் வேறு என்றாலும், பொறுப்பாக உதவியிருப்பதாகத் தான் காட்டியுள்ளார்கள்.
விசாரணைக்காட்சிகள் பரபரப்பு இல்லாமல் ஆவணப்படம் போல உள்ளன.
துவக்க விசாரணைக் காட்சிகள் சுவாரசியமாக இல்லை ஆனால், ராஜஸ்தான் பகுதிகள் வந்தவுடன் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது.
ஒளிப்பதிவில் ராஜஸ்தான் பகுதிகள் புதிய அனுபவத்தைக் கொடுக்கின்றன.
யார் பார்க்கலாம்?
வடமாநில கலாச்சாரங்களை, வாழ்க்கை முறைகள் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள Kuttavum Shikshayum பார்க்கலாம்.
மற்றபடி படமாகச் சொல்லிக்கொள்ளும்படியில்லை.
எப்பவுமே புதிய கலாச்சாரத்தைப் பார்க்க விரும்புவேன் என்பதாலேயே இப்படத்தைப் பார்த்தேன், அதோடு இந்த விமர்சனமும் எழுதியுள்ளேன்.
எனவே, கூறியதில் உடன்பாடுள்ளவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் தவிர்க்கலாம்.
Directed by Rajeev Ravi
Written by Sibi Thomas, Sreejith Divakaran
Produced by Arun Kumar V. R.
Starring Asif Ali, Sunny Wayne, Alencier Ley Lopez, Sharaf U Dheen, Senthil Krishna
Cinematography Suresh Rajan
Edited by B. Ajithkumar
Music by Dawn Vincent
Release date 27 May 2022
Country India
Language Malayalam
கொசுறு
என்னடா இது! பார்க்கலாமா வேண்டாமான்னு குழப்பத்தில் விட்டுட்டாரேன்னு குழம்பியவர்கள் Ee Adutha Kaalathu (2012 மலையாளம்) | A Must Watch Movie படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றால், பாருங்கள். செமையா இருக்கும்.
எனக்கு மிகப்பிடித்த திரைப்படம் 🙂 .
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
தீரன் அதிகாரம் ஒன்று இது வரை தமிழில் வெளிவந்த படங்களில் வித்தியசமான கதைக்களம் கொண்ட படம்.. எனக்கு மிகவும் பிடித்த படம்.. அடிக்கடி நானும், என் பையனும் (இங்கு இருந்த போது) இந்த படத்தின் சில காட்சிகளை பார்ப்பதுண்டு.. Kuttavum Shikshayum படத்தை பற்றி இது வரை கேள்விபட்டதில்லை. உங்கள் பதிவு படத்தை பார்க்க தூண்டுகிறது.. ஆசிப் அலியின் நடிப்பில் நான் விரும்பி பார்த்த படம் Kettyolaanu Ente Malakha .. பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின்
“ஆசிப் அலியின் நடிப்பில் நான் விரும்பி பார்த்த படம் Kettyolaanu Ente Malakha ”
இவர் தான் இப்படத்தில் நடித்தார் என்பதை மறந்து விட்டேன். படத்தின் பெயர் காரணமாக நினைவில்லை, பார்க்கலாம் என்று தேடினால் ஏற்கனவே பார்த்து விமர்சனமும் எழுதியுள்ளேன் 🙂 .
https://www.giriblog.com/kettyolaanu-ente-malakha-movie-tamil-review/
கிரி, உங்கள் பதிவை படித்த பிறகு தான் நான் இந்த படத்தை பார்த்தேன்.. படத்தின் பெயர் கொஞ்சம் குழப்பம் தான்.. அதிகமான மலையாள படங்களின் பெயர் இப்படி தான் குழப்பமாக இருக்கிறது.. நினைவில் வைத்து கொள்வது கொஞ்சம் சிரமமே..