பிரிவினை பேசுவது , மாநிலங்களுக்கிடையே சண்டை வளர்ப்பது, செக்குலர் என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவது போன்ற கேவலமான வேலைகளைச் செய்யும் மாநில கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியின் பெயர் I.N.D.I.A.
I.N.D.I.A கூட்டணி
UPA கூட்டணி என்ற பெயரில் ராசியில்லை, எண்ணத்திலும் நாட்டுப்பற்றோ, நாட்டின் மீதான பெருமையோ இல்லாததாலும், பெயரிலாவது வைத்துக்கொள்வோம் என்று வைத்துக்கொண்டார்கள் போல. Image Credit
பாகிஸ்தானிடம் அடங்கியும், சீனாவிடம் அடிமையாகவும், எல்லைப்பகுதிகளை விட்டுக்கொடுத்த காங்கிரஸ் பேசுவது I.N.D.I.A.
பணம் அச்சிடும் இயந்திரத்தைப் பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்து இந்திய பொருளாதாரத்தைச் சீரழிக்க உதவிய காங்கிரஸ், நாட்டுப்பற்று பற்றிப் பேசுகிறது.
காங்கிரஸ்
காங்கிரஸ் எவ்வளவு கேவலமான அரசு என்பதற்குப் பல காலம் முன்னே எடுத்துக்கட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை. தற்காலக் கர்நாடக காங்கிரஸ் அரசு என்ன செய்கிறது என்பதைப் பார்த்தாலே போதுமானது.
கடந்த பாஜக ஆட்சியில் ஒரு முறை கூடக் காவேரி ஆறு தண்ணீர் திறப்பதில் பிரச்சனை வரவில்லை. அப்படியொரு பிரச்சனை இருந்ததா! என்று கேட்கும் அளவுக்கே சூழ்நிலை இருந்தது.
பலரும் அப்பிரச்சனை முடிந்து விட்டதாகவே நினைத்தார்கள் காரணம், உச்சநீதிமன்ற தீர்ப்பு.
ஆனால், ஆட்சிக்கு வந்தது முதல் மேகதாது அணை பிரச்சனையை ஆரம்பித்தது, அடுத்தது தண்ணீரை திறக்க மாட்டோம் என்று கூறியது என்று பழைய சண்டையை ஆரம்பித்து விட்டார்கள்.
தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணை நீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இன்னும் அடுத்த ஐந்து வருடங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சனை தான்.
இவை எல்லாவற்றையும் விடக் கொடுமை, காங்கிரஸ் மாநிலத்தலைவர் அழகிரி, அண்ணாமலையை விமர்சித்துக்கொண்டுள்ளார்.
இதற்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்? அண்ணாமலை ஏற்கனவே பாஜக அரசு இதைச் செய்தாலும் எதிர்ப்பேன் என்று தெளிவாகக் கூறி விட்டார்.
ஆனால், அண்ணாமலைக்கு வேலை வைக்காமல் காவேரி தண்ணீரை சரியாக பாஜக அரசு திறந்து விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அழகிரி கட்சியின் ஆட்சி தானே கர்நாடகாவில் நடக்கிறது, பேச வேண்டியது தானே!
திமுக
காங்கிரஸ் வெற்றி பெற பல வசனங்களைப் பேசிய விடியலார், தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கூறியதுக்குச் சாதாரண அறிக்கையுடன் முடித்துக்கொண்டார்.
பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இது I.N.D.I.A கூட்டணி தொடர்பான பயணம், காவேரி தண்ணீர் தொடர்பாக இல்லை என்கிறார்.
இதே பாஜக அரசு கூறி இருந்தால், விட்டு இருப்பாரா? என்னவெல்லாம் கூறி பொங்கி இருப்பார். கனிமொழி ஒரு பக்கம் போராட்டம் அறிவித்து இருப்பார்.
இப்பவும் ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கேட்கத் தெம்பு இல்லாமல், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒன்றிய அரசு, திராவிட அரசு என்று கூறியே தமிழர்களைக் குறுகிய வட்டத்திலேயே வைத்துள்ளார். தனது தலைவரைப் பின்பற்றிப் பெரும்பான்மை தொண்டர்களும் அதே போல உள்ளனர்.
அதாவது இந்தியாவை அந்நிய நாடு போல விமர்சிப்பது, தேசிய உணர்வை மழுங்கடிப்பது போன்ற பேச்சுக்களையே பேசி வருகிறார்கள்.
தமிழ்நாடு எதோ தனி நாடு போன்ற எண்ணத்திலேயே உள்ளார்கள்.
இலவச வாக்குறுதிகளைக் கொடுத்து அனைத்தின் விலையையும், கட்டணத்தையும் உயர்த்துவது இவர்களின் அடுத்த தலையாயப் பணி.
சிறந்த எடுத்துக்காட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா.
திரிணாமுல் காங்கிரஸ்
அடுத்த மாநிலத்தில் நடக்கும் அக்கிரமங்கள் மட்டுமே மமதா கண்களுக்குத் தெரியும், அவரது மாநிலத்தில் நடப்பதை பற்றிக் கவலையில்லை.
வாக்கு வங்கிக்காகப் பங்களாதேஷ் & ரோஹிங்கியா மக்களை அனுமதித்து மேற்கு வங்கத்தையே நாசம் செய்துகொண்டுள்ளார்.
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமை போலவே மேற்கு வங்கத்தில் ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போதும் ஒரு சம்பவம் நடந்தது.
இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது நடந்த கொடுமைகளை எதிர்க்கட்சியினர் மீது (காங்கிரஸ் உட்பட) எந்தத் தமிழக ஊடகமும் பேசவில்லை ஆனால், இவர்கள் பத்திரிகை தர்மம் பற்றிப் பேசுவார்கள்.
காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள். பல பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர், பலர் கொல்லப்பட்டனர் ஆனால், இவற்றைக் கேட்க மனித உரிமை போராளிகள் ஒருவருக்குக் கூட நா எழவில்லை.
மணிப்பூருக்கு கொந்தளிக்கும் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தமிழகத்தில் நடப்பதை வசதியாக மறந்து விடுவர்.
தங்கள் மாநிலத்தில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு கொள்ளாமல் பாஜக ஆட்சி நடக்கும் இடங்களில் கொடி பிடிப்பதே இப்பிரிவினை கட்சிகளின் வேலை.
கம்யூனிஸ்ட்
இவர்களைப் பற்றிப் பேசுவதே வீண் காரணம், இவர்கள் சீனாவின் அடிமைகள் ஆனால், இருப்பதோ I.N.D.I.A கூட்டணி.
இன்னும் கேரளாவில் மட்டுமே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பெயருக்குக் கொஞ்சம் பேர் கட்சி என்று சுற்றிக்கொண்டு, அறிக்கை விட்டுக்கொண்டுள்ளனர்.
24 மணி நேரமும் பிரிவினை சிந்தனையில், மாநிலங்களிடையே பிரச்சனைகளை ஏற்படுத்திக் குளிர் காய்பவர்கள் வைத்துள்ள கூட்டணியின் பெயர் I.N.D.I.A கூட்டணி.
இவர்கள் எல்லாம் இணைந்து ஆட்சியை அமைத்தால் நாடு வளர்ச்சியில் 20 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும். கடந்த UPA ஆட்சிபோல ஊழல் கரைபுரண்டோடும். இதுவே இவர்களின் விருப்பம்.
இந்தியா நாசமாக வேண்டும், உலக அரங்கில் அசிங்கப்பட வேண்டும், வளர்ச்சியில் பின் தங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் I.N.D.I.A கூட்டணிக்கு வாக்களிக்கலாம்.
I.N.D.I.A கூட்டணியினருக்கு நாடு, மாநிலம் என்ன ஆனாலும் கவலையில்லை, நாம பணம் சம்பாதித்து குடும்பத்தோட மகிழ்ச்சியாக இருந்தால் போதுமானது.
அதற்காக எதையும் பேசுவார்கள், செய்வார்கள்.
குறியீடு
இவர்கள் கூட்டணியின் பெயர் எப்படி இவர்களுக்கு சம்பந்தமில்லையோ அதே போல மதசார்பின்மை கூட்டணி என்ற பெயரில் அனைத்து மத கட்சிகளையும் இணைத்துக்கொள்வார்கள்.
பெயருக்கும், கொள்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதே, நடந்து கொள்வதே இவர்கள் வழக்கம்.
கூட்டணியின் பெயரிலேயே I.N.D.I.A வைத் தனித்தனியாகப் பிரித்து விட்டார்கள். ஒருவேளை பின்னாள் செய்யப்போவதை குறியீடாக முன்பே சொல்கிறார்களோ!
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நம்மை சுற்றி நடக்கின்ற அரசியல் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது உண்மையில் வேதனை அளிக்கிறது.. நல்ல தலைவர்கள், ஊழல் அற்ற நிர்வாகம், நேர்மையான அதிகாரிகள் இவைகள் எல்லாம் நமது தலைமுறையிலே காணல் நீராகி வருகின்ற சூழலில், வரும் காலம் இன்னும் மோசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..
நெல்லை ஜெயந்தாவின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது…
தேர்தல் !
நாவில்
சொட்டு மருந்து
மழலைகளுக்கு ..
நகத்தில்
சொட்டு மருந்து
மக்களுக்கு ..
இரண்டும் போலியோ …?
@யாசின்
“வரும் காலம் இன்னும் மோசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..”
I.N.D.I.A கூட்டணி வந்தால் மோசமாக வாய்ப்புள்ளது ஆனால், அவர்கள் வர வாய்ப்பில்லை.
தற்போதைய நிலைக்கு இந்தியா நல்ல நிலையில் உள்ளது ஆனால், அரசியல் அவ்வாறு இல்லை.
“நெல்லை ஜெயந்தாவின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது…”
உங்களுக்கு எப்படி இவையெல்லாம் நினைவில் உள்ளது.. எனக்கு கொஞ்ச நாளில் மறந்து விடும் 🙂 .
அடிக்கடி இது போல எதையாவது கூறுகிறீர்கள். பெரிய விஷயம் தான்.
எனக்கு வாய்ப்பே இல்லை 🙂 .
கிரி.. உங்களை போல எனக்கும் அதிக விஷியங்கள் (அலுவலகம் + குடும்பம் நடந்த நிகழ்வுகள்) நினைவில் இருப்பதில்லை.. ஆனால் என்றோ பார்த்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நினைவில் இருக்கிறது..
ஆனால் பிடித்த கவிதைகளோ / புத்தகமோ / வரிகளோ என்றும் நினைவில் இருக்கும்..20/25 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவவைகளை கூட சமயத்தில் நினைவில் ஓடும்.. கடவுள் மூளையின் செயல்பாடுகளை படைத்ததை கண்டு நான் பல சமயங்களில் பிரமித்ததுண்டு..
“புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
எங்கள் குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்”.
கவிக்கோ எழுதிய வரிகளை இன்று நினைவில் கூர்ந்தாலும் அதிசயிக்க வைக்கும்.. எப்படி ஒரு கவிஞனால் மாறுபட்ட ஓட்டத்தில் சிந்திக்க முடிகிறது??? என்று..