TRAI புதிய DTH / கேபிள் விதிமுறைகள் கட்டுப்பாடுகளை 1 பிப் 2019 முதல் செயல்படுத்தியது. Image Credit
இன்னும் பல வாடிக்கையாளர்கள் மாறவில்லையென்பதாலும், கட்டணம் மற்றும் சேனல்களைத் தேர்வு செய்வதில் குழப்பங்கள் நீடிப்பதாலும், TRAI இதற்கான அவகாசத்தை பிப் 1 என்பதிலிருந்து 2019 மார்ச் 31 க்கு மாற்றம் செய்துள்ளது.
இதன்படி சேனல்களைத் தேர்வு செய்வது முழுக்க வாடிக்கையாளர் விருப்பம். இதனால் சிலருக்கு குறைவான கட்டணமும் சிலருக்கு முன்பை விடக் கூடுதல் கட்டணமும் வந்துள்ளது.
புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் ஓரளவு கட்டணத்தைக் குறைக்கலாம்.
சேனல்களை தேர்வு செய்வது எப்படி?
Broadcaster Bouquet & Ala-Carte என்ற இரு முறைகளில் உங்கள் சேனல்களைத் தேர்வு செய்யலாம்.
Broadcaster Bouquet என்றால் என்ன?
சேனல் நிறுவனங்களே தங்களுடைய சேனல்களைப் பிரித்து Pack காகக் கொடுப்பார்கள். இதுவே Broadcaster Bouquet என்று அழைக்கப்படுகிறது.
உதாரணத்துக்குச் சன் நிறுவனம் Sun Tamil Super HD, Sun Tamil Super, Sun Tamil Prime, Sun Tamil Basic, Sun Tamil Basic HD என்று Pack களை கொடுத்துள்ளது.
இதில் நமக்கு எது தேவையோ அதை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதில் Sun Tamil Basic ல் அனைத்து சன் குழுமச் சேனல்களும் உள்ளது.
Ala-Carte என்றால் என்ன?
Pack களாக இல்லாமல் தனித்தனியாகச் சேனல்களைத் தேர்வு செய்வது Ala-Carte என்று அழைக்கப்படுகிறது.
இலாபகரமாகச் சேனல்களைத் தேர்வு செய்வது எப்படி?
எடுத்துக்காட்டுக்கு சன், K டிவி SD & HD இரண்டுமே ஒரே கட்டணம் ₹19 தான். எனவே சன் & K டிவி தேர்வு செய்தாலே GST நீங்கலாக ₹38 வந்து விடும்.
ஆனால் Sun Tamil Basic தேர்வு செய்தால், அனைத்து சன் குழுமச் சேனல்களும் சேர்ந்து ஏர்டெல் DTH ₹47 & Sun Direct DTH ₹40. HD தேவையென்றால் Sun Tamil Basic HD.
ஜெயா டிவி மட்டும் தனியாகத் தேர்வு செய்தால் ₹19 ஆனால், Jaya Bouquet 1 தேர்வு செய்தால், Jaya Max, J Movies, Jaya TV, Jaya Plus சேர்த்து ஏர்டெல் DTH ₹12+ Sun Direct DTH ₹11 !!
இது என்ன கணக்கோ!
நான் ஏர்டெல் பயன்படுத்துவதால், Sun Direct DTH வைத்து ஒப்பீட்டுக்குக் கூறியுள்ளேன். மற்ற நிறுவனங்களுக்கும் கிட்டத்தட்ட இதே வழிமுறை தான், கட்டணங்களில் மாற்றம் இருக்கலாம்.
ஏர்டெல்லில் சேனல்களைத் தேர்வு செய்வது எப்படி?
உங்களுடைய ஏர்டெல் கணக்கில் நுழைந்து DTH கணக்கைத் தேர்வு செய்து, அதில் Change Plan என்று என்பதை க்ளிக் செய்து, Create Your Own Pack தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு Broadcaster Bouquet & Ala-Carte ஆகியவற்றைக் காட்டும்.
இதில் நான் மேலே கூறிய முறையில் தேவையான Pack யை Broadcaster Bouquet லும், தேவையான தனிச் சேனல்களை Ala-Carte லும் தேர்வு செய்து உறுதி செய்யுங்கள்.
இதன் பிறகு என்னென்ன Pack களை, சேனல்களைத் தேர்வு செய்துள்ளீர்கள், அதனுடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் காட்டும்.
அதோடு முந்தைய திட்டத்தின் கட்டணம் எவ்வளவு, தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய திட்டத்தின் கட்டணம் எவ்வளவு என்பதைக் காட்டும்.
தேர்வு செய்த சேனல்கள் / கட்டணங்களைச் சரிபார்த்த பிறகு உறுதிப்படுத்தினால், உங்கள் திட்டம் மாற்றப்படும். அவ்வளவே!
கேபிளில் சேனல்களைத் தேர்வு செய்வது எப்படி?
கேபிளில் சேனல்கள் தேர்வு செய்வது குறித்து முறையான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை.
அவர்களே அனைத்து சேனல்களையும் கொடுத்துத் தோராயமான கட்டணத்தை வசூலிக்கிறார்கள். இதில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது.
உதாரணத்துக்கு ₹260 க்கு அனைத்துச் சேனல்களும்.
எனவே, கேபிளில் சேனல்கள் தேர்வு செய்வது குறித்த அறிவிப்புகள் வந்து செயல்படுத்த சில காலம் ஆகலாம். அதுவரை நீங்கள் பொறுமை காக்கலாம்.
கொசுறு
சென்னையில் எங்கள் வீட்டில் மொத்தமே நான்கு கார்ட்டூன் சேனல்கள் மட்டுமே! நானும் பார்ப்பதில்லை, மனைவியும் இலவசச் சேனல்களே போதும் என்று கூறி விட்டார்.
நான்கு கார்ட்டூன் சேனல்கள் பார்க்க ₹171 DTH கட்டணமா?! என்றுள்ளது. பணம் தான் வெட்டி. கேபிள் குழப்பங்கள் தீர்ந்த பிறகு கேபிளுக்கு மாறலாமா என்ற யோசனையில் உள்ளேன்.
DTH / சேனல் நிறுவனங்கள் கட்டணக்குறைப்பை அறிவித்தே ஆக வேண்டும். இல்லையெனில், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.
கிரி, விளக்கமான பதிவு.. ஒரு சேனல் மட்டும் இருந்த நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கான ஆர்வமும், நேரமும் இருந்தது.. ஆனால் தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் இரண்டுமே இல்லை!!! 30 நிமிடம் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்க்க முடியவில்லை.. அடிக்கடி விளம்பரமே வருகிறது.. இதனாலே தொலைக்காட்சி பார்க்க ஆர்வம் இல்லாமல் போகிறது.. வீட்டிலும் தொலைக்காட்சி இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின் தற்போது பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது இன்னும் பல மாற்றங்கள் நடைபெறும்.