Koode [மலையாளம் – 2018]

3
Koode

ங்கை நஸ்ரியாவின் மருத்துவச் செலவுக்காகச் சிறு வயதிலேயே வெளிநாடு சென்று பணி புரியும் ப்ரிதிவிராஜ், தங்கையின் மரணத்துக்காக ஊர் திரும்புகிறார்.

ஊர் திரும்பிய பிறகு அவருக்கு மட்டும் தெரிபவராகப் பேசுபவராக நஸ்ரியா இருக்கிறார். இறுதியில் என்ன ஆகிறது? என்பது தான் கதை.

Koode

இப்படம் நம்ம ஊரில் வந்தால் முதல் வாரம் கடக்குமா? என்பதே சந்தேகம்! ஆனால்,  மலையாளத்தில் சர்வ சாதாரணமாக எடுக்கிறார்கள்.

மும்பை போலீஸ்

ப்ரிதிவிராஜ் அற்புதமான நடிகர். இவருடைய “மும்பை போலீஸ்” படம் பார்த்தவர்களுக்கு அவருடைய இரு முக நடிப்பு நினைவில் இருக்கலாம்.

ஒரு பக்கம் முரட்டு காவல் அதிகாரியாகவும், இன்னொரு பக்கம் அனைத்தும் மறந்த சாதாரண நபராகவும் உடல்மொழிகளில் வித்யாசம் காட்டி அசத்தியிருப்பார்.

இதுவரை பார்க்கவில்லை என்றால், அவசியம் பாருங்கள்.

ப்ரிதிவிராஜ்

இப்படத்திலும் மிக மென்மையான மனிதராக, அதை உடல்மொழியிலும் அற்புதமாகக் காட்டி அசரடிக்கிறார்.

இவரின் நடிப்பை முதன் முறையாகப் பார்ப்பவர்கள் “ஆளே இப்படித்தானோ!” என்று நினைக்கும் அளவுக்குள்ளது.

கதாப்பாத்திரமாக மாறுவது என்பது இது தான். முகத்தில் எப்போதும் ஒரு பயம், சோகம், அப்பாவித்தனத்தை அப்படியே கொண்டு வந்து உள்ளார்.

அதட்டினாலே எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒதுங்கிப்போய் விடுபவர் போல.

நஸ்ரியாக்கு பொருத்தமான வேடம், அதை அழகாகச் செய்து இருக்கிறார்.

பார்வதி ப்ரிதிவிராஜ் காட்சிகளில் இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது? நட்பா காதலா? என்றே துவக்கத்தில் சொல்லப்படாமல் செல்வது ரசிக்கும்படியுள்ளது.

முடிவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தாலும், ரசிக்கவே செய்கிறோம்.

ப்ரிதிவிராஜ் நஸ்ரியாவுடன் ஒரு நாயும் பயணிக்கிறது, நாய் பிரியனான எனக்கு மகிழ்ச்சி 🙂 .

பசுமையான பகுதிகளிலேயே படம் பயணிக்கிறது, அதோடு அவ்வப்போது மழையும் என்று கொஞ்சம் கவிதையாக உள்ளது.

இசையும் ஒளிப்பதிவும் படத்தின் கதையைச் சிதைக்காதபடி மென்மையாக அமைதியாக உள்ளது.

சில படங்கள் மெதுவாகச் செல்லும் ஆனால், சலிப்பாக்காது, அதுபோலப் படமே Koode. இந்த ரசனைப் படங்களில் விருப்பமுள்ளவர்கள் (மட்டும்) பார்க்கலாம்.

இயக்குநர் அஞ்சலி மேனன் “Bangalore Days” என்ற பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தவர். “Ustad Hotel” என்ற வெற்றிப் படத்துக்குத் திரைக்கதை எழுதியவர்.

Directed by Anjali Menon
Produced by M. Renjith
Screenplay by Anjali Menon
Story by Sachin Kundalkar
Based on Happy Journey by Sachin Kundalkar
Starring Prithviraj Sukumaran, Nazriya Nazim, Parvathy
Music by Songs: M. Jayachandran, Raghu Dixit; Background score:Raghu Dixit
Cinematography Littil Swayamp
Edited by Praveen Prabhakar
Language Malayalam
Release date 14 July 2018

Read : Ayyappanum Koshiyum (2020) தெறிக்கும் ஈகோ

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. நான் முழுவதுமாக இதுவரை ஒரு மலையாளப்படம் கூட பார்த்தது இல்லை.. நீங்கள் அவ்வப்போது சில வேறுமொழி படங்களை பற்றி குறிப்பிடும் போது, படத்தை காண வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நேரம் ஒதுக்க முடியவில்லை.. இருப்பினும் உங்கள் பன்மொழி படத்தை பார்க்கும் ஆர்வத்தை காணும் போது வியப்பாக இருக்கிறது..எந்த மொழியாக இருந்தாலும் நல்ல தரமான படங்களை கொண்டாட வேண்டும் என்பது என் ஆர்வம்..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் எனக்கு அனைத்து மொழி படங்களும் பிடிக்கும். திரைக்கதை மட்டும் சரியாக இருந்தால் போதும்.

    @உதய் என்கிட்டே இல்லையே..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here