EPF கணக்கில் பெயரை மாற்றுவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆதாரை அனைத்து அரசு சேவைகளிலும் இணைத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். தற்போது EPF (Employees Provident Fund) கணக்கை ஆதாருடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.
ஆதாருடன் இணைத்து இருந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். Image Credit
இதிலும் உங்கள் பெயர் பொருத்தம் சரியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உங்களால் ஆதார் எண்ணை இணைக்க முடியாது, PAN போல.
பெயர் மாற்றம் எளிதாக்கப்பட்டுள்ளது
முன்பு உங்கள் அலுவலக மனித வளத்துறையை (HR) அணுகி பெயர் மாற்ற விண்ணப்பத்தைக் கொடுத்த பிறகு, அவர்கள் அதை EPF அலுவலகத்துக்கு அனுப்பி அவர்கள் சரிபார்த்து பின்னர் மாற்றம் செய்வார்கள்.
தற்போது இணையத்திலேயே செய்வது போல எளிமையாக்கி இருக்கிறார்கள்.
காகிதப் பயன்பாடு, அதிகாரிகளைத் தொடர்பு கொள்வது போன்றவை முற்றிலும் தடுக்கப்பட்டு அனைத்தும் இணையத்திலேயே நடைபெறுவதால் எளிதாக உள்ளது.
EPF கணக்கில் பெயரை மாற்றுவது எப்படி?
இதைப் பயன்படுத்த உங்களுக்கு UAN கணக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மனிதவளத்துறையிலோ / கணக்கு (Accounts) துறையிலோ எண்ணைப் பெற்று Activate செய்ய வேண்டும்.
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
Manage –> Basic Details செல்லவும். இங்கே மாற்ற விரும்பும் திருத்தத்தை (பெயர், பிறந்த தேதி) செய்யவும்
செய்த பிறகு பின்வரும் தகவலைத் தெரிவிக்கும். இவை வந்த பிறகு உங்களுடைய மனித வளத்துறை (HR) பொறுப்பில் உள்ளவரிடம் சென்று “Approve” செய்யக் கூறுங்கள்.

அவர்கள் Approve செய்த பிறகு இது EPF அலுவலகப் பொறுப்புக்கு சென்று விடும். இதை அவர்கள் Approve செய்ய வேண்டும். இதற்கு அவர்களின் வேகத்தைப்! பொறுத்துக் காலம் எடுக்கலாம். எனக்கு இரண்டு மாதங்களானது.

திருத்தம் முடிந்தவுடன் உங்கள் பதிவுசெய்யப்பட்ட எண்ணுக்குக் குறுந்தகவலில் செய்தியை அனுப்பி விடுவார்கள். எனக்கு வரவில்லை, நானாகச் சென்று பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

அவர்கள் Approve செய்த பிறகு உங்கள் பெயர் மாற்றம் நடந்து விடும். இதன் பிறகு நீங்கள் உங்கள் பெயரை ஆதார் / PAN கணக்குடன் இணைக்கலாம்.
இதன் பிறகு தேவைப்பட்டால், விதிமுறைகள் படி பணத்தை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
PAN, ஆதாரைத் தொடர்ந்து EPF லும் வெற்றிகரமாகப் பெயரை மாற்றி விட்டேன் 🙂 .
இந்த பதிவுக்கு நேரடியாக தொடர்பு இல்லாத கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்
ஆதார் காட் எடுக்க கூடாது என்று இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்கின்றார்கள் .. ஆனால் உலகில் பல நாடுகளில் உள்ள விடயம்
அயல் நாடு ஸ்ரீலங்காவில் 1970 களில் வந்து விட் டது
தமிழின திடீர் சேகுவேரா விஜய் விதந்துரைத்த சிங்கப்பூரில் அடையாள அட் டை இல்லாமல் தலைவலிக்கு மருந்து டாக்டரிடம் எடுக்க முடியாதது ( சிங்கபூரில் உள்ள தங்கள் அறிந்ததே )
இதே நிலைமைதான் மலேஷியா , மத்திய கிழக்கு நாடுகள் , ஏனைய ஐரோப்பிய , அமெரிக்க நாடுகளிலும்
.
பாதுகாப்பு தொடர்பாக பேசுகின்றார்கள்
பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாததுதான்
அமெரிக்க தகவலை திருடி இருக்கிறர்ர்கள்
அதை காரணம் வைச்சு அங்கெ எடுக்க மாடடேன் என்று சொல்வார்களா ?
எல்லாம் கணினிமயமாகி வருவது மகிழ்வான விஷியம்.. புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஏற்படும் போது சிறிதுகாலம் நேரம் எடுக்கும்.. அதன் பின் சரியாகிவிடும்.. மாற்றம் என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்… பகிர்வுக்கு நன்றி கிரி..
@ராஜ் ஆதார் தேவை என்பது என்னுடைய கருத்து. தற்போது தொல்லையாக இருந்தாலும், இதனுடையவசதியை பின்னர் அனைவரும் உணர்வார்கள்.
அப்புறம் நான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இரண்டு வருடங்களாகி விட்டது 🙂
@யாசின் அதே!
ரொம்ப நாட்களாக கேட்டு அப்புறம் application போட்டு ஒன்னும் பதில் வரவில்லை PF ஆஃபீசிலேருந்து. என்னுடைய பெயரும் மாறவில்லை.
இப்போ தான் ஆன்லைன்ல மாத்திருக்கேன்.
நன்றிகள் பல கில்லாடி 🙂 🙂 🙂
கேப்டனுக்கு உதவியதால் மகிழ்ச்சி 🙂