Comrade in America (2017 – மலையாளம்)

3
Comrade in America

லையாள இயக்குனர்களுக்கு மட்டும் எப்படி Comrade in America போலப் புதுசு புதுசா கதை கிடைக்குதுன்னு தெரியல 🙂 . பட்டையைக் கிளப்புறாங்க. Image Credit

Comrade in America

கம்யூனிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட துல்கர் சல்மான், அவர் ஊரிலேயே நியாயத்துக்காகப் போராடுபவர்.

துல்கர் அதிரடி நடவடிக்கைகளில் கவரப்பட்ட கார்த்திகா துல்கரைக் காதலிக்கிறார். கார்த்திகா காதலை அறிந்த பெற்றோர் அமெரிக்கா அனுப்பி விடுகிறார்கள்.

இவரைச் சந்திக்க அமெரிக்கா செல்ல முடிவு செய்யும் துல்கருக்கு விசா இல்லாததால், மெக்சிகோ வழியாகக் கள்ளத்தனமாகச் செல்ல முடிவு செய்கிறார்.

காதலியைச் சந்தித்தாரா? முடிவு என்ன? என்பது தான் கதை.

முதல் பாதி முழுக்க வழக்கமான நாயகர்களுக்கே உண்டான அடிதடி என்று செல்கிறது. உண்மையாகவே புதிதாக ஒன்றுமில்லை.

ஆனால், சுவாரசியமாகக் கொண்டு சென்று உள்ளார்கள். இரண்டாம் பாதி தான் செம்ம 🙂 .

மெக்சிகோ –> அமெரிக்கா

விசா தேவையில்லை என்பதால் இந்தியாவில் இருந்து Nicaragua என்ற நாட்டுக்குச் செல்கிறார். அங்கே இருந்து மெக்சிகோ –> அமெரிக்கா செல்ல வேண்டும்.

இவருக்கு Nicaragua நாட்டில் இருந்து மெக்சிகோ செல்ல வாடகைக் கார் ஓட்டுநரான ஈழத்தமிழர் ஜான் விஜய் உதவுகிறார். இவரது வீட்டில் பிரபாகரன் படமுள்ளது.

தமிழ் படங்களில் இப்படி வைத்தால், சென்சாருக்கு தப்பிக்குமா என்பது சந்தேகமே.

ஆபத்துகள் 

கள்ளத்தனமாகச் செல்வது ஆபத்து நிறைந்தது என்பது தெரியும் என்றாலும், இதில் வரும் பிரச்சனைகள் பகீர் ரகம்.

ஐயையோ! இப்படியெல்லாம் செல்ல வேண்டுமா?! என்று நினைக்கத் தோன்றுகிறது.

அமெரிக்க இந்தியர்கள் இப்படம் பார்த்தால், “அட! இவ்வளவு கஷ்டப்பட்டு வருபவர்கள் மத்தியில் நாம் இங்கே வசிக்கிறோமா!” என்று பெருமிதமோ / வியப்போ அடைவார்கள்.

இந்தப்படம் பிடிக்க இன்னொரு காரணம் எனக்கும் அமெரிக்கா சென்று வர வேண்டும் என்ற  விருப்பம் உள்ளது 🙂 .

பொருளாதாரச் சூழ்நிலைகளால் முடியவில்லை.

ஆங்கிலப்படங்கள் நிறையப் பார்ப்பதால், அங்கே உள்ள நீண்ட சாலைகள், பாலைவனம் மற்றும் சில இடங்களைக் காண விருப்பம்.

கள்ளத்தனமாகச் சென்று வர வேண்டும் என்கிற அளவுக்கெல்லாம் இல்லை.

எனக்கு எப்பவும் பிடித்தது துல்கர் போல நம்ம ஊரு தான் 🙂 .

மெக்சிகோ எல்லை பகுதியில் கள்ளத்தனமாக வருபவர்களைக் கண்காணிக்கும் முறையே செமையாக இருக்கிறது. ஒருநாளைக்குக் குறைந்தது 100 / 150 நபர்கள் அமெரிக்காவினுள் நுழைய முயற்சிக்கிறார்களாம்.

ட்ரம்ப் ஏன் பதட்டமாகிறார் என்று புரிகிறது 🙂 .

மெக்சிகோ பாலைவனம்

மெக்சிகோ பாலைவனம் வழியாகச் செல்வது என்பது மிகக் கொடுமையானது.

துல்கருடன் ஒரு சீனர், பாகிஸ்தானியர் மற்றும் இன்னும் சிலர் பயணிப்பார்கள், ஒரு குடும்பம் குழந்தைகளுடன்.

செல்லும் போது வழியில் காவலர்கள் மட்டும் அல்லாது மற்ற நபர்களின் ஆபத்துமுள்ளது. அதில் பெண்களுக்கான ஒரு ஆபத்து அதிர்ச்சியடைய வைக்கிறது.

பின்னணி இசை

இரண்டாம் பாதியில் பின்னணி இசை செமையாக இருக்கிறது. தரமான ஒலிக்கருவியில் கேட்டால் அட்டகாசமாக இருக்கும்.

ஒளிப்பதிவும் கலக்கல் குறிப்பாக இரண்டாம் பகுதி. கேரளா காட்சிகள் பசுமையாகச் சும்மா பளிச்சுனு இருக்கு.

துல்கர் வேட்டியை கட்டிக்கொண்டு செல்லும் இறுதிக் காட்சி பலரால் ரசிக்கப்பட்டது, செம்ம ரகளையாக இருக்கிறது. கிட்டத்தட்ட “ப்ரேமம்” படத்தில் நிவின் பாலி வரும் காட்சியை ஒத்தது.

இரண்டாம் பாதியில் இறுதிப்பகுதியில் மட்டுமே துல்கருக்கு நடிக்க வாய்ப்பு.

மீதி  முழுக்கக் கள்ளத்தனமாகச் செல்லும் போது ஏற்படும் சம்பவங்கள் பரபரப்பாகவும் திகிலாகவும் உள்ளது.

இயக்குநர், சில காட்சிகளை எப்படி அனுமதி பெற்று காட்சிப்படுத்தினார்? என்று வியப்பாக இருந்தது! பல புதிய விசயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

வித்யாசமான திரைப்படங்களை ரசிப்பவர்கள் இப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Bye Bye சிங்கப்பூர்

ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. நாளை காலை down(g)load செய்து பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தை பார்க்கிறேன்.

    என்னைப்பொருத்த வரை கடைக்குட்டி சிங்கம் செம படம் படம் தொடங்கி 3/4 மணி நேரம்வரை மட்டுமே கார்த்தி நடிகராக தெரிந்தார் அதன் பின் படத்தோடூ ஒன்றிப்போய்விட்டார் என் கண்களுக்கும் கார்த்தி மறைந்து கதாப்பாத்திரம் மட்டுமே என் கண்களுக்கு தெரிந்தது கடைசி கோயில் க்காட்சி சென்டிமன்ட் கண்ணீர் வரச்செய்தது.

    Predestination, the prestige, dunkirk,coherence படங்கள் பார்த்தும் கதை விளங்காதவர்கள் JVL arts என்ற youtube channel க்கு சென்று பாருங்கள் மிக அருமையாக விளக்குகிறார்.

  2. அருமையான விமர்சனம் கிரி. இன்று தான் இந்தப் படம் பார்த்தோம். சூப்பர்… உங்கள் சேவை தொடரட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!