Rangasthalam [2018 தெலுங்கு]

2
Rangasthalam

முழுக்க முழுக்கக் கிராமக் கதை, அதாவது நகர வாசமே இல்லாத சுத்தமான கிராமக் கதை Rangasthalam 🙂 . Image Credit

Rangasthalam 

காது கேட்காத நாயகன் ராம்சரண், அவரது அண்ணன் ஆதி. கிராமத்தலைவராக ஜெகபதி பாபு.

இவர் தலைமையில் பல அநியாயங்கள், இவரை எதிர்த்து யார் தேர்தலில் நின்றாலும் கொல்லப்படுவார்கள். இவரின் அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஆதி தேர்தலில் நிற்கிறார்.

இறுதியில் என்ன ஆகிறது? இது தான் Rangasthalam. கதை 1980 களில் நடப்பது போல.

தெலுங்குல முன்னணி நாயகர்கள் இந்த மாதிரி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பது வியப்பான ஒன்று தான். ராம் சரண் பட்டையைக் கிளப்பி இருக்காரு! செம செம.

காது கேட்காமல் நடித்த எத்தனையோ படம் பார்த்து இருக்கிறேன் ஆனால், இது அசத்தல்.

ராம் சரண் காது கேட்காத பிரச்சனையைக் கதையோடு இயல்பாகக் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர் சுகுமார்.

இவருக்கு ஜோடியாகச் சமந்தா. நடிக்கக் கொஞ்சமே வாய்ப்பு இருந்தாலும், அந்தக் கொஞ்ச நேரத்திலும் செமையாக நடித்து இருக்கிறார்.

காதல் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார்.

ராம் சரண்

ராம்சரண் இரவில் சமந்தா வீட்டுக்குள்ளே மெதுவாகச் சென்று, அனைத்தையும் உருட்டி விட்டு விடுவார்.

எல்லோரும் எழுந்து விடுவார்கள் ஆனால், இவருக்குக் காது கேட்காததால், அது தெரியாமலே பதுங்கி பதுங்கி போகும் காட்சி 😀 .

ஜெகபதிபாபு அதிகம் பேசாத மிரட்டல் பஞ்சாயத்து தலைவர், இவருக்குப் போட்டிக் கட்சித் தலைவராகப் பிரகாஷ்ராஜ் சில காட்சிகளில் வந்து செல்கிறார்.

படத்தில் பலர் இருந்தாலும், நம்முடனே பயணிப்பது ராம் சரண் தான். என்ன ஒரு நடிப்பு!

சில இடங்களில் தெலுங்கு படங்களுக்கே உண்டான, காலகட்டத்தை விட்டு விலகிய மசாலா பாடல் காட்சிகள் இருந்தாலும், பெரியளவில் உறுத்தவில்லை.

தன் குடும்பத்தை ஒருவர் திட்டி விட, காது கேட்காத ராம் சரண் ஒன்றும் பேசாமல் வந்து விடுவார்.

பின் வழக்கம் போலத் நண்பனிடம் என்ன நடந்தது என்று கேட்டுப் பின்னர் வந்து புரட்டி எடுத்துக் கவர்கிறார்.

அது போல ஆதிக்காகச் சண்டையிடும் காட்சிகளில் எல்லாம் பொறிப் பறக்கிறது. ரணகளமான சண்டைக்காட்சிகள். அக்கால கட்டத்துக்கு தகுந்த ஒளிப்பதிவு.

இறுதியில் வரும் ட்விஸ்ட் கலக்கல். அதைக் கொண்டு சென்ற விதம், காரணம் செமையாக இருக்கிறது.

அனைவரையும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. //அனைவரையும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.//
    அண்ணா எனக்கு தெலுங்கு தெரியாது னா..இதன் தமிழ் பாதிப்பும் இல்லை என்று நினைக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!