giriblog தளம் இந்தியாவின் பிரபலமான Sharechat செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டு மூன்று மாதங்களாகினாலும் தற்போது தான் அறிவிக்கிறேன். Image Credit
Sharechat
TikTok, Instagram, Helo போன்ற செயலிகளைப் போல அறிமுகமான Sharechat இந்திய செயலியாகும். TikTok, Helo செயலிகளின் தடைக்குப் பிறகு மேலும் பிரபலமாகியது.
2018 ல் Sharechat ல் Partnership Proposal க்காகத் தொடர்பு கொண்ட போது ஆர்வம் இல்லாததால் விரும்பும் போது இணைகிறேன் என்று மறுத்து விட்டேன்.
கடந்த மார்ச் 2022 ல் திரும்ப Sharechat ல் இருந்து சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு இணையக்கூறினார். இந்தமுறை இணைந்து கொண்டேன்.
3 மாதங்களிலேயே 5000+ Followers பெற்று விட்டேன்.
Blog
தளங்களைப் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்து விட்டது. 15 வருடங்களாக எழுதி வருவதால் மட்டுமே இன்னும் சிலர் படித்துக்கொண்டுள்ளார்கள்.
புதிதாக ஆரம்பித்து வாசகர்களைப் பெறுவதெல்லாம் இனி நடக்காத காரியம். இருந்தும் தொடர எழுத்தின் மீதான என் Passion மட்டுமே.
ஆனால், கூற நினைக்கும் சிறு தகவல்களை, செய்திகளைப் பகிர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. பகிர்ந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டரில் பயனாளர்கள் வரவேற்பு அதிகமில்லை. பெரும்பாலும் Silent Readers தான்.
ஃபேஸ்புக்கில் Sri Seethalakshmi, Senthil, Varadaradjalou, Magesh Palani, Raju Thinakaran, Kamalakannan, Dharma Nkl போன்றோர் பல காலமாகத் தொடர்ந்து லைக் கொடுத்து வருகிறார்கள்.
இவ்வளவு காலம் ஒரு Blog யை சமூகத்தளத்தில் தொடர்வது பெரிய விஷயமே.
இவர்கள் அல்லாமல் அவ்வப்போது கட்டுரையின் தரத்தைப் பொறுத்து லைக் கொடுத்து வருபவர்களும் பலர் உள்ளனர். அனைவரையும் குறிப்பிட முடியவில்லை.
Blog யாரும் படிக்கவில்லையென்றாலும் எழுதுவேன் ஆனால், சமூகத்தளங்களில் பகிரும் செய்திகளுக்கு வரவேற்பு இல்லையென்றால் பகிர ஆர்வமிருக்காது.
இதைச் சரி செய்ய உதவியது தான் Sharechat.
வாசகர் விருப்பம்
Blog வாசகர்கள் Advanced Readers. இங்கே அனைத்தையும் பகிர முடியாது.
என்னதான் Blog எழுதுவது என் விருப்பம், சுதந்திரம் என்றாலும், சிலவற்றைத் தொடர்ந்து பகிர்ந்தால் படிப்பவர்களுக்கு எரிச்சலாகி விடும்.
ஆனால், Sharechat பயனாளர்கள் வித்யாசமானவர்கள். இங்கே எதைப் பகிர்ந்தாலும் அதைப் படிக்க, பகிரப் பெரும் கூட்டம் உள்ளது.
ஒரு காணொளி 1 மில்லியன் பார்வைகளை எளிதாக அடைகிறது.
சில நேரங்களில் ஒரு பகிர்வை 10,000 பேருக்கும் மேல் லைக் செய்கிறார்கள், ஆயிரக்கணக்கில் பகிர்கிறார்கள்.
இங்கே பகிரப்படும் என் தளக் கட்டுரைகளுக்கு வரவேற்புள்ளது. இது ஒரு வகையில் திருப்தியளிக்கிறது.
Blog ல் முழுச் சுதந்திரத்தோடு எழுதுகிறேன் என்றாலும், இதை விட முழுச் சுதந்திரத்துடன் Sharechat ல் அதிகம் பகிர்கிறேன்.
ஃபேஸ்புக்கில் 9000 பின்தொடர்பவர்களைப் பெற எனக்கு 12 வருடங்கள் ஆனது, ஆனால், Sharechat ல் 5000+ பின்தொடர்பாளர்களைப் பெற 3 மாதங்களே ஆனது.
இதன் மூலம் என் தளக் கட்டுரைகளுக்கும் Reach கிடைக்கும்.
முன்பே இணைந்து இருக்கலாம் என்று தற்போது தோன்றுகிறது.
பகிர்வது எளிது
Sharechat ல் பகிர்வது எளிதாக உள்ளது. காரணம், வாட்சப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பார்ப்பவற்றை எளிதாக இங்கே பகிர்ந்து விடலாம். நேரம் எடுக்காது.
பேருந்து, ரயிலில் பயணிக்கும் போது, காஃபி, மதிய உணவு இடைவேளையில் என்று எளிதாகப் பகிர முடியும். மூன்று மாதங்களில் 1000+ தகவல்களைப் பகிர்ந்துள்ளேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 🙂 .
இன்னொரு முக்கியமான விஷயம் ஃபேஸ்புக், ட்விட்டரில் காணொளிகள் பகிர்ந்தால் copy rights பிரச்சனையுள்ளது. Sharechatல் இதுவரை அப்பிரச்சனையில்லை.
எனவே, கணக்கை முடக்கி விடுவார்கள் என்ற பயத்திலேயே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதில்லை.
Sharechat ல் யார் பின்தொடரலாம்?
வலது சாரி ஆதரவு பதிவுகள், நகைச்சுவை, நாய், டிஜிட்டல் இந்தியா, அரசியல், பாடல், Quotes, ரயில்வே செய்திகள், நிழற்படங்கள், ரஜினி, மீம்ஸ், பொது அறிவு என்று எனக்கு விருப்பமான அனைத்தையும் பகிர்கிறேன்.
திமுக & இடது சாரி ஆதரவாளர்கள் பின்தொடர வேண்டாம். தொடர்ந்தால், கடுப்பு தான் ஆவீர்கள் 🙂 .
ரஜினி, டிஜிட்டல் இந்தியா, ரயில், நாய் குறித்து எனக்கு அலாதி விருப்பம் ஆனால், இதையெல்லாம் என்னால் Blog ல் தொடர்ந்து பகிர முடியாது.
ஷேர்சாட்டில் நான் யாரென்றே யாருக்கும் தெரியாதது வசதி 😀 .
Sharechat பயன்படுத்துபவர்கள், பயன்படுத்த விரும்புபவர்கள் என் பக்கத்தைத் தொடர https://sharechat.com/giriblog செல்லவும்.
ஒரு காலத்தில் வேறு காரணங்களால் Sharechat ல் தொடர முடியாமல் போகலாம் ஆனால், என்றும் giriblog தளம் இருக்கும்.
எங்கே காணவில்லையென்றாலும் இங்கே நிச்சயம் இருப்பேன். எவ்வளவு காலம் என்றாலும் திடீர் நினைவு வந்தால் எட்டிப் பார்க்கலாம் 🙂 .
கொசுறு
இதே போல Dailyhunt செயலியில் கேட்டுக்கொண்டார்கள் என்று இணைத்தேன்.
நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. திடீரென்று 6+ மாதங்களுக்கு முன்பு Algorithm மாற்றினார்கள், படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள்.
ஏன் என்று கேட்டால், தினமும் 15 கட்டுரைகள் பகிர வேண்டும் என்கிறார்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா?
மாதத்துக்கே அவ்வளோ தான் எழுதி வருகிறேன், இதில் தினம் எப்படி 15 கட்டுரைகள்?!
சரி என் தளத்தை நீக்குங்கள் என்றாலும் நீக்க மாட்டேன் என்று பதிலளிக்காமல் உள்ளார்கள். திரும்பத் தொடர்பு கொண்டு நீக்கக் கூற வேண்டும்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, நான் உங்களை பின் தொடர ஆரம்பித்ததிலிருந்து உங்கள் தளத்தை மட்டும் பார்வையிடுகிறேன்.. FB, ட்விட்டர் உட்பட எந்த சமூகவளை தளத்தையும் பயன்படுத்துவது இல்லை.. அதனால் அதில் கருத்துக்களை பரிமாற வாய்ப்பில்லை.. அதனால் sharechat ஐ பின் தொடர வாய்ப்பு குறைவு..
(எங்கே காணவில்லை யென்றாலும் இங்கே நிச்சயம் இருப்பேன். எவ்வளவு காலம் என்றாலும் திடீர் நினைவு வந்தால் எட்டிப் பார்க்கலாம்) நிச்சயம் உங்களின் எழுத்துக்கள் தொடரும், நாட்கள் வரை ஒரு வாசகனாக நான் உங்களை பின் தொடர்வேன் என நம்புகிறேன் கிரி..
திரு. கிரி அவர்களே தாங்கள் சிங்கப்பூரில் பணி செய்த காலம் தொடங்கி இன்று வரை தங்களின் blog- ஐ தொடர்ந்து வாசித்து வருபவர்களில் அடியேனும் ஒருவன், விபுலானந்தன். தாங்கள் சொன்னது போலவே blog- ஐ விட்டு விடாதீர்கள். திரு. யாசின் கூறியது போலவே தங்களின் எழுத்துக்கள் blog- ல் வரும் வரை ஒரு வாசகனாக தொடருவேன் என்பதில் ஐயமில்லை.
நான் இப்போது ஒரு வாரமாக உங்க Blog படித்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் தொடர்ந்து படிப்பேன். 😊
@யாசின்
“FB, ட்விட்டர் உட்பட எந்த சமூகவளை தளத்தையும் பயன்படுத்துவது இல்லை.. அதனால் அதில் கருத்துக்களை பரிமாற வாய்ப்பில்லை.. அதனால் sharechat ஐ பின் தொடர வாய்ப்பு குறைவு..”
யாசின் நீங்க தான் இங்கே இருக்கீங்களே.. அதே போதும்.
“நிச்சயம் உங்களின் எழுத்துக்கள் தொடரும், நாட்கள் வரை ஒரு வாசகனாக நான் உங்களை பின் தொடர்வேன் என நம்புகிறேன் கிரி..”
நன்றி யாசின். நீங்கள் தொடர்ந்து வருவது ஒரு வகையில் ஊக்கமாக உள்ளது. நாம கூறுவதையும் கேட்க விமர்சிக்க ஒருவர் தொடர்ந்து இருக்கிறார் என்று 🙂
@Vibulananthan நன்றி. தொடர்ந்து எழுதுவேன். இதுவரை எனக்கு எழுத அலுப்பு ஏற்பட்டதில்லை.
சொல்லப்போனால் பின்னர் நிறைய எழுத ஏராளமான திட்டங்கள் உள்ளது.
நேரம் தான் அமைவதில்லை.. அமைந்தால் தினமும் கூட எழுதுவேன்.
@Pratheesh Raj நன்றி 🙂 .