Giri / Haji | British TV Gangster Series

2
Giri / Haji

ன் பெயர் உள்ளதே என்ற ஒரு காரணத்துக்காக Giri / Haji சீரிஸ் பார்த்தேன் 🙂 .

Giri / Haji

இது பிரிட்டிஷ் சீரிஸ். ஜப்பானிய கதை மூலம் ஆனால், கதைக்களம் நடப்பது 85% இங்கிலாந்தில். Image Credit

அண்ணன் (Kenzo) காவல் அதிகாரி, தம்பி (Yuto) திருடனாக இருந்து கேங்ஸ்டராக மாறியவன்.

ஒரு சம்பவத்தில் தம்பி இறந்ததாக அனைவரும் நினைக்க, அவனை தேடி அண்ணன் ஜப்பானில் இருந்து இங்கிலாந்து செல்கிறார்.

அவர் செல்வது காவல்துறை பயிற்சிக்காக என்றாலும், தம்பியை தேடுவதும் முக்கியக்காரணம்.

ஜப்பான் கேங்ஸ்டர்

ஜப்பானில் பல கேங்ஸ்டர் குழுக்கள் உண்டு, அதில் பல அரசியல் உண்டு.

தவறு செய்பவர்கள் தவறை ஒத்துக்கொண்டு சுண்டு விரலை வெட்டிக்கொண்டால், அவர் மீது சம்பந்தப்பட்ட குழு நடவடிக்கை எடுக்காது, எடுக்கக் கூடாது.

தவறுகளுக்கு ஏற்ப விரல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விரலா? உயிரா? என்பது தான் இங்கே கேள்வி.

இது ஜப்பானில் கேங்ஸ்டர் குழுக்களில் கடைபிடிக்கப்படும் பொதுவான விதிமுறை. இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுவது இந்த சீரிஸிலும் வருகிறது.

இங்கிலாந்து

Kenzo இங்கிலாந்து வந்த பிறகு அவருக்கு நேரும் சம்பவங்கள், அனுபவங்கள் சில சுவாரசியமாகவும் சில அதிர்ச்சிகரமாகவும் உள்ளன.

Yuto கேங்ஸ்டர் தலைவரின் மகளிடம் காதல் கொண்டு, அவர் கர்ப்பமும் ஆகி விடுவதால், அவரைக் கொல்ல இங்கிலாந்துக்கு ஆளை அனுப்பி விடுவார்கள்.

அவர்களிடம் இருந்து தம்பியை காப்பாற்ற அண்ணன் முனைகிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

வாழ்க்கை முறை

முதல் ஓரிரு எபிசோட் குழப்பமாகவும், புரியாமலும் இருந்தது. எதை நோக்கிச் சீரிஸ் செல்கிறது என்பதே தெரியாமல் இருந்தது, பின்னர் சுவாரசியமாகி விட்டது.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் சூழ்நிலைகள், அதனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள், பாதிப்புகள் ஆகியவையே இதை எழுத முக்கியக்காரணமாக இருந்தது.

சில நொடி தவறுகள், அவசர முடிவுகள், சுயநல முடிவுகள் எப்படி வாழ்க்கையை தடம் மாற வைக்கிறது என்பதை அதன் போக்கிலேயே கூறியுள்ளார்கள்.

எங்குமே திணிப்பில்லை. கதாப்பாத்திரத்தின் போக்கிலேயே கதை செல்கிறது.

Kenzo இங்கிலாந்து வந்த சூழ்நிலையில் அவரது மனைவி ஒருவர் மட்டும் தனது மாமா அத்தையை கவனித்து கொள்கிறார்.

இன்னமும் பெரியவர்களுக்கு ஜப்பான் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவராக, உதவிக்கும் யாரும் இல்லாமல் இருவரையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு, மன உளைச்சல் ஆகியவை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கடந்து செல்லும் சம்பவங்கள்.

Keno மகளும் கோபித்துக்கொண்டு இங்கிலாந்துக்கு சென்று விடுகிறார்.

கணவன் மனைவியாக துவக்கத்தில் இருக்கும் அன்னியோன்யம் காலப்போக்கில் நீர்த்து, இடைவெளி வருவதையும், வாழ்க்கை சுவாரசியமற்று விடுவதையும் இயல்பாக கூறுகிறார்கள்.

ஓரினச்சேர்க்கை

Rodney என்ற கதாப்பாத்திரத்தில் வரும் இளைஞர், ஓரினச்சேர்கையாளர், ஆண் பாலியல் தொழிலாளி. இவருடைய கதாப்பாத்திரம் துவக்கத்தில் சாதாரணமாக துவங்கி முக்கியத்துவம் பெறுகிறது.

இவர் வாழ்க்கை ஒரு தனி அறை, போதை மருந்து, தனிமை, ஏராளமான வெளி நண்பர்கள் என்று ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையாக காண்பிக்கப்பட்டுள்ளது.

Rodney பணத்துக்காக உதவி செய்பவர், மோசமான பழக்கங்கள் உடையவர் ஆனால், ஆபத்தானவர் அல்ல.

உண்மையாகவே ஓரினச்சேர்கையாளரோ என்று நினைக்க வைக்கிறார் 🙂 . அசத்தலான உடல்மொழி & பேச்சு.

கதாப்பாத்திரங்களும் சூழ்நிலைகளும்

பயிற்சி மையத்தில் Kenzo க்கு வகுப்பெடுக்கும் சாரா தனிமையில் இருப்பவர். இதற்கான காரணங்கள் பின்னர் வருகின்றன.

இவருடைய வாழ்க்கை (வெளிநாடுகளில்) தனிமையில் உள்ளவர்களின் நிலையை பிரதிபலிக்கிறது.

சாரா, Rodney, Kenzo, அவரது மனைவி, Zoto காதலி, கேங்ஸ்டர் என்று ஒவ்வொருவர் வாழ்க்கையும் சூழ்நிலைகளும் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது.

தனது மருமகள் குழந்தைக்கு புட்டி பால் கொடுப்பதை Kenzo அம்மா பார்த்து, உன்னிடமே இலவசமா (தாய்) பால் இருக்கும் போது இதை ஏன் கொடுக்கிறாய் என்று அவர் தலைமுறை ஆதங்கத்தை தெரிவிப்பது அழகு.

இவருக்கும் இவரது மருமகளுக்கும் நடக்கும் விவாதங்கள் அட்டகாசம்.

Non Linear முறையில் காட்சிகள் பல வருகின்றன ஆனால், குழப்பமில்லை. சில நேரங்களில் அதை பொருத்திப் பார்க்கும் போது சுவாரசியமாக உள்ளது.

யார் பார்க்கலாம்?

வயது வந்தோருக்கான சீரிஸ்.

சில நொடி உடலுறவு காட்சிகள், ஓரினசேர்க்கை காட்சிகள், போதை மருந்து என்று இருப்பதால், அனைவருடனும் பார்க்க கூடிய சீரிஸ் அல்ல.

வாழ்க்கை முறை, கடினமான சூழ்நிலைகள், கேங்ஸ்டர் வாழ்க்கை, சுயநல எண்ணங்கள், தனிமை என்று வாழ்க்கையின் பல பிரிவுகளை கூறுகிறது.

அனைவருக்கும் ஏற்புடையதாக அல்ல ஆனால், உலகில் எப்படிப்பட்டவர்கள் உள்ளனர், இப்படியும் நடக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதில் கூறப்பட்டுள்ளவை எதுவுமே மிகைப்படுத்தலாக இல்லை.

கேங்ஸ்டர் சண்டைகள், பிரச்சனைகள் இப்படி நடக்கிறதா என்று தெரியாது ஆனால், மற்ற சம்பவங்கள் நடப்பவையே.

மேற்கூறியதில் உடன்பாடு இருந்தால், அவசியம் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

NETFLIX ல் காணலாம்.

Created by Joe Barton
Written by Joe Barton
Directed by Julian Farino, Ben Chessell
Starring Takehiro Hira, Kelly Macdonald, Yōsuke Kubozuka
Composer Adrian Johnston
Country of origin United Kingdom
Original languages English, Japanese
No. of series 1
No. of episodes 8
Production locations United Kingdom, Japan
Cinematography David Odd, Piers McGrail
Editors Elen Pierce Lewis, Matthew Tabern, Dominic Strevens
Running time 56–60 minutes
Distributor BBC
Original release 17 October – 5 December 2019

தொடர்புடைய விமர்சனங்கள்

The Stranger | 2020 | British TV Crime series

Bodyguard | British TV Crime series | Season 1

Line of Duty | British TV Crime series | தெறி விசாரணை

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. ட்ரைலர் பார்க்கும் போதே படம் செம்மையா இருக்கும் என்ற எண்ணம் வருகிறது.. (என் பெயர் உள்ளதே என்ற ஒரு காரணத்துக்காக Giri / Haji சீரிஸ் பார்த்தேன்) படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது.. சில நாட்களுக்கு பின் தான் பார்க்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!