தமிழ்நாட்டில் இ சேவை மையம் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது ஆனால், அதன் சேவை, தரம் மிக மோசமாக உள்ளது. Image Credit
இ சேவை மையம்
இணையம் தொடர்பான பொதுமக்களின் உதவிகளுக்காக உருவாக்கப்பட்டதே இ சேவை மையம்.
பொதுமக்கள் அனைவரும் இணையத்தில் அறிவு கொண்டவர்களாக இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும், பயன்படுத்தச் சாதனங்கள் அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறு தெரியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டதே இ சேவை மையம். இதன் சேவை இணையம் தெரியாத மக்களுக்கு உதவவும் மற்றும் மற்ற துறைகளின் வேலை பளுவை குறைக்கவும் செயல்பட்டு வருகிறது.
எடுத்துக்காட்டுக்கு ஆதாரில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் இங்கே சென்று எவரும் புதுப்பித்துக்கொள்ளலாம். எனவே, இணையம் தெரியாதவர்களுக்கு என்றில்லை அனைவருக்குமே பலனளிக்கக்கூடியது.
குறைபாடு
ஆனால், இந்தச் சேவை மையங்களில் மிகப்பெரிய குறைபாடுகள் என்றால், இணைய வேகம் மிக மோசமாக இருக்கும். பல நேரங்களில் இணையம் / வழங்கி (Server) வேலை செய்யவில்லை என்ற புகார் இருக்கும்.
எனவே, சில மையங்களில் ஒரு நாளைக்குத் தோராயமாக 25 நபர்களுக்கு மட்டுமே உதவி செய்வார்கள். தரமான வேகம் இருந்தால், இவ்வேலையை இரண்டு மணி நேரங்களில் முடித்து விடலாம்.
ஊழியர்களும் இதே பிரச்சனையைக் கைகாட்டி வேலை செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள்.
அரசின் அனுமதி பெற்று தனியாரும் இ சேவை மையம் துவங்கும் வசதியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், பெரும்பாலானவற்றை மின்னணு முறையில் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே, பல துறைகள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு விட்டன.
எனவே, மக்களுக்கு இணையம் தொடர்பான தேவைகள் பெருகி வருகிறது. ஸ்மார்ட் ஃபோன் வைத்துள்ள அனைவருக்கும் இணையம் பயன்படுத்தத் தெரியும் என்று அர்த்தமில்லை.
எனவே, இந்நிலையில் தான் இ சேவை மையம் முக்கியத்துவம் பெறுகிறது.
இது போன்ற சூழ்நிலையில் தமிழக அரசு திறமையான ஊழியர்களையும், இணைய வேகத்தையும், கணினிகளையும் சிறப்பாக வைத்து இருக்க வேண்டியது அவசியம்.
இதன் மூலம் மக்களை எளிதாக டிஜிட்டல் இந்தியா பக்கம் கொண்டு வரலாம். மற்ற மாநிலங்கள் எல்லாம் முன்னணியில் இருக்கும் போது தமிழகம் பின்தங்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
DigiLocker தளத்தில் ஏராளமான சேவைகளுக்குத் தமிழகத்திலிருந்து வசதியில்லை ஆனால், மற்ற மாநிலங்கள் பல இவற்றில் செயல்படுத்தியுள்ளன.
இன்னும் எளிமையாகக் கூறினால், தற்போது நாமெல்லாம் நம் மின்சாரக் கட்டணத்தை அமேசான் உட்படப் பல்வேறு தளங்கள் வழியாகச் செலுத்துகிறோம்.
இது போன்ற வசதியைக் கிட்டத்தட்ட கடைசியாகத் தான் தமிழகம் அனுமதித்தது.
இதனால் என்ன பயன் என்றால், மற்ற தளங்கள் மூலம் கட்டணம் செலுத்தும் போது Cashback கிடைக்கும். TANGEDCO தளம் மூலம் செலுத்தினால் கிடைக்காது.
அதோடு அரசு தளங்களை விடத் தனியார் தளங்கள் கூடுதல் வசதிகளுடன் இருக்கும்.
இவையல்லாமல் நமக்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் இணையத்தில் இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்! ஆனால், இல்லை.
தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது ஆனால், மிக மெதுவாகச் செயலாற்றி வருகிறது.
பாரத் நெட்
பாரத் நெட் என்ற இணையச் சேவையை இந்தியா முழுக்கக் குறிப்பாக அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசு கொண்டு வரப்போகிறது.
எனவே, தமிழக அரசு இவ்வசதியை பயன்படுத்தி நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே போல இ சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், சரியான ஊழியர்களை நியமித்து மக்களை டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஊக்குவிப்பதும் அவசியமாகும்.
இந்நிலை மாறும் போது டிஜிட்டல் இந்தியாவில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும். எனவே, அரசு இதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் விரும்புகிறேன்.
தொடர்புடைய கட்டுரை
DigiLocker | அரசு சேவைகள் உங்கள் கைகளில்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. இ சேவை மையம் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்பதை மறுக்க முடியாது..
கடந்த முறை ஊருக்கு சென்ற போது மின் அலுவலகத்தில் ஒரு முன்மாதிரி படிவத்தை அலுவலகம் முழுவதும் தேடி கிடைக்கவில்லை.. பின்பு விபரம் தெரிந்த ஒரு அலுவலர் இணையத்தில் EB – PORTAL ல் டவுன்லோட் செய்து தருகிறேன் என்று கூறி, pdf இல் டவுன்லோட் செய்து விட்டார்..
நானும் எப்பா!!! வந்த வேலை சுலபமா முடிச்சிச்சி என்று நினைத்தால், பிரிண்டர் வேலை செய்யவில்லை.. நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது எனக்கு உள்ளுக்குள் ஆச்சரியமாகவும், கோபமாகவும் இருந்தது.. வெளிக்காட்டி கொள்ளாமல் நடந்த நிகழ்வுகளை ஒரு அனுபவமாக எடுத்து கொண்டேன்..
Good Morning Mr. Giri. I am a regular reader of your blog for several years now.
Last year I renewed my Driving License online. No hassle at all.
I took a little long time to fill in the forms and update. On the appointed day, when I went to the RTO the whole thing went so smooth .( Thiruvanmiyur) In the evening, the smart card was handed over. Never gave even one rupee as bribe. This is also initiative of Central Government cooperated by T N Government. All these have become possible because of the conviction of one Man.
Regards
K. Ganapathi Subramanian