கமல் கடந்த இரு வாரங்களாக “ரஜினி ரஜினி” என்று அவரையே கமல் நோண்டிட்டு இருக்காரு! கமலுக்கு என்ன தான் பிரச்சனை?! Image Credit
கமலுக்கு என்ன தான் பிரச்சனை?!
மகள் சவுந்தர்யா திருமண அழைப்பிதழ் வைக்க ரஜினி சென்ற போது, கமல் ஆதரவு கேட்டாராம் ரஜினியும் “கண்டிப்பாக” கொடுக்கிறேன் என்று கூறினாராம் அதனால், இதையே மாற்றி மாற்றி வெவ்வேறு முறையில் கூறிட்டு இருக்காரு.
முதலில், அழைப்பிதழ் வைக்க வந்தவரிடம் இது போலக் கேட்டதே அநாகரீகமானது!
கமல் கூறியது என்ன தெரியுமா? என் அலுவலகத்துக்கு வந்த ரஜினியிடம் ஆதரவு கேட்டேன் என்பது, ஆனால், எதற்காக வந்தார் என்பதை மறைத்து என்னமோ இவரிடம் அரசியல் குறித்துப் பேசவே வந்தது போலச் செய்தியாக்குகிறார்.
அந்தச் சமயத்தில் கமல் மனது சங்கடப்படக் கூடாது என்பதற்காகச் சமாதானத்துக்குக் கூறி இருக்கலாம்.
அதற்காக அதையே பிடித்துக்கொண்டு ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடுங்கிற மாதிரி கேட்டுட்டே இருக்காரு.
ரஜினி, தன் ஆதரவு யாருக்கும் இல்லையென்று தெளிவாகக் கூறி விட்டார், இதன் பிறகும் தொடர்ந்து இதையே கூறிக்கொண்டு இருப்பது எந்த விதத்தில் சரி!
யாரை நம்பி கமல் கட்சி ஆரம்பித்தார்?
“தற்காப்பு முக்கியம் இல்லை தன்மானம் தான் முக்கியம்” என்று கூறியவர் ஆயிற்றே.. தைரியமான கமல் தன்மானத்தை இழந்து ஏன் ரஜினி ஆதரவை கேட்க வேண்டும்?!
ரஜினியை நம்பியா இவர் கட்சி ஆரம்பித்தார், ரஜினி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு.
கமல் இதுவரை ரஜினியை எவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்கிறார் என்று கூறுகிறேன், எந்த விதத்தில் இவர் ஆதரவு கேட்பது நியாயம் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் கூறுங்கள்.
ரஜினி மீதான கமலின் விமர்சனங்கள்
முரசொலி விழாவில்
“அடேய் முட்டாள்! எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கப் பார்க்கிறாய். தன்மானம் முக்கியமா தற்காப்பு முக்கியமா என்று கண்ணாடியைப் பார்த்துக் கேட்டேன். தன்மானம் தான் முக்கியம் என்று இந்த மேடைக்கு வந்து விட்டேன்“
என்று அவ்வளவு பெரிய மேடையில் ரஜினியை அசிங்கப்படுத்தினார்.
வட இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நான் கருப்பு ஆனால், ரஜினியின் நிறம் காவியாக இருக்கலாம்” என்றார்.
ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு, “அவருடைய கட்சிக் கொள்கைகளே என்னவென்று தெரியவில்லை, எப்படிக் கூட்டணி அமைப்பது?” என்றார்.
தேர்தலையே சந்திக்கப்போகிறார் இன்று வரை கட்சி கொள்கைகளைக் கமல் அறிவிக்கவில்லை.
“ரஜினி என்ன கேட்டாலும் எதுவுமே பேச மாட்டார்” என்றார்.
“ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை” என்றார்.
ரஜினி தேர்தலில் களம் இறங்கவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, “களத்தில் இறங்கினால் தேர்தலைச் சந்திக்க வேண்டும், பயந்து / யோசித்துக் கொண்டு இருக்கக் கூடாது” என்றார்.
தூத்துக்குடி பிரச்சனையில் ரஜினி கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்துக் கூறியதை நண்பர் என்ற முறையில் அதை ஊடகங்களுக்கு எடுத்துக்கூறாமல், “நானும் சமூகவிரோதி” என்றார்.
இவ்வளவையும் கூறி ரஜினியை அசிங்கப்படுத்தி விட்டு அவரிடமே ஆதரவு கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
நீங்கள் யாருடைய ரசிகராகவும், ஆதரவாளராகவும் யோசிக்காமல் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். கமல் செய்வது நியாயமான செயலா என்று.
இதோட விட்டாரா..
இரு நாட்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்
“ரஜினி மக்கள் மன்றம்னு ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார் ஆனால், எனக்குக் கமல் மய்யம் ஆரம்பிப்பதில் விருப்பமில்லை.
எனக்குப் பிறகும் பலரும் தொடரும் படி விரும்பியதால் அது போலப் பெயர் வைப்பது சிறுபிள்ளைத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் இருந்தது“
என்று கூறினார்.
கமல் பெரிய Intellectual ன்னு சிலர் கூறிட்டு இருக்காங்க ஆனால், அவர் ஒரு கட்சிக்கும் மன்றத்துக்குமான வித்யாசம் கூடத் தெரியாமல் இருக்கிறார்.
அதை விட முக்கியம் ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை ஆனால், கட்சி பெயர் என்று இதைக் கூறிக்கொண்டு இருக்கிறார்.
இதை நினைத்து அழுவதா சிரிப்பதா?
ரஜினி தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து உருவாக்கியதே ரஜினி மக்கள் மன்றம். இது கட்சிப் பெயர் அல்ல. இது எவருக்கும் புரியும்.
இதைக் கமல் கூறுவது தான் சிறுபிள்ளைத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் உள்ளது.
இவ்வளவையும் கூறி, ரஜினி ஆதரவு கொடுக்க வேண்டுமாம்?! என்னங்க அநியாயமா இருக்கு!
கமலின் ரஜினி ஆதரவு எதிர்பார்ப்புகள்
ரஜினி ஆதரவு குறித்துக் கமல் கூறியதை கூறுகிறேன் கேளுங்க..
ரஜினி ஆதரவு கொடுப்பார்
நாங்கள் கேட்க மாட்டோம் அவராக ஆதரவு கொடுக்க வேண்டும்.
நாங்கள் ஆதரவு கேட்பது முறையல்ல, அவராகக் கொடுத்தால் நல்லது.
ரஜினி ஆதரவு கொடுக்க வேண்டும்
ரஜினி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்க முடியாது.
ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறோம்.
ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று கெஞ்சிக் கொண்டு இருக்க முடியாது.
ரஜினி ஆதரவு கொடுத்தால் நல்லது, நாட்கள் குறைவாக உள்ளது.
வசையும் வேண்டுகோளும்
கட்சி ஆரம்பித்ததில் இருந்து ரஜினியை வரிசையாக வசைபாடி விட்டுத் தற்போது “ஆதரவு கொடுங்க ஆதரவு கொடுங்க” என்று நெருக்கடி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
கமல் மய்யம் பல இடங்களில் டெபாசிட் கூட வாங்காது, ரஜினி ஆதரித்தாலும் இதே நிலை தான்.
இறுதியில் என்ன ஆகும்? ரஜினி ஆதரித்தும் கமலால் வெற்றி பெற முடியவில்லை என்று ரஜினியை எதிர்ப்பவர்கள் கூறி ரஜினியை அழிக்கப் பார்ப்பார்கள்.
இத்தேர்தலில் நின்றால், இது போல நிலை வரும் என்று ரஜினிக்கு தெரியும். எனவே தான், அவர் 2017 டிசம்பர் 31 ல் இருந்து சட்டமன்ற தேர்தலை மட்டும் குறிப்பிடுகிறார்.
யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெளிவாக அறிக்கையிலும் தெரிவித்து விட்டார்.
ஏனென்றால், இத்தேர்தலில் செம குழப்பம் உள்ளது. இரு பெரிய ஆளுமைகள் இல்லாத தேர்தல்.
எனவே, தற்போது ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தற்கொலைக்குச் சமம்.
இதை உணர்ந்து தான் ரஜினி முன்னரே தான் தேர்தலில் பங்கெடுக்கவில்லை என்று கூறி விட்டார்.
யார் புத்திசாலி யார் முட்டாள்?
அவரசப்பட்ட கமலை புத்திசாலி என்றும் பொறுமை காக்கும் ரஜினியை முட்டாள் என்றும் சிலர் கிண்டல் செய்கிறார்கள்.
யார் முட்டாள் புத்திசாலி என்பதை காலம் தீர்மானிக்கட்டும்.
ரஜினியை விடத் தான் தைரியமானவன், புத்திசாலி, அனைத்திலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணமே கமலின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காரணம்.
கமலுக்கு அனைத்திலும் ஒரு அவசரம்.
கட்சியின் அடிப்படை கட்டமைப்பைக் கூடச் சரிவரச் செய்யாமல் அரைகுறையாகத் தேர்தலில் இறங்கி, தற்போது அதன் தீவிரம் உணர்ந்ததால், இவ்வளவு நாளாக விமர்சிக்கப்பட்ட ரஜினியின் ஆதரவு கமலுக்குத் தேவைப்படுகிறது.
கமல் அவர்களே! முதலில் உங்கள் இருவருடைய 40+ வருட நட்புக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தொடர்ந்து விமர்சிக்கும் நண்பர் ரஜினி ஒரே ஒரு முறையாவது உங்களை விட்டுக்கொடுத்துப் பேசி இருப்பாரா? அவமதித்து இருப்பாரா?
கொஞ்சம் உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள்.
எப்போதுமே உங்களைப் புகழ்ந்து தானே பேசியிருக்கிறார். நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் நிற்கிறேன் என்று சொன்னதற்குக் கூட வாழ்த்துக்கள் தானே கூறினார்.
இந்த மனுசனை கிண்டலடிக்க விமர்சிக்க உங்களுக்கு எப்படி மனசு வருகிறது?
தன்மானமா தற்காப்பா என்றீர்களே? தற்போது நடப்பது தன்மானமா தற்காப்பா?!
எண்ணம் போல வாழ்க்கை!
தொடர்புடைய கட்டுரை
சில மாதங்களுக்கு முன் கமல் என்ன கூறினார் என்பது கூட உங்களில் பலருக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம், “ரஜினியுடன் அரசியலில் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை” என்று கமல் கூறியது ஆதாரத்துடன் இக்கட்டுரையில் உள்ளது.
இதையும் படித்து விட்டுப் பிறகு விமர்சனத்தை முன் வையுங்கள்.
கமல்! உங்களைப் பற்றி மட்டும் பேசுங்க..
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
உண்மையான விமர்சனத்தை சொல்லத் தோன்றுகின்றது.
உங்கள் கட்டுரைகள் சிறிய ரக துணுக்குச் செய்திகள் போல கதம்ப மாலைகள் போலவே இருக்கும். எந்த தாக்கத்தையும் உருவாக்காது. எழுவது சதவிகிதம் (தொழில் நுட்ப விசயங்கள் தவிர்த்து. அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது) நான் படித்து பல விதங்களில் பல கோணங்களில் உள் வாங்கியதாக இருக்கும். ஆனால் இந்தப் பதிவு ரொம்ப ஆச்சரியப்படுத்தியிருக்கும். அட்டகாசம். காரணம் நமக்கு ஒன்றின் மேல் ஈர்ப்பு மிக அதிக அளவில் இருந்தால் அதன் பலன் எந்த அளவுக்கு வெளிப்படும் என்பதற்கு இந்தப் பதிவு முக்கிய உதாரணம்.
அப்புறம் என் கணக்குப்படி கமல் தமிழகம் முழுக்க ஒரு லட்சம் ஓட்டு வாங்கினால் ஆச்சரியம். அவர் அன்று முதல் இன்று வரையிலும் அவருக்காக மட்டுமே வாழ்பவர். சிம்பிள்.
மக்கள் பேசும் போது கூட எம்.ஜி.ஆர்…. சிவாஜி மற்றும் ரஜினி… கமல் என்றுதான் சொல்லுவார்கள், அதே எம்.ஜி.ஆர்… சிவாஜி அரசியல் வாழ்க்கையில் எப்படியோ அப்படியே ரஜினி…. கமல்…..இது ஒரு கால சக்கரம் இதை யாரும் மாற்ற முடியாது.
ரஜினி சொன்ன படி நல்ல நடிகன் நிஜ வாழ்க்கையில் நடிக்க கூடாது, இதை அவருக்கு சொன்னது முதல் சந்திப்பில் அவர்களது குரு பாலச்சந்தர்.
காமிடியில் கலக்கிய நல்ல காமிடி நடிகர்கள் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அழிந்து போவது போல 🙂 கமல் தன் மேதாவிதனத்தை (புரிந்த விசையத்தை புரியாமல் பேசுவது) மக்கள் இன்னும் நம்புவார்கள் என்று நினைக்கிறார்.
தேர்தல் முடிந்ததும் பூனை குட்டி வெளியே வந்து விடும் :-).
ஒரு படம் வெளியே வர முடியவில்லை என்றதும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று புலம்பிய ஒருவர் எப்படி நாட்டின் தலைவனாக முடியும்?
அப்படி பார்த்தல் உழைப்பாளி படம் வரும் முன் ரஜினி படாத கஷ்டமா 🙂
ஒரு வார்த்தைல சொல்ல வேண்டும் என்றால் ரஜினி முட்டாப்பய,நீ ஒரு கூமுட்டை
இவ்வளவு நல்ல கருத்து சொன்ன ஏன் ராசா நீ பெயர் இல்லாமல் அனாதையாக வந்து நிற்கிற?
நீங்கள் உங்களின் நேரத்தை தேவையற்றவிதத்தில் வீணாக்கிறீர்கள்.ரஜினி ஆதரவு கொடுத்தால் என்ன கொடுக்கவில்லையென்றால் என்ன, இந்த தேர்தலில் கமல் தோல்வியடைவார். ஆனால் முன்னாள் அரசியல்வாதி ஜோதிஜி சார் சொன்னதிலும் பார்க்க 3/4 மடங்கு வாக்குகளை பெறுவார். அதில் பெருமளவு வாக்குகள் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைக்கும்.
இந்த தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளை வென்றால் ரஜினி இன்னமும் இரண்டு மூன்று படம் நடித்துவிட்டு தன் வயதை காரணம் காட்டி மன்றத்தை இழுத்து மூடுவார் இல்லை தனுசிடம் தள்ளிவிடுவார். இந்த தேர்தலில் அதிமுக வென்றால் முக்கிய காரணமாக பணம் இருக்கும். ரஜினி ஒருபோதும் தன் காசினை இறக்கபோவதில்லை.
மாறாக திமுக வென்றால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனித்தோ இல்லை அதிமுகவுடனோ சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இடமுண்டு.
இயேசுவின் 12 சீடர்களின் கதை உங்களிற்கு தெரிந்திருக்கும் . அதில் ஒருவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று மற்றய சீடர்கள் மூலம் கேட்டபோது அவர் சொன்னாராம், நான் இயேசுவின் காயத்தில் கை வைத்தால் அன்றி நம்ப மாட்டேன் என்று. அந்த நிலையில்தான் நானும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை இன்று வரைக்கும் பார்க்கிறேன்.
ரஜினி அரசியலில் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு மக்கள்
வாக்களித்து தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவந்தால் தவிர நான் ரஜினி அரசியலில் நுழைவார் என்பதை நம்ப மாட்டேன்.
இனி உங்களின் கட்டுரைக்கு வருவோம். ரஜினி அனைவருக்கும் நல்லவராக இருக்க நினைக்கிறார். மானில நலன் என்று வரும்போதும் இப்படியேதான் செய்யப்போகிறார். கமல் கேட்டார். ரஜினி இல்லை என்று அறிவித்தார். அத்துடன் முடிந்தது. கமல் நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்தபின்னரும் ரஜினி வாய் பொத்தி இருந்தால் அவர் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதுதான் உண்மை.
நண்பரிடம் ஆதரவு கேட்டதை குறை சொல்லும் நீங்களே சமூக விரோதி கருத்துக்கு கமல் நண்பர் என்ற முறையில் விளக்கம் கொடுத்திருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். கமல் ரஜினிக்கு நண்பராக விளக்கம் கொடுக்கவேண்டும் ஆனால் ஆதரவு கேட்க கூடாது. மிக அற்புதமான விளக்கம்.
சந்தானத்தின் நகைச்சுவை ஒன்றுள்ளது. பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்னு , அது கமலுக்கும் , ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கும் பொருந்தும்.
Priya Jo
அடேங்கப்பா……. பின்னி பெடல் எடுத்துருக்கீங்க? ஆமா? அதென்ன முன்னாள் அரசியல்வாதி.
பொள்ளாச்சி தொகுதியில் கமல் கட்சி சார்பில் யார் நிற்கின்றார் என்றே தெரியவில்லை. ஒரு முகநூல் பதிவில் ஒரு பெண்மணி அமெரிக்காவில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர், அவர் திமுக ஆதரவாளர் இப்படி எழுதுகின்றார். (அவர் எழுதிய பின்பு அங்கு யார் நிற்கின்றார்கள் என்று தேடி கண்டு கொண்டேன்)
நாங்க திமுகவிற்குத் தான் எப்போதும் போடுவோம். ஆனால் இந்த முறை சொந்தக்காரங்க கமல் கட்சியில் நிற்கின்றார். அவருக்குத்தான் போடுவோம். எங்க சாதிக்காரங்க அவங்களுக்குப் போடாமல் வேறு யாருக்குப் போடுவது.
இதில் நான் புரிந்து கொண்டது. அந்த அம்மாவுக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா எவ்வித தாக்கத்தையும் படிப்பினையும் உருவாக்கவில்லை. சாதி எண்ணம் மாறவே இல்லை. காலம் முழுக்க திமுக எண்ணம் முழுமையாகமாறியதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் தமிழர்களின் தனித்த குணம் இங்கே ஆராயப்படலாம்.
நீங்கள்தான் சொன்னீர்கள் முன்னர் தேர்தலில் மனு தாக்கல் செய்து பின்னர் விலகியதாக. இப்போதும் நீங்கள் அரசியலில் இருந்தால் இங்கே கருத்துசொல்லவே நேரமிருக்காதே.. அதனால்தான் உங்களை முன்னாள் அரசியல்வாதி என்றேன்.
என்னுடய உறவைனர் ஒருவர் திருமணம் செய்தது சென்னையை சேர்ந்த ஒருவரை, அவர் இங்கே வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தியாவில் இப்போது அவருக்கு குடியுரிமை கூட கிடையாது. எனக்கு தெரிந்த இந்திய அரசியல் கூட அவருக்கு தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் இரட்டை இலை சின்னம். இப்போது கேட்டாலும் அதிமுக தான் வெல்லவேண்டும் என்று சொல்வார். எம்ஜியார் காலத்தில் அவருக்கு எப்படியும் 10 வயதுக்கு கீழாகத்தானிருக்கும். ஆனால் இன்றுவரை இரட்டை இலைதான். அதே போல எப்போதும் வெளியே உணவருந்த சென்றாலும் அவருக்கு தமிழ் உணவுகள்தான் வேண்டும். மற்றய உணவகங்களுக்கு போனால் சாப்பிடாமல் இருந்தாலும் இருப்பாரே தவிர முகர்ந்து கூட பார்க்க மாட்டார். சாதி பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் அவரிடம் சாதி பற்றி பேசியதில்லை. ஒரு பானை சோற்றிகு ஒரு பருக்கை பதம்.
இப்படியாவர்கள்தான் கமல் இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறுவார் என்று நினைக்கிறேன், எம்ஜியாரிற்கே இப்போது ரசிகர்கள் இருக்கையில் கமலுக்கு சில லட்சம் பேராவது இருக்க மாட்டார்களா.
பத்திரிக்கைத் துறை, திரைப்படத்துறை, அரசியல் இந்த மூன்று துறையிலும் குறிப்பாக அங்கே உள்ளே நடக்கும் உள் அரசியலைப் பற்றி எதுவும் தெரியாமல், இதில் உள்ள முக்கியமானவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களைப் பற்றி அறியாமல் சில வருடங்களுக்கு முன்பு என் வலைபதிவில் நான் எழுதியதை இப்போது யோசித்துப் பார்த்தாலும் சிரிப்பு தான் வரும். காரணம் எதிர்கால சமூகம் எப்படி இருக்க வேண்டும்? என்ற பெரிய ஆவல் என் எழுத்தில் ஒவ்வொரு இடங்களிலும் இருக்கும். 2013 க்குப் பிறகு எனக்கு உருவான தொடர்புகள், வாசித்த தேர்ந்தெடுக்கப்பட்ட வாசிப்புகள் மூலம் நான் அறிந்த உண்மை என்பது சாதாரண சிந்தனைகளுக்குப் அப்பாற்பட்டது.
அதன் பிறகே என் மயக்கம் தெளிந்தது. குறிப்பாக நடிகர்கள் அவர்களின் பின்புல வாழ்க்கை நியதிகள் பற்றி அறிந்த போது இவர்களால் எப்படி சகஜமாக வாழ முடிகின்றது? என்ற வியப்பே மேலோங்கியது. நாற்பது வருடம் திரைப்படத்துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் கமல் ரஜினி குறித்து பார்க்கும் பார்வையும் ஊடகங்கள் நமக்கு முன் வைக்கும் முகமும் வெவ்வேறானது.
நீங்கள் சொன்ன எம்ஜிஆர் குறித்த செய்திகள் பற்றி பல்வேறு விதமாக கேட்டு வாசித்து இருந்தாலும் நிச்சயம் அவரின் (தொடக்கம் முதல்) திட்டமிடுதல் என்பது நாம் நினைத்தே பார்க்க முடியாதது. இன்று வரையிலும் சோர்ந்து போகும் சமயங்களில் அவரின் பாடல்களைக் (காட்சிகளை தவிர்த்து) கேட்கும் போது உருவாகும் உற்சாகம் அளவில்லாதது.
அவர் நிச்சயம் எளிய மக்களைப் பற்றி அதிகம் நினைத்தார். அவர்களுக்காக பலவிதங்களில் தன் வாழ்க்கையை வடிவமைக்கவும் செய்திருந்தார். ஆனால் முழுமையாக அல்ல. அரசியல் சதுரங்கத்தில் அவரால் கூட மாறமுடியவில்லை என்பது தான் எதார்த்தம். காரணம் இங்கே அரசியல் என்பது எதிராளியின் அத்தனை டார்ச்சர்களையும் பொறுத்துக் கொண்டு தனக்கு மேலே இருப்பவர்களின் அதிகாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு (மத்திய அரசு) தன்னை வடிவமைத்துக் கொள்வதே நிலைப்பதற்கான வழி.
கலைஞர் தன் கொள்கையில் தோற்றுப் போனது இங்கே தான் தொடங்குகின்றது. எம்.ஜி.ஆர் இன்று வரையிலும் மக்கள் மனதில் வாழ்வதும் இதன் காரணமாகத்தான்.
ஏற்கனவே ரஜினி குறித்து என் பார்வையை என் வலையில் எழுதி கிரியை சங்கடப்படுத்தியது என் நினைவுக்கு வந்து போகின்றது. இப்போது தவிர்க்கவே செய்கின்றேன். நாம் ஒரு விசயத்தை அதிக அளவு விரும்பும் போது அது குறித்த எதிர்மறை செய்திகளைப் படித்துப் படித்து அப்பவும் அந்த விருப்பம் இன்னமும் நம்முள் மேலோங்கி இருக்கின்றதா? இல்லை விருப்பங்கள் மாறுகின்றதா? என்று அவ்வப்போது சோதித்துக் கொள்வதுண்டு.
ரஜினி தன்னை தக்கவைத்துக் கொள்ள எப்படியெல்லாம் செயல்படுகின்றார் என்பதனையும் கமல் எப்படியெல்லாம் தன்னை வளர்த்துக் கொள்ள மற்றவர்களை எந்த அளவுக்கு அழிக்க தயாராக இருக்கின்றார் என்பதையும் கவனிப்பதுண்டு. கமல் கட்சியில் பாரதி கிருஷ்ணகுமார் என்பவர் தொடக்கத்தில் தீவிரமாக இருந்தார். மதுரை ஞானசம்பந்தமும் இருந்தார். இன்னும் சிலர். ஒரு வருடத்திற்குள் இவர்கள் யாரையும் காணவில்லை. கமல் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதற்கு இவர்கள் உதாரணம்.
நடிகை கௌதமி தன்னை காப்பாற்றிக் கொள்ள பிரதமர் மோடியைச் சந்தித்து தணிக்கைக்குழுவில் தனக்கான பதவியைப் பெற்று தனிப்பட்ட முறையில் பேட்டியளித்த போது என் மகளுக்கு பாதுகாப்பு கருதியே நான் அவரை விட்டு வெளியே வந்தேன் என்பதற்குப் பின்னால் உள்ள செய்திகளை அறிந்திருந்தால் நம்முடன் வாழும் மனிதர்களின் (பிரபல்யங்களின்) வக்ரமும் வன்மமும் எந்த அளவுக்கு உள்ளது என்பதனையும் உணர்ந்து கொள்ள முடியும்.
நிச்சயம் தேர்தல் முடிவுகள் வரும் தயாரிப்பாளர் தாணு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருப்பார் என்பது என் யூகம். காரணம் கமல் குறித்து அவர் எதிர்கால தலைமுறைகள் அறிந்த கொள்ள அவரிடம் தான் அதிக விசயங்கள் உள்ளது. ஆனால் ரஜினி பணம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் தன் குடும்ப பாதுகாப்பு என்ற வளையத்துக்குள் தன்னை பக்குவமாக பொருத்திக் கொண்டு எதார்த்த மனிதராக எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார். அவரின் தற்போதைய உடல்நிலை, அவரின் தனிப்பட்ட மனநலம் சார்ந்த விசயங்களில் அவருக்கும் அரசியலுக்கும் ஏழு காத தூரம் என்பதனையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
@ஜோதிஜி
“உண்மையான விமர்சனத்தைச் சொல்லத் தோன்றுகின்றது.”
இவ்வளோ நாளா நீங்க சொன்னது எல்லாம் உண்மையான விமர்சனம் என்று நம்பி கொண்டு இருந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே 🙂
“உங்கள் கட்டுரைகள் சிறிய ரகத் துணுக்குச் செய்திகள் போலக் கதம்ப மாலைகள் போலவே இருக்கும்.”
அது கட்டுரையின் தலைப்பைப் பொறுத்து.
“எந்தத் தாக்கத்தையும் உருவாக்காது”
எதனால் உங்களைப் போன்றவர்களுக்குத் தாக்கத்தை உருவாக்கவில்லை என்று பரிசீலித்துப் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
“நமக்கு ஒன்றின் மேல் ஈர்ப்பு மிக அதிக அளவில் இருந்தால் அதன் பலன் எந்த அளவுக்கு வெளிப்படும் என்பதற்கு இந்தப் பதிவு முக்கிய உதாரணம்”
இக்கட்டுரை எழுத எனக்கு 25 – 30 நிமிடங்களே ஆனது, பிழை திருத்தம் மற்றவைக்குத் தான் கூடுதல் நேரம் ஆகியது.
நான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் ரசித்தே எழுதுகிறேன். ஒவ்வொரு கட்டுரைக்கும் என்னுடைய உண்மையான உழைப்பை கொடுத்து இருப்பேன்.
படிப்பவருக்கு எதையோ கொடுக்க வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்து ஏனோ தானோவென்று எழுதியது இல்லை.
நான் உங்களைப்போல தொடர்ந்து சமுகம், அரசியல் சார்ந்து கட்டுரைகளை எழுதுவதில்லை. என்னுடையது அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான எழுத்து.
எனவே உங்களுக்கு அப்படி தோன்றியதில் வியப்பில்லை.
இக்கட்டுரை உங்களுக்கு விருப்பமான விவாத உள்ளடக்கமாக இருந்து இருக்கலாம் அதனால் இப்படித் தோன்றி இருக்கலாம்.
@சிங்கக்குட்டி எப்படி இருக்கீங்க? 🙂
தேர்தல் முடிந்ததும் பல பரபரப்புச் சம்பவங்கள் நடக்கும்.
@Unknown ஆமா, இவரு அப்துல் கலாமுக்கு டியூசன் எடுத்தாரு..!
@ப்ரியா
“நீங்கள் உங்களின் நேரத்தை தேவையற்றவிதத்தில் வீணாக்கிறீர்கள்”
நிச்சயம் கிடையாது. என்னுடைய கருத்தை நான் கூறுகிறேன். எழுதுவது எனக்கு Passion அதை நான் விருப்பமாகச் செய்கிறேன், என்னளவில் மனசாட்சிக்கு நேர்மையாக.
நேரத்தை வீணடிப்பது எதுவென்றால்..
உனக்கு ரஜினியை பிடிக்காது. நான் ரஜினி ரசிகன்.
எனவே, நீயும் நானும் ரஜினி குறித்து விவாதிப்பது தான் எனக்கு நேர விரயம். எனக்கு மட்டுமல்ல, உனக்கும் நேர விரயம்.
ஏனென்றால், அதனால் ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. இருவரும் என்ன விவாதித்தாலும் அதே நிலையில் இருப்போம்.
உனக்கு ரஜினியை பிடிக்கவில்லை. எனவே மனம் போன போக்கில் ரஜினி பற்றி உன்னுடைய ஊகங்களை எழுதிக்கொண்டு இருக்கிறாய். ஏனென்றால் நீ கூறிய அனைத்துமே தவறு.
ஆனால், இதைத் தற்போது என்னால் நிரூபிக்க முடியாது என்பதால், உன்னைப் போன்றவர்களின் விமர்சனங்கள் கிண்டல்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை.
இதை நான் உணர்ந்தே இருப்பதால், எனக்கு வருத்தமில்லை.
“நண்பரிடம் ஆதரவு கேட்டதைக் குறை சொல்லும் நீங்களே சமூக விரோதி கருத்துக்குக் கமல் நண்பர் என்ற முறையில் விளக்கம் கொடுத்திருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். கமல் ரஜினிக்கு நண்பராக விளக்கம் கொடுக்கவேண்டும் ஆனால் ஆதரவு கேட்க கூடாது. மிக அற்புதமான விளக்கம்”
போன கட்டுரையில் தான் உன்னை வயதுக்கு மீறிய முதிர்ச்சி என்று கூறி இருந்தேன் அதை வாபஸ் வாங்கிக்கிறேன் 🙂
தனிப்பட்ட முறையில் இருவர் பேசியதையும், ஊரே தெரிந்தே ஒரு விசயத்தையும் ஒப்பிட்டு பேசுகிறாயே.. மிக அற்புதம்.
சின்னத் திருத்தம் ஆதரவு கேட்டதைக் குறை கூறவில்லை, ஆதரவு கேட்ட முறையைத் தான் குற்றம் சொல்கிறேன்.
தனிப்பட்ட முறையில் இருவர் பேசியது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இந்த நிலையில் அடுத்தவர் அனுமதியில்லாமல் அதைப் பொது வெளியில் ஒருவர் சொல்வதன் பெயர் என்ன தெரியுமா?
கட்டுரையிலேயே கூறி இருக்கிறேன், திருமண அழைப்பிதழ் வைக்க வந்தவரிடம், இது போலப் பேசுவதே தவறு. ரஜினி அரசியல் பேசவரவில்லை.
அப்படியே பேசி இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக ஒருவர் அறிவிக்காத போது அதைப் பொதுவெளியில் கூறுவது அநாகரீகம்.
உனக்கு இரு சம்பவங்கள் கூறுகிறேன்..
அதுவும் இதே போலத் தான்.. ரஜினி கமல் பற்றிய என்னுடைய கட்டுரை, 9 வருடங்கள் இருக்கலாம்.
கருத்துப்பகுதியில் விவாதிக்காமல், என்னுடைய கட்டுரை அவருக்கு மின்னஞ்சலில் வந்ததால் அதில் இருந்தே என்னுடன் விவாதம் புரிந்தார். நானும் மின்னஞ்சலில் விவாதித்தேன்.
பின் திடீர் என்று நான் கூறியதில் சிலதை மட்டும் எடுத்து கருத்துப் பகுதியில் போட்டு, இப்படிச் சொன்னீங்களே? என்று கூறி விட்டார்.
அப்போதெல்லாம் இது போல ஒன்றிண்டு பேர் கருத்திடும் காலமல்ல, 20, 30 பேர் அசாலட்டாகக் கருத்திட்டு விவாதம் நடக்கும்.
இவர் இதைப் போட்டதும் எனக்குத் தர்மசங்கடமாகி விட்டது. முழுமையான கருத்தை போடாமல் அவருக்குத் தேவையானதை மட்டும் எடுத்து போட்டு விட்டார், பார்ப்பவர்களுக்கு என் மீது தான் தவறு என்பது போலத் தெரியும்.
இதன் பிறகு நான் கூறியதையும் எடுத்துப்போட்டு விளக்க வேண்டியதாகி விட்டது.
அன்று ஒரு முடிவு எடுத்தேன், இனிமேல் தனிப்பட்ட முறையில் யாருடனும் Blog கட்டுரை குறித்து விவாதிக்கக் கூடாது. என்ன கூற வேண்டும் என்றாலும், தளத்திலேயே கூறச் சொல்ல வேண்டும் என்று.
இதன் பிறகு என்னிடம் யாராவது என்னுடைய கட்டுரை பற்றி விவாதமாக மின்னஞ்சலில் கேள்வி கேட்டால், தளத்திலேயே கேட்டு விடுங்கள் பதில் அளிக்கிறேன் என்று கூறி விடுவேன்.
மிகப்பெரிய படிப்பினை.
அதே போல Bloggers கிட்டயும் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் கூறியதை கட்டுரையாக்கி நண்பர் கிரி இது போலக் கூறினார் என்று கூறி விட்டார்கள்.
ரொம்ப அசிங்கமா போச்சு!
தற்போதல்ல, 10 வருடங்களுக்கு முன்பு. அதன் பிறகு நான் Bloggers கிட்ட பேசுவதையே தவிர்த்து விட்டேன், அப்படியே சந்திக்க வேண்டி வந்தாலும், எதையும் கூறுவதில்லை.
எனக்கு Blog ல் தற்போது வரை நண்பர்கள் மிகக் குறைவு. ஜோதிஜி போல வெகு சிலரே.
நானும் இதே தவறை ஒரு முறை செய்து இருக்கிறேன் ஆனால், விளையாட்டாகக் கூறினேன் அதை அவன் சீரியஸாக எடுத்துக் கொண்டான். எனக்கு ரொம்ப வருத்தமாகி விட்டது.
எப்போதுமே அடுத்தவர் அனுமதி பெற்று தான் எதையும் எழுதுவேன். இருப்பினும் நகைச்சுவை என்று நினைத்து எழுதி தவறாகி விட்டது.
அதில் இருந்து இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறேன். இது ஒரு வருடம் முன்பு நடந்த சம்பவம்.
எனவே, தனிப்பட்ட முறையில் பேசியதை அடுத்தவர் அனுமதி இன்றிப் பொது வெளியில் கூறுவது அநாகரீகம். இதைச் சமூகவிரோதி பேச்சோடு ஒப்பிடுவது முட்டாள்தனம்.
“கமல் ரஜினிக்கு நண்பராக விளக்கம் கொடுக்கவேண்டும் ஆனால் ஆதரவு கேட்க கூடாது. மிக அற்புதமான விளக்கம்”
கட்டுரையை முழுவதும் படித்தாயா?
கமல் தான் ரஜினியின் ஆதரவு வேண்டாம், அவரும் நானும் இணைந்து செயல்பட முடியாது என்று கூறி வந்தார். ரஜினி எதுவும் கூறவில்லை.
அப்போதெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டு இப்ப நிலைமை சரியில்லை என்றதும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்.
ஆதரவு கொடுத்தாலும் நீ சொன்னது போலக் கமல் வெற்றி பெற போவதில்லை, இதனால் கமலுக்குப் பெரிய இழப்பில்லை, துடைத்து போட்டுவிட்டு பிக் பாஸ் போய் விடுவார்.
ரஜினிக்கு மாபெரும் இழப்பு, அவரது அரசியல் வாழ்க்கையையே கேள்வி குறியாக்கி விடுவார்கள், ஊடகமும் எதிர்கட்சிகளும்.
கமலுக்கு ஆதரவு கொடுப்பது அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சொன்னது போல அரசியல் தற்கொலை. கமல் செய்யும் தவறுகளுக்கு ரஜினி ஏன் பொறுப்பாக வேண்டும்?
தூத்துக்குடியில் சமூக விரோதி என்று ரஜினி கூறியது வன்முறையில் ஈடுபட்டவர்களை ஆனால், ஊடகங்கள் மக்களைக் கூறினார் என்று திரித்து விட்டார்கள்.
பொது / தனியார் சொத்துக்களை எரித்து, உடைத்து வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகள் அல்லாது வேறு யார்?!
பொதுமக்களுக்கும் வன்முறைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ரஜினி கூறினார். எந்த ஊடகமாவது இப்பேச்சை முன்னிறுத்தினார்களா?
ஊடகங்கள் செய்தது தான் தவறு, ரஜினி பேசியதல்ல.
ரஜினி பேச்சுக்கு ஊடகங்களிடம் கமல் விளக்கம் கொடுக்கவில்லையென்றாலும், எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊற்றுவது போல “நானும் சமூக விரோதி” தான் என்று கூறியதையாவது அரசியல்வாதியாக இல்லையென்றாலும் ஒரு நண்பராகத் தவிர்த்து இருக்கலாம்.
“சந்தானத்தின் நகைச்சுவை ஒன்றுள்ளது. பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்னு , அது கமலுக்கும் , ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கும் பொருந்தும்.”
பருத்தி மூட்டை ரஜினி எங்கே இருக்கலாம் என்று காலம் தீர்மானிக்கட்டும் நீயோ நானோ அல்ல.
@ஜோதிஜி உங்களுக்குக் கிடைத்த திரை தொடர்புகள் வழியாகவும், நடிகர் சிவக்குமார் தொடர்பு மூலமாகவும் உங்களுக்கு நடிகர்கள், அவர்கள் வாழ்க்கை, திரையுலகம் சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரிந்ததாக அடிக்கடி உங்கள் கட்டுரைகளில் குறிப்பிட்டு வருகிறீர்கள்.
இதோடு திரையுலகம் அல்லாத தொடர்புகளும் கிடைத்ததாகக் கூறி வருகிறீர்கள்.
மேலே உள்ள கருத்திலும் அதைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
திரையுலகில் மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை.
ஆனால், ரஜினி பற்றி எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும்.. எப்படின்னு கேட்காதீங்க.
உங்களுக்கு எப்படி நடிகர்கள் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்ததோ, எனக்கும் அதே வகையில் எனக்குள்ள தொடர்புகள் வழியாக என்ன நடக்கிறது என்பது எனக்கு நன்கு தெரியும்.
ரஜினி நேர்மையானவர் என்று நான் கூறினால், உங்களுக்கு, ப்ரியாக்கு நகைப்பாக இருக்கலாம் ஆனால், அது தான் உண்மை.
ப்ரியா க்குச் சொன்னது போல, என்னால் அதை நிரூபிக்க முடியாது ஆனால், நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
அனைவரையும் திருப்தி செய்வதோ அவர்களை நம்ப வைக்க முயற்சி எடுப்பதோ என் வேலையல்ல.
என்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக எவரையும் பொய்யாக ஆதரித்தோ விமர்சித்தோ என்னால், நானே நினைத்தாலும் எழுதவே முடியாது, அது ரஜினியாக இருந்தாலும்.
உங்களுடைய கடைசி வரி குறித்து எழுத நினைத்தேன்.. ஆனால், எதையும் காலம் தீர்மானிக்கட்டும். இப்போது விளக்குவதால் எந்தப் பயனுமில்லை.
அப்புறம்… எனக்காக ரஜினியை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டாம், அதில் எனக்கு உடன்பாடில்லை.
விமர்சங்களை ஏற்கிறேன், பொய்களை ஊகங்களை அல்ல.
ரஜினி பற்றிய கட்டுரையில் என்னை ஒருவர் கடுமையாக விமர்சித்த போது, பதிவுலகில் பிரபலமானவரும் தற்போது திமுகவில் முக்கிய நபரும் எனக்கு நெருங்கிய நண்பருமான “அப்துல்லா” கூறியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
(விமர்சித்தவர் பிறகு நண்பராகி விட்டார், அது இக்கருத்துக்குச் சம்பந்தம் இல்லா செய்தி.)
“பொதுவில் வந்துவிட்ட எவரையும் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் நம்மால் விமர்சிக்கப்படும் நபரைப் பற்றி விமர்சிக்கும் முன் முழுமையாக அறிந்து கொள்ளும் கடமையும் நமக்குண்டு.”
ரஜினியை தாராளமாக விமர்சியுங்கள், ரஜினி ஒன்றும் விமர்சிக்கப்படக்கூடாதவர் அல்ல ஆனால், சரியாக விசாரித்து எழுதுங்கள்.
பிரியா ஜோ நான் பாட்டுக்கு சிவனேன்னு போய்க்கிட்டுருந்தேன். ஏம்மா இப்படி கிரிக்கிட்ட ஒரண்ட இழுக்க வச்ச. இந்த மாதிரி கோக்குமாக்கா எழுதிடக்கூடாதுன்னு தான் முகநூலில் மட்டும் கொஞ்ச நாளா எழுதிக்கிட்டுருக்கேன். வலையில் எழுதி கூட கொள்ள நாளாச்சு. இப்பப் பாரு. அவரு ஆதி அந்தம் எல்லாத்தையும் நோண்டி நொங்கெடுக்குராரு. அவரு விரும்புறாரு. நம்ம ரஜினி தானே. விரும்பிட்டுத்தான் போகட்டுமே? எங்கவூட்ல ரஜினி பேரைச் சொல்லி ஒரண்ட இழுத்து அப்பப்ப டென்சன் ஆக்கிவிடுவதுண்டு. கிரி ச்சும்மா லுல்லுலாயி…… லூஸ்ல விடுங்க பாஸ்.
விடுங்க சார். யாரு அவரு. நம்ம அண்ணன்/தம்பி தானே.இன்னைக்கு நேத்தா நாம ரஜினியை விமர்சிக்கிறோம். இன்னிக்கு கோவிச்சுக்குவார். நாளைக்கு சமாதானம் ஆகிவிடுவார். என்ன இன்னுமொரு 10 வருடம் உயிரோட இருந்தோமென்றால் ரஜினி யார் என்று தெளிவாகவே தெரிந்துவிடும் ,எங்களுக்கும் சரி , கிரி அண்ணாவிற்கும் சரி.
ரஜினி அரசியலுக்கு வந்து நாங்கள் நினைப்பது போலவே நடந்தால் கிரி அண்ணா நம்மிடம் வருத்தம் தெரிவிப்பார். மாறுதலாக ரஜினி உண்மையிலேயே கிரி அண்ணன் நினைப்பதுபோல நடந்தால் நாங்கள் ஒரு 2 மாசம் இங்கே வருவதை மறந்துவிட்டால் அவரும் எங்களின் விமர்சனங்களை மறந்துவிடுவார். ( ஆனால் இரண்டுமே நடக்கப்போவதில்லை. 2 வருடத்தில் ரஜினி தன் உடல் நலத்தை காரணம் காட்டி மன்றத்திற்கு மூடுவிழா நடத்துவார். )
நான் ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி சில கட்டுரைகளை மட்டுமே படித்துள்ளேன். அவற்றின் மூலம மட்டுமே அவரை உருவகப்படுத்தியுள்ளேன். அவை பிழையாகக்கூட இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டும்.என்னைபோல கோடிக்கணக்கில் தமிழ் நாட்டில் மக்கள் இருப்பார்கள். ரஜினி பொது வாழ்க்கைக்கு வருவதால் அவர்தான் தன்னை மக்களுக்கு நிரூபிக்கவேண்டும்.
கிண்டலாக சொல்லவில்லை அண்ணனுக்கு ரஜினி கூட எல்லாம் தொடர்பு இருக்கு போல. சொல்லுங்க கிரி அண்ணா நீங்கள் சிங்கபூரில் என்ன செய்துகிட்டிருந்தீங்க.
மற்றும்படி ரஜினியை எனக்கு பிடிக்காதெல்லாம் இல்லை. ரஜினி & விஜய் படங்களில் வெறு சில படங்கள்தான் மிக மிக மொக்கையாக பார்க்கவே முடியாதபடி இருக்கும்.
நான் ரஜினி பற்றி ஊகங்களைத்தான் எழுதுகிறேன். ஏனென்றால் ரஜினிதான் பத்திரிகையாளர்களை கண்டால் விலகுகிறாரே. அவர் இன்னமும் அரசியலுக்கு வரவில்லையே , அப்புறம் எதற்கு கருத்து சொல்லவேண்டும் என்று நினைக்கலாம், ஆனால் இன்னைக்கு நான் மக்களின் பிரச்சனை பற்றி பேசமாட்டேன் . நாளைக்கு அரசியலுக்கு வந்துதான் மக்களை காப்பாற்றுவேன் என்பது எந்தவகையான தர்க்கமோ தெரியவில்லை. ரஜினியின் பேட்டிகளை பத்திரிகைகள்தான் சர்ச்சையாக்கிறது என்றால் தெளிவாக தன் கருத்துக்களை அறிக்கைகள் மூலம் மக்களிற்கு தெரிவிக்கலாமே.
இந்த தேர்தல் தமிழ் நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பது ஒருபோதும் தமிழ் நாட்டில் வாழாத எனக்கே தெரிகிறது. ஆனால் வியர்வைக்கு தங்க காசு பெற்றவர்களுக்கு தெரியவில்லை. ரஜினி அரசியல் பேச்சு எடுக்காமல் வெறும் நடிகராக இருந்திருந்தால் நான் கூட கிரி அண்ணனுக்கு ஜல்ரா அடித்துக்கொண்டிருந்திருக்கலாம்.
எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நான் எழுதியதில் ரஜினியை விட கமலை தான் அதிகம் விமர்சித்து எழுதினேன். தர லோக்கலாக. ஆனால் கிரி அப்படியே அதை கடந்து போனது ஆச்சரியமாக உள்ளது.
அவரு சிங்கப்பூரில் என்ன செஞ்சுகிட்டு இருந்தாரா?
அவர் எங்கேயிருந்தாலும் சின்ன வயசிலே சித்தி (நடிகை ராதிகா நடித்த சித்தி அல்ல) பெற்ற வாழும் ஞானி. ராசா வாங்க சென்னையிலே பார்ப்போம்.
சரி.. நான் நேரடியாவே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.. இந்த தேர்தலில் ரஜினியின் உண்மையான நிலைப்பாடு என்ன? தெரியலேன்னா தெரிஞ்சிக்கோங்க.. அவர் ஒரு பிஜேபி ஆதரவாளர்.. மோடிக்கு எதிரே தமிழ்நாடே திரும்பி இருக்கும்போது..தான் பிஜேபிக்கு ஆதரவு என்று கூறினால் தமிழர்களால் ஓரம்கட்டப்படுவர் என்பதாலேயே பகிரங்கமாக அறிவிக்கவில்லையே தவிர ரஜினியின் பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதவர்.
@ப்ரியா திரும்ப ஊகமா? 🙂 நான் கோபித்துக்கொண்டேன் என்று யார் சொன்னது? இவ்வளோ பொறுமையா கூறி இருக்கிறேன்..இப்படி சொல்லிட்டே.. என்ன கொடுமை சார்.
“நீங்கள் சிங்கபூரில் என்ன செய்துகிட்டிருந்தீங்க.”
எப்படியாவது கடனை கட்டி விட வேண்டும் என்று வேலை பார்த்துட்டு இருந்தேன் 🙂
“ரஜினிதான் பத்திரிகையாளர்களை கண்டால் விலகுகிறாரே”
என்னை கேட்டால்.. இந்த பைத்தியக்கார ஊடகங்களுக்கு ரஜினி எந்த ஒரு பேட்டியும் கொடுக்கக்கூடாது.
அவர் என்ன கூறினாலும் அதை திரித்து எழுதும் கீழ்த்தரமான வேலையையே செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தற்போது கூட நதி நீர் இணைப்பு பற்றி பாஜக தேர்தல் அறிக்கைக்கு கேட்ட கேள்விக்கு பாராட்டு தெரிவித்தார். இது அவர் 2002 ல் இருந்து மாறாமல் கூறி வரும் விஷயம்.
உடனே பாஜக க்கு ஆதரவுன்னு கிளப்பி விவாதம் செய்துட்டு இருக்காங்க. இவனுக என்னைக்கு தான் ரஜினி சொன்னதை அப்படியே சொல்லுவானுகளோ!
திமுக அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இதே தான் உள்ளது.. அதை கேட்டு இருந்தாலும், அதற்கு வரவேற்பு தான் கொடுத்து இருப்பார்.
தமிழக ஊடகங்கள் பெரும்பான்மை திமுக கட்டுப்பாட்டில் உள்ளது. நீ கடந்த கட்டுரையில் கேட்டியே ஏன் திமுக வினரை ரஜினி ரசிகர்கள் அதிகம் விமர்சிக்கிறார்கள் என்று.
இது போல காரணங்கள் தான்.
இதுல என்ன பெரிய நகைச்சுவை என்றால், இந்த கிறுக்கு பயலுக தேர்தல் குறித்து விவாதிக்காமல் தேர்தலில் போட்டியிடாத ரஜினியை பற்றி தினம் விமர்சித்து விவாதம் நடத்திட்டு இருக்காங்க 🙂 🙂 .
என்னைக்கு சொன்னதை சொன்ன மாதிரி செய்தியா கொடுக்கிறார்களோ அன்று தான் ரஜினி பேட்டி கொடுக்க வேண்டும்.
“ரஜினியின் பேட்டிகளை பத்திரிகைகள்தான் சர்ச்சையாக்கிறது என்றால் தெளிவாக தன் கருத்துக்களை அறிக்கைகள் மூலம் மக்களிற்கு தெரிவிக்கலாமே.”
எதுக்கு.. வேறு மாதிரி திருப்பி இன்னும் இரண்டு வாரத்துக்கு விவாதம் என்ற பெயரில் TRP ஏத்துறதுக்கா 🙂 .
“ரஜினி அரசியல் பேச்சு எடுக்காமல் வெறும் நடிகராக இருந்திருந்தால் நான் கூட கிரி அண்ணனுக்கு ஜல்ரா அடித்துக்கொண்டிருந்திருக்கலாம்.”
நீ யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டாம்.. நியாயமாக பேசு அது போதும். ஊகத்தில் விமர்சிக்காதே!
@ஜோதிஜி
“எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நான் எழுதியதில் ரஜினியை விட கமலை தான் அதிகம் விமர்சித்து எழுதினேன். தர லோக்கலாக. ஆனால் கிரி அப்படியே அதை கடந்து போனது ஆச்சரியமாக உள்ளது.”
கமல் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே என் நோக்கம், அதை கட்டுரையில் செய்து விட்டேன்.
அவர் கட்சி வெற்றி பெற முடியாது என்பது மட்டும் என்னால் கணிக்க முடிகிறது ஆனால், வாக்கு தோராயமாக எவ்வளவு வாங்குவார்கள் என்பது எனக்கு தெரியாது.
தெரியாத விஷயத்துக்கு கருத்து தெரிவிப்பதில்லை என்பதால், கடந்து விட்டேன் 🙂 .
@தமிழன் “சரி.. நான் நேரடியாவே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.. இந்த தேர்தலில் ரஜினியின் உண்மையான நிலைப்பாடு என்ன? தெரியலேன்னா தெரிஞ்சிக்கோங்க.. ”
நீங்க நேரடியா கேட்டாலும் கோணையா கேட்டாலும் ஒரே பதில் தான்.
நான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை, நீங்கள் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரஜினி யாருக்கும் ஆதரவு இல்லை என்று 17 ம் தேதியே அதிகாரப்பூர்வமாக அறிக்கையே விட்டு விட்டார். இதன் பிறகு உங்களுக்கு சந்தேகம் வந்தால் பிரச்னை யாரிடம்?
நானும் பார்க்கிறேன்.. சும்மா பாஜக பாஜக ன்னு இதையவே சொல்லிட்டு இருக்கீங்க.
திமுக அதிமுக எல்லோரும் யோக்கியமா.. பாஜக கேப்மாரின்னா திமுக முடிச்சவிக்கி அதிமுக மொள்ளமாரி. அவ்வளோ தான்.
தமிழன் ன்னு போலி பெயரில் வந்து இருக்கீங்களே ஒன்று தெரிந்துக்குங்க.
காங் ஆட்சியில் இருந்த போது இலங்கை கடற்படை சுட்டுக்கொன்ற தமிழக மீனவர்கள் ஏராளம். வாரத்துக்கு இரு செய்திகள் வரும்.
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதாக வந்த செய்திகள் எவ்வளவு?
கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் சிந்தியுங்கள். தமிழன் பெயரை வைத்தால் மட்டும் போதாது என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.