பார்வையில்லாதவராக நடித்துப் பல இடங்களில் இசைக்கும் பியானோ இசைக்கலைஞன் ஆகாஷ் எதிர்பாராமல் ஒரு கொலையைக் காண நேர்கிறது. இதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறான் என்பதே Andhadhun.
Andhadhun
ஒரு படத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கும், இரண்டு… படம் முழுக்க ட்விஸ்ட்டாவே இருந்தால்.. அது தான் இப்படம் 🙂 . Image Credit
நாயகன் Ayushman Khurrana மிகை நடிப்பு செய்யாத அற்புதமான கலைஞன்.
முக்கியக் கதாப்பாத்திரத்தில் தபு நடித்துள்ளார். நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.
இதுபோல ஒரு கதாப்பாத்திரத்தில் தபுவை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. மிகச்சரியாகப் பொருந்துகிறார். சும்மா சொல்லக்கூடாதுங்க மரணமாஸ்.
அதிலும் Ayushmann Khurrana கிட்ட அவர் வீட்டில் நடந்து கொள்வது மிரட்டல் 🙂 .
ராதிகா ஆப்தே க்கு நடிக்கப் பெரிய வாய்ப்பில்லை ஆனால், வழக்கம் போல அவர் பங்கைச் சரியாகச் செய்துள்ளார்.
சுவாரசியமான காட்சிகள் கூற ஏகப்பட்டது உள்ளது ஆனால், அதையெல்லாம் கூறி உங்கள் திரைப்பட அனுபவத்தைக் கெடுக்க விரும்பவில்லை.
படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாருங்கள், 100% ரசிப்பீர்கள்.
விளையாட்டுக்குச் சொல்லவில்லை, எதைப் பற்றிக் கூறினாலும் உங்களுக்குப் படம் பார்க்கும் போது அந்த த்ரில் கிடைக்காது.
பரிந்துரைத்த நண்பன் பாபுக்கு நன்றி.
Directed by Sriram Raghavan
Produced by Viacom 18 Motion Pictures, Matchbox Pictures
Written by Sriram Raghavan, Arijit Biswas, Pooja Ladha Surti, Yogesh Chandekar, Hemanth Rao
Starring Tabu, Ayushman Khurrana, Radhika Apte
Music by Songs: Amit Trivedi, Raftaar, Girish Nakod
Background Score: Daniel B. George
Cinematography K. U. Mohanan
Edited by Pooja Ladha Surti
Release date 5 October 2018
Running time 138 minutes
Language Hindi
தொடர்புடைய கட்டுரை
Ee adutha kaalathu (2012 மலையாளம்) A must watch movie
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பரிந்துரைக்கு மிக்க நன்றி கிரி. கண்டிப்பாக பார்க்கிறேன்…
Andhadhun – available in Netflix now…
விஸ்வாசம் விமர்சனத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். 🙂
ஹிந்தி படங்கள் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது.. கொஞ்ச நாட்கள் முன்பு வந்த ஆமீர்கானின் படத்தை பார்க்க ஆர்வமாக இருந்தேன்.. படம் சரியில்லை என அலுவலக நண்பர்கள் கூறியதால் படத்திற்கு செல்லவில்லை… நேரம் கிடைக்கும் போது நீங்கள் சொன்ன படத்தை பார்க்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஸ்ரீனிவாசன் கண்டிப்பாக பாருங்கள், உங்களை ஏமாற்றாது.
@ப்ரியா வராது
@யாசின் கண்டிப்பா பாருங்க.
நாகர்ஜூனா நடித்த மனம் திரைப்படம் மிக அருமையாக பாசம்,அன்பு,காதல் நிறைந்த அற்புதமான படமாக எனக்கு இருந்தது காரணம் கதை என்னவென்றே தெரியாமல் சுழியம் (0) விழுக்காடு எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தேன்.
அப்பா மற்றும் அம்மா வயது 24
மகன் வயது 30 என நினைக்கிறேன்.
பேரனின் வயது 90 (சரியாகத்தான் வயதை குறிப்பிட்டிருக்கிறேன்)