Online Streaming க்கு தான் இனி எதிர்காலம்

4
OTT-Players online streaming

லகத்தை ‘Online Streaming‘ சேவைகள் ஆக்கிரமித்து வருகிறது. நாளுக்குநாள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, குறிப்பாக இளையோர். Image Credit – Guiding Tech

இத்துறையில் உலகளவில் NETFLIX பிரபலமாக இருந்தது, தற்போது YouTube, Amazon Prime Videos போன்றவை தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளன.

மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற நேரத்தில், இடத்தில் பார்ப்பதையே விரும்புகிறார்கள், அதாவது இந்நேரத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடு இல்லாமல்.

NIELSEN

NIELSEN நிறுவனம் அமெரிக்காவில் நடத்திய கருத்துக்கணிப்பில் NETFLIX முதலிடத்திலும் YouTube TV இரண்டாம் இடத்திலும் Hulu & Amazon Prime Videos அடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. Images Credit – NIELSEN

70% மக்கள் குறிப்பாக இளையோர் இரண்டுக்கும் மேற்பட்ட தளங்களில் Subscription வைத்துள்ளனர்.

இக்கருத்துக்கணிப்பு அமெரிக்கா பற்றியதாக இருந்தாலும், இந்தியா மட்டுமல்லாது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். உலகளவில் Online Streaming சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தியாவில் Hotstar, Amazon Prime Videos, NETFLIX இடையே போட்டி இருந்து வருகிறது. Hotstar நிறுவனம், திரைப்படங்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட், நாடகங்கள் என்று ஏகப்பட்டதைக் கொடுத்து அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.

தற்போது டிஸ்னி நிறுவனம் Hotstar நிறுவனத்துடன் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது. டிஸ்னியிடம் ஏராளமான திரைப்படங்களின் உரிமை உள்ளது. எனவே, மிகப்பெரிய அளவில் மக்களைக் கவர முடியும்.

திரைப்படங்கள்

Tamilrockers ல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து Amazon Prime Video, Hotstar போன்றவற்றில் தரமான காணொளிகளைப் பார்க்க நினைப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்து வருகிறது.

எதிர்காலத்தில் திரையரங்கு சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும், பலரும் Online Streaming மூலமாகப் பார்ப்பதையே விரும்புவார்கள்.

திரையரங்குகளில் பார்ப்பவர்கள் என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும் ஆனால், எண்ணிக்கை குறைந்து விடும்.

செலவு காரணமாக நான் பெருமளவு குறைத்து விட்டேன்.

வெற்றி கணக்கீடுகள்

முன்னர் ஒரு திரைப்படம் எவ்வளவு நாட்கள் ஓடுகிறது என்பதை வைத்து அதன் வெற்றிக் கணக்கிடப்பட்டது. பின்னர் திரைப்படங்கள் ‘ஓட்டப்பட்டதால்’ அதன் மதிப்புக் குறைந்தது.

பின்னர் நாட்கள் என்பதற்கான வழிமுறைகள் மறைந்து குறைந்த நாட்களில் அதிக வசூல் என்ற முறை வந்தது. ஒரே சமயத்தில் ஏராளமான திரையரங்குகளில் வெளியிட்டு 10 நாட்களிலேயே வசூல் எடுக்கப்படும் முறை பிரபலமானது.

ஆனால், அதையும் ‘ட்ராக்கர்கள்’ தங்களுக்குத் தேவையான நடிகர்களுக்குப் பொய் கணக்கு கொடுத்து அதன் நம்பகத்தன்மையை அழித்தனர்.

Online Streaming

தற்போது அடுத்தக் கட்டமாக மக்கள் Online Streaming முறைக்கு மாறுவதால், திரையரங்கு வசூல் கணக்கு என்ற நிலை மாறி, Amazon, Hotstar, NETFLIX போன்ற நிறுவனங்கள் எவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறது என்பது தான் எதிர்காலமாக இருக்கும்.

அதாவது ஒரு நடிகரின் சந்தை நிலவரத்தை, Online Streaming தளங்கள் தான் தீர்மானிக்கும். சந்தை மதிப்பு இருக்கும் நடிகரின் படமே அதிக விலைக்கு வாங்கப்படும்.

நான் தற்போது Hotstar, Amazon Prime Videos, NETFLIX ஆகியவற்றுக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கிறேன்.

நீங்கள் எப்படி?! 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும்!

https://www.facebook.com/giriblog

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. நான் hack செய்த Hotstar ஆப் யூஸ் பண்றேன். Login, பண்ணவே வேண்டாம். All live சேனல், premium Content free ya parkalaam. Lifetime Validity. Etthana app ku dha பணம் கட்டுறது?

  2. இன்று மதியம் ஒன்று இருபத்தி ஒன்பது வரைக்கும் இந்தப் புத்தகம் (குறுகிய நேர வாசிப்பு) இலவசமாக கிடைக்கும். அமேசான் பற்றி எழுதி உள்ளேன். நெட்ப்ளிக்ஸ் குறித்து அறிய ஒவ்வொன்றாக படித்துக் கொண்டே வந்த போது நீங்க எழுதிய பல விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

    Amazon – 2025 இந்தியா மாற்றம் முன்னேற்றம்: 1 Billion Investment (23) (Tami… https://www.amazon.in/dp/B084MKPLLV/ref=cm_sw_r_tw_dp_U_x_sd6qEb2EDS30Z via @amazonIN

  3. எதிர்காலத்தின் மாற்றத்தை நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.. மிகவும் குறுகிய காலகட்டத்தில் எல்லா மாற்றங்களும் நடந்து வருகிறது.. தொழிலில் நுட்ப வளர்ச்சியின் அசுர வேகத்தை பார்க்கும் போது உண்மையில் பிரமிக்க வைக்கிறது.. நான் இதுவரை எந்த சேவையையும் பயன்படுத்தியது இல்லை.. யூடூபியில் பாடல்கள் மட்டும் கேட்பதுண்டு.. சில பழைய படங்களை எப்போதாவது பார்ப்பதுண்டு.. தற்போது நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.. காணவேண்டிய திரைப்படங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது..

  4. @Harish ஹேக் செய்து பார்ப்பதை தவிருங்கள். நமக்குத் தேவையென்பதாலே பார்க்கிறோம், அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்?

    @ஜோதிஜி நான் படிப்பதற்குள் முடிந்து விட்டது.

    @யாசின் YouTube ல் சுற்றினால் ஏராளம் பார்க்க இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!