Wrath of Man (2021) | எனக்கு இன்னொரு பேர் இருக்கு!

2
Wrath of Man

Jason Statham அதிரடியான சண்டையில் Wrath of Man.

Wrath of Man

பாட்ஷா படத்தை ஆங்கிலத்தில் எடுத்தது போல உள்ளது Wrath of Man. Image Credit

வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சிப்பவர்களில் ஒருவராக அல்லது பாதுகாப்புக்காக Jason Statham பணியில் இணைகிறார்.

பணிக்குத் தேர்வு செய்யப்படும்போது காவல்துறை வைத்த தேர்வில் 70% பூர்த்திச் செய்கிறார்.

இதன் பிறகு நடக்கும் கொள்ளையில் கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டு மற்ற அதிகாரிகள் பயந்து ஒதுங்க, 70% மட்டுமே எடுத்த சராசரி நபராக இருந்த Jason Statham கொள்ளையர்களைப் பொளந்து கட்டுகிறார்.

அதிகாரிகள் திகைத்து விடுகிறார்கள்.

யாருயா இவன்? காட்டான் மாதிரி அடிச்சு துவைத்துட்டு இருக்கான். இவன் எதோ விவகாரமான ஆளு போல என்று சந்தேகப்படுகிறார்கள்.

உண்மையில் Jason Statham யார்? அவர் முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதற்கான விடையே Wrath of Man.

Jason Statham

Jason Statham சண்டைக்காட்சிகளின் ரசிகர்களில் நானும் ஒருவன், அலட்டிக்காமல் அடித்து நொறுக்குவார். குறிப்பாக The Transporter படம் தாறுமாறாக இருக்கும்.

பொழுதுபோகவில்லை என்றால் பார்க்கும் படங்களில் The Equalizer இருப்பது போல The Transporter ம் உண்டு.

கிட்டத்தட்ட பாட்ஷா படச் சாயலில் Wrath of Man உள்ளது.

எதனால் இவர் கொள்ளையர்களைத் துரத்துகிறார், ஒவ்வொருத்தரையும் வெளுத்து வாங்குகிறார் என்பதற்குத் தமிழ் படம் சென்டிமென்ட் போல ஒரு காரணம்.

ஒரு காட்சியில் Jason Statham யைக்கண்டு கொள்ளையர்கள் அலறி அடித்து ஓடுவது, பாட்ஷா படத்தில் நக்மா திருமணம் நடக்கும் நேரத்தில் ரஜினி நுழையும் போது அனைவரும் அதிர்ச்சியாவார்களே அது போல இருக்கும்.

பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க!‘ வசனம் மட்டும் தான் இல்லை 😀 .

படத்தின் முதுகெலும்பு சண்டை காட்சிகள் தான். அலட்டிக்காத Jason Statham நடிப்பும், துணையாக வருபவர்கள் கூல் நடிப்புமே நம்மை அதிகம் கவர்கிறது.

இக்கதையில் மேலும் காட்சிகளைக் கூறினால் பார்க்கும் போது உங்களுக்குச் சுவாரசியம் இருக்காது என்பதால், கூறுவதைத் தவிர்க்கிறேன்.

வழக்கமான ‘ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?!‘ என்று தோன்றும் காட்சிகளும் இருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை 🙂 .

யார் பார்க்கலாம்?

அதிரடி சண்டைக்காட்சிகள் பிடிக்கும் அனைவரும் பார்க்கலாம். Jason Statham ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.

ஆகச்சிறந்த படமில்லை ஆனால், பொழுதுபோக்குக்கு ஏற்ற படம்.

NETFLIX ல் உள்ளது.

Directed by Guy Ritchie
Screenplay by Guy Ritchie, Ivan Atkinson, Marn Davies
Based on Le Convoyeur by Nicolas Boukhrief Éric Besnard
Cinematography Alan Stewart
Edited by James Herbert
Music by Christopher Benstead
Production companies Metro-Goldwyn-Mayer Miramax
Prime Video (United Kingdom and Ireland)
Release dates
April 22, 2021 (International)
May 7, 2021 (United States)
December 10, 2021 (United Kingdom)
Running time 119 minutes
Countries United States, United Kingdom
Language English

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் ஆங்கில திரைப்படம் டெர்மினேடட்ர்.. இந்த படத்தின் பிரமிப்பிலிருந்து இன்னும் கூட விலகவில்லை.. அதன் பின் மேனிலை பள்ளி பருவத்தில் ஜுராஸிஸ்க் பார்க், டைட்டானிக் படங்கள் என்னை வியக்க வைத்தது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் பார்த்த ஆங்கில படம் “தி மெக்கானிக்”.. ஜேசன் சதோமின் நான் பார்த்த முதல் படம்.. செம்ம ஆக்ட்டிங்.. இந்த படத்தை பார்த்த பிறகு அவரின் ரசிகனாகி விட்டேன்..

    அலட்டல் இல்லாத நடிப்பு.. நல்ல உடல்மொழி.. அவரின் உடை.. என எல்லாம் நேர்த்தியாக இருக்கும்.. ஆங்கில படங்களுக்கே உண்டான பில்ட் அப் இவர் படங்களில் கொஞ்சம் குறைவு.. மெக்கானிக் படத்தின் போஸ்டரே வித்தியாசமாக இருக்கும்.. தற்போதும் நான் இந்த படத்தை காண்பது உண்டு..

    என்னுடைய ஆல் டைம் விருப்ப படம் : The shawshank redemption.. படத்தின் சிறைச்சாலை, வீதிகள், கடற்கரை என ரசிக்க பல விஷியங்கள் இந்த படத்தில் உள்ளன.. நான் சோர்வுற்ற தருணங்களில் அதிகம் பார்க்கும் படம் இது தான்.. படத்தின் மேக்கிங் ரொம்ப பிடிக்கும்.. எல்லாவற்றிக்கும் மேல் இந்த படம் நான் முதன்முதலில் பார்த்த தருணம் என் வாழ்வில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலகட்டம்.. SO படம் பார்க்கும் போது அந்த நினைவுகளும் உள்ளுக்குள் வந்து என்னை மேலும் மகிழ வைக்கும்.. நீங்க குறிப்பிட்ட Wrath of Man படத்தை இன்னும் பார்க்கவில்லை.. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    “நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் பார்த்த ஆங்கில படம் “தி மெக்கானிக்”.. ஜேசன் சதோமின் நான் பார்த்த முதல் படம்.. செம்ம ஆக்ட்டிங்.. இந்த படத்தை பார்த்த பிறகு அவரின் ரசிகனாகி விட்டேன்..”

    மெக்கானிக் படமும் செமையா இருக்கும்.. போன வாரம் கூட பார்த்தேன்.

    “என்னுடைய ஆல் டைம் விருப்ப படம் : The shawshank redemption.. படத்தின் சிறைச்சாலை, வீதிகள், கடற்கரை என ரசிக்க பல விஷியங்கள் இந்த படத்தில் உள்ளன.. நான் சோர்வுற்ற தருணங்களில் அதிகம் பார்க்கும் படம் இது தான்.. படத்தின் மேக்கிங் ரொம்ப பிடிக்கும்”

    பலமுறை கூறி இருக்கீங்க. படம் மெதுவாக செல்லும் ஆனால், சுவாரசியமாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here