அநியாயமாக வீணாகும் மக்கள் வரிப்பணம்

34
அநியாயமாக வீணாகும் மக்கள் வரிப்பணம் !

க்கள் வரிப்பணம் வீண் ஆவது நமக்குப் புதிதல்ல ஆண்டாண்டு காலமாக அரசுகள் செய்வது தான் இது நமக்குப் பழகிப்போய் விட்டது தான் மிகக்கொடுமை.

தற்போது இதன் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வது வருத்தமாக அல்ல கடுமையான உள்ளக்குமுறலையும் ஆத்திரத்தையும் வரவைக்கிறது. Image Credit

பொது மக்களாகிய நம்மால் இதைத்தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை, இதற்க்கு முக்கியக் காரணம் பொதுமக்களாகிய நாம் தான் என்பதால் கேவலமாகவும் இருக்கிறது.

எந்த அரசாங்கம் வந்தாலும் ஓட்டிற்காக இலவசம் என்ற ஒன்றை வைத்து ஓட்டு வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சிறிய அளவில் ஆரம்பித்துத் தற்போது ஒரு மிகப்பெரிய வியாதியாகத் தமிழகத்தைப் பிடித்து ஆட்டுகிறது.

அநியாயமாக வீணாகும் மக்கள் வரிப்பணம்

இது கலைஞர் அரசாகட்டும் ஜெ அரசாகட்டும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.

ஜெ அரசில் பள்ளி மாணவர்களுக்குச் சைக்கிள் என்ற விசயத்தில் இது ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன், சரி! இது மாணவர்களுக்குத் தானே! என்று மனசை தேத்த வேண்டியதாக இருந்தது.

திமுக அரசு நாங்க எல்லாம் யோசித்தால் இப்படிச் சப்பையா செய்ய மாட்டோம் என்று “தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் டிவி” என்று அறிவித்தார்கள், நம்ம மக்களும் டிவி இலவசமாவா! என்று தேர்தலில் தங்கள் பங்கை ஆற்றினார்கள்.

கமிசன்

எந்த அரசாங்கம் ஆகட்டும் இங்கே ஒரு காண்ட்ராக்ட் விடுகிறார்கள் என்றால் அதில் கமிசன் இல்லாமல் இருக்காது இது சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும்.

சாலை போடுவது, தண்ணீர் தொட்டி கட்டுவது, அலுவலகக் கட்டிடம் கட்டுவது, பாலம் கட்டுவது, தண்ணீர் குழாய்ப் பதிப்பது என்று எது செய்தாலும் எந்தக் காண்ட்ராக்ட் வாங்கினாலும் அதில் கமிசன் கொடுத்தால் தான் வேலையே நடக்கும்.

இது இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் தான் ஆனால், நாம் நம்ம கதைய பார்ப்போம்.

முதலில் டிவி கஷ்டப்படுகிறவர்களுக்கு என்று அறிவித்தார்கள் பின் அது அனைவருக்கும் என்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

டிவி முன்பு ஆடம்பர பொருளாக இருந்தது தற்போது அத்யாவசிய பொருளாகி விட்டது ஆனால், அதை இலவசமாகக் கொடுக்கக்கூடிய அளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் அல்ல.

உங்களுக்கென்ன நீங்க டிவி வைத்து இருக்கீங்க? அதனால சொல்வீங்க! என்பது தான் வரும் அடுத்தக் கேள்வியாக இருக்கும்.

மாநிலத்துல எவ்வளோ பிரச்சனை மக்களுக்கு இருக்கு இப்போ டிவி கொடுப்பது தான் முக்கியமா!

இதுல கொடுமை கஷ்டப்படுகிறவர்களுக்குக் கொடுத்தால் கூடச் சரி! என்று மனதை தேத்தலாம் நல்ல வருமானம் உள்ளவர்களுக்குக் கூட ரேஷன் கார்டுக்கு ஒன்று வீதம் வருவதால் ஒரு வீட்டிலேயே படுக்கை அறைக்கு ஒன்று ஹாலுக்கு ஒன்று என்று அடுக்கி வைத்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இப்படி வாங்குவதில் விருப்பம் இல்லை என்றாலும் நாம வாங்கவில்லை என்றால் வேற யாரவது அதை லவட்ட போகிறார்கள் என்பதால் வாங்கிக்கொள்கிறார்கள் அல்லது வாங்கி வேறு யாருக்காவது கொடுத்து விடுகிறார்கள்.

இதனால் என்ன பயன்?

ஒரு டிவி யின் மதிப்புக் குறைந்த பட்சம் ருபாய் 2000 என்று வைத்துக்கொண்டாலும் கொடுத்த கோடிக்கணக்கான டிவி யை (2000*கோடி) கணக்கு போட்டால் தலை சுற்றி கீழே விழுந்து விடுவோம், இதில் கமிசன் தனி.

தற்போது அடுப்பு அடுத்த ரவுண்டு வந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு டிவி வாங்கிக் கொடுத்ததன் மூலம் இலாபம் சன் கலைஞர் விஜய் போன்ற டிவி க்களுக்கும் சுமங்கலி கேபிள் நிறுவனத்தாருக்கும் தான்.

அரசு கேபிள்

கலைஞருக்கும் சன் டிவி க்கும் சண்டை வந்த போது கலைஞருக்குத் திடீரென்று மக்கள் நினைவு வந்து அதிரடியாக அரசு கேபிளைத் துவங்கினார்.

அது இவர்கள் மறுபடியும் இணைந்து! குடும்பச் சகிதமாகப் புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்த பிறகு அது காற்றோடு போய் விட்டது.

அரசு கேபிள் அமைப்பதற்காக வாங்கிய கோடிக்கணக்கான விலை உயர்ந்த கருவிகள் அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி போடும் கூட்டத்திற்குச் செய்த செலவு என்று அனைத்தும் வெட்டியாகப் போனது.

இதெல்லாம் யார் பணம்? இனி மறுபடியும் எப்போது அரசு கேபிள் துவங்கப்போகிறார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்!

DTH & சன் பிக்சர்ஸ்

இவர்கள் சண்டையால் யாருக்கு இலாபம் தெரியுமா?

இவர்கள் சண்டைக்குப் பிறகே கலைஞர் டிவி தொடங்கப்பட்டு அனைத்து படங்களும் உரிமை வாங்கப்பட்டது.

சன் டிவி க்கு தர மறுக்கப்பட்டதால் அவர்கள் துவங்கியது தான் சன் DTH மற்றும் சன் பிக்சர்ஸ். இதன் பிறகே இவர்கள் படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு போட்டி போட்டுச் சிரிப்பொலி ஆதித்யா இசையருவி சுட்டி போன்ற சேனல்கள் துவங்கப்பட்டன.

ஆக மொத்தத்தில் இவர்கள் சண்டையால் அரசு கேபிள் துவங்கப்பட்டு முடக்கப்பட்டு அதனால் மக்களின் வரிப்பணம் நஷ்டம் பிறகு ஒன்று சேர்ந்த இவர்களுக்குப் பல மடங்கு இலாபம் மற்றும் தொழில் விருத்தி.

இப்ப யாரு அடி முட்டாள்?

ஒருங்கிணைப்பு அமைப்பு

நாம் அனைவரும் தினமும் பார்ப்பது சாலை போடுவதில் இவர்கள் அடிக்கும் கொள்ளை.

எந்தத் திட்டமும் இல்லை புதிதாகச் சாலை போடுவார்கள் அடுத்த நாளே வேறு காரணத்திற்காக தோண்டுவார்கள் மனசாட்சியே இல்லாமல்!

இதைப் பார்த்து மனம் நொந்து போகாதவர்களே இருக்க முடியாது.

சென்னை மந்தைவெளியில் BSNL அலுவலகம் முன்பு பல முறை நோண்டி பின் ஒரு வழியாக அட்டகாசமான சாலை போட்டார்கள் (இடைப்பட்ட காலத்தில் செம்மண் பூமியாக இருந்தது) அதன் பிறகு கொஞ்ச நாளிலேயே நாசமாக்கி விட்டிருந்தார்கள்.

இது தற்போதும் கூடத் தொடர்கிறது,

இது இந்த அரசாங்கம் என்று இல்லை எந்த அரசாங்கம் வந்தாலும் நடப்பது. உண்மையில் இதற்கென்று ஒருங்கிணைப்பு அமைப்பு என்ற ஒன்று உள்ளது.

அனைவரும் கலந்து பேசி எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் வைத்து அதற்கேற்ப தங்கள் வேலைகளை வகுக்க வேண்டும் ஆனால், அப்படி ஒன்று இருப்பது போலவே தெரியவில்லை.

சலுகைகள்

அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் படிகள் பற்றித் தெரிந்தால் பலர் மயக்கமாகி விடுவார்கள் அல்லது அவர்களுக்குக் கூறியவுடன் ஒரு “ஜெலுசில்” மாத்திரையும் சேர்த்து கொடுத்து விட வேண்டியது தான்.

சமீப (பாராளுமன்ற) அறிவிப்பு இதன் உச்சம்… அது என்னவென்றால் “விமானப்பயணம் செய்யும் போது உடன் உறவினர்கள் நண்பர்களையும் இலவசமாக அழைத்துச் செல்லலாம்” என்பதே அது!

எவன் வீட்டு பணத்துல இப்படி ஊர் சுத்துறீங்க? அனைத்தும் மக்கள் வரிப்பணம்.

ஒவ்வொரு முறையும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் அப்போது தான் அது சாலையாகட்டும் கட்டிடம் கட்டுவதாகட்டும் தொடங்க முடியும், இதில் ஒரு சிலர் மற்ற கட்சிக்காரன் பேர் வாங்கி விடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

அது மக்களுக்கு நன்மை தருபவையாகவே இருந்தாலும் ஆனால், இந்த விமானப்பயணம் மற்றும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகளுக்கு அனைத்து கட்சியினரும் எந்தப் பாகுபாடுமின்றி ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தீர்களா! அவர்கள் ஒற்றுமை!! இப்படி வீணாப்போன பணம் பல்லாயிரம் கோடி.

ஓட்டுக்குப் பணம்

முன்பெல்லாம் தேர்தல் சமயத்தில் ஓட்டு வாங்க மக்களுக்குப் பணம் கொடுப்பது இலைமறைவு காயாக இருந்தது, தற்போது அது அப்பட்டமாக நடக்கிறது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ருபாய் 500 பணத்தைக் கவரில் வைத்துக் கொடுக்கிறார்கள் (அனைத்தும் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பணம்) வாங்கவில்லை என்றால் வீட்டில் போட்டுச் செல்கிறார்கள், தேர்தல் கமிசனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மக்களும் யார் வந்தாலும் கொள்ளை அடிக்கப் போறாங்க! அதனால யார் அதிகப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு! என்று கேவலமான மனநிலைக்குச் சர்வசாதாரணமாக வந்து விட்டார்கள்.

மிக மிகக் கேவலமான விஷயத்தை மக்கள் மனதில் வெற்றிகரமாகப் பதித்துத் தங்கள் வெற்றியை அரசியல் கட்சிகள் நிரூபித்து இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் ஒன்றும் சும்மா பணம் கொடுக்கவில்லை அப்படிக் கொடுக்க அவர்கள் ஒன்றும் பொது மக்கள் போல இளிச்சவாயர்கள் அல்ல.

கொடுத்த பணத்தைப் பல மடங்கு இதைப்போல லஞ்சமாகக் கமிசனாகத் திரும்ப எடுக்கிறார்கள். ஏற்கனவே எவரும் கண்டுகொள்வதில்லை இனி மக்கள் யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் மதிப்பார்களா!

என்ன சமாதானம் கூறினாலும் மக்கள் இலவசத்திற்கும் பணத்திற்கும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் ஓட்டு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவர்கள் இப்படி வாங்கி ஓட்டு போட்டு நாசமாகப்போகிறார்கள்.

படித்த பெருமக்கள் எவன் வந்தால் எனக்கென்ன என்று தங்கள் செயலுக்கு நியாயம் கற்பித்து ஓட்டுச்சாவடி பக்கமே வராமல் அதிபுத்திசாலியாகப் பேசிக்கொண்டு ஓட்டுப் போடாமல் இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் ஓட்டு போடத் தகுதியான நபர் இல்லையே என்று மனம் வருந்திச் செய்வது அறியாமல் விழிக்கிறார்கள்.

கள்ள ஓட்டு

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

ஜெ ஆட்சியில் இருந்தபோது சென்னை மேயர் தேர்தலில் கராத்தே தியாகராஜனை ஜெயிக்க வைக்க அவர்கள் செய்த அட்டூழியம், பயங்கரமான ரவுடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டு மிரட்டிக் கள்ள ஓட்டு போட்டு ஜெயித்தார்கள்.

திமுகவே அடிதடியில் பெரிய ஆள், அவர்களையே மிரள வைத்தார் ஜெ. அப்போது நான் நினைத்தது இப்படி அட்டகாசம் செய்கிறார்களே என்ன ஆகப்போகிறது இனி என்று!

அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது அப்பாடா! என்று நினைத்தால் இவர்களும் சற்றும் சளைக்காமல் செய்து வருகிறார்கள்.

அவர்கள் அதிகாரத்தால் அடித்தார்கள் என்றால் இவர்கள் கொஞ்சம் அதிகாரம் அதிகப் பணம் அதிக இலவசம், சலுகை என்று வேறு வகையில் டெக்னிக்கலாக மக்களை ஒழித்து (கெடுத்து) வருகிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தை மனசாட்சியே இல்லாமல் வீண் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இவை எல்லாம் எங்கே சென்று முடியுமோ!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

34 COMMENTS

  1. மனக்குமுறல் “எழுத்திலும்” தெரிகிறது,கிரி.:-( இது மாநிலம் போகும் நிலமைக்கு.

  2. அப்புடி எழுதுங்கண்ணே… ஆட்டோ வந்தா என்ன மயிறு வந்தா என்ன??

    ஒருவேளை கட்டாய வாக்களிப்பு சட்டம் வந்தால் இதெல்லாம் மாறுமோ??

    நல்ல சொல்லிருக்கீங்க. பல பதர்களுக்கு இவய்ங்க அவுக்குற பணம் நம்ம கட்டுன வரிப்பணம்னு தெரியாது….

    நம்ம மாக்கள்ங்கிறது அவய்ங்களுக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு…. :-((((

  3. அட போங்க கிரி. 3 வருஷம் புறம்போக்கு நிலத்தில இருந்தால் பட்டாவாம். இந்த பிசினஸ் வேற ஆரம்பிச்சிடும்.

    //ரோஸ்விக் said…

    பல பதர்களுக்கு இவய்ங்க அவுக்குற பணம் நம்ம கட்டுன வரிப்பணம்னு தெரியாது….//

    இல்லை ரோஸ்விக். 3 வது மாடியில் இருந்து கொண்டு வெள்ள நிவாரணம், ப்ளாஸ்மா டி.வி. வைத்துக் கொண்டு கக்கூசுக்கு வைத்துக் கொள்ள வாங்கும் பரதேசிகள் சொன்னது இது.

    ”அவன் அப்பன் வீட்டு காசா தரான். நான் கட்டின வரில என் பங்கு கொஞ்சூண்டு இது”

  4. இதையெல்லாம் படிக்கும் போது பி.எஸ்.வீரப்பா ஒரு படத்துல சொன்ன மாதிரி “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”னு கத்தத் தோணுது.

  5. //"விமானப்பயணம் செய்யும் போது உடன் உறவினர்கள் நண்பர்களையும் இலவசமாக அழைத்து செல்லலாம்//

    அப்பா நம்ம அழகிரி அப்பாவையும் அப்பாவிண்ட மனைவிகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என முழுக்குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போகலாமா? அப்பிடி என்றால் ஒரு முழு விமானம் தேவையே..

    //இவர்கள் சண்டைக்கு பிறகே கலைஞர் டிவி தொடங்கப்பட்டு அனைத்து படங்களும் உரிமை வாங்கப்பட்டது, சன் டிவி க்கு தர மறுக்கப்பட்டதால் அவர்கள் துவங்கியது தான் சன் DTH மற்றும் சப் பிக்சர்ஸ். இதன் பிறகே இவர்கள் படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு போட்டி போட்டு சிரிப்பொலி ஆதித்யா இசையருவி சுட்டி போன்ற சேனல்கள் துவங்கப்பட்டன.//

    எனக்கென்னமோ இவர்கள் சேர்ந்தததாக கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் உள்ளார புகைச்சல் இருபது போன்றே தோன்றுகின்றது

  6. அரசியல்வாதிகளை ஏன் திட்ட வேண்டும் கிரி? கேவலம் பணத்திற்காக ஓட்டுப் போடும் நம்மைத்தான் நாம் திட்டிக்கொள்ள வேண்டும். இவர்களைப் பார்த்து இப்போது “காசுக்கு ஓட்டு” கொள்கையை மற்ற மாநிலங்களிலும் தொடங்கிவிட்டார்களாம். இதற்கும் நாம் தான் முன்னோடி..! மகா கேவலம்.

  7. கும்பிடுவது போல் இருக்கும் அரசியல்வாதிகள் தோற்றத்தில் இருக்கும் அரசியல் வாதிகள் மிகவும் குறைவு.

    முன்பெல்லாம் திருடன் என்று காட்ட கன்னத்தில் மச்சம் அல்லது மரு வைத்து திரைப்படங்களில் காட்டுவார்கள். ஆனால் உண்மையில் திருடர்கள் என்பவர்கள் கோடிக்கணக்கில் பணச் சுரண்டல் செய்பவர்கள் தான். அவர்கள் நீங்கள் சுட்டிக்காட்டு அரசியல்வாதிகளின் தோற்றத்தில் இல்லை. பங்கு சந்தை மோசடி அர்சத் மேத்தாவோ, பாராளுமன்றத்தில் கோடிகளை கோணிப் பைகளில் கொண்டு வந்து கொட்டியவர்களோ, சன் குழும உரிமையாளர்களோ நீங்கள் காட்டும் அரசியல்வாதியின் தோற்றத்தில் இல்லை.

    அந்தக் கார்டூன் படம் பொதுப் புத்திக்காக, பெரும் ஊடகங்கள் உருவாக்கும் அரசியல்வாதியின் தோற்றம் 🙂

  8. குட்… இப்பதான் சரியான ட்ராக்குக்கு வந்திருக்கீங்க… ஆனா… என்ன வெளுத்து என்ன… இதுங்க திருந்தாத ஜென்மம் கிரி. நம் நாட்டு அரசியலும் மக்களும் பாவத்தின் சரிபாதி பங்குதாரர்கள். எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் பாஸிடிவாக கருத்து சொல்லலாம். ஆனா வாக்காளர்கள் என்ற அந்தஸ்தில் இருக்கும் மக்களையோ, அவர்களின் பங்காளிகளான வேட்பாளர்களையோ… என்றைக்கும் திருத்தவே முடியாது. இதை நான் விரக்தியில் சொல்லவில்லை. உண்மையை மட்டுமே சொல்கிறேன். என் நண்பர் ஒருவர் இரண்டாவது பிஎச் டி பட்டத்துக்காக, ஒரு ஆய்வு மேற்கொண்டார், சென்னைப் பல்கலைக் கழகத்தில். அதற்காக அவர் மேற்கொண்ட சர்வேயில் -4 மாவட்டங்கள்- 98 சதவிகிதம் வாக்காளர்கள் சொன்ன பதில்… "ஓட்டுக்கு பணம் வாங்குறதுல என்ன தப்பு?அது எனக்கு சேர வேண்டிய காசு. நான் பணம் வாங்கிட்டுதான் ஓட்டுப் போடுவேன். இல்லன்னா ஓட்டு கிடையாது" பின்னே.. பணம் கொடுத்தவன் வாயில லாலிபாப் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பானா?அவன் பங்கை அவன் சுருட்ட பக்காவா ப்ளான் பண்ண வேணாம்…. அதுக்காகத்தான் இந்த 5 வருடத்தை அவனால் பயன்படுத்த முடியும். மக்கல் சேவையாவது மண்ணாங்கட்டியாவது. இவர்களைத் திருத்த முடியாது… முடியவே முடியாது!

  9. வழக்கமாக உங்கள் பதிவுகளின் தலைப்பில் இருந்தே சுவாரசியம் தொற்றிகொள்ளும்…ஆனால் நம்ம அரசியல் என்றவுடனே என் சுருதி சுத்தமாக காலி.நீங்கள் சொல்வது அனைவருக்கும் தெரிந்த மறுக்க முடியாத உண்மை. நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்துடுபது நம் கடமை தான். ஆனால் நல்ல அரசியல்வாதிகள் எங்கே இருக்கிறார்கள். ஓட்டு போடுவது நம் கடமைதான். இந்த இரு கட்சிகளை தவிர வேறு ஏதாவது மாற்று கட்சி தான் உள்ளதா. அப்படியே இருந்தாலும் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் ஆட்சி அமைக்க முடியுமா. இதை பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் நாம் மாநிலத்திலும் சரி நாட்டிலும் சரி மாற்றம் என்பது பேச்சளவில் மட்டுமே இருக்கும். முதலில் தெரியாமல் ஏமாற்றி கொண்டு இருந்தார்கள்…இப்பொழுது நாம் வேறு வழி இல்லாமல் ஏமாந்து கொண்டு இருக்கிறோம்வாழ்க தமிழகம் வளர்க அரசியல்வாதிகளும் அவர் குடும்பங்களும்

  10. // வடுவூர் குமார் said…
    🙁 இது மாநிலம் போகும் நிலமைக்கு.//

    இது தாங்க பயமா இருக்கு

    ====================================

    // ரோஸ்விக் said…

    ஒருவேளை கட்டாய வாக்களிப்பு சட்டம் வந்தால் இதெல்லாம் மாறுமோ??//

    குஜராத்தில் இதை நிறைவேற்றி அல்லது நிறைவேற்றப்போவதாக கேள்விப்பட்டேன்

    //நல்ல சொல்லிருக்கீங்க. பல பதர்களுக்கு இவய்ங்க அவுக்குற பணம் நம்ம கட்டுன வரிப்பணம்னு தெரியாது…//

    பந்த் அன்னைக்கு பஸ் ஐ உடைக்கிறான் ..அந்த கிறுக்கு கம்முனாட்டிக்கு தெரியறதில்லை அதுல அவன் காசும் இருக்குனு.

    //நம்ம மாக்கள்ங்கிறது அவய்ங்களுக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு…. :-((((//

    அரைகுறையா இருந்தது இப்போ உறுதி ஆகிடுச்சு 🙁

    ====================================

    // வானம்பாடிகள் said…

    அட போங்க கிரி. 3 வருஷம் புறம்போக்கு நிலத்தில இருந்தால் பட்டாவாம். இந்த பிசினஸ் வேற ஆரம்பிச்சிடும். //

    இதெல்லாம் ரொம்ப ஓவர் சார் ..அநியாயம் பண்ணுறாங்க.. இதை பற்றி எல்லாம் எழுதினா இது தொடராகத்தான் போடணும்.

    //அவன் அப்பன் வீட்டு காசா தரான். நான் கட்டின வரில என் பங்கு கொஞ்சூண்டு இது//

    இது தான் சார் எல்லோரும் சொல்வது .. வினோ கூறிய மாதிரி இவனுக பணத்தை கொடுத்துட்டு கை சூப்பிட்டா இருப்பாங்க!

    =========================

    // முகிலன் said…

    இதையெல்லாம் படிக்கும் போது பி.எஸ்.வீரப்பா ஒரு படத்துல சொன்ன மாதிரி “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”னு கத்தத் தோணுது.//

    "இதுவும் கடந்து போகும்" என்று தான் தோன்றுகிறது பார்ப்போம்

    =============================================

    // எப்பூடி … said…

    எனக்கென்னமோ இவர்கள் சேர்ந்தததாக கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் உள்ளார புகைச்சல் இருபது போன்றே தோன்றுகின்றது//

    நீங்க கூறுவது முற்றிலும் உண்மை தான்.. கலைஞர் காலத்திற்கு பிறகு இது பெரியளவில் வெடிக்கும் என்பது உறுதி.

    ======================================

    // என் நடை �

  11. // கோவி.கண்ணன் said…

    அந்தக் கார்டூன் படம் பொதுப் புத்திக்காக, பெரும் ஊடகங்கள் உருவாக்கும் அரசியல்வாதியின் தோற்றம் :)//

    ஹைடெக் கொள்ளைக்காரங்க தான் இது மாதிரி இருக்க மாட்டாங்க. எங்க ஊரில் எல்லாம் இதே தோற்றத்துடன் தான் இருக்கிறார்கள், இதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை,

    அது சரி! இந்த படம் சும்மா ஃப்ளோ க்கு போட்டால் அதை பற்றி சொல்லிட்டு இருக்கீங்க. பதிவை பற்றி கூறி நாலு விளாசு விளாசுவீங்கன்னு பார்த்தால் :-))) கோவி கணன் டெர்ரர் கண்ணன் ஆவார் என்று பார்த்தால் இப்படி சப்பையா படத்தை பற்றி சொல்லிட்டு போயிட்டீங்களே! 😉

    ========================================

    // Vaanathin Keezhe… said…

    பின்னே.. பணம் கொடுத்தவன் வாயில லாலிபாப் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பானா?//

    மிகச்சரி!

    //அவன் பங்கை அவன் சுருட்ட பக்காவா ப்ளான் பண்ண வேணாம்…. அதுக்காகத்தான் இந்த 5 வருடத்தை அவனால் பயன்படுத்த முடியும். மக்கல் சேவையாவது மண்ணாங்கட்டியாவது. //

    நீங்க சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் 🙂 கண்டிப்பா பணம் கொடுப்பவன் சும்மா கொடுப்பானா கொடுத்த பணத்தை திரும்ப வசூல் எப்படி செய்வது என்று தான் பார்ப்பான். இதையே நான் என் பதிவிலும் கூறி இருக்கிறேன்.

    இது சமீபமாக அதிகரித்து செல்கிறது அது தான் கவலையளிக்கிறது. எலும்பு துண்டுக்கு அலையும் நாயை போல மக்களை அரசியல்வாதிகள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    =====================================

    // Sadhasivam said…

    வழக்கமாக உங்கள் பதிவுகளின் தலைப்பில் இருந்தே சுவாரசியம் தொற்றிகொள்ளும்…ஆனால் நம்ம அரசியல் என்றவுடனே என் சுருதி சுத்தமாக காலி.//

    🙂 சதா நான் கூடுமானவரை அனைத்து பகுதிகளையும் கவர் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அதனால் என் தளத்தில் அனைத்தும் கலந்து இருக்கும்.

    //ஆனால் நல்ல அரசியல்வாதிகள் எங்கே இருக்கிறார்கள்.//

    இது தாங்க வருத்தமா இருக்கிறது, இதை என் இட�

  12. என்ன கிரி.,சிங்கப்பூர் க்கு ஆட்டோ அனுப்ப மாட்டங்க ன்னு தைரியமா? கலைஞர் மருமகன் அங்கன தான இருக்குறாரு?

  13. வரி பணத்தை வெட்டி செலவகுகளுக்காக வீணடிப்பதால்,அரசின் பட்ஜெட்டில் துண்டு விழுந்து, பணவீக்கம் மிக அதிகரித்து, அதன் மூலம் விலைவாசி ஏறுகிறது. இந்த விலைவாசி உயர்வு ஒரு வகையான மறைமுக வரி.மேலும் அடிப்படை கல்வி, மருத்துவம், கட்டமைப்பு போன்ற முக்கிய விசியங்களுக்கு செலவு செய்ய வேண்டிய வரிப்பணத்தை இப்படி விரையம் செய்வது கிரிமினல் குற்றம்.

  14. what you said is very correct.But you missed some stupid schemes also like1. 1200 crores to clean coovam… 2. 1000 crores for marina beach park..Which are really not required for peoples.Here in chennai all roads are in worst condition, accidents are happening very frequently(no assurance for human life here). Everywhere full of garbages(kuppai) and drainage water, which creates lot of air borne diseases.Its really pain to see chennai now.ByManoj.

  15. இது என்ன…? "எதாவது செய்யனும் பாஸ்" பதிவா???

  16. எல்லா கடைகள்லயும் 2 – 3 டி.வி. வெச்சுருக்காங்க. 75% விற்பனைதான் ஆகுது. அதுக்கு ஏஜண்டுக வேற 🙁

  17. கூவம் சீரமைப்பு பற்றி சொல்லவே இல்லையே…. இது தான் சூப்பர் ப்ராஜெக்ட், ஏன்னு சொல்லுங்க? இதுலதான் "Bug" கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் 🙂 எத்தனை கோடி தெரியுமா? இதை மறக்கனுமா பாருங்கள்
    கலைஞர் டிவியின் " மானாட மயிலாட"

    வேற சேனல் வேணுமா?

    உங்கள் சன் டிவியின் "ராஜா யாரு ராணி ஆறு? "

    விடை+ கேள்வி = போண்டியானது யாரு ( வேற யாரு நாம தான்).

    ஒரு பழைய ஜோக் : ஒரு பூதம் என்ன பண்ணுச்சாம் கலைஞர், ஜெயலலிதா, ராமதாசு, இன்ன பிற உப்புமா, கிச்சடி கட்சிகளின் தலைவர்களை ஒரு குகைக்குள்ள வச்சி பூட்டுடிசாம், யாரு முதல்ல தப்பிப்பாங்க? மேல சொன்ன அதே விடை தான் 🙂

  18. // மஞ்சள் ஜட்டி said…

    என்ன கிரி.,
    சிங்கப்பூர் க்கு ஆட்டோ அனுப்ப மாட்டங்க ன்னு தைரியமா?//

    ஹா ஹா ஹா வாங்க வாங்க ரொம்ப நாளா ஆளை காணோமே! :-))

    ======================================

    // K.R.அதியமான் said…

    //அடிப்படை கல்வி, மருத்துவம், கட்டமைப்பு போன்ற முக்கிய விசியங்களுக்கு செலவு செய்ய வேண்டிய வரிப்பணத்தை இப்படி விரையம் செய்வது கிரிமினல் குற்றம்.//

    இதுக்கே இப்படி என்றால் இவர்கள் அரசு கூட்டம் என்ற பெயரில் ஒளி விளக்குகளை ஒளிர விட்டு எவ்வளவு வாட்ஸ் மின்சாரத்தை வீண் செய்கிறார்கள் ..இது மாதிரி கணக்கெடுத்தால் கணக்கிலடங்காதது 🙁 ஒருவேளை கிரிமினல் என்பதால் அப்படி செய்கிறார்களோ!

    ========================================

    // Manoj said…

    what you said is very correct.//

    வா மச்சி எப்படி இருக்கிறே! welcome to Bog world

    //1. 1200 crores to clean coovam…

    2. 1000 crores for marina beach park..//

    இது மட்டுமா! இன்னும் ஏகப்பட்டது இருக்கு இதை எல்லாம் எழுதினால் கண்டிப்பாக தொடராகத்தான் போட வேண்டும் 😉

    =====================================

    // Mahesh said…
    எல்லா கடைகள்லயும் 2 – 3 டி.வி. வெச்சுருக்காங்க. 75% விற்பனைதான் ஆகுது. அதுக்கு ஏஜண்டுக வேற :(//

    :-((

    ==================================

    //M Arunachalam said…

    காமராஜரையும் காங்கிரசையும் தோற்கடிக்க வேண்டும் என்று மொழி, ஜாதி மற்றும் அணைத்து வெறிகளையும் ஊட்டி, தமிழகத்தின் ஆட்சிக்கு வந்துவிட்ட முன்னணி கழகத்தின் தற்போதய நிலை என்ன?//

    சுபிட்சம் 🙂

    அருண் வழக்கம் போல கலக்கிட்டீங்க! 🙂 ஆனா எத்தனை பாட்டு பாடினாலும் வேலைக்காகாது! 😉

    =================================

    // அத்திவெட்டி ஜோதிபாரதி said…

    கை மீறிப் போயிடுச்சு!//

    இது தாங்க ஜோதிபாரதி உண்மை ..ஆனால் இதற்கும் ஒரு முடிவு வரும் என்பது என் நம்பிக்கை

    //லச்சம் கோடியில அவன் வரவு செலவு பண்றான்!//

    இப்ப எல்லாம் லட்சம் எல்லாம் வார்டு கவுன்சலர் கூட இல்ல.. எல்லாரும் இப்ப கோடி ல தான் டீல் பண்ணுறாங்க! 🙁

    //எதையும் சமாளிக்க, தடுக்க அவங்கட்ட பணம் இரு

  19. ஊருக்கு இளிச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. அரசியல்வாதிகளுக்கு…? ஒட்டு போடுற நம்ம ஏமாளி மக்கள்.

  20. //காமராஜரையே தோற்கடித்த பெருமைக்குரியவர்கள்,//

    காமராஜரையும் காங்கிரசையும் தோற்கடிக்க வேண்டும் என்று மொழி, ஜாதி மற்றும் அணைத்து வெறிகளையும் ஊட்டி, தமிழகத்தின் ஆட்சிக்கு வந்துவிட்ட முன்னணி கழகத்தின் தற்போதய நிலை என்ன? அதன் தலைவரும் அவரது குடும்பமும் பண மழையில் நனைந்து, நனைந்து அவர்களுக்கு "பண தோஷம்" வந்து மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல். ஆனால், தொண்டர்களின் நிலை?

    இதோ இந்த பாடலில்:

    ("அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!" என்ற பாடலின் மெட்டில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது).

    (பல்லவி)

    கழகம் என்பது குடும்பமடா!
    இது அறியாத மூடன் தொண்டனடா!!
    ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,
    லஞ்சமே கழக கடமையடா!
    கழகத்தை காப்பது மடமையடா!!
    (கழகம் …. )

    (சரணம்)

    கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,
    பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன் …..
    ஆ ஆ ….. ஆ ஆ ….. ஆ ஆ ….. ஆ ஆ …..

    கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,
    பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன்,
    மனைவி, துணைவிகளின் மனம் கோணாமல்
    பிரித்து, பகிர்ந்து கொள்வான் கழக தலைவன் …..

    கழகம் என்பது குடும்பமடா!
    இது அறியாத மூடன் தொண்டனடா!!

    (சரணம்)

    சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,
    கழகத்தை நோக்கி வருகின்றார் ….

    சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,
    கழகத்தை நோக்கி வருகின்றார் ….
    தாயுள்ளத் தலைவர், கோடிகளை கவர்ந்து,
    இதயத்தில் 'மட்டும்' இடம் தருகின்றார் …..

    கழகம் என்பது குடும்பமடா!
    இது அறியாத மூடன் தொண்டனடா!!
    ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,
    லஞ்சமே கழக கடமையடா!
    கழகத்தை காப்பது மடமையடா!!
    (கழகம் …. )

  21. நியாயமான குமுறல் கிரி!

    கை மீறிப் போயிடுச்சு!

    லச்சம் கோடியில அவன் வரவு செலவு பண்றான்!

    நாம லச்சியமில்லாம பிரியாணிய துண்ணுபுட்டு, பணத்துக்கும், டாஸ்மாக் சரக்குக்கும் ஓட்டு போடுறோம்.

    எதையும் சமாளிக்க, தடுக்க அவங்கட்ட பணம் இருக்கு!

  22. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்…

    (இத நான் சொல்லலங்க பி.எஸ்.வீரப்பா ரொம்ப முன்னாடியே சொல்லிட்டாரு)

    //எதாவது செய்யனும் பாஸ்//

    படித்தவர்கள் எல்லா தேர்தலுக்கும் ஓட்டு போடுங்க 🙂

  23. girrii intha pathivu kallakkkalll

    innum oru tharoda blog la avaruku oru bathil pottu irukeengale athuuu kalakkkal llo kalllakaaalll… thalaivar ku appuramm unngalluku thann naan parama rasigannn

    thanks,
    Arun

  24. இந்த பண்ணிங்க கூட்டமா , பத்து இருபது கார்ல ஏன் போகுது. நேத்து ஒரு போலீஸ் காரர் சாவதை வேடிக்கை பாத்த இந்த ஈன பிறவிகள் எப்போது திருந்தும்?

  25. கிரி அருமையான பதிவு ///நன் இதை நாள் முழுவதும் நினைத்து பர்திரிகிறேன் …ஷேக்ஸ்பியர் சொன்ன மாதிரி…"உலகம் ஒரு மேடை நாம் அனைவரும் நடிகர்கள்,,,"அனல் இப்போது கொஞ்சம் அட்வான்ஸ் … தலைவர்கள் எல்லாம் மஹா நடிகர்கள் …நாம் கோமாளிகள் …பேசாம வோட்டு படமா இருந்தால் எப்படி…விஜயகாந்த் நடித்த தென்னவன் படம் பாருங்கள்…

  26. //லச்சம் கோடியில அவன் வரவு செலவு பண்றான்!//இப்ப எல்லாம் லட்சம் எல்லாம் வார்டு கவுன்சலர் கூட இல்ல.. எல்லாரும் இப்ப கோடி ல தான் டீல் பண்ணுறாங்க! :-(//// நான் சொன்னது 100000,00000000 சுழியம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க! காற்புள்ளி போடலை!

  27. ஹூம்ம்ம்ம்ம்…. என்னமோ போங்கண்ணே …நானும் நாடு கடந்திடலாம்னு நினைக்கிறேன்!!!!

  28. // ஆதி மனிதன் said…
    அரசியல்வாதிகளுக்கு…? ஒட்டு போடுற நம்ம ஏமாளி மக்கள்.//

    தெரியாம ஏமாந்தால் ஏமாளி மக்கள்..நம்ம ஆளுங்க தான் தெரிந்தே ஏமாறுகிறார்களே!

    ==================================

    // Arun said…

    girrii intha pathivu kallakkkalll//

    நன்றி அருண்

    ====================================

    // அஹோரி said…

    நேத்து ஒரு போலீஸ் காரர் சாவதை வேடிக்கை பாத்த இந்த ஈன பிறவிகள் எப்போது திருந்தும்?//

    ரொம்ப கொடுமைங்க இது! சாதாரண மக்கள் என்றால் கூட அதன் பிறகு வரும் குடைச்சலுக்கு பயந்து செய்யாமல் இருக்கிறார்கள் என்று கூறலாம்.. இவர்களுக்கென்ன! அதிலும் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் போது ரத்தம் மேலே பட்டு விடுமோ என்று ஜாக்கிரதையா தள்ளி நின்றதை பார்க்கும் போது…..

    ==========================

    // Josh said…

    இப்போது கொஞ்சம் அட்வான்ஸ் … தலைவர்கள் எல்லாம் மஹா நடிகர்கள் …
    நாம் கோமாளிகள் ..//

    சரியா சொன்னீங்க ..ஏமாளிகள் இல்லை கோமாளிகள் 🙂

    ================================

    // அத்திவெட்டி ஜோதிபாரதி said…

    நான் சொன்னது 100000,00000000

    சுழியம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க! காற்புள்ளி போடலை!//

    :-)) நான் லட்சம் கோடியை தனித்தனியாக படித்து விட்டேன்

    ============================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…

    ஹூம்ம்ம்ம்ம்…. என்னமோ போங்கண்ணே …நானும் நாடு கடந்திடலாம்னு நினைக்கிறேன்!//

    எங்கே சென்றாலும் பிரச்சனை இங்கே அப்படியே தானே!

  29. 2 varushathuku munadi athavathu tha.kritunana kolaiunda pothu thiru.mu.ka.(moka)alagiri katchien adimata urupinar attai illathavan aepadi aen katchi karan avanu thiru.mu.(pota)karunanithi sonaru,aana ipo avaruthaan then mandala thalaivar. ethu antha oruu karanuku thaeriyamaya irukum aelam kasu kasa kudutha aetha aelam nama alunga saiya matangaloo athai
    aelam saiyuvanunga paetha pona kuda kutti kudupanga
    GIRI Sir nengalum nanum avaesa patuu aena saiya onnum mudiyathu
    MADURAI

  30. நான் பார்த்ததுலே மிக கேவலமான திட்டம் "வண்ண தொலைகாட்சி பெட்டி". இந்த கொடுமைய நீங்க வேற எழுதனுமா. இதெல்லாம் அரசியல் வாதிங்க தப்பு இல்ல.. நம்ப மக்கள் தப்பு தான்.

  31. // suman said…
    nengalum nanum avaesa patuu aena saiya onnum mudiyathu//

    அது உண்மை தான்.

    ======================================

    // Senthilkumar Manavalan said…

    நான் பார்த்ததுலே மிக கேவலமான திட்டம் "வண்ண தொலைகாட்சி பெட்டி"//

    என்ன செய்வது! கண்ணு முன்னால பணத்தை வீண் செய்யுறாங்க! வேடிக்கை தான் பார்க்க முடியுது!

    //இந்த கொடுமைய நீங்க வேற எழுதனுமா. //

    நான் எழுதி யாரும் மாறப்போவதில்லை.. இதெல்லாம் ஒரு ஆதங்கம் தான்.

  32. Democracy has been totally abused in India. DMK has now perfected the art of winning the elections. Wish T.N. Seshan is back as Election Commissioner. Unfortunately, the alternatives to DMK are worse than the disease. Congress will continue to piggy-back on DMK just for a few parliamentary seats. Any salvation to this vicious circle?

  33. இலவச திட்டம் போடும் அவர்களே தற்போது உள்ள திட்டமான அரசு ஊழியர்களின் ” வாரிசு அடிப்படை ” வேலையை நிறைவேற்றுவார . தேர்வு முறையில் தேர்ந்தேடுபதற்கு முன்னதாகவே என்னை போன்று பல பேர் படித்துவிட்டு இந்த அரசு வேலையை எதிர் பார்த்து கொண்டிருக்கும் வேலையை நியமனம் செய்யவேண்டும் .அதனால் தங்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும், வந்து இது போன்ற நிறை வேற்றபடாத திடங்களை நிறை வேற்ற வேண்டும் .அப்படியே குடுத்தாலும் அவர்கள் படித்தபடிப்புக்கு (பட்டதாரி இருந்தாலும்) தகுந்த வேலையை தருவதை தவிர்டிட்டு பத்தாம் வகுப்பு தகுதி உள்ள வேலையை தான் தரூகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!