தங்கல் தயாரிக்க அதிகபட்சம் 40 கோடி ஆகி இருக்கலாம் அமீர் சம்பளம் தவிர்த்து ஆனால், வசூல் செய்ததோ 2000 கோடி ருபாய்.
உண்மையிலேயே தரமான வெற்றி. Image Credit
தங்கல்
படத்தைப் பிரம்மாண்டமாகப் பார்க்கவும் மக்கள் விரும்புகிறார்கள் அதே சமயம் சாதாரணப் படத்தைச் சிறப்பான கதையம்சம் திரைக்கதையுடன் கொடுத்தால், அதைப் பார்க்கவும் தயாராக இருக்கிறார்கள்.
இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சம் என்று பார்த்தால், நல்ல கதையம்சம் தேவை, சிறப்பான திரைக்கதை இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், அப்படம் பெரும் வெற்றிப் பெறுகிறது.
“தங்கல்” படத்தில் அமீர் நடிப்பு என்று பெரியளவில் கூற முடியாது அவர் உடலை ஏற்றி இறக்கியதைத் தவிர்த்து.
நடிப்பை பாராட்டும்படியான காட்சிகள் அவருக்கு அதிகளவில் இல்லை ஆனால், திரைக்கதை.. அசத்தல்!
முரண்
3 இடியட்ஸ் படத்தில் பெற்றோர்கள் அவர்கள் விருப்பத்தை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என்று கூறினார், “தங்கல்” படத்தில் அதற்கு முற்றிலும் எதிராக நடித்து இருப்பது முரண் 🙂 .
மூத்த பெண் கட்டுப்பாடுடன் இருந்து, சுதந்திரமான சூழ்நிலையை அனுபவித்து அதனால் கிடைக்கும் இன்பங்களால் பாதை மாறி பின் தன் தவறை உணர்ந்து திரும்புவது நல்ல திருப்பம்.
நான் கூட இளைய மகள் அமீரின் ஆசையை நிறைவேற்றுவாரோ! என்று நினைத்தேன். ஏனென்றால், காட்சிகள் அப்படித்தான் செல்லும்.
பயிற்சியாளர்
படத்திலேயே எனக்குத் திருப்தி இல்லாத கதாப்பாத்திரம் என்றால், பயிற்சியாளராக வருபவர் தான்.
அந்தக் கதாப்பாத்திரத்தை இன்னும் மிரட்டலாகக் கொடுத்து இருக்கலாம் அதாவது ஆளுமை மிகுந்த பாத்திரமாக.
“இறுதிச்சுற்று” படத்தில் அதே போல ஒரு கதாப்பாத்திரம் படத்துக்கு எவ்வளவு வலு சேர்த்தது என்பதை நாம் கண்டு இருப்போம்.
எப்படி அமீர் இதை முக்கியத்துவம் கொடுக்காமல் போனார் என்று வியப்பாக இருந்தது.
வசூலில் பிரம்மாண்டம்
நண்பர் சீனாவில் அவருடைய அலுவலக நண்பர்கள் பலர் “தங்கல்” பார்த்ததாகக் கூறினார். சீனாவிலும் மிகப்பெரிய வெற்றியே! ஊடகங்களில் வந்தது போல.
இறுதியில் வரும் நமது தேசிய கீதத்தைப் பாகிஸ்தானில் வெட்டக் கூறியதால், தங்கல் படம் பாகிஸ்தானில் வெளியாகவில்லை என்று ஊடகங்களில் வந்தது.
வெளியாகி இருந்தால், நிச்சயம் இங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும்.
இப்படத்தை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். இதுவரை பார்க்கவில்லை என்றால், அவசியம் காணுங்கள். நிச்சயம் உங்களை ஏமாற்றாது.
எல்லா படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ல பாத்திங்களா அண்ணா
மன்னித்துவிடுங்கள் அண்ணா நீங்கள் இணையத்தில் பணம் கட்டி பார்ப்பவர் என்பதை மறந்து விட்டேன்
🙂
லகான் படம் பார்த்த பின் அமீர்கானின் ரசிகனாகி விட்டேன். இவரது படங்களில் அனைத்திலும் வித்தியாசம். குறைகள் இருந்தாலும் வித்தியாசமான கதை களம் அதை மறக்கடிக்கிறது. தங்கள் / இறுதிச்சுற்று என்றால் என் பார்வையில் முதலிடம் இறுதிச்சுற்று தான். பகிர்வுக்கு நன்றி கிரி.
இறுதிச் சுற்று செம்ம படம், சந்தேகமே இல்லை.